Tag: Wealth

0880. உயிர்ப்ப உளரல்லர் மன்ற

0880. உயிர்ப்ப உளரல்லர் மன்ற

0880. Uyirppa Ularallar Mandra

  • குறள் #
    0880
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
    Knowing the Quality of Hate
  • குறள்
    உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
    செம்மல் சிதைக்கலா தார்.
  • விளக்கம்
    பகைவரின் செருக்கை அழிக்கமுடியாத அரசர் மூச்சுவிடுகின்ற அளவிற்கும் உயிரோடிருப்பவராகார்; இது உறுதி.
  • Translation
    in English
    But breathe upon them, and they surely die,
    Who fail to tame the pride of angry enemy.
  • Meaning
    Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.
0879. இளைதாக முள்மரம் கொல்க

0879. இளைதாக முள்மரம் கொல்க

0879. Ilayathaaga Mulmaram Kolga

  • குறள் #
    0879
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
    Knowing the Quality of Hate
  • குறள்
    இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த இடத்து.
  • விளக்கம்
    முள் மரத்தை அது சிறியதாய் இருக்கும்போதே களைந்து விடுதல் வேண்டும்; வளர்ந்து வைரம் அடைந்தால் அது வேட்டுவோரின் கையை வருத்தும்.
  • Translation
    in English
    Destroy the thorn, while tender point can work thee no offence;
    Matured by time, ’twill pierce the hand that plucks it thence.
  • Meaning
    A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.
0878. வகையறிந்து தற்செய்து தற்காப்ப

0878. வகையறிந்து தற்செய்து தற்காப்ப

0878. Vagaiyarindhu Tharcheithu Tharkaappa

  • குறள் #
    0878
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
    Knowing the Quality of Hate
  • குறள்
    வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு.
  • விளக்கம்
    ஒருவன் வெல்லும் வகையை அறிந்து பொருளைப் பெருக்கித் தன்னைக் காத்துக் கொள்வானாயின், பகைவரிடத்தில் உண்டான மகிழ்ச்சி ஒழியும்.
  • Translation
    in English
    Know thou the way, then do thy part, thyself defend;
    Thus shall the pride of those that hate thee have an end.
  • Meaning
    The joy of one’s foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.
0877. நோவற்க நொந்தது அறியார்க்கு

0877. நோவற்க நொந்தது அறியார்க்கு

0877. Novarka Nonthathu Ariyaarkku

  • குறள் #
    0877
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
    Knowing the Quality of Hate
  • குறள்
    நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
    மென்மை பகைவர் அகத்து.
  • விளக்கம்
    தன்னுடைய வருத்தத்தை அறியாத ஒருவரிடம் தன் வருத்தத்தைச் சொல்லாதிருத்தல் வேண்டும்; அவ்வாறே தன் வலிமையின் குறைவைப் பகைவரிடம் காட்டாதிருத்தல் வேண்டும்.
  • Translation
    in English
    To those who know them not, complain not of your woes;
    Nor to your foeman’s eyes infirmities disclose.
  • Meaning
    Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.
0876. தேறனும் தேறா விடினும்

0876. தேறனும் தேறா விடினும்

0876. Theranum Theraa Vidinum

  • குறள் #
    0876
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
    Knowing the Quality of Hate
  • குறள்
    தேறனும் தேறா விடினும் அழிவின்கண்
    தேறான் பகாஅன் விடல்.
  • விளக்கம்
    முன்னம் ஒருவரைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும் தெளியாதிருந்தாலும் தாழ்வு வந்தபோது அவனைக் கூடாமலும் நீக்காமலும் விட வேண்டும்.
  • Translation
    in English
    Whether you trust or not, in time of sore distress,
    Questions of diff’rence or agreement cease to press.
  • Meaning
    Though (one’s foe is) aware or not of one’s misfortune one should act so as neither to join nor separate (from him).
0875. தன்துணை இன்றால் பகையிரண்டால்

0875. தன்துணை இன்றால் பகையிரண்டால்

0875. Thanthunai Indraal Pagaiyirandaal

  • குறள் #
    0875
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
    Knowing the Quality of Hate
  • குறள்
    தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
    இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
  • விளக்கம்
    தனக்குத் துணையோ இல்லை; பகையோ இரண்டு; அங்ஙனமாயின், ஒருவன் அப்பகைவர் இருவருள் ஒருவனைத் தனக்கு இனிய துணையாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Without ally, who fights with twofold enemy o’ermatched,
    Must render one of these a friend attached.
  • Meaning
    He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).
0874. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை

0874. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை

0874. Pagainatpaak Kondozhugum Panbudai

  • குறள் #
    0874
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
    Knowing the Quality of Hate
  • குறள்
    பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
    தகைமைக்கண் தங்கிற்று உலகு.
  • விளக்கம்
    பகைவரையும் நண்பராக்கிக் கொண்டு நடக்கத்தக்க நல்லவனின் பெருமையுள் உலகம் அடங்கியிருக்கின்றது.
  • Translation
    in English
    The world secure on his dexterity depends,
    Whose worthy rule can change his foes to friends.
  • Meaning
    The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.
0873. ஏமுற் றவரினும் ஏழை

0873. ஏமுற் றவரினும் ஏழை

0873. Aemut Ravarinum Yezhai

  • குறள் #
    0873
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
    Knowing the Quality of Hate
  • குறள்
    ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
    பல்லார் பகைகொள் பவன்.
  • விளக்கம்
    தனியாக இருந்துகொண்டு, பலரோடு பகை கொள்பவன் பித்தங் கொண்டவரைவிட அறிவில்லாதவனாவன்.
  • Translation
    in English
    Than men of mind diseased, a wretch more utterly forlorn,
    Is he who stands alone, object of many foeman’s scorn.
  • Meaning
    He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.
0872. வில்லேர் உழவர் பகைகொளினும்

