Tag: Wealth

0680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக்

0680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக்

0680. Uraisiriyaar Ulnadunkal Anjik

  • குறள் #
    0680
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
    Modes of Action
  • குறள்
    உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
    கொள்வர் பெரியார்ப் பணிந்து.
  • விளக்கம்
    சிறு நாட்டை ஆள்பவர், தம்மைவிட வலியவர் படையெடுத்து வந்தால், தம் குடிகள் கலங்குவதற்கு அஞ்சி சமாதானம் செய்வதற்கு இசைந்தால் அவரைப் பணிந்து அதனை ஏற்றுக்கொள்வர்.
  • Translation
    in English
    The men of lesser realm, fearing the people’s inward dread,
    Accepting granted terms, to mightier ruler bow the head.
  • Meaning
    Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation.
0679. நட்டார்க்கு நல்ல செயலின்

0679. நட்டார்க்கு நல்ல செயலின்

0679. Nattaarkku Nalla Seyalin

  • குறள் #
    0679
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
    Modes of Action
  • குறள்
    நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
    ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
  • விளக்கம்
    நண்பருக்கு இனியவற்றைச் செய்வதைவிட, பகைவருடன் சேராதிருப்பவரை விரைந்து நட்பாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Than kindly acts to friends more urgent thing to do,
    Is making foes to cling as friends attached to you.
  • Meaning
    One should rather hasten to secure the alliance of the foes (of one’s foes) than perform good offices to one’s friends.
0678. வினையான் வினையாக்கிக் கோடல்

0678. வினையான் வினையாக்கிக் கோடல்

0678. Vinaiyaan Vinaiyaakkik Kodal

  • குறள் #
    0678
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
    Modes of Action
  • குறள்
    வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
    யானையால் யானையாத் தற்று.
  • விளக்கம்
    செய்கின்ற செயலாலே அது போன்ற மற்றுமொரு செயலை முடித்துக் கொள்ளுதல் வேண்டும்; அஃது ஒரு யானையாலே மற்றொரு யானையைக் கட்டியதோடு ஒக்கும்.
  • Translation
    in English
    By one thing done you reach a second work’s accomplishment;
    So furious elephant to snare its fellow brute is sent.
  • Meaning
    To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.
0677. செய்வினை செய்வான் செயன்முறை

0677. செய்வினை செய்வான் செயன்முறை

0677. Seivinai Seivaan Seyanmurai

  • குறள் #
    0677
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
    Modes of Action
  • குறள்
    செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
    உள்ளறிவான் உள்ளம் கொளல்.
  • விளக்கம்
    செயலைச் செய்யத் தொடங்கியவன், அச்செயலின் தன்மைகளை அறிந்தவனது கருத்தை அறிந்து, அதனைச் செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Who would succeed must thus begin: first let him ask
    The thoughts of them who thoroughly know the task.
  • Meaning
    The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.
0676. முடிவும் இடையூறும் முற்றியாங்கு

0676. முடிவும் இடையூறும் முற்றியாங்கு

0676. Mudivum Idaiyoorum Mutriyaangu

  • குறள் #
    0676
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
    Modes of Action
  • குறள்
    முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
    படுபயனும் பார்த்துச் செயல்.
  • விளக்கம்
    ஒரு செயல் முடிவதற்குள்ள முயற்சியும், அதற்கு வரும் இடையூறும், அது நீங்கி முடிந்தால் வரும் பெரும்பயனும் அறிந்து செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Accomplishment, the hindrances, large profits won
    By effort: these compare,- then let the work be done.
  • Meaning
    An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).
0675. பொருள்கருவி காலம் வினையிடனொடு

0675. பொருள்கருவி காலம் வினையிடனொடு

0675. Porulkaruvi Kaalam Vinaiyidanodu

  • குறள் #
    0675
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
    Modes of Action
  • குறள்
    பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
    இருள்தீர எண்ணிச் செயல்.
  • விளக்கம்
    ஒரு செயலைச் செய்யுமிடத்துப் பொருள், கருவி, காலம், செயல், இடம் ஆகிய இவ்வைந்தையும் ஐயமற ஆராய்ந்து செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Treasure and instrument and time and deed and place of act:
    These five, till every doubt remove, think o’er with care exact.
  • Meaning
    Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.
0674. வினைபகை என்றிரண்டின் எச்சம்

0674. வினைபகை என்றிரண்டின் எச்சம்

0674. Vinaipagai Endrirandin Echcham

  • குறள் #
    0674
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
    Modes of Action
  • குறள்
    வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
    தீயெச்சம் போலத் தெறும்.
  • விளக்கம்
    முடிவு பெறாத செயலும் அடக்கப்படாத பகையும் அணைக்கப் படாத நெருப்பைப் போன்று பின் வளர்ந்து கெடுக்கும்.
  • Translation
    in English
    With work or foe, when you neglect some little thing,
    If you reflect, like smouldering fire, ’twill ruin bring.
  • Meaning
    When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.
0673. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே

0673. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே

0673. Ollumvaa Yellaam Vinainandre

  • குறள் #
    0673
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
    Modes of Action
  • குறள்
    ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
    செல்லும்வாய் நோக்கிச் செயல்.
  • விளக்கம்
    செய்யமுடியும் இடத்தில் எல்லாம் செயல் செய்தல் நல்லது; செய்யவியலாதபோது தக்க உபாயத்தை ஆராய்ந்து செய்தல் நல்லது.
  • Translation
    in English
    When way is clear, prompt let your action be;
    When not, watch till some open path you see.
  • Meaning
    Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.
0672. தூங்குக தூங்கிச் செயற்பால

0672. தூங்குக தூங்கிச் செயற்பால

0672. Thoonguga Thoongich Cheyarpaala

  • குறள் #
    0672
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
    Modes of Action
  • குறள்
    தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
    தூங்காது செய்யும் வினை.
  • விளக்கம்
    காலம் நீட்டித்துச் செய்யவேண்டிய செயல்களை நீட்டித்துச் செய்தல் வேண்டும்; விரைவில் செய்ய வேண்டியவற்றை விரைவில் செய்ய வேண்டும்.
  • Translation
    in English
    Slumber when sleepy work’s in hand: beware
    Thou slumber not when action calls for sleepless care!
  • Meaning
    Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.
0671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்

0671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்

0671. Soozhchchi Mudivu Thuniveithal

  • குறள் #
    0671
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
    Modes of Action
  • குறள்
    சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
    தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
  • விளக்கம்
    ஆலோசனையின் எல்லையாவது ஒரு முடிவுக்கு வருதலேயாகும்; அவ்வாறு முடிவுக்கு வந்த பின்னர்க் காலம் நீட்டித்துத் தாழ்த்துதல் குற்றமுடையதாகும்.
  • Translation
    in English
    Resolve is counsel’s end, If resolutions halt
    In weak delays, still unfulfilled, ’tis grievous fault.
  • Meaning
    Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.
0670. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்

0670. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்

0670. Enaiththitpam Eithiyak Kannum

  • குறள் #
    0670
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
    வேண்டாரை வேண்டாது உலகு.
  • விளக்கம்
    செய்யும் செயலில் உறுதி கொள்ளாதவரை, அவரிடத்தில் வேறு எந்த வலிமை இருந்தாலும் உலகத்தவர் மதிக்க மாட்டார்.
  • Translation
    in English
    The world desires not men of every power possessed,
    Who power in act desire not,- crown of all the rest.
  • Meaning
    The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.
0669. துன்பம் உறவரினும் செய்க

0669. துன்பம் உறவரினும் செய்க

0669. Thunbam Uravarinum Seiga

  • குறள் #
    0669
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை.
  • விளக்கம்
    துன்பம் மிக வருவதாயினும், இறுதியில் இன்பம் தரும் செயலைத் துணிவோடு செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Though toil and trouble face thee, firm resolve hold fast,
    And do the deeds that pleasure yield at last.
  • Meaning
    Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).
0668. கலங்காது கண்ட வினைக்கண்

0668. கலங்காது கண்ட வினைக்கண்

0668. Kalangaathu Kanda Vinaikkan

  • குறள் #
    0668
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கங் கடிந்து செயல்.
  • விளக்கம்
    மனம் கலங்காமல் செய்வதாகத் துணிந்த செயலிடத்துப் பின்னர் தளர்ச்சியில்லாது காலம் நீட்டிக்காது செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    What clearly eye discerns as right, with steadfast will,
    And mind unslumbering, that should man fulfil.
  • Meaning
    An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.
0667. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்

