Category: Thirukural

1234. பணைநீங்கிப் பைந்தொடி சோரும்

1234. பணைநீங்கிப் பைந்தொடி சோரும்

1234. Panaineengip Painthodi Sorum

  • குறள் #
    1234
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
    Wasting Away
  • குறள்
    பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
    தொல்கவின் வாடிய தோள்.
  • விளக்கம்
    காதலரைப் பிரிந்தால் பழைய இயற்கை அழகு கெட்டுத் தோள்கள் மெலிந்தன; அவை பருமை குறைந்தமையால் பசுமையான பொன் வளையல்கள் கழலுகின்றன.
  • Translation
    in English
    When lover went, then faded all their wonted charms,
    And armlets’ golden round slips off from these poor wasted arms.
  • Meaning
    In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.
1233. தணந்தமை சால அறிவிப்ப

1233. தணந்தமை சால அறிவிப்ப

1233. Thananthamai Saala Arivippa

  • குறள் #
    1233
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
    Wasting Away
  • குறள்
    தணந்தமை சால அறிவிப்ப போலும்
    மணந்தநாள் வீங்கிய தோள்.
  • விளக்கம்
    கூடி இன்புற்ற நாளில் இன்ப மிகுதியால் பூரித்த தோள்கள், இன்று அவர் பிரிந்தமையை நன்கு காட்டுவன போல் வாடுகின்றன.
  • Translation
    in English
    These withered arms, desertion’s pangs abundantly display,
    That swelled with joy on that glad nuptial day.
  • Meaning
    The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).
1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ

1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ

1232. Nayanthavar Nalkaamai Solluva

  • குறள் #
    1232
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
    Wasting Away
  • குறள்
    நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
    பசந்து பனிவாரும் கண்.
  • விளக்கம்
    நிறம் வேறுபட்டு நீர் ஒழுகுகின்ற கண்கள், விரும்பப்பட்டவர் அருள் செய்யாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோல இருக்கின்றன.
  • Translation
    in English
    The eye, with sorrow wan, all wet with dew of tears,
    As witness of the lover’s lack of love appears.
  • Meaning
    The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.
1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார்

1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார்

1231. Sirumai Namakkozhiyach Chetsendraar

  • குறள் #
    1231
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
    Wasting Away
  • குறள்
    சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
    நறுமலர் நாணின கண்.
  • விளக்கம்
    இவ்வறுமை நம்மைவிட்டு நீங்கும்படி நெடுந்தூரம் சென்று தலைவரை நினைத்து அழுதலால் கண்கள் அழகிழந்து நல்ல மலர்களுக்கு நாணுகின்றன.
  • Translation
    in English
    Thine eyes grown dim are now ashamed the fragrant flow’rs to see,
    Thinking on him, who wand’ring far, leaves us in misery.
  • Meaning
    While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.
1230. பொருள்மாலை யாளரை உள்ளி

1230. பொருள்மாலை யாளரை உள்ளி

1230. Porulmaalai Yaalarai Ulli

  • குறள் #
    1230
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பொழுதுகண்டு இரங்கல் (Pozhuthukandu Irangal)
    Lamentations at Eventide
  • குறள்
    பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
    மாயும்என் மாயா உயிர்.
  • விளக்கம்
    இதுவரையில் இரவாதிருந்த என் உயிர், இம் மயங்கும் மாலைப் பொழுதில், பொருள் ஈட்ட விரும்பிச் சென்றவரை நினைத்து இறந்துவிடும்.
  • Translation
    in English
    This darkening eve, my darkling soul must perish utterly;
    Remembering him who seeks for wealth, but seeks not me.
  • Meaning
    My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.
1229. பதிமருண்டு பைதல் உழக்கும்

1229. பதிமருண்டு பைதல் உழக்கும்

1229. Pathimarundu Paithal Uzhakkum

  • குறள் #
    1229
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பொழுதுகண்டு இரங்கல் (Pozhuthukandu Irangal)
    Lamentations at Eventide
  • குறள்
    பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
    மாலை படர்தரும் போழ்து.
  • விளக்கம்
    நான் மதி மயங்கும்படி மாலைக் காலம் பரவி வரும்போது, இவ்வூரில் உள்ளவர்களெல்லாரும் மயங்கித் துன்பத்தை அனுபவிப்பர்.
  • Translation
    in English
    If evening’s shades, that darken all my soul, extend;
    From this afflicted town will would of grief ascend.
  • Meaning
    When night comes on confusing (everyone’s) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.
1228. அழல்போலும் மாலைக்குத் தூதாகி

1228. அழல்போலும் மாலைக்குத் தூதாகி

1228. Azhalpolum Maalaikkuth Thoothaagi

  • குறள் #
    1228
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பொழுதுகண்டு இரங்கல் (Pozhuthukandu Irangal)
    Lamentations at Eventide
  • குறள்
    அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
    குழல்போலும் கொல்லும் படை.
  • விளக்கம்
    இடையனுடைய புல்லாங்குழலின் ஓசை, நெருப்புப் போல் என்னைச் சுடுவதாகிய மாலைப்பொழுதுக்குத் தூதாக வந்து, என்னைக் கொல்லும் படையுமாயிற்று.
  • Translation
    in English
    The shepherd’s pipe is like a murderous weapon, to my ear,
    For it proclaims the hour of ev’ning’s fiery anguish near.
  • Meaning
    The shepherd’s flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).
1227. காலை அரும்பிப் பகலெல்லாம்

1227. காலை அரும்பிப் பகலெல்லாம்

1227. Kaalai Arumbip Pagalellaam

  • குறள் #
    1227
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பொழுதுகண்டு இரங்கல் (Pozhuthukandu Irangal)
    Lamentations at Eventide
  • குறள்
    காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
    மாலை மலரும்இந் நோய்.
  • விளக்கம்
    இக்காதல் நோயானது காலையில் அரும்பாகி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பு போல் வளர்ந்து, மாலைப்பொழுதில் மலராகின்றது.
  • Translation
    in English
    My grief at morn a bud, all day an opening flower,
    Full-blown expands in evening hour.
  • Meaning
    This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.
1226. மாலைநோய் செய்தல் மணந்தார்

1226. மாலைநோய் செய்தல் மணந்தார்

1226. Maalainoi Seithal Mananthaar

  • குறள் #
    1226
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பொழுதுகண்டு இரங்கல் (Pozhuthukandu Irangal)
    Lamentations at Eventide
  • குறள்
    மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
    காலை அறிந்த திலேன்.
  • விளக்கம்
    மாலைப் பொழுது எனக்குத் துன்பம் செய்தலை, என் கணவர் பிரிவதற்கு முன் நான் அறிந்ததில்லை.
  • Translation
    in English
    The pangs that evening brings I never knew,
    Till he, my wedded spouse, from me withdrew.
  • Meaning
    Previous to my husband’s departure, I know not the painful nature of evening.
1225. காலைக்குச் செய்தநன்று என்கொல்

1225. காலைக்குச் செய்தநன்று என்கொல்

1225. Kaalaikkuch Cheithanandru Enkol

  • குறள் #
    1225
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பொழுதுகண்டு இரங்கல் (Pozhuthukandu Irangal)
    Lamentations at Eventide
  • குறள்
    காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
    மாலைக்குச் செய்த பகை.
  • விளக்கம்
    நான் காலைப் பொழுதுக்குச் செய்த நன்மை என்ன? மாலைப் பொழுதுக்குச் செய்த தீமை என்ன?
  • Translation
    in English
    O morn, how have I won thy grace? thou bring’st relief
    O eve, why art thou foe! thou dost renew my grief.
  • Meaning
    What good have I done to morning (and) what evil to evening?
1224. காதலர் இல்வழி மாலை

1224. காதலர் இல்வழி மாலை

1224. Kaathalar Ilvazhi Maalai

  • குறள் #
    1224
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பொழுதுகண்டு இரங்கல் (Pozhuthukandu Irangal)
    Lamentations at Eventide
  • குறள்
    காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
    ஏதிலர் போல வரும்.
  • விளக்கம்
    மாலைப் பொழுது, காதலர் பிரிந்தபோது, கொலை செய்கின்ற இடத்தில் கொலை செய்பவர் போல வருகின்றது.
  • Translation
    in English
    When absent is my love, the evening hour descends,
    As when an alien host to field of battle wends.
  • Meaning
    In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.
1223. பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை

1223. பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை

1223. Paniarumbip Paithalkol Maalai

  • குறள் #
    1223
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பொழுதுகண்டு இரங்கல் (Pozhuthukandu Irangal)
    Lamentations at Eventide
  • குறள்
    பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
    துன்பம் வளர வரும்.
  • விளக்கம்
    முன்பு நடுக்கமடைந்து மங்கிவந்த மாலைப் பொழுது, இப்பொழுது எனக்குத் துன்பத்தை உண்டாக்கிக் கவலை மிகும்படி வரும்.
  • Translation
    in English
    With buds of chilly dew wan evening’s shade enclose;
    My anguish buds space and all my sorrow grows.
  • Meaning
    The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.
1222. புன்கண்ணை வாழி மருள்மாலை