0872. வில்லேர் உழவர் பகைகொளினும்

0872. Viller Uzhavar Pagaikolinum

  • குறள் #
    0872
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
    Knowing the Quality of Hate
  • குறள்
    வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
    சொல்லேர் உழவர் பகை.
  • விளக்கம்
    வில்லை எராகவுடைய வீரரின் பகையைக் கொண்டாலும் சொல்லை எராக உடைய அறிஞரின் பகையைக் கொள்ளக் கூடாது.
  • Translation
    in English
    Although you hate incur of those whose ploughs are bows,
    Make not the men whose ploughs are words your foes!
  • Meaning
    Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.
0871. பகைஎன்னும் பண்பி லதனை

0871. பகைஎன்னும் பண்பி லதனை

0871. Pagaiennum Panbi Lathanai

  • குறள் #
    0871
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
    Knowing the Quality of Hate
  • குறள்
    பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
    நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
  • விளக்கம்
    பகை என்று சொல்லப்படுகின்ற பண்பற்ற தீமையை ஒருவன் நகைத்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் விரும்பக் கூடாது.
  • Translation
    in English
    For Hate, that ill-conditioned thing not e’en in jest.
    Let any evil longing rule your breast.
  • Meaning
    The evil of hatred is not of a nature to be desired by one even in sport.
0870. கல்லான் வெகுளும் சிறுபொருள்

0870. கல்லான் வெகுளும் சிறுபொருள்

0870. Kallaan Vegulum Siruporul

  • குறள் #
    0870
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைமாட்சி (Pagaimaatchi)
    The Might of Hatred
  • குறள்
    கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
    ஒல்லானை ஒல்லா தொளி.
  • விளக்கம்
    அறிவில்லாதவனை எதிர்த்துப் போர் செய்யும் சிறு முயிற்சியால் பொருளைப் பெறாதவனை, எக்காலத்தும் புகழ் அடையாது.
  • Translation
    in English
    The task of angry war with men unlearned in virtue’s lore
    Who will not meet, glory shall meet him never more.
  • Meaning
    The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).
0869. செறுவார்க்குச் சேணிகவா இன்பம்

0869. செறுவார்க்குச் சேணிகவா இன்பம்

0869. Seruvaarkkuch Chenikavaa Inbam

  • குறள் #
    0869
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைமாட்சி (Pagaimaatchi)
    The Might of Hatred
  • குறள்
    செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
    அஞ்சும் பகைவர்ப் பெறின்.
  • விளக்கம்
    நீதி அறியாது அஞ்சும் பகைவரைப் பெற்றால் அவரை எதிர்த்துப் பகைகொள்ளுவோர்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்காது நிற்கும்.
  • Translation
    in English
    The joy of victory is never far removed from those
    Who’ve luck to meet with ignorant and timid foes.
  • Meaning
    There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.
0868. குணனிலனாய்க் குற்றம் பலவாயின்

0868. குணனிலனாய்க் குற்றம் பலவாயின்

0868. Kunanilanaaik Kutram Palavaayin

  • குறள் #
    0868
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைமாட்சி (Pagaimaatchi)
    The Might of Hatred
  • குறள்
    குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
    இனனிலனாம் ஏமாப் புடைத்து.
  • விளக்கம்
    நற்குணமில்லாது பல குற்றங்களை உடையவனானால், அவனுக்கு யாரும் துணையாகமாட்டார்; அதுவே பகைவர்க்கு நன்மையாகும்.
  • Translation
    in English
    No gracious gifts he owns, faults many cloud his fame;
    His foes rejoice, for none with kindred claim.
  • Meaning
    He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.
0867. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற

0867. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற

0867. Koduththum Kolalvendum Mandra

  • குறள் #
    0867
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைமாட்சி (Pagaimaatchi)
    The Might of Hatred
  • குறள்
    கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
    மாணாத செய்வான் பகை.
  • விளக்கம்
    ஒரு தொழிலைத் தொடங்கி, அதற்குப் பொருந்தாதவற்றைச் செய்வானது பகையைப் பொருள் கொடுத்தேனும் கொள்ள வேண்டும்.
  • Translation
    in English
    Unseemly are his deeds, yet proffering aid, the man draws nigh:
    His hate- ’tis cheap at any price- be sure to buy!
  • Meaning
    It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment).
0866. காணாச் சினத்தான் கழிபெருங்

0866. காணாச் சினத்தான் கழிபெருங்

0866. Kaanaach Chinaththaan Kazhiperung

  • குறள் #
    0866
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைமாட்சி (Pagaimaatchi)
    The Might of Hatred
  • குறள்
    காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
    பேணாமை பேணப் படும்.
  • விளக்கம்
    தன் நிலைமை, பிறர் நிலைமை என்றவற்றை எண்ணிப் பாராதவனாய் மற்றவர் மீது சினம் கொள்பவன் மிக்க காமமும் உடையவனானால் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
  • Translation
    in English
    Blind in his rage, his lustful passions rage and swell;
    If such a man mislikes you, like it well.
  • Meaning
    Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.
0865. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான்

0865. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான்

0865. Vazhinokkaan Vaaippana Seiyaan

  • குறள் #
    0865
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைமாட்சி (Pagaimaatchi)
    The Might of Hatred
  • குறள்
    வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
    பண்பிலன் பற்றார்க்கு இனிது.
  • விளக்கம்
    நல்வழியைக் கருதான்; நல்லனவற்றைச் செய்ய மாட்டான். பழியை நோக்க மாட்டான்; நற்பண்பு இல்லான்; இத்தகையவன் பகைவரால் எளிதில் வேல்லத்தக்கவனாவான்.
  • Translation
    in English
    No way of right he scans, no precepts bind, no crimes affright,
    No grace of good he owns; such man’s his foes’ delight.
  • Meaning
    (A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities.
0864. நீங்கான் வெகுளி நிறையிலன்