0667. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்

0667. Uruvukandu Ellaamai Vendum

  • குறள் #
    0667
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
    அச்சாணி அன்னார் உடைத்து.
  • விளக்கம்
    உருண்டு செல்கின்ற பெரிய தேர் அச்சின் சிறிய கடையாணி போன்று பயனுடையவர்களும் உலகில் உள்ளனர். ஆகையால் ஒருவரது உருவத்தின் சிறுமையைக் கண்டு இகழ்தல் கூடாது.
  • Translation
    in English
    Despise not men of modest bearing; Look not at form, but what men are:
    For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car!
  • Meaning
    Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.
0666. எண்ணிய எண்ணியாங்கு எய்து

0666. எண்ணிய எண்ணியாங்கு எய்து

0666. Enniya Enniyaangu Yeithu

  • குறள் #
    0666
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்.
  • விளக்கம்
    ஒரு பொருளை அடைய எண்ணியவர், அதனை அடைவதற்குரிய செயலில் வலிமையுடையவராகப் பெற்றால், எண்ணப்பட்ட பொருளை எண்ணியபடியே அடைவர்.
  • Translation
    in English
    Whate’er men think, ev’n as they think, may men obtain,
    If those who think can steadfastness of will retain.
  • Meaning
    If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.
0665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்

0665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்

0665. Veereithi Maandaar Vinaiththitpam

  • குறள் #
    0665
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்.
  • விளக்கம்
    செய்யும் செயலால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத்திட்பம் நாட்டை ஆளும் மன்னனிடத்தே எட்டி நன்கு மதிக்கப்படும்.
  • Translation
    in English
    The power in act of men renowned and great,
    With king acceptance finds and fame through all the state.
  • Meaning
    The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).
0664. சொல்லுதல் யார்க்கும் எளிய

0664. சொல்லுதல் யார்க்கும் எளிய

0664. Solluthal Yaarkkum Eliya

  • குறள் #
    0664
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்.
  • விளக்கம்
    ஒரு செயலைச் செயவோமேனச் சொல்லுதல் எவருக்கும் எளிது; ஆனால், சொன்னது போலச் செய்வது அரியதாகும்.
  • Translation
    in English
    Easy to every man the speech that shows the way;
    Hard thing to shape one’s life by words they say!
  • Meaning
    To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.
0663. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை

0663. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை

0663. Kadaikkotkach Cheithakka Thaanmai

  • குறள் #
    0663
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
    எற்றா விழுமந் தரும்.
  • விளக்கம்
    செய்யப்படும் செயலையெல்லாம் மறைத்து முடிவில் வெளிப்படுமாறு செய்வதே வலிமையாகும்; செய்யும் பொது இடையில் வெளிப்பட்டால், அதனால் செய்கின்றவனுக்கு நீங்காத துன்பம் வரும்.
  • Translation
    in English
    Man’s fitting work is known but by success achieved;
    In midst the plan revealed brings ruin ne’er to be retrieved.
  • Meaning
    So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow.
0662. ஊறொரால் உற்றபின் ஒல்காமை

0662. ஊறொரால் உற்றபின் ஒல்காமை

0662. Oororaal Utrapin Olkaamai

  • குறள் #
    0662
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
    ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
  • விளக்கம்
    பழுதுபடும் செயலைச் செய்யாமையும், பழுதுபட்ட விடத்து மனந்தளராமையுமாகிய இவ்விரண்டும் செயலைச் செய்பவரின் நெறியாகும் என அறிவுடையோர் கூறுவர்.
  • Translation
    in English
    ‘Each hindrance shun’, ‘unyielding onward press, If obstacle be there,’
    These two define your way, so those that search out truth declare.
  • Meaning
    Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject.
0661. வினைத்திட்பம் என்பது ஒருவன்

0661. வினைத்திட்பம் என்பது ஒருவன்

0661. Vinaiththitpam Enbathu Oruvan

  • குறள் #
    0661
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
    மற்றைய எல்லாம் பிற.
  • விளக்கம்
    செயலைச் செய்வதற்கேற்ற உறுதி என்று சொல்லப்படுவது, அதைச் செய்பவனுக்கு உள்ள மன உறுதியேயாகும்; அதத் தவிர மற்றவையெல்லாம் அவ்வளவு சிறந்தனவாகா.
  • Translation
    in English
    What men call ‘power in action’ know for ‘power of mind’
    Externe to man all other aids you find.
  • Meaning
    Firmness in action is (simply) one’s firmness of mind; all other (abilities) are not of this nature.
0660. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல்

0660. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல்

0660. Salaththaal Porulseithe Maarththal

  • குறள் #
    0660
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்தூய்மை (Vinaiththooimai)
    Purity in Action
  • குறள்
    சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
    கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
  • விளக்கம்
    ஒருவன் தீயசெயல்களால் பொருளைச் சம்பாதித்துக் காத்தல், பச்சை மண் கலத்தில் நீரை ஊற்றிக் காப்பது போலாகும்.
  • Translation
    in English
    In pot of clay unburnt he water pours and would retain,
    Who seeks by wrong the realm in wealth and safety to maintain.
  • Meaning
    (For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.
0659. அழக்கொண்ட எல்லாம் அழப்போம்

0659. அழக்கொண்ட எல்லாம் அழப்போம்

0659. Azhakkonda Ellaam Azhappom

  • குறள் #
    0659
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்தூய்மை (Vinaiththooimai)
    Purity in Action
  • குறள்
    அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
    பிற்பயக்கும் நற்பா லவை.
  • விளக்கம்
    பிறர் அழுது வருந்தும்படி ஒருவன் கொண்ட பொருள், அவனும் அவ்வாறே அழுது வருந்தும்படி போய்விடும். நல்வழியில் வந்த பொருளை முன் இழந்தாலும், அது பின் வந்து பயன் கொடுக்கும்.
  • Translation
    in English
    What’s gained through tears with tears shall go;
    From loss good deeds entail harvests of blessings grow.
  • Meaning
    All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit.
0658. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு

0658. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு

0658. Kadindha Kadinthoraar Seithaarkku

  • குறள் #
    0658
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்தூய்மை (Vinaiththooimai)
    Purity in Action
  • குறள்
    கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
    முடிந்தாலும் பீழை தரும்.
  • விளக்கம்
    பெரியோர் விலக்கியவற்றைத் தாமும் விலக்காமல் செய்தவர்க்கு, அவை ஒருவாறு முடிந்தனவாயினும் பின்பு துன்பம் தரும்.
  • Translation
    in English
    To those who hate reproof and do forbidden thing.
    What prospers now, in after days shall anguish bring.
  • Meaning
    The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow.
0657. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின்

0657. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின்

0657. Pazhimalaindhu Eithiya Aakkaththin

  • குறள் #
    0657
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்தூய்மை (Vinaiththooimai)
    Purity in Action
  • குறள்
    பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
    கழிநல் குரவே தலை.
  • விளக்கம்
    பழியை மேற்கொண்டு இழிந்த செயல் செய்து பெறும் செல்வத்தை விட சான்றோர் செயல் தூய்மையாக இருந்து அடையத்தக்க வறுமையே மேலானது.
  • Translation
    in English
    Than store of wealth guilt-laden souls obtain,
    The sorest poverty of perfect soul is richer gain.
  • Meaning
    Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.
0656. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ்

0656. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ்

0656. Eendraal Pasikaanbaan Ayinunj

  • குறள் #
    0656
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்தூய்மை (Vinaiththooimai)
    Purity in Action
  • குறள்
    ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை.
  • விளக்கம்
    தனது வறுமையின் காரணமாக, தன்னைப் பெற்ற தாயின் பசியை நீக்க முடியாது பார்த்திருக்கநேரிடினும், நிறைந்த அறிவினையுடையவர் பழிக்கத் தக்க செயலைச் செய்யாதிருத்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Though her that bore thee hung’ring thou behold, no deed
    Do thou, that men of perfect soul have crime decreed.
  • Meaning
    Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt).
0655. எற்றென்று இரங்குவ செய்யற்க

0655. எற்றென்று இரங்குவ செய்யற்க

0655. Etrendru Iranguva Seiyarka

  • குறள் #
    0655
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்தூய்மை (Vinaiththooimai)
    Purity in Action
  • குறள்
    எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
    மற்றன்ன செய்யாமை நன்று.
  • விளக்கம்
    தான் செய்த செயல் என்ன தன்மையுடையது என்று நினைத்துப் பின்னர் வருத்தப்படத்தக்கவற்றைச் செய்யாதிருத்தல் வேண்டும்; ஒரு கால் அப்படிச் செய்து விட்டாலும், மீண்டும் அத்தகையவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
  • Translation
    in English
    Do nought that soul repenting must deplore,
    If thou hast sinned, ’tis well if thou dost sin no more.
  • Meaning
    Let a minister never do acts of which he would have to grieve saying, “what is this I have done”; (but) should he do (them), it were good that he grieved not.
0654. இடுக்கண் படினும் இளிவந்த

