0397. யாதானும் நாடாமால் ஊராமால்

Rate this post

0397. யாதானும் நாடாமால் ஊராமால்

0397. Yaathaanum Naadaamaal Ooraamaal

 • குறள் #
  0397
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  அரசியல் (Arasiyal) – Royalty
 • அதிகாரம்
  கல்வி (Kalvi)
  Learning
 • குறள்
  யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
  சாந்துணையுங் கல்லாத வாறு.
 • விளக்கம்
  கற்றவனுக்கு எந்த ஒரு நாடும், எந்த ஓர் ஊரும் தன் நாடும், தன் ஊருமாகும். அவ்வாறிருக்க, ஒருவன் சாகுமளவும் கற்காதிருப்பது ஏன்?
 • Translation
  in English
  The learned make each land their own, in every city find a home;
  Who, till they die; learn nought, along what weary ways they roam!
 • Meaning
  How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?

Leave a comment