1222. புன்கண்ணை வாழி மருள்மாலை

1222. Punkannai Vaazhi Marulmaalai

  • குறள் #
    1222
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பொழுதுகண்டு இரங்கல் (Pozhuthukandu Irangal)
    Lamentations at Eventide
  • குறள்
    புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
    வன்கண்ண தோநின் துணை.
  • விளக்கம்
    மயங்கிய மாலைக் காலமே! வாழ்வாயாக! நீ ஒளியை இழந்திருக்கின்றாய்; உன்னுடைய துணையும் என்னுடைய காதலரைப்போல் இறக்கமில்லாததோ?
  • Translation
    in English
    Thine eye is sad; Hail, doubtful hour of eventide!
    Of cruel eye, as is my spouse, is too thy bride?
  • Meaning
    A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.
1221. மாலையோ அல்லை மணந்தார்

1221. மாலையோ அல்லை மணந்தார்

1221. Maalaiyo allai Manandhaar

  • குறள் #
    1221
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பொழுதுகண்டு இரங்கல் (Pozhuthukandu Irangal)
    Lamentations at Eventide
  • குறள்
    மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
    வேலைநீ வாழி பொழுது.
  • விளக்கம்
    பொழுதே! வாழ்வாயாக! நீ மாலைக் காலம் அல்லை; மனம் செய்து கொண்டவரின் உயிரைக் குடிக்கும் காலமாக இருக்கின்றாய்.
  • Translation
    in English
    Thou art not evening, but a spear that doth devour
    The souls of brides; farewell, thou evening hour!
  • Meaning
    Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women.
1220. நனவினால் நம்நீத்தார் என்பர்

1220. நனவினால் நம்நீத்தார் என்பர்

1220. Nanavinaal Namneeththar Enbar

  • குறள் #
    1220
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
    The Visions of the Night
  • குறள்
    நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
    காணார்கொல் இவ்வூ ரவர்.
  • விளக்கம்
    இவ்வூரிலுள்ள பெண்கள், நனவில் என் காதலர் என்னை விட்டுப் பிரிந்தார் என்று கூறுவர்; ஆனால் அவர் எனது கனவில் வருவதை அவர்கள் அறியார் போலும்.
  • Translation
    in English
    They say, that he in waking hours has left me lone;
    In dreams they surely see him not,- these people of the town.
  • Meaning
    The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.
1219. நனவினால் நல்காரை நோவர்

1219. நனவினால் நல்காரை நோவர்

1219. Nanavinaal Nalkaarai Novaar

  • குறள் #
    1219
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
    The Visions of the Night
  • குறள்
    நனவினால் நல்காரை நோவர் கனவினால்
    காதலர்க் காணா தவர்.
  • விளக்கம்
    கனவிலே தம் காதலரைக் கண்டறியாத மகளிர், நனவிலே அவர் வந்து அருள் செய்யவில்லை என்று அவர் அறிய வருந்திக் கூறுவர்.
  • Translation
    in English
    In dreams who ne’er their lover’s form perceive,
    For those in waking hours who show no love will grieve.
  • Meaning
    They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.
1218. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி

1218. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி

1218. Thunjunkaal Tholmelar Aagi

  • குறள் #
    1218
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
    The Visions of the Night
  • குறள்
    துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
    நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
  • விளக்கம்
    யான் தூங்கும்போது தோள்மீது இருப்பவராகி, விழிக்கும்போது விரைவாகச் சென்று நெஞ்சில் இருந்துகொள்வார்.
  • Translation
    in English
    And when I sleep he holds my form embraced;
    And when I wake to fill my heart makes haste!
  • Meaning
    When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.
1217. நனவினால் நல்காக் கொடியார்

1217. நனவினால் நல்காக் கொடியார்

1217. Nanavinaal Nalkaak Kodiyaar

  • குறள் #
    1217
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
    The Visions of the Night
  • குறள்
    நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
    என்எம்மைப் பீழிப் பது.
  • விளக்கம்
    நனவில் வந்து அருள் செய்யாத கொடியவர், கனவில் வந்து என்னை வருத்துவது எதற்காக?
  • Translation
    in English
    The cruel one, in waking hour, who all ungracious seems,
    Why should he thus torment my soul in nightly dreams?
  • Meaning
    The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?
1216. நனவென ஒன்றில்லை ஆயின்

1216. நனவென ஒன்றில்லை ஆயின்

1216. Nanavena Ondrillai Aayin

  • குறள் #
    1216
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
    The Visions of the Night
  • குறள்
    நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
    காதலர் நீங்கலர் மன்.
  • விளக்கம்
    நனவு என்று சொல்லப்படுவது ஒன்று இல்லையானால், கனவில் வந்து கூடிய காதலர் என்னை விட்டுப் பிரிய மாட்டார்.
  • Translation
    in English
    And if there were no waking hour, my love
    In dreams would never from my side remove.
  • Meaning
    Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.
1215. நனவினால் கண்டதூஉம் ஆங்கே

1215. நனவினால் கண்டதூஉம் ஆங்கே

1215. Nanavinaal Kandathooum Aange

  • குறள் #
    1215
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
    The Visions of the Night
  • குறள்
    நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
    கண்ட பொழுதே இனிது.
  • விளக்கம்
    நனவில் அவரைக் கண்டு அனுபவித்த இன்பம் அப்பொழுத்தான் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவு இன்பமும் அனுபவிக்கும்போது மட்டுமே இனிதாகின்றது.
  • Translation
    in English
    As what I then beheld in waking hour was sweet,
    So pleasant dreams in hour of sleep my spirit greet.
  • Meaning
    I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.
1214. கனவினான் உண்டாகும் காமம்

1214. கனவினான் உண்டாகும் காமம்

1214. Kanavinaan Undaagum Kaamam

  • குறள் #
    1214
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
    The Visions of the Night
  • குறள்
    கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
    நல்காரை நாடித் தரற்கு.
  • விளக்கம்
    நனவில் வந்து அருள் செய்யாதவரைக் கனவு தேடிக் கொண்டு வந்து தருதலால், அக்கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.
  • Translation
    in English
    Some pleasure I enjoy when him who loves not me
    In waking hours, the vision searches out and makes me see.
  • Meaning
    There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.
1213. நனவினால் நல்கா தவரைக்

1213. நனவினால் நல்கா தவரைக்

1213. Nanavinaal Nalkaa Thavaraik

  • குறள் #
    1213
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
    The Visions of the Night
  • குறள்
    நனவினால் நல்கா தவரைக் கனவினால்
    காண்டலின் உண்டென் உயிர்.
  • விளக்கம்
    நனவில் வந்து அருள் செய்யாதவரைக் கனவில் காணுதலால்தான் என் உயிர் இருக்கின்றது.
  • Translation
    in English
    Him, who in waking hour no kindness shows,
    In dreams I see; and so my lifetime goes!
  • Meaning
    My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.
1212. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற்

1212. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற்

1212. Kayalunkan Yaanirappath Thunchir

  • குறள் #
    1212
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
    The Visions of the Night
  • குறள்
    கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
    உயலுண்மை சாற்றுவேன் மன்.
  • விளக்கம்
    கயல் மீன் போன்ற, மையுண்ட என் கண்கள் நான் வேண்டிக் கொள்கின்றபடி தூங்குமாயின், நான் பொறுத்திருக்கின்ற தன்மையைக் காதலருக்குக் கனவில் சொல்லுவேன்.
  • Translation
    in English
    If my dark, carp-like eye will close in sleep, as I implore,
    The tale of my long-suffering life I’ll tell my loved one o’er.
  • Meaning
    If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.
1211. காதலர் தூதொடு வந்த

1211. காதலர் தூதொடு வந்த

1211. Kaathalar Thoothodu Vandha

  • குறள் #
    1211
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
    The Visions of the Night
  • குறள்
    காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
    யாதுசெய் வேன்கொல் விருந்து.
  • விளக்கம்
    என் பிரிவுத் துன்பத்தை நீங்குவதற்காகக் காதலர் அனுப்பிய தூதோடு வந்த இக்கனவினுக்கு நான் என்ன விருந்தினைச் செய்வேன்?
  • Translation
    in English
    It came and brought to me, that nightly vision rare,
    A message from my love,- what feast shall I prepare?
  • Meaning
    Where with shall I feast the dream which has brought me my dear one’s messenger ?
1210. விடாஅது சென்றாரைக் கண்ணினால்

1210. விடாஅது சென்றாரைக் கண்ணினால்

1210. Vidaaathu Sendraaraik Kanninaal

  • குறள் #
    1210
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
    Sad Memories
  • குறள்
    விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
    படாஅதி வாழி மதி.
  • விளக்கம்
    சந்திரனே, வாழ்வாயாக; எனது மனத்தை விட்டு நீங்காமல் பிரிந்து சென்றவரை நான் கண்ணால் பார்க்கும் வரையில் நீ மறைந்திருப்பாயாக.
  • Translation
    in English
    Set not; so may’st thou prosper, moon! that eyes may see
    My love who went away, but ever bides with me.
  • Meaning
    May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.
1209. விளியுமென் இன்னுயிர் வேறல்லம்