0654. இடுக்கண் படினும் இளிவந்த

0654. Idukkan Padinum Ilivantha

  • குறள் #
    0654
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்தூய்மை (Vinaiththooimai)
    Purity in Action
  • குறள்
    இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
    நடுக்கற்ற காட்சி யவர்.
  • விளக்கம்
    தெளிவான அறிவினையுடையவர், தாம் துன்பப்பட நேர்ந்தாலும், அதன் பொருட்டு இழிவான செயலைச் செய்யமாட்டார்.
  • Translation
    in English
    Though troubles press, no shameful deed they do,
    Whose eyes the ever-during vision view.
  • Meaning
    Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).
0653. ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும்

0653. ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும்

0653. Ooothal Vendum Olimaazhgum

  • குறள் #
    0653
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்தூய்மை (Vinaiththooimai)
    Purity in Action
  • குறள்
    ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
    ஆஅதும் என்னு மவர்.
  • விளக்கம்
    மேன்மையுற வேண்டும் என்று விரும்புவோர், தம்முடைய மதிப்பைக் கெடுப்பதற்குக் காரணமான செயலை விடுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Who tell themselves that nobler things shall yet be won
    All deeds that dim the light of glory must they shun.
  • Meaning
    Those who say, “we will become (better)” should avoid the performance of acts that would destroy (their fame).
0652. என்றும் ஒருவுதல் வேண்டும்

0652. என்றும் ஒருவுதல் வேண்டும்

0652. Endrum Oruvuthal Vendum

  • குறள் #
    0652
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்தூய்மை (Vinaiththooimai)
    Purity in Action
  • குறள்
    என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
    நன்றி பயவா வினை.
  • விளக்கம்
    புகழையும், நன்மையையும் கொடுக்காத செயலைச் செய்யாமல் எப்பொழுதும் நீக்குதல் வேண்டும்.
  • Translation
    in English
    From action evermore thyself restrain
    Of glory and of good that yields no gain.
  • Meaning
    Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).
0651. துணைநலம் ஆக்கம் தரூஉம்

0651. துணைநலம் ஆக்கம் தரூஉம்

0651. Thunainalam Aakkam Tharooum

  • குறள் #
    0651
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    வினைத்தூய்மை (Vinaiththooimai)
    Purity in Action
  • குறள்
    துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
    வேண்டிய எல்லாந் தரும்.
  • விளக்கம்
    ஒருவனுக்குத் துணைவரால் வரும் நன்மை செல்வம் ஒன்றையே கொடுக்கும்; செய்யும் தொழிலின் நன்மை அவன் விரும்பியவற்றை யெல்லாம் கொடுக்கும்.
  • Translation
    in English
    The good external help confers is worldly gain;
    By action good men every needed gift obtain.
  • Meaning
    The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.
0650. இண்ருழ்த்தும் நாறா மலரனையர்

0650. இண்ருழ்த்தும் நாறா மலரனையர்

0650. Inruzhththum Naaraa Malaranaiyar

  • குறள் #
    0650
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    சொல்வன்மை (Solvanmai)
    Power in Speech
  • குறள்
    இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
    உணர விரித்துரையா தார்.
  • விளக்கம்
    தாம் கற்றதைப் பிறர் அறியுமாறு விரித்துக் கூறத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருக்கும் மணக்காத மலர் போன்றவராவர்.
  • Translation
    in English
    Like scentless flower in blooming garland bound
    Are men who can’t their lore acquired to other’s ears expound.
  • Meaning
    Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.
0649. பலசொல்லக் காமுறுவர் மன்றமா

0649. பலசொல்லக் காமுறுவர் மன்றமா

0649. Palasollak Kaamuruvar Mandramaa

  • குறள் #
    0649
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    சொல்வன்மை (Solvanmai)
    Power in Speech
  • குறள்
    பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
    சிலசொல்லல் தேற்றா தவர்.
  • விளக்கம்
    குற்ற மற்றவையாகச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவார்.
  • Translation
    in English
    Who have not skill ten faultless words to utter plain,
    Their tongues will itch with thousand words man’s ears to pain.
  • Meaning
    They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.
0648. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்

0648. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்

0648. Viraindhu Thozhilketkum Gnaalam

  • குறள் #
    0648
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    சொல்வன்மை (Solvanmai)
    Power in Speech
  • குறள்
    விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
  • விளக்கம்
    சொல்லவிருக்கும் செய்திகளை ஒழுங்குபடக் கோத்து இனிதாகச் சொல்லவல்லவரைப் பெற்றால், உலகத்தவர் அவர் கூறியவற்றை விரைந்து ஏற்றுக் கொள்வர்.
  • Translation
    in English
    Swiftly the listening world will gather round,
    When men of mighty speech the weighty theme propound.
  • Meaning
    If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them.
0647. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்

0647. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்

0647. Solalvallan Sorvilan Anjaan

  • குறள் #
    0647
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    சொல்வன்மை (Solvanmai)
    Power in Speech
  • குறள்
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
  • விளக்கம்
    தான் எண்ணியவற்றைப் பிறர் ஏற்குமாறு சொல்ல வல்லவனாகவும், சொல்ல வேண்டியவற்றை மறவாதவனாகவும், அவைக்கு அஞ்சாதவனாகவும் உள்ளவனைப் பகைவனாகக் கொண்டு வெல்லுதல் எவர்க்கும் அரிது.
  • Translation
    in English
    Mighty in word, of unforgetful mind, of fearless speech,
    ‘Tis hard for hostile power such man to overreach.
  • Meaning
    It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.
0646. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல்

0646. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல்

0646. Vetpaththaanj Chollip Pirarsol

  • குறள் #
    0646
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    சொல்வன்மை (Solvanmai)
    Power in Speech
  • குறள்
    வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
    மாட்சியின் மாசற்றார் கோள்.
  • விளக்கம்
    பிறர் விரும்புமாறு தாம் சொல்லி, பிறர் சொல்லுவதன் பயனைத் தாம் அறிந்து கொள்ளுதல், குற்றமற்ற உயர்ந்த கொள்கையாகும்.
  • Translation
    in English
    Charming each hearer’s ear, of others’ words to seize the sense,
    Is method wise of men of spotless excellence.
  • Meaning
    It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.
0645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்

0645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்

0645. Solluga Sollaip Pirithorsol

  • குறள் #
    0645
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    சொல்வன்மை (Solvanmai)
    Power in Speech
  • குறள்
    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
  • விளக்கம்
    தாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லும் சொல்லாகிய வேறு சொல் இல்லாமையை அறிந்து, திறமையாகச் சொல்லுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Speak out your speech, when once ’tis past dispute
    That none can utter speech that shall your speech refute.
  • Meaning
    Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.
0644. திறனறிந்து சொல்லுக சொல்லை

0644. திறனறிந்து சொல்லுக சொல்லை

0644. Thiranarindhu Solluga Sollai

  • குறள் #
    0644
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    சொல்வன்மை (Solvanmai)
    Power in Speech
  • குறள்
    திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
    பொருளும் அதனினூஉங்கு இல்.
  • விளக்கம்
    தாம் சொல்லக் கருதியதைச் சொல்லின் திறத்தை அறிந்து சொல்லுதல் வேண்டும். அதனினும் மேம்பட்ட அறமும் பொருளும் இல்லை.
  • Translation
    in English
    Speak words adapted well to various hearers’ state;
    No higher virtue lives, no gain more surely great.
  • Meaning
    Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth.
0643. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்

0643. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்

0643. Kettaarp Pinikkum Thagaiyavaaik

  • குறள் #
    0643
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    சொல்வன்மை (Solvanmai)
    Power in Speech
  • குறள்
    கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்.
  • விளக்கம்
    கெட்டவர்களைத் தன்வயமாக்கும் தன்மையுடையதாகவும், கேளாதவர்களும் கேட்க விரும்புமாறும் சொல்வதே சிறந்த சொல் எனப்படும்.
  • Translation
    in English
    ‘Tis speech that spell-bound holds the listening ear,
    While those who have not heard desire to hear.
  • Meaning
    The (minister’s) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).
0642. ஆக்கமுங் கேடும் அதனால்