0864. நீங்கான் வெகுளி நிறையிலன்

0864. Neengaan Veguli Niraiyilan

  • குறள் #
    0864
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைமாட்சி (Pagaimaatchi)
    The Might of Hatred
  • குறள்
    நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
    யாங்கணும் யார்க்கும் எளிது.
  • விளக்கம்
    சினம் நீங்கான்; தன் மனத்தை நிறுத்தி ஆள மாட்டான். இத்தன்மை உடையவனாய் ஒருவன் இருந்தால் எப்போதும் எங்கும் யாவர்க்கும் எளியவன் ஆவான்.
  • Translation
    in English
    His wrath still blazes, every secret told; each day
    This man’s in every place to every foe an easy prey.
  • Meaning
    He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.
0863. அஞ்சும் அறியான் அமைவிலன்

0863. அஞ்சும் அறியான் அமைவிலன்

0863. Anjum Ariyaan Amaivilan

  • குறள் #
    0863
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைமாட்சி (Pagaimaatchi)
    The Might of Hatred
  • குறள்
    அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
    தஞ்சம் எளியன் பகைக்கு.
  • விளக்கம்
    அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சான்; அறிய வேண்டியவற்றை அறியான்; மற்றவருடன் பொருந்தி நடவான்; மற்றவர்க்கு எதையும் அளிக்க மாட்டான். இத்தகையவன் பகைவர்க்கு எளியவன் ஆவான்.
  • Translation
    in English
    A craven thing! knows nought, accords with none, gives nought away;
    To wrath of any foe he falls an easy prey.
  • Meaning
    In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.
0862. அன்பிலன் ஆன்ற துணையிலன்

0862. அன்பிலன் ஆன்ற துணையிலன்

0862. Anbilan Aandra Thunaiyilan

  • குறள் #
    0862
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைமாட்சி (Pagaimaatchi)
    The Might of Hatred
  • குறள்
    அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
    என்பரியும் ஏதிலான் துப்பு.
  • விளக்கம்
    இனத்தார்மேல் அன்பில்லாதவனாகவும், வலிமையான துணை இல்லாதவனாகவும் தானும் வலிமை இல்லாதவனாகவும் உள்ள ஒருவன் எவ்வாறு பகைவரை வெல்வான்?
  • Translation
    in English
    No kinsman’s love, no strength of friends has he;
    How can he bear his foeman’s enmity?
  • Meaning
    How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?
0861. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக

0861. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக

0861. Valiyaarkku Maaretral Oombuga

  • குறள் #
    0861
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பகைமாட்சி (Pagaimaatchi)
    The Might of Hatred
  • குறள்
    வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
    மெலியார்மேல் மேக பகை.
  • விளக்கம்
    தம்மைவிட வலியாரிடத்தில் பகையாக எதிர்த்து நிற்றலை விடுதல் வேண்டும்; தம்மைவிட மெலியவர் மீது பகை கொண்டு போர் செய்தலை விடாது விரும்புதல் வேண்டும்.
  • Translation
    in English
    With stronger than thyself, turn from the strife away;
    With weaker shun not, rather court the fray.
  • Meaning
    Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.
0860. இகலானாம் இன்னாத எல்லாம்

0860. இகலானாம் இன்னாத எல்லாம்

0860. Igalaanaam Innaatha Ellaam

  • குறள் #
    0860
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    இகல் (Igal)
    Hostility
  • குறள்
    இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
    நன்னயம் என்னும் செருக்கு.
  • விளக்கம்
    ஒருவனுக்கு இகலால் துன்பங்கள் எல்லாம் உண்டாகும்; அதற்கு மாறான நட்பினாலே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உண்டாகும்.
  • Translation
    in English
    From enmity do all afflictive evils flow;
    But friendliness doth wealth of kindly good bestow.
  • Meaning
    All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.
0859. இகல்காணான் ஆக்கம் வருங்கால்

0859. இகல்காணான் ஆக்கம் வருங்கால்

0859. Igalkaanaan Aakkam Varungkaal

  • குறள் #
    0859
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    இகல் (Igal)
    Hostility
  • குறள்
    இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
    மிகல்காணும் கேடு தரற்கு.
  • விளக்கம்
    ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலை நினைக்க மாட்டான். ஆனால் அவன் தனக்குக் கேடு வரும்போது இகலை எதிர்த்து வெல்ல எண்ணுவான்.
  • Translation
    in English
    Men think not hostile thought in fortune’s favouring hour,
    They cherish enmity when in misfortune’s power.
  • Meaning
    At the approach of wealth one will not think of hatred (but) to secure one’s ruin, one will look to its increase.
0858. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்

0858. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்

0858. Igalirku Edhirsaaithal Aakkam

  • குறள் #
    0858
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    இகல் (Igal)
    Hostility
  • குறள்
    இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
    மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
  • விளக்கம்
    இகலுக்கு எதிராக ஒதுங்கி நடத்தல் ஆக்கத்தைக் கொடுக்கும்; அதனை மிகுதியாக மேற்கொண்டால், அது செல்வத்தின் அழிவினை உண்டாக்கும்.
  • Translation
    in English
    ‘Tis gain to turn the soul from enmity;
    Ruin reigns where this hath mastery.
  • Meaning
    Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.
0857. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்