1209. விளியுமென் இன்னுயிர் வேறல்லம்

1209. Viliyamen Innuyir Verallam

  • குறள் #
    1209
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
    Sad Memories
  • குறள்
    விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
    அளியின்மை ஆற்ற நினைந்து.
  • விளக்கம்
    இருவரும் வேறல்லர் என்று சொன்னவரது இரக்கமின்மையை மிகவும் நினைத்து, எனது இனிய உயிர் வீணே கழிகின்றது.
  • Translation
    in English
    Dear life departs, when his ungracious deeds I ponder o’er,
    Who said erewhile, ‘We’re one for evermore’.
  • Meaning
    My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.
1208. எனைத்து நினைப்பினும் காயார்

1208. எனைத்து நினைப்பினும் காயார்

1208. Enaiththu Ninaippinum Kaayaar

  • குறள் #
    1208
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
    Sad Memories
  • குறள்
    எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
    காதலர் செய்யும் சிறப்பு.
  • விளக்கம்
    எவ்வளவு நினைத்தாலும் காதலர் கோபிக்க மாட்டார்; அவர் செய்யும் நன்மை அவ்வளவேயன்றோ?
  • Translation
    in English
    My frequent thought no wrath excites. It is not so?
    This honour doth my love on me bestow.
  • Meaning
    He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ?
1207. மறப்பின் எவனாவன் மற்கொல்

1207. மறப்பின் எவனாவன் மற்கொல்

1207. Marappin Evanaavan Markol

  • குறள் #
    1207
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
    Sad Memories
  • குறள்
    மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
    உள்ளினும் உள்ளம் சுடும்.
  • விளக்கம்
    அவர் தந்த இன்பத்தை மறவாதிருக்கின்ற காலத்திலும் பிரிவை நினைத்தால் மனம் கொதிக்கின்றது; அவ்வின்பத்தை மறந்தேனாயின் என் நிலை என்ன ஆகும்?
  • Translation
    in English
    If I remembered not what were I then? And yet,
    The fiery smart of what my spirit knows not to forget!
  • Meaning
    I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?
1206. மற்றியான் என்னுளேன் மன்னோ

1206. மற்றியான் என்னுளேன் மன்னோ

1206. Matriyaan Ennulen Manno

  • குறள் #
    1206
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
    Sad Memories
  • குறள்
    மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
    உற்றநாள் உள்ள உளேன்.
  • விளக்கம்
    நான் அவரோடு முன்பு சேர்ந்திருந்த நாளை நினைத்தலால் உயிர் வாழ்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?
  • Translation
    in English
    How live I yet? I live to ponder o’er
    The days of bliss with him that are no more.
  • Meaning
    I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?
1205. தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார்

1205. தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார்

1205. Thamnenjaththu Emmaik Kadikondaar

  • குறள் #
    1205
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
    Sad Memories
  • குறள்
    தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
    எம்நெஞ்சத்து ஓவா வரல்.
  • விளக்கம்
    தம்முடைய நெஞ்சில் யாம் புகுந்து விடாதபடி காவல் வைத்திருக்கின்ற காதலர், எமது நெஞ்சில் எப்பொழுதும் ஓயாது வருவதற்கு நாண மாட்டாரோ?
  • Translation
    in English
    Me from his heart he jealously excludes:
    Hath he no shame who ceaseless on my heart intrudes?
  • Meaning
    He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.
1204. யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து

1204. யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து

1204. Yaamum Ulankol Avarnenjaththu

  • குறள் #
    1204
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
    Sad Memories
  • குறள்
    யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
    ஓஒ உளரே அவர்.
  • விளக்கம்
    எமது மனத்தில் அவர் எப்பொழுதும் இருக்கின்றார்; அவ்வாறே அவர் மனத்திலும் நாமும் இருக்கின்றோமோ?
  • Translation
    in English
    Have I a place within his heart!
    From mine, alas! he never doth depart.
  • Meaning
    He continues to abide in my soul, do I likewise abide in his ?
1203. நினைப்பவர் போன்று நினையார்கொல்

1203. நினைப்பவர் போன்று நினையார்கொல்

1203. Ninaippavar Pondru Ninaiyaarkol

  • குறள் #
    1203
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
    Sad Memories
  • குறள்
    நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
    சினைப்பது போன்று கெடும்.
  • விளக்கம்
    எனக்குத் தும்மல் தொன்றுவதுபோலக் காணப்பட்டு உடனே கெடுகின்றது; அதனால், காதலர் என்னை நினைப்பவர் போன்று நினையாமல் இருக்கின்றார் போலும்.
  • Translation
    in English
    A fit of sneezing threatened, but it passed away;
    He seemed to think of me, but do his fancies stray?
  • Meaning
    I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.
1202. எனைத்தொன்று ஏனிதேகாண் காமம்தாம்

1202. எனைத்தொன்று ஏனிதேகாண் காமம்தாம்

1202. Enaiththondru Yenithekaan Kaamamthaam

  • குறள் #
    1202
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
    Sad Memories
  • குறள்
    எனைத்தொன்று ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
    நினைப்ப வருவதொன்று ஏல்.
  • விளக்கம்
    தாம் விரும்புகின்றவரை நினைத்தால் வருகின்ற துன்பம் ஒன்றும் இல்லையாகும்; ஆகையால் காதல் எந்த அளவினதாயினும் இனிமை யுடையதாகும்.
  • Translation
    in English
    How great is love! Behold its sweetness past belief!
    Think on the lover, and the spirit knows no grief.
  • Meaning
    Even to think of one’s beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.
1201. உள்ளினும் தீராப் பெருமகிழ்

1201. உள்ளினும் தீராப் பெருமகிழ்

1201. Ullinum Theeraap Perumagizh

  • குறள் #
    1201
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
    Sad Memories
  • குறள்
    உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
    கள்ளினும் காமம் இனிது.
  • விளக்கம்
    முன்பு அனுபவித்த இன்பத்தை நினைத்தாலும் நீங்காத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால், கல்லை விடக் காமம் இன்பம் தருவதாகும்.
  • Translation
    in English
    From thought of her unfailing gladness springs,
    Sweeter than palm-rice wine the joy love brings.
  • Meaning
    Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.
1200. உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய்

1200. உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய்

1200. Uraaarkku Urunoi Uraippaai

  • குறள் #
    1200
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
    The Solitary Anguish
  • குறள்
    உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
    செறாஅஅய் வாழிய நெஞ்சு.
  • விளக்கம்
    உன்னோடு வந்து சேராதவர்க்கு, உன்னுடைய துன்ப மிகுதியைச் சொல்லப்புகும் மனமே! வாழ்வாயாக; உனக்குத் துன்பம் செய்யும் கடலைத் தூர்க்க முயல்வாயாக.
  • Translation
    in English
    Tell him thy pain that loves not thee?
    Farewell, my soul, fill up the sea!
  • Meaning
    Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).
1199. நசைஇயார் நல்கார் எனினும்

1199. நசைஇயார் நல்கார் எனினும்

1199. Nasaiiyaar Nalkaar Eninum

  • குறள் #
    1199
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
    The Solitary Anguish
  • குறள்
    நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
    இசையும் இனிய செவிக்கு.
  • விளக்கம்
    விரும்பப்பட்டவர் அருள் செய்யாராயினும், அவரிடமிருந்து பிறக்கும் எச்சொற்களும் என் காதுக்கு இனியனவாகும்.
  • Translation
    in English
    Though he my heart desires no grace accords to me,
    Yet every accent of his voice is melody.
  • Meaning
    Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.
1198. வீழ்வாரின் இன்சொல் பெறாஅது

1198. வீழ்வாரின் இன்சொல் பெறாஅது

1198. Veezhvaarin Insol Peraaathu

  • குறள் #
    1198
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
    The Solitary Anguish
  • குறள்
    வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
    வாழ்வாரின் வன்கணார் இல்.
  • விளக்கம்
    காதலரிடத்திலிருந்து ஓர் இனிய சொல்லாவது கேட்கப்பெறாமல் பிரிவைப் பொறுத்துக் கொண்டு வாழ்கின்ற பெண்களைப் போல் வலிய நெஞ்சமுடையவர் உலகத்தில் இல்லை.
  • Translation
    in English
    Who hear from lover’s lips no pleasant word from day to day,
    Yet in the world live out their life,- no braver souls than they!
  • Meaning
    There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.
1197. பருவரலும் பைதலும் காணான்கொல்