0642. ஆக்கமுங் கேடும் அதனால்

0642. Aakkamung Kedum Adhanaal

  • குறள் #
    0642
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    சொல்வன்மை (Solvanmai)
    Power in Speech
  • குறள்
    ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
    காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
  • விளக்கம்
    ஒருவனுக்கு வாழ்வும் தாழ்வும் அவனுடைய நாவில் பிறக்கும் சொல்லால் வருதலால், சொல்லில் தவறு உண்டாகாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Since gain and loss in life on speech depend,
    From careless slip in speech thyself defend.
  • Meaning
    Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.
0641. நாநலம் என்னும் நலனுடைமை

0641. நாநலம் என்னும் நலனுடைமை

0641. Naanalam Ennum Nalanudaimai

  • குறள் #
    0641
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    சொல்வன்மை (Solvanmai)
    Power in Speech
  • குறள்
    நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத்து உள்ளதூஉம் அன்று.
  • விளக்கம்
    சொல்வன்மை என்ற நலம், மற்ற நலன்களுள் அடங்குவதன்று; ஆகையால், நாவின் நலம் என்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவருக்குச் சிறந்த உடைமையாகும்.
  • Translation
    in English
    A tongue that rightly speaks the right is greatest gain,
    It stands alone midst goodly things that men obtain.
  • Meaning
    The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.
0640. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே

0640. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே

0640. Muraippadach Choozhndhum Mudivilave

  • குறள் #
    0640
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    அமைச்சு (Amaichchu)
    The Office of Minister of State
  • குறள்
    முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
    திறப்பாடு இலாஅ தவர்.
  • விளக்கம்
    செயலைச் செய்து முடிக்கும் திறமையில்லாத அமைச்சர், செய்யவேண்டிய செயல் பற்றி முறைப்படி ஆலோசித்து வைத்தும், செய்யும் பொது அதனை முடிவாகச் செய்யமாட்டார்.
  • Translation
    in English
    For gain of end desired just counsel nought avails
    To minister, when tact in execution fails.
  • Meaning
    Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright.
0639. பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள்

0639. பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள்

0639. Pazhuthennum Mandhiriyin Pakkaththul

  • குறள் #
    0639
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    அமைச்சு (Amaichchu)
    The Office of Minister of State
  • குறள்
    பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
    எழுபது கோடி உறும்.
  • விளக்கம்
    அருகில் இருந்து தீங்கு செய்ய என்னும் அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருத்தல் நன்மை தரத்தக்கதாகும்.
  • Translation
    in English
    A minister who by king’s side plots evil things
    Worse woes than countless foemen brings.
  • Meaning
    Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin.
0638. அறிகொன்று அறியான் எனினும்

0638. அறிகொன்று அறியான் எனினும்

0638. Arikondru Ariyaan Eninum

  • குறள் #
    0638
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    அமைச்சு (Amaichchu)
    The Office of Minister of State
  • குறள்
    அறிகொன்று அறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன்.
  • விளக்கம்
    அறிந்து சொன்னவரின் அறிவையும் அழித்துத் தானும் அறியாமலும் உள்ள அரசனுக்கும் நல்லன கூறுதல் அமைச்சரின் கடமை.
  • Translation
    in English
    ‘Tis duty of the man in place aloud to say
    The very truth, though unwise king may cast his words away.
  • Meaning
    Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice.
0637. செயற்கை அறிந்தக் கடைத்தும்

0637. செயற்கை அறிந்தக் கடைத்தும்

0637. Seyarkai Arindhak Kadaiththum

  • குறள் #
    0637
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    அமைச்சு (Amaichchu)
    The Office of Minister of State
  • குறள்
    செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
    இயற்கை அறிந்து செயல்.
  • விளக்கம்
    ஒரு செயலைச் செய்தற்குரிய வழியை நூல் மூலம் அறிந்திருப்பினும், உலக இயல்பையும் அறிந்து, அதன்படி செய்யவேண்டும்.
  • Translation
    in English
    Though knowing all that books can teach, ’tis truest tact
    To follow common sense of men in act.
  • Meaning
    Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly.
0636. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு

0636. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு

0636. Mathinutpam Noolodu Udaiyaarkku

  • குறள் #
    0636
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    அமைச்சு (Amaichchu)
    The Office of Minister of State
  • குறள்
    மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
    யாவுள முன்நிற் பவை.
  • விளக்கம்
    மதிநுட்பத்தோடு நூலறிவும் உடைய அமைச்சருக்குமுன், பகைவரின் அதிக நுட்பமுடைய உபாயங்கள் எதிர் நிற்கமாட்டா.
  • Translation
    in English
    When native subtilty combines with sound scholastic lore,
    ‘Tis subtilty surpassing all, which nothing stands before.
  • Meaning
    What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?.
0635. அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ்

0635. அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ்

0635. Aranarindhu Aandramaindha Sollaanenj

  • குறள் #
    0635
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    அமைச்சு (Amaichchu)
    The Office of Minister of State
  • குறள்
    அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
    திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
  • விளக்கம்
    அறங்களை அறிந்து, அறிவு நிறைந்த சொல்லையுடையவனாய், எப்பொழுதும் செயல்களைச் செய்யும் வழிகளை அறிந்தவன், ஆலோசனை கூறுதற்குரிய துணையாவான்.
  • Translation
    in English
    The man who virtue knows, has use of wise and pleasant words.
    With plans for every season apt, in counsel aid affords.
  • Meaning
    He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of performing actions).
0634. தெரிதலும் தேர்ந்து செயலும்

0634. தெரிதலும் தேர்ந்து செயலும்

0634. Therithalum Therndhu Seyalum

  • குறள் #
    0634
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    அமைச்சு (Amaichchu)
    The Office of Minister of State
  • குறள்
    தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
    சொல்லலும் வல்லது அமைச்சு.
  • விளக்கம்
    செய்வதற்குரிய செயல் பற்றி ஆராய்தல், ஆராய்ந்து செய்தல், அறிவுரைகளைத் துணிந்து சொல்லுதல் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.
  • Translation
    in English
    A minister has power to see the methods help afford,
    To ponder long, then utter calm conclusive word.
  • Meaning
    The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).
0633. பிரித்தலும் பேணிக் கொளலும்

0633. பிரித்தலும் பேணிக் கொளலும்

0633. Piriththalum Penik Kolalum

  • குறள் #
    0633
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    அமைச்சு (Amaichchu)
    The Office of Minister of State
  • குறள்
    பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
    பொருத்தலும் வல்ல தமைச்சு.
  • விளக்கம்
    பகைவரின் துணைவரைப் பிரித்தல், தம் துணைவரைப் பேணல், தம்மை விட்டுப் பிரிந்தவரைத் தம்மோடு சேர்த்தல் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.
  • Translation
    in English
    A minister is he whose power can foes divide,
    Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.
  • Meaning
    The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him).
0632. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல்

0632. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல்

0632. Vankan Kudikaaththal Katraridhal

  • குறள் #
    0632
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    அமைச்சு (Amaichchu)
    The Office of Minister of State
  • குறள்
    வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
    ஐந்துடன் மாண்டது அமைச்சு.
  • விளக்கம்
    அஞ்சாமை, நற்குடிப்பிறப்பு, நாட்டைக் காத்தல், நீதி நூல்களைக் கற்றறிதல், முயற்சியுடைமை ஆகிய ஐந்திலும் மாட்சிமையுடையவனே அமைச்சனாவான்.
  • Translation
    in English
    A minister must greatness own of guardian power, determined mind,
    Learn’d wisdom, manly effort with the former five combined.
  • Meaning
    The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance.
0631. கருவியும் காலமும் செய்கையும்

0631. கருவியும் காலமும் செய்கையும்

0631. Karuviyum Kaalamum Seigaiyum

  • குறள் #
    0631
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
  • அதிகாரம்
    அமைச்சு (Amaichchu)
    The Office of Minister of State
  • குறள்
    கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்டது அமைச்சு.
  • விளக்கம்
    தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செய்யும் விதம், செய்யப்படும் அரிய செயல் ஆகியவற்றை நன்கு ஆராய வல்லவனே அமைச்சனாவான்.
  • Translation
    in English
    A minister is he who grasps, with wisdom large,
    Means, time, work’s mode, and functions rare he must discharge.
  • Meaning
    The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself).
0630. இன்னாமை இன்பம் எனக்கொளின்