0857. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்

0857. Migalmeval Meipporul Kaanaar

  • குறள் #
    0857
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    இகல் (Igal)
    Hostility
  • குறள்
    மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
    இன்னா அறிவி னவர்.
  • விளக்கம்
    இகலை விரும்பும் தீய அறிவுடையவர் வெற்றி அடைவதற்குக் காரணமான உண்மைப் பொருளை அறிய மாட்டார்.
  • Translation
    in English
    The very truth that greatness gives their eyes can never see,
    Who only know to work men woe, fulfilled of enmity.
  • Meaning
    Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.
0856. இகலின் மிகலினிது என்பவன்

0856. இகலின் மிகலினிது என்பவன்

0856. Igalin Migalinithu Enbavan

  • குறள் #
    0856
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    இகல் (Igal)
    Hostility
  • குறள்
    இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
    தவலும் கெடலும் நணித்து.
  • விளக்கம்
    இகல் கொள்வது மிகவும் இனியது என்று எண்ணுபவனது வாழ்வு, பிழைபடுதல் சிறிது நேரத்தில் உண்டு; கேட்டுப் போதலும் சிறிது நேரத்தில் உண்டு.
  • Translation
    in English
    The life of those who cherished enmity hold dear,
    To grievous fault and utter death is near.
  • Meaning
    Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.
0855. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை

0855. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை

0855. Igalethir Saaindhozhuga Vallarai

  • குறள் #
    0855
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    இகல் (Igal)
    Hostility
  • குறள்
    இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
    மிக்லூக்கும் தன்மை யவர்.
  • விளக்கம்
    இகல் உண்டானபோது எதிர் நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து ஒழுக வல்லவரை வெல்ல எண்ணும் ஆற்றல் உடையவர் யார்?
  • Translation
    in English
    If men from enmity can keep their spirits free,
    Who over them shall gain the victory?
  • Meaning
    Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?
0854. இன்பத்துள் இன்பம் பயக்கும்

0854. இன்பத்துள் இன்பம் பயக்கும்

0854. Inbaththul Inbam Payakkum

  • குறள் #
    0854
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    இகல் (Igal)
    Hostility
  • குறள்
    இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்.
  • விளக்கம்
    துன்பங்களுள் பெருந்துன்பமாகிய மாறுபாடு இல்லையாயின், அஃது இன்பங்களுள் மேலான இன்பத்தைக் கொடுக்கும்.
  • Translation
    in English
    Joy of joys abundant grows,
    When malice dies that woe of woes.
  • Meaning
    If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.
0853. இகலென்னும் எவ்வநோய் நீக்கின்

0853. இகலென்னும் எவ்வநோய் நீக்கின்

0853. Igalennum Evvanoi Neekkin

  • குறள் #
    0853
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    இகல் (Igal)
    Hostility
  • குறள்
    இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
    தாவில் விளக்கம் தரும்.
  • விளக்கம்
    இகல் என்று சொல்லப்படும் துன்பம் தரும் நோயை ஒருவன் நீக்கினால் அது அழிவில்லாமைக்குக் காரணமாகிய கெடாத புகழை அவனுக்குக் கொடுக்கும்.
  • Translation
    in English
    If enmity, that grievous plague, you shun,
    Endless undying praises shall be won.
  • Meaning
    To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.
0852. பகல்கருதிப் பற்றா செயினும்

0852. பகல்கருதிப் பற்றா செயினும்

0852. Pagalkaruthip Patraa Seyinum

  • குறள் #
    0852
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    இகல் (Igal)
    Hostility
  • குறள்
    பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
    இன்னாசெய் யாமை தலை.
  • விளக்கம்
    பிரிவு உண்டாக்கக் கருதி ஒருவன் விரும்பாதவற்றைச் செய்தாலும், தான் அவனுக்குப் பகையைக் கருதித் துன்பந் தருவனவற்றைச் செய்யாதிருப்பதே சிறந்தது.
  • Translation
    in English
    Though men disunion plan, and do thee much despite
    ‘Tis best no enmity to plan, nor evil deeds requite.
  • Meaning
    Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.
0851. இகலென்ப எல்லா உயிர்க்கும்

0851. இகலென்ப எல்லா உயிர்க்கும்

0851. Igalenba Ellaa Uyirkkum

  • குறள் #
    0851
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    இகல் (Igal)
    Hostility
  • குறள்
    இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
    பண்பின்மை பாரிக்கும் நோய்.
  • விளக்கம்
    எல்லா உயிர்களுக்கும் பிரித்தல் என்னும் தீய குணத்தை வளர்க்கும் நோயை, அறியுடையோர் ‘பகை’ (இகல்) என்று கூறுவார்.
  • Translation
    in English
    Hostility disunion’s plague will bring,
    That evil quality, to every living thing.
  • Meaning
    The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.
0850. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்

0850. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்

0850. Ulagaththaar Undenbathu Illenbaan

  • குறள் #
    0850
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    புல்லறிவாண்மை (Pullarivaanmai)
    Petty Conceit
  • குறள்
    உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
    அலகையா வைக்கப் படும்.
  • விளக்கம்
    உயர்ந்தோர் ‘உண்டு’ என்று அறிந்து சொன்னவற்றை, ‘இல்லை’ என்று சொல்பவன், உலகத்தில் ஒரு பேயாகக் கருதப்படுவான்.
  • Translation
    in English
    Who what the world affirms as false proclaim,
    O’er all the earth receive a demon’s name.
  • Meaning
    He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.
0849. காணாதான் காட்டுவான் தான்காணான்