1197. பருவரலும் பைதலும் காணான்கொல்

1197. Paruvaralum Paithalum Kaanaankol

  • குறள் #
    1197
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
    The Solitary Anguish
  • குறள்
    பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
    ஒருவர்கண் நின்றொழுகு வான்.
  • விளக்கம்
    ஒருவரிடத்து மட்டும் நின்று இயங்குகின்ற காமன், அவரிடத்துள்ள நோயையும், துன்ப மிகுதியையும் அறியமாட்டானோ?
  • Translation
    in English
    While Kaman rushes straight at me alone,
    Is all my pain and wasting grief unknown?
  • Meaning
    Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?
1196. ஒருதலையான் இன்னாது காமம்காப்

1196. ஒருதலையான் இன்னாது காமம்காப்

1196. Oruthalaiyaan Innaathu Kaamamkaap

  • குறள் #
    1196
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
    The Solitary Anguish
  • குறள்
    ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
    இருதலை யானும் இனிது.
  • விளக்கம்
    ஆண் பெண் இருபாலருள், காமம் ஒரு பக்கத்தில் இருத்தல் துன்பமாகும்; காவடியைப் போல் இரண்டு பக்கமும் ஒத்திருக்குமானால் இன்பம் செய்வதாகும்.
  • Translation
    in English
    Love on one side is bad; like balanced load
    By porter borne, love on both sides is good.
  • Meaning
    Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.
1195. நாம்காதல் கொண்டார் நமக்கெவன்

1195. நாம்காதல் கொண்டார் நமக்கெவன்

1195. Naamkaathal Kondaar Namakkevan

  • குறள் #
    1195
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
    The Solitary Anguish
  • குறள்
    நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
    தாம்காதல் கொள்ளாக் கடை.
  • விளக்கம்
    தாம் காதல் செய்யாதபோது, என்னால் காதலிக்கப்பட்டவர் எனக்கு என்ன இன்பத்தைச் செய்வார்?
  • Translation
    in English
    From him I love to me what gain can be,
    Unless, as I love him, he loveth me?
  • Meaning
    He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?
1194. வீழப் படுவார் கெழீஇயிலர்

1194. வீழப் படுவார் கெழீஇயிலர்

1194. Veezhap Paduvaar Kezheeeyalar

  • குறள் #
    1194
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
    The Solitary Anguish
  • குறள்
    வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
    வீழப் படாஅர் எனின்.
  • விளக்கம்
    பிறரால் மதிக்கப்பட்டாலும் பெண்கள், தம் கணவரால் விரும்பப்படாராயின் நல்வினைப் பயன் பொருந்தாதவராவர்.
  • Translation
    in English
    Those well-beloved will luckless prove,
    Unless beloved by those they love.
  • Meaning
    Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.
1193. வீழுநர் வீழப் படுவார்க்கு

1193. வீழுநர் வீழப் படுவார்க்கு

1193. Veezhunar Veezhap Paduvaarkku

  • குறள் #
    1193
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
    The Solitary Anguish
  • குறள்
    வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
    வாழுநம் என்னும் செருக்கு.
  • விளக்கம்
    விரும்பப்படுகின்ற கணவரால் விரும்பப்படுகின்ற மகளிர்க்கு, நாம் இன்பமாக வாழ்கின்றோம் என்னும் செருக்கு ஏற்றதாகும்.
  • Translation
    in English
    Who love and are beloved to them alone
    Belongs the boast, ‘We’ve made life’s very joys our own.’
  • Meaning
    The pride that says “we shall live” suits only those who are loved by their beloved (husbands).
1192. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்

1192. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்

1192. Vaazhvaarkku Vaanam Payanthatraal

  • குறள் #
    1192
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
    The Solitary Anguish
  • குறள்
    வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
    வீழ்வார் அளிக்கும் அளி.
  • விளக்கம்
    காதலிக்கின்ற பெண்களுக்கு அவரைக் காதலிக்கின்ற கணவர் செய்யும் கருணையானது, உயிர் வாழ்கின்றவர்களுக்கு மழை அளவறிந்து பெய்தது போலாகும்.
  • Translation
    in English
    As heaven on living men showers blessings from above,
    Is tender grace by lovers shown to those they love.
  • Meaning
    The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.
1191. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர்

1191. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர்

1191. Thaamveezhvaar Thamveezhp Petravar

  • குறள் #
    1191
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
    The Solitary Anguish
  • குறள்
    தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
    காமத்துக் காழில் கனி.
  • விளக்கம்
    தம்மால் விரும்பப்பட்ட கணவரால், தாமும் விரும்பப்பெற்ற மகளிர், காமநுகர்ச்சியாகிய விதையில்லாத பழத்தைப் பெற்றவர் ஆவர்.
  • Translation
    in English
    The bliss to be beloved by those they love who gains,
    Of love the stoneless, luscious fruit obtains.
  • Meaning
    The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?
1190. பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே

1190. பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே

1190. Pasappenap Perperuthal Nandre

  • குறள் #
    1190
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
    The Pallid Hue
  • குறள்
    பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
    நல்காமை தூற்றார் எனின்.
  • விளக்கம்
    முன்பு மகிழ்வித்துச் சேர்ந்தவர் இன்று அருளாமல் இருப்பதை ஊரார் தூற்றமாட்டாராயின், ‘நான் பசலை அடைந்தேன்’ என்று பெயர் பெறுதல் நல்லதே.
  • Translation
    in English
    ‘Tis well, though men deride me for my sickly hue of pain;
    If they from calling him unkind, who won my love, refrain.
  • Meaning
    It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then).
1189. பசக்கமன் பட்டாங்கென் மேனி

1189. பசக்கமன் பட்டாங்கென் மேனி

1189. Pasakkaman Pattaanken Meni

  • குறள் #
    1189
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
    The Pallid Hue
  • குறள்
    பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
    நன்னிலையர் ஆவர் எனின்.
  • விளக்கம்
    பிரிவுக்கு யான் உடன்படும் படியாகச் செய்தவர் நல்ல நிலையினராவராயின், என் உடம்பில் முன் படர்ந்தது போலப் பசலை படர்வதாக.
  • Translation
    in English
    Well! let my frame, as now, be sicklied o’er with pain,
    If he who won my heart’s consent, in good estate remain!
  • Meaning
    If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.
1188. பசந்தாள் இவள்என்பது அல்லால்

1188. பசந்தாள் இவள்என்பது அல்லால்

1188. Pasanthaal Ivalenbathu Allaal

  • குறள் #
    1188
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
    The Pallid Hue
  • குறள்
    பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
    துறந்தார் அவர்என்பார் இல்.
  • விளக்கம்
    ‘இவள் பசலை நிறமடைந்தாள்’ என்று என்னைப் பழித்துக் கூருவதன்றி, ‘இவளை அவர் பிரிந்து சென்றுவிட்டார்’ என்பார் யாருமிலர்.
  • Translation
    in English
    On me, because I pine, they cast a slur;
    But no one says, ‘He first deserted her.’
  • Meaning
    Besides those who say “she has turned sallow” there are none who say “he has forsaken her”.
1187. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்

1187. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்

1187. Pullik Kidanthen Pudaipeyarndhen

  • குறள் #
    1187
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
    The Pallid Hue
  • குறள்
    புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
    அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
  • விளக்கம்
    காதலரைத் தழுவிக் கிடந்தேன். சிறிது விலகினேன். அவ்வளவில் அள்ளிக் கொள்ளுவது போலப் பசலை என் உடம்பு முழுவதும் பரவி நின்றது.
  • Translation
    in English
    I lay in his embrace, I turned unwittingly;
    Forthwith this hue, as you might grasp it, came on me.
  • Meaning
    I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.
1186. விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல்

1186. விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல்

1186. Vilakkatram Paarkkum Irulepol

  • குறள் #
    1186
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
    The Pallid Hue
  • குறள்
    விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
  • விளக்கம்
    விளக்கின் ஒளிகுறையும் சமயத்தைப் பார்த்து இருள் வருவது போல் காதலரின் சேர்க்கை முடியும் சமயம் பார்த்துப் பசலை நிறம் நெருங்கிவரும்.
  • Translation
    in English
    As darkness waits till lamp expires, to fill the place,
    This pallor waits till I enjoy no more my lord’s embrace.
  • Meaning
    Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband’s intercourse.
1185. உவக்காண்எம் காதலர் செல்வார்

1185. உவக்காண்எம் காதலர் செல்வார்

1185. Uvakkaanem Kaathalar Selvaar

  • குறள் #
    1185
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
    The Pallid Hue
  • குறள்
    உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
    மேனி பசப்பூர் வது.
  • விளக்கம்
    அங்குப் பார்! எம் தலைவர் பிரிந்து செல்கின்றார்! இங்குப் பார்! என் மேனியில் பசலை நிறம் வந்து படர்கின்றது.
  • Translation
    in English
    My lover there went forth to roam;
    This pallor of my frame usurps his place at home.
  • Meaning
    Just as my lover departed then, did not sallowness spread here on my person ?
1184. உள்ளுவன் மன்யான் உரைப்பது