0630. இன்னாமை இன்பம் எனக்கொளின்

0630. Innaamai Inbam Enakkolin

  • குறள் #
    0630
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
    Helpless in Trouble
  • குறள்
    இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
    ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
  • விளக்கம்
    ஒருவன், தன் முயற்சியினால் உண்டாகும் துன்பத்தை இன்பமாகக் கொள்வானானால், அவன் பகைவரும் விரும்பி மதிக்கத்தக்க சிறப்பை அடைவான்.
  • Translation
    in English
    Who pain as pleasure takes, he shall acquire
    The bliss to which his foes in vain aspire.
  • Meaning
    The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.
0629. இன்பத்துள் இன்பம் விழையாதான்

0629. இன்பத்துள் இன்பம் விழையாதான்

0629. Inbaththul Inbam Vizhaiyaathaan

  • குறள் #
    0629
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
    Helpless in Trouble
  • குறள்
    இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்பம் உறுதல் இலன்.
  • விளக்கம்
    இன்பம் வந்தபோது அவ்வின்பத்தை விரும்பாதவன், துன்பம் வந்தபோது அத்துன்பத்திற்காக வருந்தமாட்டான்.
  • Translation
    in English
    Mid joys he yields not heart to joys’ control.
    Mid sorrows, sorrow cannot touch his soul.
  • Meaning
    He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.
0628. இன்பம் விழையான் இடும்பை

0628. இன்பம் விழையான் இடும்பை

0628. Inbam Vizhaiyaan Idumbai

  • குறள் #
    0628
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
    Helpless in Trouble
  • குறள்
    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்பம் உறுதல் இலன்.
  • விளக்கம்
    இன்பத்தை விரும்பாமல் துன்பம் இயற்கையானது என்ற தெளிவுடையவன் துன்பம் அடையமாட்டான்.
  • Translation
    in English
    He seeks not joy, to sorrow man is born, he knows;
    Such man will walk unharmed by touch of human woes.
  • Meaning
    That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).
0627. இலக்கம் உடம்பிடும்பைக் கென்று

0627. இலக்கம் உடம்பிடும்பைக் கென்று

0627. Ilakkam Udambidumbaik Kendru

  • குறள் #
    0627
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
    Helpless in Trouble
  • குறள்
    இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
    கையாறாக் கொள்ளாதாம் மேல்.
  • விளக்கம்
    அறிவுடையோர் தமது உடம்பு, துன்பம் என்னும் வாளுக்கு இலக்கு என்று அறிந்து, தம்மீது வந்த துன்பத்தைத் துன்பமாகக் கொள்ள மாட்டார்.
  • Translation
    in English
    ‘Man’s frame is sorrow’s target’, the noble mind reflects,
    Nor meets with troubled mind the sorrows it expects.
  • Meaning
    The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.
0626. அற்றேமென்று அல்லற் படுபவோ

0626. அற்றேமென்று அல்லற் படுபவோ

0626. Atremendru Allar Padubavo

  • குறள் #
    0626
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
    Helpless in Trouble
  • குறள்
    அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
    ஓம்புதல் தேற்றா தவர்.
  • விளக்கம்
    செல்வத்தைப் பெற்றோம் என்று மகிழ்ந்து அதனைப் பாதுகாக்காதவர், வறுமை வந்த காலத்தில் அதை இழந்து விட்டோம் என்று அல்லற்படுவரோ?
  • Translation
    in English
    Who boasted not of wealth, nor gave it all their heart,
    Will not bemoan the loss, when prosperous days depart.
  • Meaning
    Will those men ever cry out in sorrow, “we are destitute” who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.
0625. அடுக்கி வரினும் அழிவிலான்

0625. அடுக்கி வரினும் அழிவிலான்

0625. Adukki Varinum Azhivilaan

  • குறள் #
    0625
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
    Helpless in Trouble
  • குறள்
    அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கட் படும்.
  • விளக்கம்
    இடைவிடாது மேலும் மேலும் வந்தாலும் தன் முயற்சியை விடாதவனை அடைந்த துன்பம், துன்பப்படும்.
  • Translation
    in English
    When griefs press on, but fail to crush the patient heart,
    Then griefs defeated, put to grief, depart.
  • Meaning
    The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).
0624. மடுத்தவா யெல்லாம் பகடன்னான்

0624. மடுத்தவா யெல்லாம் பகடன்னான்

0624. Maduththavaa Yellaam Pagadannaan

  • குறள் #
    0624
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
    Helpless in Trouble
  • குறள்
    மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
  • விளக்கம்
    தடை நேர்ந்த இடங்களிலெல்லாம் தளராது வண்டியை இழுக்கும் எருதுபோலத் தொழிலை மேற்கொண்டு செலுத்த வல்லவனை அடைந்த துன்பம் தானே துன்பத்தை அடையும்.
  • Translation
    in English
    Like bullock struggle on through each obstructed way;
    From such an one will troubles, troubled, roll away.
  • Meaning
    Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.
0623. இடும்பைக்கு இடும்பை படுப்பர்

0623. இடும்பைக்கு இடும்பை படுப்பர்

0623. Idumbaikku Idumbai Paduppar

  • குறள் #
    0623
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
    Helpless in Trouble
  • குறள்
    இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
    இடும்பை படாஅ தவர்.
  • விளக்கம்
    துன்பத்துக்கு வருந்தாதவர்கள், அத்துன்பத்துக்குத் துன்பமே செய்வார்கள்.
  • Translation
    in English
    Who griefs confront with meek, ungrieving heart,
    From them griefs, put to grief, depart.
  • Meaning
    They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.
0622. வெள்ளத் தனைய இடும்பை

0622. வெள்ளத் தனைய இடும்பை

0622. Vellath Thanaiya Idumbai

  • குறள் #
    0622
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
    Helpless in Trouble
  • குறள்
    வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்.
  • விளக்கம்
    வெள்ளம் போன்று அளவற்ற பெருந்துன்பம் வந்தாலும், அறிவுடையோன் அதனைத் தன் உள்ளத்தில் நினைத்த அளவில் கெட்டுப் போகும்.
  • Translation
    in English
    Though sorrow, like a flood, comes rolling on,
    When wise men’s mind regards it,- it is gone.
  • Meaning
    A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.
0621. இடுக்கண் வருங்கால் நகுக

0621. இடுக்கண் வருங்கால் நகுக

0621. Idukkan Varungaal Naguga

  • குறள் #
    0621
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
    Helpless in Trouble
  • குறள்
    இடுக்கண் வருங்கால் நகுக அதனை
    அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
  • விளக்கம்
    துன்பம் வரும்போது அதற்காக வருந்தாமல் மனத்துக்குள் மகிழ வேண்டும்; ஏனென்றால், அத்துன்பத்தை நெருக்கி அழிப்பதற்கு அதைப் போன்றது வேறு இல்லை.
  • Translation
    in English
    Smile, with patient, hopeful heart, in troublous hour;
    Meet and so vanquish grief; nothing hath equal power.
  • Meaning
    If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.
0620. ஊழையும் உப்பக்கம் காண்பர்

0620. ஊழையும் உப்பக்கம் காண்பர்

0620. Oozhaiyum Uppakkam Kaanbar

  • குறள் #
    0620
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
    Manly Effort
  • குறள்
    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்.
  • விளக்கம்
    மனம் தளராதும் தாமதிக்காதும் முயற்சி செய்பவர், தமக்குத் தடையாக இருக்கும் விதியையும் தோல்வியுறச் செய்வர்.
  • Translation
    in English
    Who strive with undismayed, unfaltering mind,
    At length shall leave opposing fate behind.
  • Meaning
    They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.
0619. தெய்வத்தான் ஆகா தெனினும்

0619. தெய்வத்தான் ஆகா தெனினும்

0619. Theivaththaan Aagaa Theninum

  • குறள் #
    0619
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
    Manly Effort
  • குறள்
    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்.
  • விளக்கம்
    முயன்ற தொழில் ஊழ்வயத்தால் கருதிய பயனைக் கொடுக்க வில்லையாயினும், அம்முயற்சி உடம்பை வருத்திய அளவுக்குக் கூலி தரும்.
  • Translation
    in English
    Though fate-divine should make your labour vain;
    Effort its labour’s sure reward will gain.
  • Meaning
    Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.
0618. பொறியின்மை யார்க்கும் பழியன்று