0849. காணாதான் காட்டுவான் தான்காணான்

0849. Kaanaathaan Kaattuvaan Thaankaanaan

  • குறள் #
    0849
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    புல்லறிவாண்மை (Pullarivaanmai)
    Petty Conceit
  • குறள்
    காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
    கண்டானாம் தான்கண்ட வாறு.
  • விளக்கம்
    அறிவில்லாதவனை அறிவுடையவனாக்க முயல்வோன், தானே அறிவில்லாதவனாவான்; அவ்வறிவில்லாதவன், தான் அறிந்த வகையில் அறிந்தவனாய் விளங்குவான்.
  • Translation
    in English
    That man is blind to eyes that will not see who knowledge shows;-
    The blind man still in his blind fashion knows.
  • Meaning
    One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself “wise in his own conceit”.
0848. ஏவவும் செய்கலான் தான்தேறான்

0848. ஏவவும் செய்கலான் தான்தேறான்

0848. Yevavum Seigalaan Thaantheraan

  • குறள் #
    0848
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    புல்லறிவாண்மை (Pullarivaanmai)
    Petty Conceit
  • குறள்
    ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவுமோர் நோய்.
  • விளக்கம்
    அற்ப அறிவுடையவன் உறுதியானவற்றை அறிவுடையோர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறிய வேண்டியவற்றை அறிய மாட்டான்; உயிர் உடலைவிட்டு நீங்கும் வரையில் நிலத்துக்கு ஒரு நோயாவான்.
  • Translation
    in English
    Advised, he heeds not; of himself knows nothing wise;
    This man’s whole life is all one plague until he dies.
  • Meaning
    The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body).
0847. அருமறை சோரும் அறிவிலான்

0847. அருமறை சோரும் அறிவிலான்

0847. Arumarai Sorum Arivilaan

  • குறள் #
    0847
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    புல்லறிவாண்மை (Pullarivaanmai)
    Petty Conceit
  • குறள்
    அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
    பெருமிறை தானே தனக்கு.
  • விளக்கம்
    அறிய அறிவுரைகளை மனத்தில் வைத்துக் காக்காது சோர்ந்து வெளிப்படுத்தும் புல்லரிவாளன், தானே தனக்குப் பெரிய துன்பத்தை வருவித்துக் கொள்வான்.
  • Translation
    in English
    From out his soul who lets the mystic teachings die,
    Entails upon himself abiding misery.
  • Meaning
    The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.
0846. அற்றம் மறைத்தலோ புல்லறிவு

0846. அற்றம் மறைத்தலோ புல்லறிவு

0846. Atram Maraiththalo Pullarivu

  • குறள் #
    0846
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    புல்லறிவாண்மை (Pullarivaanmai)
    Petty Conceit
  • குறள்
    அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
    குற்றம் மறையா வழி.
  • விளக்கம்
    தம்மிடத்துள்ள குற்றத்தை நீக்காமல், மறைத்ததற்க்குரிய அவயவத்தை மட்டும் ஆடையால் மறைத்துக் கொள்ளுதல் அற்ப அறிவாகும்.
  • Translation
    in English
    Fools are they who their nakedness conceal,
    And yet their faults unveiled reveal.
  • Meaning
    Even to cover one’s nakedness would be folly, if (one’s) faults were not covered (by forsaking them).
0845. கல்லாத மேற்கொண் டொழுகல்

0845. கல்லாத மேற்கொண் டொழுகல்

0845. Kallaatha Merkon Dozhugal

  • குறள் #
    0845
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    புல்லறிவாண்மை (Pullarivaanmai)
    Petty Conceit
  • குறள்
    கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
    வல்லதூஉம் ஐயம் தரும்.
  • விளக்கம்
    புல்லறிவாளர் தாம் கல்லாத நூலையும் கற்றதாகக் கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்ற நூலுண்டாயின், அதனிடத்தும் பிறர்க்கு ஐயத்தை உண்டாக்கும்.
  • Translation
    in English
    If men what they have never learned assume to know,
    Upon their real learning’s power a doubt ’twill throw.
  • Meaning
    Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.
0844. வெண்மை எனப்படுவ தியாதெனின்

0844. வெண்மை எனப்படுவ தியாதெனின்

0844. Venmai Enappaduva Thiyaathenil

  • குறள் #
    0844
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    புல்லறிவாண்மை (Pullarivaanmai)
    Petty Conceit
  • குறள்
    வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
    உடையம்யாம் என்னும் செருக்கு.
  • விளக்கம்
    புல்லறிவு எனப்படுவது எது என்றால், ‘நாம் விளக்கமாகிய அறிவுடையேம்’ என்று ஒருவன் தன்னைத்தானே மதிக்கும் அகங்காரம்.
  • Translation
    in English
    What is stupidity? The arrogance that cries,
    ‘Behold, we claim the glory of the wise.’
  • Meaning
    What is called want of wisdom is the vanity which says, “We are wise”.
0843. அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும்

0843. அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும்

0843. Arivilaar Thaanthammaip Peezhikkum

  • குறள் #
    0843
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    புல்லறிவாண்மை (Pullarivaanmai)
    Petty Conceit
  • குறள்
    அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
    செறுவார்க்கும் செய்தல் அரிது.
  • விளக்கம்
    அறிவில்லாதவர் தாமே தமக்குச் செய்து கொள்ளும் தீமையைப் பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாது.
  • Translation
    in English
    With keener anguish foolish men their own hearts wring,
    Than aught that even malice of their foes can bring.
  • Meaning
    The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.
0842. அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல்