1184. உள்ளுவன் மன்யான் உரைப்பது

1184. Ulluvan Manyaan Uraippathu

  • குறள் #
    1184
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
    The Pallid Hue
  • குறள்
    உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
    கள்ளம் பிறவோ பசப்பு.
  • விளக்கம்
    நான் காதலரை மனத்தில் நினைக்கின்றேன்; நான் பேசுவதும் அவரது நற்குணங்களையே; அவ்வாறு இருந்தும் இப்பசலை நிறம் வஞ்சனையாக என் உடம்பில் பரவுகின்றது.
  • Translation
    in English
    I meditate his words, his worth is theme of all I say,
    This sickly hue is false that would my trust betray.
  • Meaning
    I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.
1183. சாயலும் நாணும் அவர்கொண்டார்

1183. சாயலும் நாணும் அவர்கொண்டார்

1183. Saayalum Naanum Avarkondaar

  • குறள் #
    1183
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
    The Pallid Hue
  • குறள்
    சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
    நோயும் பசலையும் தந்து.
  • விளக்கம்
    அவர் இக்காதல் நோயையும், பசலையையும் எனக்குத் தந்து, கைம்மாறாக என் அழகையும் நாணையும் பெற்றுக் கொண்டார்.
  • Translation
    in English
    Of comeliness and shame he me bereft,
    While pain and sickly hue, in recompense, he left.
  • Meaning
    He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.
1182. அவர்தந்தார் என்னும் தகையால்

1182. அவர்தந்தார் என்னும் தகையால்

1182. Avarthanthaar Ennum Thagaiyaal

  • குறள் #
    1182
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
    The Pallid Hue
  • குறள்
    அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
    மேனிமேல் ஊரும் பசப்பு.
  • விளக்கம்
    இப்பசலை நிறமானது, காதலர் தந்தார் என்னும் களிப்பு மிகுதியால் என் உடம்பு முழுவதிலும் ஏறிப் பரவுகின்றது.
  • Translation
    in English
    ‘He gave’: this sickly hue thus proudly speaks,
    Then climbs, and all my frame its chariot makes.
  • Meaning
    Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.
1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்

1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்

1181. Nayanthavarkku Nalkaamai Nerndhen

  • குறள் #
    1181
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
    The Pallid Hue
  • குறள்
    நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
    பண்பியார்க்கு உரைக்கோ பிற.
  • விளக்கம்
    காதலர் பிரிந்து செல்வதற்கு நான் உடன்பட்டேன். அவர் பிரிந்த வருத்தத்தினால் என் உடல் நிறம் மாறியதை யாரிடம் சொல்லுவேன்?
  • Translation
    in English
    I willed my lover absent should remain;
    Of pining’s sickly hue to whom shall I complain?
  • Meaning
    I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.
1180. மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால்

1180. மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால்

1180. Maraiperal Ooraarkku Arithandraal

  • குறள் #
    1180
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
    Eyes Consumed with Grief
  • குறள்
    மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
    அறைபறை கண்ணார் அகத்து.
  • விளக்கம்
    அடிக்கப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவர் மனத்திலுள்ளவற்றை அறிதல் ஊரவர்க்கு அரிதன்று.
  • Translation
    in English
    It is not hard for all the town the knowledge to obtain,
    When eyes, as mine, like beaten tambours, make the mystery plain.
  • Meaning
    It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.
1179. வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா

1179. வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா

1179. Vaaraakkaal Thunchaa Varinthunchaa

  • குறள் #
    1179
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
    Eyes Consumed with Grief
  • குறள்
    வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
    ஆரஞர் உற்றன கண்.
  • விளக்கம்
    காதலர் வாராதொழிந்தாலும் தூங்க மாட்டா; வந்தாலும் தூங்கமாட்டா; அவ்விரு வழியிலும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தை அடைந்துள்ளன.
  • Translation
    in English
    When he comes not, all slumber flies; no sleep when he is there;
    Thus every way my eyes have troubles hard to bear.
  • Meaning
    When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.
1178. பேணாது பெட்டார் உளர்மன்னோ

1178. பேணாது பெட்டார் உளர்மன்னோ

1178. Penaathu Pettaar Ularmanno

  • குறள் #
    1178
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
    Eyes Consumed with Grief
  • குறள்
    பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
    காணாது அமைவில கண்.
  • விளக்கம்
    காதலர் மனத்தால் விரும்பாதவராகிச் சொல்லால் மட்டும் விரும்புபவராய் இருக்கின்றார்; எனினும் கண்கள் அவரைக் காணாமல் பொறுமையுடன் இருக்க மாட்டா.
  • Translation
    in English
    Who loved me once, on loving now doth here remain;
    Not seeing him, my eye no rest can gain.
  • Meaning
    He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.
1177. உழந்துழந் துள்நீர் அறுக

1177. உழந்துழந் துள்நீர் அறுக

1177. Uzhanthuzhanth Thulneer Aruga

  • குறள் #
    1177
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
    Eyes Consumed with Grief
  • குறள்
    உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
    வேண்டி அவர்க்கண்ட கண்.
  • விளக்கம்
    முன்பு அவரைக் கண்டு விரும்பி, உருகி, இடைவிடாது பார்த்த கண்கள், இப்பொழுது அழுது அழுது வருந்தி நீர் வற்றிப் போகட்டும்.
  • Translation
    in English
    Aching, aching, let those exhaust their stream,
    That melting, melting, that day gazed on him.
  • Meaning
    The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.
1176. ஓஒ இனிதே எமக்கிந்நோய்

1176. ஓஒ இனிதே எமக்கிந்நோய்

1176. Oo Inithe Emakkinnoi

  • குறள் #
    1176
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
    Eyes Consumed with Grief
  • குறள்
    ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
    தாஅம் இதற்பட் டது.
  • விளக்கம்
    எனக்கு இத்துன்பத்தைச் செய்த கண்கள், தாமும் தூங்காத இத்துன்பத்தை அடைந்தன; இது மிகவும் இனிதாயிற்று.
  • Translation
    in English
    Oho! how sweet a thing to see! the eye
    That wrought this pain, in the same gulf doth lie.
  • Meaning
    The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh! I am much delighted.
1175. படலாற்றா பைதல் உழக்கும்

1175. படலாற்றா பைதல் உழக்கும்

1175. Padalaatraa Paithal Uzhakkum

  • குறள் #
    1175
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
    Eyes Consumed with Grief
  • குறள்
    படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
    காமநோய் செய்தஎன் கண்.
  • விளக்கம்
    கடலும் சிரியதாகும்படி பெரிய காதல் நோயைச் செய்த என் கண்கள் தூங்கமுடியாதபடி வருத்தத்தை அனுபவிக்கின்றன.
  • Translation
    in English
    The eye that wrought me more than sea could hold of woes,
    Is suffering pangs that banish all repose.
  • Meaning
    Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.
1174. பெயலாற்றா நீருலந்த உண்கண்

1174. பெயலாற்றா நீருலந்த உண்கண்

1174. Peyalaatraa Neerulandha unkan

  • குறள் #
    1174
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
    Eyes Consumed with Grief
  • குறள்
    பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
    உய்வில்நோய் என்கண் நிறுத்து.
  • விளக்கம்
    எம் மையுண்ட கண்கள் யான் பிழைக்க முடியாதபடி நோயை எனக்கு உண்டாக்கிவிட்டுத் தாமும் அழமுடியாதபடி கண்ணீர் வற்றி விட்டன.
  • Translation
    in English
    Those eyes have wept till all the fount of tears is dry,
    That brought upon me pain that knows no remedy.
  • Meaning
    These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.
1173. கதுமெனத் தாநோக்கித் தாமே

1173. கதுமெனத் தாநோக்கித் தாமே

1173. Kadhumenath Thaanokkith Thaame

  • குறள் #
    1173
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
    Eyes Consumed with Grief
  • குறள்
    கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
    இதுநகத் தக்க துடைத்து.
  • விளக்கம்
    அன்று விரைவாகத் தாம் பார்த்துத் தாமே இருந்து இப்பொழுது அழுகின்றன. இக்கண்களின் அறியாச் செயல் சிரிக்கத் தக்கதாகும்.
  • Translation
    in English
    The eyes that threw such eager glances round erewhile
    Are weeping now. Such folly surely claims a smile!
  • Meaning
    They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?
1172. தெரிந்துணரா நோக்கிய உண்கண்

1172. தெரிந்துணரா நோக்கிய உண்கண்

1172. Therindhunaraa Nokkiya Unkan

  • குறள் #
    1172
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
    Eyes Consumed with Grief
  • குறள்
    தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
    பைதல் உழப்பது எவன்.
  • விளக்கம்
    பின் வருவதை ஆராய்ந்து அறியாமல் பார்த்த மையுண்ட கண்கள், அத்தவற்றை ஆராய்ந்தரியாமல் வருந்துவது ஏன்?
  • Translation
    in English
    How glancing eyes, that rash unweeting looked that day,
    With sorrow measureless are wasting now away!
  • Meaning
    The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).
1171. கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ

1171. கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ

1171. Kanthaam Kaluzhva Thevankolo

  • குறள் #
    1171
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
    Eyes Consumed with Grief
  • குறள்
    கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
    தாம்காட்ட யாம்கண் டது.
  • விளக்கம்
    கண்கள் எனக்குக் காதலரைக் காட்டியதாலன்றோ இத்தீராத நோயை அனுபவிக்கின்றேன்; இவ்வாறு எனக்கு நோயை உண்டாக்கிய கண்கள் இப்பொழுது அழுவது ஏனோ?
  • Translation
    in English
    They showed me him, and then my endless pain
    I saw: why then should weeping eyes complain?
  • Meaning
    As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).
1170. உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின்

1170. உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின்

1170. Ullampondru Ulvazhich Chelgirpin

  • குறள் #
    1170
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    படர்மெலிந் திரங்கல் (Padarmelindh Thirangal)
    Complainings
  • குறள்
    உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
    நீந்தல மன்னோஎன் கண்.
  • விளக்கம்
    எனது மனத்தைப் போலக் கண்கள் என் காதலர் இருக்கும் இடத்துக்கு விரைவில் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கமாட்டா.
  • Translation
    in English
    When eye of mine would as my soul go forth to him,
    It knows not how through floods of its own tears to swim.
  • Meaning
    Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.
1169. கொடியார் கொடுமையின் தாம்கொடிய

1169. கொடியார் கொடுமையின் தாம்கொடிய

1169. Kodiyaar Kodumaiyin Thaamkodiya

  • குறள் #
    1169
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    படர்மெலிந் திரங்கல் (Padarmelindh Thirangal)
    Complainings
  • குறள்
    கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
    நெடிய கழியும் இரா.
  • விளக்கம்
    பிரிவைத் தாங்கமுடியாத நாளிலே நீண்டதாகச் செல்கின்ற இரவு, அக்கொடியவர் செய்யும் கொடுமையைவிடப் பெருங் கொடுமையைச் செய்கின்றது.
  • Translation
    in English
    More cruel than the cruelty of him, the cruel one,
    In these sad times are lengthening hours of night I watch alone.
  • Meaning
    The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.
1168. மன்னுயிர் எல்லாம் துயிற்றி

1168. மன்னுயிர் எல்லாம் துயிற்றி

1168. Mannuyir Ellaam Thuyitri

  • குறள் #
    1168
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    படர்மெலிந் திரங்கல் (Padarmelindh Thirangal)
    Complainings
  • குறள்
    மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
    என்னல்லது இல்லை துணை.
  • விளக்கம்
    இவ்வுலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் அருள் செய்து உறக்கத்தைக் கொடுக்கின்ற இரவுக்கு என்னைத் தவிர வேறு துணையில்லை.
  • Translation
    in English
    All living souls in slumber soft she steeps;
    But me alone kind night for her companing keeps!
  • Meaning
    The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.
1167. காமக் கடும்புனல் நீந்திக்

1167. காமக் கடும்புனல் நீந்திக்

1167. Kamak Kadumpunal Neenthik

  • குறள் #
    1167
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    படர்மெலிந் திரங்கல் (Padarmelindh Thirangal)
    Complainings
  • குறள்
    காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
    யாமத்தும் யானே உளேன்.
  • விளக்கம்
    காதலாகிய பெரிய கடலை நீந்தி அதன் கரையை யான் காணவில்லை; பாதி இரவிலும் யாதொரு துணையுமின்றி யான் தனிமையாக உள்ளேன்.
  • Translation
    in English
    I swim the cruel tide of love, and can no shore descry,
    In watches of the night, too, ‘mid the waters, only I!
  • Meaning
    I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.
1166. இன்பம் கடல்மற்றுக் காமம்

1166. இன்பம் கடல்மற்றுக் காமம்

1166. Inbam Kadalmatruk Kaamam

  • குறள் #
    1166
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    படர்மெலிந் திரங்கல் (Padarmelindh Thirangal)
    Complainings
  • குறள்
    இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
    துன்பம் அதனிற் பெரிது.
  • விளக்கம்
    காதலால் வரும் இன்பம் கடல் போன்று பெரியது; அக்காமம் வருத்தம் செய்யும் போது அத்துன்பம் கடலைவிடப் பெரியது.
  • Translation
    in English
    A happy love ‘s sea of joy; but mightier sorrows roll
    From unpropitious love athwart the troubled soul.
  • Meaning
    The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.
1165. துப்பின் எவனாவர் மன்கொல்

1165. துப்பின் எவனாவர் மன்கொல்

1165. Thuppin Evanaavar Mankol

  • குறள் #
    1165
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    படர்மெலிந் திரங்கல் (Padarmelindh Thirangal)
    Complainings
  • குறள்
    துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
    நட்பினுள் ஆற்று பவர்.
  • விளக்கம்
    நட்பாயிருக்கும்போதே துன்பம் வரச் செய்பவர் பகையானால் என்ன செய்வாரோ?
  • Translation
    in English
    Who work us woe in friendship’s trustful hour,
    What will they prove when angry tempests lower?
  • Meaning
    He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity ?
1164. காமக் கடல்மன்னும் உண்டே

1164. காமக் கடல்மன்னும் உண்டே

1164. Kaamak Kadalmannum Unde

  • குறள் #
    1164
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    படர்மெலிந் திரங்கல் (Padarmelindh Thirangal)
    Complainings
  • குறள்
    காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
    ஏமப் புணைமன்னும் இல்.
  • விளக்கம்
    காதலாகிய கடலே எனக்கு நிலைத்திருக்கின்றது; அதனை நீந்திக் கடக்கப் பாதுகாப்பாகிய தெப்பம் இல்லை.
  • Translation
    in English
    A sea of love, ’tis true, I see stretched out before,
    But not the trusty bark that wafts to yonder shore.
  • Meaning
    There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.
1163. காமமும் நாணும் உயிர்காவாத்

1163. காமமும் நாணும் உயிர்காவாத்

1163. Kaamamum Naanum Uyirkaavaak

  • குறள் #
    1163
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    படர்மெலிந் திரங்கல் (Padarmelindh Thirangal)
    Complainings
  • குறள்
    காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
    நோனா உடம்பின் அகத்து.
  • விளக்கம்
    தாங்க முடியாத உடம்பிலே எனது உயிரானது காவடித் தண்டாயிருக்க, அதன் இரண்டு முனைகளிலும் காதல் நோயும், வெட்கமும் தொங்கும்.
  • Translation
    in English
    My soul, like porter’s pole, within my wearied frame,
    Sustains a two-fold burthen poised, of love and shame.
  • Meaning
    (Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.
1162. கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய்

1162. கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய்

1162. Karaththalum Aatrenin Noyainoi

  • குறள் #
    1162
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    படர்மெலிந் திரங்கல் (Padarmelindh Thirangal)
    Complainings
  • குறள்
    கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
    உரைத்தலும் நாணுத் தரும்.
  • விளக்கம்
    இந்நோயைப் பிறர் அறியாமல் மறைக்க என்னால் முடியவில்லை. காதலருக்குத் தூது அனுப்பித் தெரிவிக்கவும் எனக்கு வெட்கமாக இருக்கின்றது.
  • Translation
    in English
    I cannot hide this pain of mine, yet shame restrains
    When I would tell it out to him who caused my pains.
  • Meaning
    I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.
1161. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை

1161. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை

1161. Maraippenman Yaaniktho Noyai

  • குறள் #
    1161
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    படர்மெலிந் திரங்கல் (Padarmelindh Thirangal)
    Complainings
  • குறள்
    மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
    ஊற்றுநீர் போல மிகும்.
  • விளக்கம்
    நான் இந்நோயைப் பிறர் அறிதற்கு அஞ்சி மறைக்கின்றேன்; இந்நோயோ, இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மேலும் மேலும் ஊறுவது போல வளர்ந்து பெருகுகின்றது.
  • Translation
    in English
    I would my pain conceal, but see! it surging swells,
    As streams to those that draw from ever-springing wells.
  • Meaning
    I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.
1160. அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப்

1160. அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப்

1160. Arithaatri Allalnoi Neekkip

  • குறள் #
    1160
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பிரிவாற்றாமை (Pirivaatraamai)
    Separation Unendurable
  • குறள்
    அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
    பின்இருந்து வாழ்வார் பலர்.
  • விளக்கம்
    பிரிவுக்கு உடன்பட்டுப் பிரிதலால் உண்டாகும் துன்பத்தையும் நீக்கிப் பிரிவினைப் பொறுத்துக் கொண்டு, பின்னும் இருந்து வாழும் மகளிர் பலராவர்.
  • Translation
    in English
    Sorrow’s sadness meek sustaining, Driving sore distress away,
    Separation uncomplaining Many bear the livelong day!
  • Meaning
    As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards.
1159. தொடிற்சுடின் அல்லது காமநோய்