0618. பொறியின்மை யார்க்கும் பழியன்று

0618. Poriyinmai Yaarkkum Pazhiyandru

  • குறள் #
    0618
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
    Manly Effort
  • குறள்
    பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி.
  • விளக்கம்
    நற்பயனைத் தருவதாகிய நல்வினை இல்லாமை ஒருவனுக்குப் பழியாகாது; அறிய வேண்டியவற்றை அறிந்து தொழில் முயற்சி செய்யாமையே பழியாகும்.
  • Translation
    in English
    ‘Tis no reproach unpropitious fate should ban;
    But not to do man’s work is foul disgrace to man!
  • Meaning
    Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.
0617. மடியுளாள் மாமுகடி என்ப

0617. மடியுளாள் மாமுகடி என்ப

0617. Madiyulaal Maamugadi Enba

  • குறள் #
    0617
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
    Manly Effort
  • குறள்
    மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
    தாளுளான் தாமரையி னாள்.
  • விளக்கம்
    மூதேவி சோம்பலுள்ளவனிடத்தில் இருப்பாள்; சீதேவி முயற்சியுள்ளவனிடத்தில் இருப்பாள்.
  • Translation
    in English
    In sluggishness is seen misfortune’s lurid form, the wise declare;
    Where man unslothful toils, she of the lotus flower is there!
  • Meaning
    They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious.
0616. முயற்சி திருவினை ஆக்கும்

0616. முயற்சி திருவினை ஆக்கும்

0616. Muyarchi Thiruvinai Aakkum

  • குறள் #
    0616
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
    Manly Effort
  • குறள்
    முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்.
  • விளக்கம்
    முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் வறுமையை அடைவிக்கும்.
  • Translation
    in English
    Effort brings fortune’s sure increase,
    Its absence brings to nothingness.
  • Meaning
    Labour will produce wealth; idleness will bring poverty.
0615. இன்பம் விழையான் வினைவிழைவான்

0615. இன்பம் விழையான் வினைவிழைவான்

0615. Inbam Vizhaiyaan Viniaivizhaiyaan

  • குறள் #
    0615
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
    Manly Effort
  • குறள்
    இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்.
  • விளக்கம்
    தனக்கு இன்பத்தை விரும்பாமல் செயல் முடித்தலையே விரும்புகின்றவன், தன் உறவினரின் துன்பத்தை நீக்கி அவரைத் தாங்கும் தூணாவான்.
  • Translation
    in English
    Whose heart delighteth not in pleasure, but in action finds delight,
    He wipes away his kinsmen’s grief and stands the pillar of their might.
  • Meaning
    He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.
0614. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை

0614. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை

0614. Thaalaanmai Illaathan Velaanmai

  • குறள் #
    0614
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
    Manly Effort
  • குறள்
    தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
    வாளாண்மை போலக் கெடும்.
  • விளக்கம்
    முயற்சியில்லாதவன் பிறருக்கு உதவி செய்ய முயலுதல், பேடி தன் கையில் வாள் பிடித்துப் பயன்படுத்த முயல்வது போலாகும்.
  • Translation
    in English
    Beneficent intent in men by whom no strenuous work is wrought,
    Like battle-axe in sexless being’s hand availeth nought.
  • Meaning
    The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.
0613. தாளாண்மை என்னும் தகைமைக்கண்

0613. தாளாண்மை என்னும் தகைமைக்கண்

0613. Thaalaanmai Ennum Thagaimaikkan

  • குறள் #
    0613
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
    Manly Effort
  • குறள்
    தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
    வேளாண்மை என்னுஞ் செருக்கு.
  • விளக்கம்
    மற்றவர்க்கு உதவி செய்தல் என்னும் மேன்மை, விடாமுயற்சி என்னும் உயர்ந்த குணமுள்ளவரிடத்தில் பொருந்தியுள்ளது.
  • Translation
    in English
    In strenuous effort doth reside
    The power of helping others: noble pride!
  • Meaning
    The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.
0612. வினைக்கண் வினைகெடல் ஓம்பல்

0612. வினைக்கண் வினைகெடல் ஓம்பல்

0612. Vinaikkan Vinaikedal Ombal

  • குறள் #
    0612
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
    Manly Effort
  • குறள்
    வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
  • விளக்கம்
    செயலைத் தொடங்கிக் குறையாக விட்டவரை இவ்வுலகம் கைவிடும்; ஆகையால், செயலில் முயற்சி இல்லாது இருத்தலைத் தவிர்க்க வேண்டும்.
  • Translation
    in English
    In action be thou, ‘ware of act’s defeat;
    The world leaves those who work leave incomplete!
  • Meaning
    Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.
0611. அருமை உடைத்தென்று அசாவாமை

0611. அருமை உடைத்தென்று அசாவாமை

0611. Arumai Udaiththendru Asaavaamai

  • குறள் #
    0611
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
    Manly Effort
  • குறள்
    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்.
  • விளக்கம்
    ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன், ‘இச்செயல் செய்வதற்குக் கடுமையானது’ என்று எண்ணிச் சோர்வடையாதிருத்தல் வேண்டும். அச்செயலுக்கான முயற்சி பெருமையைக் கொடுக்கும்.
  • Translation
    in English
    Say not, ‘Tis hard’, in weak, desponding hour,
    For strenuous effort gives prevailing power.
  • Meaning
    Yield not to the feebleness which says, “this is too difficult to be done”; labour will give the greatness (of mind) which is necessary (to do it).
0610. மடியிலா மன்னவன் எய்தும்

0610. மடியிலா மன்னவன் எய்தும்

0610. Madiyilaa Mannavan Eithum

  • குறள் #
    0610
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    மடி இன்மை (Madi Inmai)
    Unsluggishness
  • குறள்
    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு.
  • விளக்கம்
    சோம்பல் இல்லாத அரசன், தன் திருவடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் கடந்த நிலப்பரப்பு முழுவதையும் ஒருமிக்க அடைவான்.
  • Translation
    in English
    The king whose life from sluggishness is rid,
    Shall rule o’er all by foot of mighty god bestrid.
  • Meaning
    The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot.
0609. குடியாண்மை யுள்வந்த குற்றம்

0609. குடியாண்மை யுள்வந்த குற்றம்

0609. Kudiyaanmai Yulvandha Kutram

  • குறள் #
    0609
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    மடி இன்மை (Madi Inmai)
    Unsluggishness
  • குறள்
    குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
    மடியாண்மை மாற்றக் கெடும்.
  • விளக்கம்
    ஒருவன் சோம்பலை ஒழிப்பானாயின், அவனின் குடும்பத்தை நடத்துவதில் வந்த குற்றங்கள் கெட்டுப் போகும்.
  • Translation
    in English
    Who changes slothful habits saves
    Himself from all that household rule depraves.
  • Meaning
    When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.
0608. மடிமை குடிமைக்கண் தங்கின்தன்

0608. மடிமை குடிமைக்கண் தங்கின்தன்

0608. Madimai Kudimaikkan Thankinthan

  • குறள் #
    0608
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    மடி இன்மை (Madi Inmai)
    Unsluggishness
  • குறள்
    மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
    அடிமை புகுத்தி விடும்.
  • விளக்கம்
    உயர்ந்த குடியில் பிறந்தவனிடத்தில் சோம்பல் நிலைபெறுமானால், அஃது அவனைத் தன் பகைவனிடம் அடிமையாக்கிவிடும்.
  • Translation
    in English
    If sloth a dwelling find mid noble family,
    Bondsmen to them that hate them shall they be.
  • Meaning
    If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.
0607. இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர்

0607. இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர்

0607. Idipurindhu Ellunjchol Ketpar

  • குறள் #
    0607
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    மடி இன்மை (Madi Inmai)
    Unsluggishness
  • குறள்
    இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
    மாண்ட உஞற்றி லவர்.
  • விளக்கம்
    சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சியை மேற்கொள்ளாதவர், தம்மைப் பிறர் கடிந்தும், இகழ்ந்தும் கூறும் சொற்களைக் கேட்பர்.
  • Translation
    in English
    Who hug their sloth, nor noble works attempt,
    Shall bear reproofs and words of just contempt.
  • Meaning
    Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.
0606. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும்

0606. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும்

0606. Padiyudaiyaar Patramaindhak Kannum

  • குறள் #
    0606
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    மடி இன்மை (Madi Inmai)
    Unsluggishness
  • குறள்
    படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது.
  • விளக்கம்
    நிலம் முழுவதையும் ஆளும் அரசனது செல்வமெல்லாம் தானே வந்தடைந்தவிடத்தும், சோம்பல் உடையவர் அதனால் சிறந்த பயனை அடையமாட்டார்.
  • Translation
    in English
    Though lords of earth unearned possessions gain,
    The slothful ones no yield of good obtain.
  • Meaning
    It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.
0605. நெடுநீர் மறவி மடிதுயில்