0842. அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல்

0842. Arivilaan Nenjuvandhu Eethal

  • குறள் #
    0842
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    புல்லறிவாண்மை (Pullarivaanmai)
    Petty Conceit
  • குறள்
    அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
    இல்லை பெறுவான் தவம்.
  • விளக்கம்
    அறிவில்லாதவன் ஒருவனுக்கு ஒன்றை மனம் மகிழுந்து கொடுத்தல், பெறுகின்றவனது நல்வினையின் காரணமேயன்றி வேறு ஒரு காரணமும் இல்லை.
  • Translation
    in English
    The gift of foolish man, with willing heart bestowed, is nought,
    But blessing by receiver’s penance bought.
  • Meaning
    (The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver’s merit (in a former birth).
0841. அறிவின்மை இன்மையுள் இன்மை

0841. அறிவின்மை இன்மையுள் இன்மை

0841. Arivinmai Inmaiyul Inmai

  • குறள் #
    0841
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    புல்லறிவாண்மை (Pullarivaanmai)
    Petty Conceit
  • குறள்
    அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
    இன்மையா வையா துலகு.
  • விளக்கம்
    வறுமையுள் வறுமையாவது அறிவில்லாமை; வேறு பொருள் இல்லாமையை உலகத்தவர் இல்லாமையாகக் கொள்ளார்.
  • Translation
    in English
    Want of knowledge, ‘mid all wants the sorest want we deem;
    Want of other things the world will not as want esteem.
  • Meaning
    The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.
0840. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால்

0840. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால்

0840. Kazhaaakaal Palliyul Vaiththatraal

  • குறள் #
    0840
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பேதைமை (Pethaimai)
    Folly
  • குறள்
    கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
    குழாஅத்துப் பேதை புகல்.
  • விளக்கம்
    அறிவுடையோர் உள்ள சபையில் அறியாமை உடையவன் சொல்லுதல், அழுக்கை மிதித்த காலைக் கழுவாது படுக்கையில் வைப்பது போலாகும்.
  • Translation
    in English
    Like him who seeks his couch with unwashed feet,
    Is fool whose foot intrudes where wise men meet.
  • Meaning
    The appearance of a fool in an assembly of the learned is like placing (one’s) unwashed feet on a bed.
0839. பெரிதினிது பேதையார் கேண்மை

0839. பெரிதினிது பேதையார் கேண்மை

0839. Perithinithu Pethaiyaar Kenmai

  • குறள் #
    0839
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பேதைமை (Pethaimai)
    Folly
  • குறள்
    பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
    பீழை தருவதொன் றில்.
  • விளக்கம்
    அறியாமையுடையவனின் நட்பு மிகவும் இனிது; ஏனென்றால் பிரிவு உண்டாகும்போது அதனால் துன்பம் ஒன்றும் இல்லை.
  • Translation
    in English
    Friendship of fools is very pleasant thing,
    Parting with them will leave behind no sting.
  • Meaning
    The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.
0838. மையல் ஒருவன் களித்தற்றால்

0838. மையல் ஒருவன் களித்தற்றால்

0838. Maiyal Oruvan Kaliththatraal

  • குறள் #
    0838
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பேதைமை (Pethaimai)
    Folly
  • குறள்
    மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
    கையொன்று உடைமை பெறின்.
  • விளக்கம்
    மூடனொருவனிடத்தில் யாதேனும் ஒரு பொருள் இருந்தால், மயக்கத்திலிருப்பவன் கள்ளைக் குடித்து மயங்கினதுபோலக் களிப்படைவான்.
  • Translation
    in English
    When folly’s hand grasps wealth’s increase, ’twill be
    As when a mad man raves in drunken glee.
  • Meaning
    A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.
0837. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர்

0837. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர்

0837. Yethilaar Aarath Thamarpasippar

  • குறள் #
    0837
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பேதைமை (Pethaimai)
    Folly
  • குறள்
    ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
    பெருஞ்செல்வம் உற்றக் கடை.
  • விளக்கம்
    அறிவில்லாதவன் பெருஞ்செல்வம் பெற்றால், அயலார் அதை அனுபவிக்க அவனுடைய சுற்றத்தார் பசித்திருப்பர்.
  • Translation
    in English
    When fools are blessed with fortune’s bounteous store,
    Their foes feed full, their friends are prey to hunger sore.
  • Meaning
    If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.
0836. பொய்படும் ஒன்றோ புனைபூணும்

0836. பொய்படும் ஒன்றோ புனைபூணும்

0836. Poipadum Ondro Punaipoonum

  • குறள் #
    0836
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பேதைமை (Pethaimai)
    Folly
  • குறள்
    பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
    பேதை வினைமேற் கொளின்.
  • விளக்கம்
    செய்யும் வகையறியாத பேதை, ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் குற்றப்படுவான்; தான் விலங்கும் பூட்டப்பெறுவான்.
  • Translation
    in English
    When fool some task attempts with uninstructed pains,
    It fails; nor that alone, himself he binds with chains.
  • Meaning
    If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.
0835. ஒருமைச் செயலாற்றும் பேதை

0835. ஒருமைச் செயலாற்றும் பேதை

0835. Orumaich Cheyalaatrum Pethai

  • குறள் #
    0835
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பேதைமை (Pethaimai)
    Folly
  • குறள்
    ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
    தான்புக் கழுந்தும் அளறு.
  • விளக்கம்
    வரும் ஏழு பிறப்புகளிலும் தான் சென்று வருந்தும் துன்பத்தை, அறியாமையுடையவன் இந்த ஒரு பிறப்பிலேயே செய்து கொள்ள வல்லவனாவான்.
  • Translation
    in English
    The fool will merit hell in one brief life on earth,
    In which he entering sinks through sevenfold round of birth.
  • Meaning
    A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.
0834. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்