1159. தொடிற்சுடின் அல்லது காமநோய்

1159. Thodirchudin Allathu Kaamanoi

  • குறள் #
    1159
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பிரிவாற்றாமை (Pirivaatraamai)
    Separation Unendurable
  • குறள்
    தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
    விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
  • விளக்கம்
    நெருப்பு தன்னைத் தொட்டால் அல்லாமல் சுட மாட்டாது. காதல் நோய் தூர இருப்பினும் சுடுவதாகும்.
  • Translation
    in English
    Fire burns the hands that touch; but smart of love
    Will burn in hearts that far away remove.
  • Meaning
    Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?
1158. இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல்

1158. இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல்

1158. Innaathu Inaniloor Vaazhthal

  • குறள் #
    1158
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பிரிவாற்றாமை (Pirivaatraamai)
    Separation Unendurable
  • குறள்
    இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
    இன்னாது இனியார்ப் பிரிவு.
  • விளக்கம்
    தோழியர் இல்லாத வேறு ஊரில் வாழ்தல் துன்பஞ்செய்வதாகும். காதலரைப் பிரிதல் அவ்வாறு வாழ்தலைக் காட்டிலும் துன்பமாகும்.
  • Translation
    in English
    ‘Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;
    ‘Tis sadder still to bid a friend beloved farewell.
  • Meaning
    Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one’s lover.
1157. துறைவன் துறந்தமை தூற்றாகொல்

1157. துறைவன் துறந்தமை தூற்றாகொல்

1157. Thuraivan Thuranthamai Thootraakol

  • குறள் #
    1157
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பிரிவாற்றாமை (Pirivaatraamai)
    Separation Unendurable
  • குறள்
    துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
    இறைஇறவா நின்ற வளை.
  • விளக்கம்
    காதலர் பிரிந்து சென்றமையை எனது முன்கை மணிக்கட்டிலிருந்து கழலுகின்ற வளையல்கள் எல்லோர்க்கும் அறிவிக்க மாட்டாவோ?
  • Translation
    in English
    The bracelet slipping from my wrist announced before
    Departure of the Prince that rules the ocean shore.
  • Meaning
    Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?
1156. பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின்

1156. பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின்

1156. Pirivuraikkum Vankannar Aayin

  • குறள் #
    1156
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பிரிவாற்றாமை (Pirivaatraamai)
    Separation Unendurable
  • குறள்
    பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
    நல்குவர் என்னும் நசை.
  • விளக்கம்
    காதலர் தமது பிரிவை எனக்குத் தெரிவிக்கும் கொடியவராயின், அவர் திரும்பிவந்து அருள் செய்வார் என்னும் நம்பிக்கை அரியதாகும்.
  • Translation
    in English
    To cherish longing hope that he should ever gracious be,
    Is hard, when he could stand, and of departure speak to me.
  • Meaning
    If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.
1155. ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல்

1155. ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல்

1155. Ombin Amainthaar Pirivompal

  • குறள் #
    1155
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பிரிவாற்றாமை (Pirivaatraamai)
    Separation Unendurable
  • குறள்
    ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
    நீங்கின் அரிதால் புணர்வு.
  • விளக்கம்
    என் உயிரைப் பிரியாமல் காப்பாற்றுவாயானால், காதலர் என்னை விட்டுப் பிரியாமல் தடுப்பாயாக; அவ்வாறின்றி அவர் பிரிந்தால், பின்பு அவரைச் சேர்த்தல் அரிதாகும்.
  • Translation
    in English
    If you would guard my life, from going him restrain
    Who fills my life! If he depart, hardly we meet again.
  • Meaning
    If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible.
1154. அளித்தஞ்சல் என்றவர் நீப்பின்

1154. அளித்தஞ்சல் என்றவர் நீப்பின்

1154. Aliththanchal Endravar Neeppin

  • குறள் #
    1154
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பிரிவாற்றாமை (Pirivaatraamai)
    Separation Unendurable
  • குறள்
    அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
    தேறியார்க்கு உண்டோ தவறு.
  • விளக்கம்
    முன்னாளில், ‘உன்னைப்பிரியேன், அஞ்சாதிரு’ என்று கூறியவர் பிரிவாரானால், அவர் சொல்லை நம்பியவரிடத்தில் குற்றமுண்டோ?
  • Translation
    in English
    If he depart, who fondly said, ‘Fear not,’ what blame’s incurred
    By those who trusted to his reassuring word?
  • Meaning
    If he who bestowed his love and said “fear not” should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?
1153. அரிதரோ தேற்றம் அறிவுடையார்

1153. அரிதரோ தேற்றம் அறிவுடையார்

1153. Aritharo Thetram Arivudaiyaar

  • குறள் #
    1153
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பிரிவாற்றாமை (Pirivaatraamai)
    Separation Unendurable
  • குறள்
    அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
    பிரிவோ ரிடத்துண்மை யான்.
  • விளக்கம்
    அறிவுடையாராகிய காதலரிடத்தும் ஒவ்வொரு சமயம் பிரிவு உண்டாதலால், ‘பிரியேன்’ என்று அவர் சொன்ன சொல்லை நம்புவதற்கு அரிதாயிருக்கின்றது.
  • Translation
    in English
    To trust henceforth is hard, if ever he depart,
    E’en he, who knows his promise and my breaking heart.
  • Meaning
    As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.
1152. இன்கண் உடைத்தவர் பார்வல்

1152. இன்கண் உடைத்தவர் பார்வல்

1152. Inkan Udaiththavar Paarval

  • குறள் #
    1152
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பிரிவாற்றாமை (Pirivaatraamai)
    Separation Unendurable
  • குறள்
    இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
    புன்கண் உடைத்தால் புணர்வு.
  • விளக்கம்
    அன்று அவருடைய பார்வையும் எனக்கு இன்பமாக இருந்தது. இன்று அவரது புணர்ச்சியும் அவர் பிரிவார் என எண்ணி அஞ்சும் துன்பம் தருகின்றது.
  • Translation
    in English
    It once was perfect joy to look upon his face;
    But now the fear of parting saddens each embrace.
  • Meaning
    His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.
1151. செல்லாமை உண்டேல் எனக்குரை

1151. செல்லாமை உண்டேல் எனக்குரை

1151. Sellaamai Undael Enakkurai

  • குறள் #
    1151
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    பிரிவாற்றாமை (Pirivaatraamai)
    Separation Unendurable
  • குறள்
    செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க் குரை.
  • விளக்கம்
    நீ என்னைப் பிரிந்து செல்லாதிருப்பாயானால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைவில் வருவாய் என்று சொல்ல விரும்பினால், அதுவரை உயிர் வைத்துக் கொண்டிருப்பவர்க்குச் சொல்.
  • Translation
    in English
    If you will say, ‘I leave thee not,’ then tell me so;
    Of quick return tell those that can survive this woe.
  • Meaning
    If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.
1150. தாம்வேண்டின் நல்குவர் காதலர்

1150. தாம்வேண்டின் நல்குவர் காதலர்

1150. Thaamvendin Nalkuvar Kaathalar

  • குறள் #
    1150
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
    The Announcement of the Rumour
  • குறள்
    தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
    கெளவை எடுக்கும்இவ் வூர்.
  • விளக்கம்
    உடன்போக்கின் பொருட்டு நாம் விரும்புகின்ற தூற்றுதலை இவ்வூரார் செய்வர்; காதலர் நாம் கேட்டுக் கொண்டால் உடன்போக்குக்கு உடன்படுவர்.
  • Translation
    in English
    If we desire, who loves will grant what we require;
    This town sends forth the rumour we desire!
  • Meaning
    The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him).
1149. அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு

1149. அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு

1149. Alarnaana Olvatho Anchalombu

  • குறள் #
    1149
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
    The Announcement of the Rumour
  • குறள்
    அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
    பலர்நாண நீத்தக் கடை.
  • விளக்கம்
    ‘அஞ்சாதே’ என்று சொன்ன காதலரே, பலர்முன் நாணும்படி பிரிந்து சென்றபின், நான் பிறர் தூற்றுவதற்கு நாணுவேனோ?
  • Translation
    in English
    When he who said ‘Fear not!’ hath left me blamed,
    While many shrink, can I from rumour hide ashamed?
  • Meaning
    When the departure of him who said “fear not” has put me to shame before others, why need I be ashamed of scandal.
1148. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால்

1148. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால்

1148. Neiyaal Erinuthuppem Endratraal

  • குறள் #
    1148
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
    The Announcement of the Rumour
  • குறள்
    நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
    காமம் நுதுப்பேம் எனல்.
  • விளக்கம்
    தூற்றுதலினால் காதலைக் குறைப்போம் என்று நினைத்தல், நெய்யினால் நெருப்பை அவிப்போம் என்று நினைத்தல் போன்றது.
  • Translation
    in English
    With butter-oil extinguish fire! ‘Twill prove
    Harder by scandal to extinguish love.
  • Meaning
    To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.
1147. ஊரவர் கெளவை எருவாக