0605. நெடுநீர் மறவி மடிதுயில்

0605. Neduneer Maravi Madithuyil

  • குறள் #
    0605
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    மடி இன்மை (Madi Inmai)
    Unsluggishness
  • குறள்
    நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்.
  • விளக்கம்
    விரைந்து செய்யவேண்டியதைக் காலம் நீடித்துச் செய்யும் இயல்பும், மறதியும், சோம்பலும், உறக்கமும் ஆகிய இந்நான்கும், அழிந்து போகும் இயல்பினையுடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாகும்.
  • Translation
    in English
    Delay, oblivion, sloth, and sleep: these four
    Are pleasure-boat to bear the doomed to ruin’s shore.
  • Meaning
    Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction.
0604. குடிமடிந்து குற்றம் பெருகும்

0604. குடிமடிந்து குற்றம் பெருகும்

0604. Kudimadinthu Kutram Perugum

  • குறள் #
    0604
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    மடி இன்மை (Madi Inmai)
    Unsluggishness
  • குறள்
    குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
    மாண்ட உஞற்றி லவர்க்கு.
  • விளக்கம்
    சோம்பலில் வீழ்தலால் சிறந்த முயற்ச்சியை மேற்கொள்ளாதவர்களுக்குக் குடியும் கெட்டுக் குற்றங்களும் அதிகமாகும்.
  • Translation
    in English
    His family decays, and faults unheeded thrive,
    Who, sunk in sloth, for noble objects doth not strive.
  • Meaning
    Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.
0603. மடிமடிக் கொண்டொழுகும் பேதை

0603. மடிமடிக் கொண்டொழுகும் பேதை

0603. Madimadik Kondozhugum Pethai

  • குறள் #
    0603
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    மடி இன்மை (Madi Inmai)
    Unsluggishness
  • குறள்
    மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
    குடிமடியும் தன்னினும் முந்து.
  • விளக்கம்
    நீக்கத் தக்க சோம்பலைத் தன்னுள்ளே கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி, அவன் அழிவதற்கு முன்பே அழிந்துபோகும்.
  • Translation
    in English
    Who fosters indolence within his breast, the silly elf!
    The house from which he springs shall perish ere himself.
  • Meaning
    The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.
0602. மடியை மடியா ஒழுகல்

0602. மடியை மடியா ஒழுகல்

0602. Madiyai Madiyaa Ozhugal

  • குறள் #
    0602
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    மடி இன்மை (Madi Inmai)
    Unsluggishness
  • குறள்
    மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்.
  • விளக்கம்
    தமது குடி மேன்மேலும் நல்ல குடியாக உயர வேண்டும் என விரும்புவோர், சோம்பலைக் கெடுத்து முயலுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Let indolence, the death of effort, die,
    If you’d uphold your household’s dignity.
  • Meaning
    Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.
0601. குடியென்னும் குன்றா விளக்கம்

0601. குடியென்னும் குன்றா விளக்கம்

0601. Kudiyennum Kundraa Vilakkam

  • குறள் #
    0601
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    மடி இன்மை (Madi Inmai)
    Unsluggishness
  • குறள்
    குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
    மாசூர மாய்ந்து கெடும்.
  • விளக்கம்
    குடி என்று சொல்லப்படுகின்ற மங்காத விளக்கு, ஒருவனுடைய சோம்பலாகிய மாசு சேரச்சேர மங்கி அணைந்து போகும்.
  • Translation
    in English
    Of household dignity the lustre beaming bright,
    Flickers and dies when sluggish foulness dims its light.
  • Meaning
    By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.
0600. உரமொருவற்கு உள்ள வெறுக்கை

0600. உரமொருவற்கு உள்ள வெறுக்கை

0600. Uramoruvarku Ulla Verukkai

  • குறள் #
    0600
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார்
    மரம்மக்க ளாதலே வேறு.
  • விளக்கம்
    ஒருவனுக்கு ஊக்கமிகுதியே உறுதியான வலிமையாகும். அஃது இல்லாதவர் மரத்துக்குச் சமமாவர். இவர்கள் மக்கள் உருவில் இருப்பதே வேறுபாடு.
  • Translation
    in English
    Firmness of soul in man is real excellance;
    Others are trees, their human form a mere pretence.
  • Meaning
    Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.
0599. பரியது கூர்ங்கோட்டது ஆயினும்

0599. பரியது கூர்ங்கோட்டது ஆயினும்

0599. Pariyathu Koorngkottathu Aayinum

  • குறள் #
    0599
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    வெருஉம் புலிதாக் குறின்.
  • விளக்கம்
    யானை பெரிய உடம்பையும், கூர்மையான கொம்புகளையும் உடையதானாலும், புலி தாக்குமானால் அச்சப்படும்.
  • Translation
    in English
    Huge bulk of elephant with pointed tusk all armed,
    When tiger threatens shrinks away alarmed!
  • Meaning
    Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.
0598. உள்ளம் இலாதவர் எய்தார்

0598. உள்ளம் இலாதவர் எய்தார்

0598. Ullam Ilaathavar Eithaar

  • குறள் #
    0598
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னுஞ் செருக்கு.
  • விளக்கம்
    மனஎழுச்சி இல்லாதவர் இவ்வுலகத்தாருள் ‘நாம் கோடை உடையோம்’ என்று சொல்லப்படும் மதிப்பைப் பெறமாட்டார்.
  • Translation
    in English
    The soulless man can never gain
    Th’ ennobling sense of power with men.
  • Meaning
    Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, “we have excercised liaberality”.
0597. சிதைவிடத்து ஒல்கார் உரவோர்

0597. சிதைவிடத்து ஒல்கார் உரவோர்

0597. Sithaividaththu Olkaar Uravor

  • குறள் #
    0597
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு.
  • விளக்கம்
    உடலை மறைக்கும் அளவுக்கு அம்புகள் தைக்கப் பெற்றாலும் யானை தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும். அதுபோல் மன எழுச்சியுடையவர் அழிவு வந்தவிடத்தும் தளராமல் தம் பெருமையை நிலை நிறுத்துவர்.
  • Translation
    in English
    The men of lofty mind quail not in ruin’s fateful hour,
    The elephant retains his dignity mind arrows’ deadly shower.
  • Meaning
    The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.
0596. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்

0596. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்

0596. Ulluva Thellaam Uyarvullal

  • குறள் #
    0596
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
  • விளக்கம்
    உயர்வானவற்றையே எப்பொழுதும் நினைத்து முயலுதல் வேண்டும்; அவை தவறிப் போனாலும் அந்த எண்ணத்தைக் கைவிடக் கூடாது.
  • Translation
    in English
    Whate’er you ponder, let your aim be loftly still,
    Fate cannot hinder always, thwart you as it will.
  • Meaning
    In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.
0595. வெள்ளத் தனைய மலர்நீட்டம்

0595. வெள்ளத் தனைய மலர்நீட்டம்

0595. Vellath Thanaiya Malarneettam

  • குறள் #
    0595
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.
  • விளக்கம்
    பூத்தண்டின் நீளம் அது நிற்கும் நீரின் அளவாகும். அதுபோல் மக்களும் தங்கள் ஊக்கத்தின் அளவே உயர்வு பெறுவர்.
  • Translation
    in English
    With rising flood the rising lotus flower its stem unwinds;
    The dignity of men is measured by their minds.
  • Meaning
    The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men’s greatness proportionate to their minds.
0594. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்

0594. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்

0594. Aakkam Atharvinaaich Chellum

  • குறள் #
    0594
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை.
  • விளக்கம்
    செல்வம் வழிகேட்டுக் கொண்டு தளர்வில்லாத முயற்சி உடையவனைச் சென்று அடையும்.
  • Translation
    in English
    The man of energy of soul inflexible,
    Good fortune seeks him out and comes a friend to dwell.
  • Meaning
    Wealth will find its own way to the man of unfailing energy.
0593. ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார்

0593. ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார்

0593. Aakkam Ezhandhemendru Allaavaar

  • குறள் #
    0593
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தம் கைத்துடை யார்.
  • விளக்கம்
    ஊக்கத்தை உறுதியாகத் தம் கைப்பொருளாக உள்ளவர் ‘யாம் செல்வத்தை இழந்து விட்டோம்’ என்று சொல்லி வருந்தமாட்டார்.
  • Translation
    in English
    ‘Lost is our wealth,’ they utter not this cry distressed,
    The men of firm concentred energy of soul possessed.
  • Meaning
    They who are possessed of enduring energy will not trouble themselves, saying, “we have lost our property.”
0592. உள்ளம் உடைமை உடைமை