0834. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்

0834. Oothi Unarndhum Pirarkkuraiththum

  • குறள் #
    0834
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பேதைமை (Pethaimai)
    Folly
  • குறள்
    ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
    பேதையின் பேதையார் இல்.
  • விளக்கம்
    நூல்களைக் கற்று அறிந்தும், அறிந்தவற்றைப் பிறர்க்கு எடுத்துக் கூறியும், தான் கற்றபடி அடங்கி நடவாத அறிவில்லாதவன்போல் அறிவில்லாதவன் இல்லை.
  • Translation
    in English
    The sacred law he reads and learns, to other men expounds,-
    Himself obeys not; where can greater fool be found?
  • Meaning
    There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.
0833. நாணாமை நாடாமை நாரின்மை

0833. நாணாமை நாடாமை நாரின்மை

0833. Naanaamai Naadaamai Naarinmai

  • குறள் #
    0833
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பேதைமை (Pethaimai)
    Folly
  • குறள்
    நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
    பேணாமை பேதை தொழில் .
  • விளக்கம்
    நாண வேண்டியவற்றிற்கு நாணாமையும், ஆராய வேண்டியவற்றை ஆராயாமையும், அன்பின்மையும், விரும்பிக் காக்க வேண்டியவற்றைக் காவாமையும் அறியாமையுடையவனின் செயல்களாகும்.
  • Translation
    in English
    Ashamed of nothing, searching nothing out, of loveless heart,
    Nought cherishing, ’tis thus the fool will play his part.
  • Meaning
    Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.
0832. பேதைமையுள் எல்லாம் பேதைமை

0832. பேதைமையுள் எல்லாம் பேதைமை

0832. Pethaimaiyul Ellaam Pethaimai

  • குறள் #
    0832
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பேதைமை (Pethaimai)
    Folly
  • குறள்
    பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
    கையல்ல தன்கட் செயல்.
  • விளக்கம்
    அறியாமைகள் எல்லாவற்றுள்ளும் பெரிய அறியாமை, தனக்குப் பொருந்தாத செய்கைகளில் ஆசை கொள்ளுதல்.
  • Translation
    in English
    ‘Mid follies chiefest folly is to fix your love
    On deeds which to your station unbefitting prove.
  • Meaning
    The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.
0831. பேதைமை என்பதொன்று யாதெனின்

0831. பேதைமை என்பதொன்று யாதெனின்

0831. Pethaimai Enbathondru Yaathenin

  • குறள் #
    0831
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பேதைமை (Pethaimai)
    Folly
  • குறள்
    பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
    ஊதியம் போக விடல்.
  • விளக்கம்
    அறியாமை என்று சொல்லப்படுவது, யாது என்றால், கேடு தருகின்றவற்றைக் கைக்கொண்டு, இலாபம் தருபவற்றைக் கைவிடுதலாகும்.
  • Translation
    in English
    What one thing merits folly’s special name.
    Letting gain go, loss for one’s own to claim!
  • Meaning
    Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.
0830. பகைநட்பாம் காலம் வருங்கால்

0830. பகைநட்பாம் காலம் வருங்கால்

0830. Pagainatpaam Kaalam Varungkaal

  • குறள் #
    0830
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
    அகநட்பு ஒரீஇ விடல்.
  • விளக்கம்
    பகைவர் நண்பராக ஒழுகுங்காலம் வரும்பொழுது, அவரோடு முகத்தளவில் நட்புச் செய்து, மனத்தால் அந்நட்பை நீக்கியிருத்தல் வேண்டும்.
  • Translation
    in English
    When time shall come that foes as friends appear,
    Then thou, to hide a hostile heart, a smiling face may’st wear.
  • Meaning
    When one’s foes begin to affect friendship, one should love them with one’s looks, and, cherishing no love in the heart, give up (even the former).
0829. மிகச்செய்து தம்மெள்ளு வாரை

0829. மிகச்செய்து தம்மெள்ளு வாரை

0829. Migachcheithu Thammellu Vaarai

  • குறள் #
    0829
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
    நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
  • விளக்கம்
    புறத்தே மிகவும் நட்பினைச் செய்து மனத்திலே இகழும் பகைவரைத் தாமும் புறத்தே மகிழ்வித்து மனத்திலே நட்புக் கெடுமாறு ஒழுகுதல் வேண்டும்.
  • Translation
    in English
    ‘Tis just, when men make much of you, and then despise,
    To make them smile, and slap in friendship’s guise.
  • Meaning
    It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).
0828. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்

0828. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்

0828. Thozhuthagai Yullum Padaiyodungum

  • குறள் #
    0828
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
    அழுதகண் ணீரும் அனைத்து.
  • விளக்கம்
    பகைவர் தொழுவதற்காகக் குவித்த கைகளுக்குள்ளும் கொலை செய்யும் படைக்கலம் மறைந்திருக்கும்; அவர் அழுகின்ற கண்ணீரும் அத்தன்மையுடையதே.
  • Translation
    in English
    In hands that worship weapon ten hidden lies;
    Such are the tears that fall from foeman’s eyes.
  • Meaning
    A weapon may be hid in the very hands with which (one’s) foes adore (him) (and) the tears they shed are of the same nature.
0827. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க

0827. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க

0827. Solvanakkam Onnaarkan Kollarka

  • குறள் #
    0827
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்.
  • விளக்கம்
    வில்லினது வணக்கம் தீமை செய்தலைக் குறிக்கும். ஆகையால் பகைவர் கூறும் சொற்களின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
  • Translation
    in English
    To pliant speech from hostile lips give thou no ear;
    ‘Tis pliant bow that show the deadly peril near!
  • Meaning
    Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one’s foes.
0826. நட்டார்போல் நல்லவை சொல்லினும்