1147. ஊரவர் கெளவை எருவாக

1147. Ooravar Kauvai Eruvaaga

  • குறள் #
    1147
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
    The Announcement of the Rumour
  • குறள்
    ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
    நீராக நீளும்இந் நோய்.
  • விளக்கம்
    இக்காதல் நோயாகிய பயிர், ஊராரின் தூற்றுதலை எருவாகவும், தாயின் கடுஞ்சொல்லை நீராகவும் கொண்டு வளரும்.
  • Translation
    in English
    My anguish grows apace: the town’s report
    Manures it; my mother’s word doth water it.
  • Meaning
    This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.
1146. கண்டது மன்னும் ஒருநாள்

1146. கண்டது மன்னும் ஒருநாள்

1146. Kandathu Mannum Orunaal

  • குறள் #
    1146
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
    The Announcement of the Rumour
  • குறள்
    கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண் டற்று.
  • விளக்கம்
    நான் காதலரைக் கண்டது ஒருநாளே; அதனால் எழுந்த தூற்றுதல் சந்திரனைப் பாம்பு பற்றியது போல் உலகெங்கும் பரவிற்று.
  • Translation
    in English
    I saw him but one single day: rumour spreads soon
    As darkness, when the dragon seizes on the moon.
  • Meaning
    It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.
1145. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால்

1145. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால்

1145. Kaliththorum Kallundal Vetatraal

  • குறள் #
    1145
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
    The Announcement of the Rumour
  • குறள்
    களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
    வெளிப்படுந் தோறும் இனிது.
  • விளக்கம்
    கள்ளுண்டு கழிக்கும் போதெல்லாம் மேலும் கள்ளுண்ணுதல் இனிதாகும் தன்மைபோல், காமம் அலர் மொழியால் வெளிப்படும் போதெல்லாம் இனிமை அளிக்கின்றது.
  • Translation
    in English
    The more man drinks, the more he ever drunk would be;
    The more my love’s revealed, the sweeter ’tis to me!
  • Meaning
    As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.
1144. கவ்வையால் கவ்விது காமம்

1144. கவ்வையால் கவ்விது காமம்

1144. Kavvaiyaal Kavviyathu Kaamam

  • குறள் #
    1144
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
    The Announcement of the Rumour
  • குறள்
    கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
    தவ்வென்னும் தன்மை இழந்து.
  • விளக்கம்
    எனது காமம், இவ்வூரவர் கூறுகின்ற தூற்றுதலால் வளர்ந்து வருகின்றது; அத்தூற்றுதல் இல்லையென்றால், அது இன்பம் தருதலை இழந்து சுருங்கிப் போகும்.
  • Translation
    in English
    The rumour rising makes my love to rise;
    My love would lose its power and languish otherwise.
  • Meaning
    Rumour increases the violence of my passion; without it, it would grow weak and waste away.
1143. உறாஅதோ ஊரறிந்த கெளவை

1143. உறாஅதோ ஊரறிந்த கெளவை

1143. Uraaatho Oorarindha Kauvai

  • குறள் #
    1143
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
    The Announcement of the Rumour
  • குறள்
    உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
    பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
  • விளக்கம்
    இவ்வூரவர் அறிதலால் உண்டான தூற்றுதல் எனக்குப் பொருந்தாதோ? அவள் சேர்க்கையைப் பெறாதபோதே பெற்றது போன்ற இன்பத்தைத் தரும் தன்மையுடையது.
  • Translation
    in English
    The rumour spread within the town, is it not gain to me?
    It is as though that were obtained that may not be.
  • Meaning
    Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).
1142. மலரன்ன கண்ணாள் அருமை

1142. மலரன்ன கண்ணாள் அருமை

1142. Malaranna Kannaal Arumai

  • குறள் #
    1142
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
    The Announcement of the Rumour
  • குறள்
    மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
    அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
  • விளக்கம்
    மலர் போன்ற கண்களை உடையவள் அருமையை அறியாது இவ்வூர், இவனோடு இவளுக்குத் தொடர்பு உண்டு என்று தூற்றுதலால் அவளை எனக்குக் கொடுத்தது.
  • Translation
    in English
    The village hath to us this rumour giv’n, that makes her mine;
    Unweeting all the rareness of the maid with flower-like eyne.
  • Meaning
    Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.
1141. அலரெழ ஆருயிர் நிற்கும்

1141. அலரெழ ஆருயிர் நிற்கும்

1141. Alarezha Aaruyir Nirkum

  • குறள் #
    1141
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
    The Announcement of the Rumour
  • குறள்
    அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
    பலரறியார் பாக்கியத் தால்.
  • விளக்கம்
    பிறர் எங்கள் தொடர்பை அறிந்து தூற்றுதலால் எனது உயிர் நிலைபெறுகிறது; அது என் பாக்கியம் என்பதை பலரும் அறியார்.
  • Translation
    in English
    By this same rumour’s rise, my precious life stands fast;
    Good fortune grant the many know this not!
  • Meaning
    My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.
1140. யாம்கண்ணின் காண நகுப

1140. யாம்கண்ணின் காண நகுப

1140. Yaamkannin Kaana Nagupa

  • குறள் #
    1140
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
    The Abandonment of Reserve
  • குறள்
    யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
    யாம்பட்ட தாம்படா ஆறு.
  • விளக்கம்
    யாம் அனுபவிப்பது போன்ற காம நோயினைத் தாங்கள் அனுபவிக்காமையால், அறிவில்லாதவர்கள் யாம் கண்ணால் காணும்படி சிரிப்பார்கள்.
  • Translation
    in English
    Before my eyes the foolish make a mock of me,
    Because they ne’er endured the pangs I now must drie.
  • Meaning
    Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.
1139. அறிகிலார் எல்லாரும் என்றேஎன்

1139. அறிகிலார் எல்லாரும் என்றேஎன்

1139. Arikilaar Ellaarum Endreen

  • குறள் #
    1139
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
    The Abandonment of Reserve
  • குறள்
    அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
    மறுகின் மறுகும் மருண்டு.
  • விளக்கம்
    எனது காமம், ‘எல்லோரும் என்னை அறியாதிருக்கின்றார்கள்; நானே வெளிப்பட்டு அறிவிப்பேன்’ என்று வீதியிலே மயங்கிச் சுழலுகின்றது.
  • Translation
    in English
    ‘There’s no one knows my heart,’ so says my love,
    And thus, in public ways, perturbed will rove.
  • Meaning
    My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).
1138. நிறையரியர் மன்அளியர் என்னாது

1138. நிறையரியர் மன்அளியர் என்னாது

1138. Niraiyariyar Manaliyar Ennaathu

  • குறள் #
    1138
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
    The Abandonment of Reserve
  • குறள்
    நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
    மறையிறந்து மன்று படும்.
  • விளக்கம்
    இவர் நிறையில் மிகுந்தவர்; மிகவும் இரங்கத் தக்கவர் என்று கருதாது, காமநோய் மறைத்தாலும் மறையாமல் வெளிப்படும்.
  • Translation
    in English
    In virtue hard to move, yet very tender, too, are we;
    Love deems not so, would rend the veil, and court publicity!
  • Meaning
    Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).
1137. கடலன்ன காமம் உழந்தும்

1137. கடலன்ன காமம் உழந்தும்

1137. Kadalanna Kaamam Uzhanthum

  • குறள் #
    1137
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
    The Abandonment of Reserve
  • குறள்
    கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
    பெண்ணின் பெருந்தக்க தில்.
  • விளக்கம்
    கடல் போன்று கரையற்ற காதல் நோய் வருத்திய போதும், மடற்குதிரை ஏறாது பொறுத்திருக்கின்ற பெண்ணைப்போல மேலான தகுதியுடைய பிறப்பு வேறு இல்லை.
  • Translation
    in English
    There’s nought of greater worth than woman’s long-enduring soul,
    Who, vexed by love like ocean waves, climbs not the ‘horse of palm’.
  • Meaning
    There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.
1136. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்

1136. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்

1136. Madaloorthal Yaamaththum Ulluven

  • குறள் #
    1136
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
    The Abandonment of Reserve
  • குறள்
    மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
    படல்ஒல்லா பேதைக்கென் கண்.
  • விளக்கம்
    இப்பெண் காரணமாக என் கண்கள் தூங்கவில்லை. பாதி இரவிலும் மடலூர்தலை நினைத்துக் கொண்டிருப்பேன்.
  • Translation
    in English
    Of climbing ‘horse of palm’ in midnight hour, I think;
    My eyes know no repose for that same simple maid.
  • Meaning
    Mine eyes will not close in sleep on your mistress’s account; even at midnight will I think of mounting the palmyra horse.
1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள்

1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள்

1135. Thodalaik Kurunthodi Thanthaal

  • குறள் #
    1135
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
    The Abandonment of Reserve
  • குறள்
    தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
    மாலை உழக்கும் துயர்.
  • விளக்கம்
    மாலைக் காலத்தில் அனுபவிக்கும் துன்பத்தையும், மடற் குதிரையையும், மாலைபோல் தொடுத்த சிறிய வளைகளையுடையவள் எனக்குத் தந்தாள்.
  • Translation
    in English
    The maid that slender armlets wears, like flowers entwined,
    Has brought me ‘horse of palm,’ and pangs of eventide!
  • Meaning
    She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.