0592. உள்ளம் உடைமை உடைமை

0592. Ullam udaimai Udaimai

  • குறள் #
    0592
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்.
  • விளக்கம்
    ஊக்கமுடைமையே ஒருவனுக்கு நிலை பெற்ற உடைமையாகும். மற்றைய பொருளுடைமை நிலையில்லாமல் நீங்கிவிடும்.
  • Translation
    in English
    The wealth of mind man owns a real worth imparts,
    Material wealth man owns endures not, utterly departs.
  • Meaning
    The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.
0591. உடையர் எனப்படுவது ஊக்கம்

0591. உடையர் எனப்படுவது ஊக்கம்

0591. Udayar Enappaduvathu Ookkam

  • குறள் #
    0591
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
    உடையது உடையரோ மற்று.
  • விளக்கம்
    ஒருவர் உடையர் என்று சொல்லச் சிறந்து நிற்பது ஊக்கமாகும். அஃது இல்லாதவர் வேறு உடையதாகிய பொருள்களைப் பெற்றிருந்தாலும் உடையராகார்.
  • Translation
    in English
    ‘Tis energy gives men o’er that they own a true control;
    They nothing own who own not energy of soul.
  • Meaning
    Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess?
0590. சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க

0590. சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க

0590. Sirappariya Otrinkan Seiyarka

  • குறள் #
    0590
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஒற்றாடல் (Otraadal)
    Detectives
  • குறள்
    சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
    புறப்படுத்தான் ஆகும் மறை.
  • விளக்கம்
    ஓர் ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை, மற்றவர்கள் அறியுமாறு செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால், அரசன் தன்னுடைய இரகசியத்தைத் தானே வெளிப்படுத்தியவனாவான்.
  • Translation
    in English
    Reward not trusty spy in others’ sight,
    Or all the mystery will come to light.
  • Meaning
    Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.
0589. ஒற்றெற் றுணராமை ஆள்க

0589. ஒற்றெற் றுணராமை ஆள்க

0589. Otret Runaraamai Aalga

  • குறள் #
    0589
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஒற்றாடல் (Otraadal)
    Detectives
  • குறள்
    ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
    சொற்றொக்க தேறப் படும்.
  • விளக்கம்
    ஒற்றனைக் கையாளும்போது, அவனை மற்ற ஒற்றன் அறியாதபடி ஆளுக; தனித்தனி ஏவப்பட்ட மூவருடைய சொற்களும் ஒத்திருக்குமானால், அவர்கள் கூறிய செய்தியை உண்மை என நம்புக.
  • Translation
    in English
    One spy must not another see: contrive it so;
    And things by three confirmed as truth you know.
  • Meaning
    Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.
0588. ஒற்றொற்றித் தந்த பொருளையும்

0588. ஒற்றொற்றித் தந்த பொருளையும்

0588. Otrotrith Thandha Porulaiyum

  • குறள் #
    0588
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஒற்றாடல் (Otraadal)
    Detectives
  • குறள்
    ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
    ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
  • விளக்கம்
    ஓர் ஒற்றன் அறிந்து வந்து கூறிய செய்தியை, மன்னன் மற்றோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்பு நோக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Spying by spies, the things they tell
    To test by other spies is well.
  • Meaning
    Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.
0587. மறைந்தவை கேட்கவற் றாகி

0587. மறைந்தவை கேட்கவற் றாகி

0587. Maraindhavai Ketkavat Raagi

  • குறள் #
    0587
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஒற்றாடல் (Otraadal)
    Detectives
  • குறள்
    மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
    ஐயப்பாடு இல்லதே ஒற்று.
  • விளக்கம்
    மறைவாக நடப்பவனவற்றைக் கேட்டு அறிய வல்லவனாய், அவ்வாறு அறிந்தவற்றுள் ஐயமின்றித் துணிய வல்லவனே ஒற்றனாவான்.
  • Translation
    in English
    A spy must search each hidden matter out,
    And full report must render, free from doubt.
  • Meaning
    A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.
0586. துறந்தார் படிவத்த ராகி

0586. துறந்தார் படிவத்த ராகி

0586. Thuranthaar Padivaththa Raagi

  • குறள் #
    0586
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஒற்றாடல் (Otraadal)
    Detectives
  • குறள்
    துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
    என்செயினும் சோர்விலது ஒற்று.
  • விளக்கம்
    துறவிபோல் வேடமிட்டும், விரத ஒழுக்கத்தவர் போல் வேடம் பூண்டும், செல்லக் கூடாத இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து அறிந்து, தனக்கு என்ன துன்பத்தைச் செய்து கேட்டாலும் அதை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.
  • Translation
    in English
    As monk or devotee, through every hindrance making way,
    A spy, whate’er men do, must watchful mind display.
  • Meaning
    He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him.
0585. கடாஅ உருவொடு கண்ணஞ்சாது

0585. கடாஅ உருவொடு கண்ணஞ்சாது

0585. Kadaaa Uruvodu Kannanjaathu

  • குறள் #
    0585
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஒற்றாடல் (Otraadal)
    Detectives
  • குறள்
    கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
    உகாஅமை வல்லதே ஒற்று.
  • விளக்கம்
    ஐயப்படாத உருவத்தினோடு, எவருடைய பார்வைக்கும் அஞ்சாமல், எந்த இடத்திலும் தன் மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாத வல்லமையுடையவனே ஒற்றனாவான்.
  • Translation
    in English
    Of unsuspected mien and all-unfearing eyes,
    Who let no secret out, are trusty spies.
  • Meaning
    A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man’s face, and who never reveals (his purpose).
0584. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார்

0584. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார்

0584. Vinaiseivaar Thamsutram Vendaathaar

  • குறள் #
    0584
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஒற்றாடல் (Otraadal)
    Detectives
  • குறள்
    வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
    அனைவரையும் ஆராய்வது ஒற்று.
  • விளக்கம்
    அரசாங்க வேலை செய்கின்றவர்களையும், அவர்களது உறவினர்களையும், பகைவர்களையும் ஆராய்கின்றவன் ஒற்றவனாவான்.
  • Translation
    in English
    His officers, his friends, his enemies,
    All these who watch are trusty spies.
  • Meaning
    He is a spy who watches all men, to wit, those who are in the king’s employment, his relatives, and his enemies.
0583. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா

0583. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா

0583. Otrinaan Otrip Porultheriyaa

  • குறள் #
    0583
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஒற்றாடல் (Otraadal)
    Detectives
  • குறள்
    ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
    கொற்றங் கொளக்கிடந்தது இல்.
  • விளக்கம்
    ஒற்றன் வழியாக எல்லோரிடத்தும் நடப்பவற்றை அறிந்து வரச் செய்து, அதனால் வரும் பயனை அறைந்து அறியாத மன்னவன், வெற்றி அடைதற்குரிய வழி இல்லை.
  • Translation
    in English
    By spies who spies, not weighing things they bring,
    Nothing can victory give to that unwary king.
  • Meaning
    There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.
0582. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை

0582. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை

0582. Ellaarkkum Ellaam Nigazhbavai

  • குறள் #
    0582
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஒற்றாடல் (Otraadal)
    Detectives
  • குறள்
    எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில்.
  • விளக்கம்
    எல்லோரிடத்திலும் நடப்பன எல்லாவற்றையும் நாள் தோறும் ஒற்றன் மூலமாக விரைந்து அறிதல், அரசனுக்குரிய தொழிலாகும்.
  • Translation
    in English
    Each day, of every subject every deed,
    ‘Tis duty of the king to learn with speed.
  • Meaning
    It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.
0581. ஒற்றும் உரைசான்ற நூலும்

0581. ஒற்றும் உரைசான்ற நூலும்

0581. Otrum Uraisaandra Noolum

  • குறள் #
    0581
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    ஒற்றாடல் (Otraadal)
    Detectives
  • குறள்
    ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
    தெற்றென்க மன்னவன் கண்.
  • விளக்கம்
    ஒற்றனையும், புகழ்மிக்க அரசியல் நூலையும் தன் இரண்டு கண்களாக அரசன் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • Translation
    in English
    These two: the code renowned and spies,
    In these let king confide as eyes.
  • Meaning
    Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.