0826. நட்டார்போல் நல்லவை சொல்லினும்

0826. Nattaarpol Nallavai Sollinum

  • குறள் #
    0826
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை உணரப் படும்.
  • விளக்கம்
    நண்பரைப் போலப் பகைவர் நல்ல வார்த்தைகளைச் சொன்னாலும், அவை தீயன என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.
  • Translation
    in English
    Though many goodly words they speak in friendly tone,
    The words of foes will speedily be known.
  • Meaning
    Though (one’s) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).
0825. மனத்தின் அமையா தவரை

0825. மனத்தின் அமையா தவரை

0825. Manaththin Amaiyaa Thavarai

  • குறள் #
    0825
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
    சொல்லினால் தேறற்பாற்று அன்று.
  • விளக்கம்
    மனத்தினால் நட்பு கொள்ளாதவரை, எந்த ஒரு செயலிலும் அவரது சொல்லைக் கொண்டு நம்புதல் கூடாது.
  • Translation
    in English
    When minds are not in unison, ‘its never; just,
    In any words men speak to put your trust.
  • Meaning
    In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.
0824. முகத்தின் இனிய நகாஅ

0824. முகத்தின் இனிய நகாஅ

0824. Mugaththin Iniya Nagaaa

  • குறள் #
    0824
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்.
  • விளக்கம்
    முகத்தில் இனியவர் போல் சிரித்து, மனத்தில் தீயவராகிய வஞ்சகருக்கு அஞ்சுதல் வேண்டும்.
  • Translation
    in English
    ‘Tis fitting you should dread dissemblers’ guile,
    Whose hearts are bitter while their faces smile.
  • Meaning
    One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.
0823. பலநல்ல கற்றக் கடைத்து

0823. பலநல்ல கற்றக் கடைத்து

0823. Palanalla Katrak Kadaiththu

  • குறள் #
    0823
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
    ஆகுதல் மாணார்க் கரிது.
  • விளக்கம்
    பல சிறந்த நூல்களைப் படித்தாலும் அதன் பயனாக நல்ல மனம் உடையவராய்ப் பழகுதல், உள்ளன்பினால் மாட்சி இல்லாதவர்க்கு இல்லை.
  • Translation
    in English
    To heartfelt goodness men ignoble hardly may attain,
    Although abundant stores of goodly lore they gain.
  • Meaning
    Though (one’s) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.
0822. இனம்போன்று இனமல்லார் கேண்மை

0822. இனம்போன்று இனமல்லார் கேண்மை

0822. Inampondru Inamallaar Kenmai

  • குறள் #
    0822
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
    மனம்போல வேறு படும்.
  • விளக்கம்
    நண்பர் போன்று நடித்து உண்மையில் நட்பில்லாதவரின் நட்பு, விலைமாதரின் காதல் போல் உள் ஒன்றும் புறம் ஒன்றுமாக மாறுபடும்.
  • Translation
    in English
    Friendship of those who seem our kin, but are not really kind.
    Will change from hour to hour like woman’s mind.
  • Meaning
    The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.
0821. சீரிடம் காணின் எறிதற்குப்

0821. சீரிடம் காணின் எறிதற்குப்

0821. Seeridam Kaanin Eritharkup

  • குறள் #
    0821
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு.
  • விளக்கம்
    உண்மையில் மனத்தில் பொருந்தாதவராய், வெளியில் நண்பர் போல் கூடி நடப்பவரது நட்பு, தருணம் வாய்க்கும் போது ஓங்கி அடித்ததற்கு உதவும் பட்டடை (உலைக்கல்) போன்றதாகும்.
  • Translation
    in English
    Anvil where thou shalt smitten be, when men occasion find,
    Is friendship’s form without consenting mind.
  • Meaning
    The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.
0820. எனைத்தும் குறுகுதல் ஓம்பல்

0820. எனைத்தும் குறுகுதல் ஓம்பல்

0820. Enaiththum Kuruguthal Oombal

  • குறள் #
    0820
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    தீ நட்பு (Thee Natpu)
    Evil Friendship
  • குறள்
    எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
    மன்றில் பழிப்பார் தொடர்பு.
  • விளக்கம்
    தனியே வீட்டிலே நட்பாடி, பலர் கூடிய சபையிலே பழித்துக் கூறுபவரின் நட்பு எவ்வளவு சிறியதாயினும், தம்மோடு சேராதபடி கைவிடுதல் வேண்டும்.
  • Translation
    in English
    In anywise maintain not intercourse with those,
    Who in the house are friends, in hall are slandering foes.
  • Meaning
    Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public.
0819. கனவினும் இன்னாது மன்னோ

0819. கனவினும் இன்னாது மன்னோ

0819. Kanavinum Innaathu Manno

  • குறள் #
    0819
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    தீ நட்பு (Thee Natpu)
    Evil Friendship
  • குறள்
    கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
    சொல்வேறு பட்டார் தொடர்பு.
  • விளக்கம்
    செயல்வேறு, சொல்வேறுபட்டவர்களுடைய நட்பு, கனவிலும் துன்பம் செய்வதாகும்.
  • Translation
    in English
    E’en in a dream the intercourse is bitterness
    With men whose deeds are other than their words profess.
  • Meaning
    The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one’s) dreams.
0818. ஒல்லும் கருமம் உடற்று

0818. ஒல்லும் கருமம் உடற்று

0818. Ollum Karumam Udatru

  • குறள் #
    0818
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    தீ நட்பு (Thee Natpu)
    Evil Friendship
  • குறள்
    ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
    சொல்லாடார் சோர விடல்.
  • விளக்கம்
    தம்மால் முடிக்கக்கூடிய செயலைச் செய்து முடிக்க இயலாதவர் போல் காட்டுபவரின் நட்பை விட்டு விடுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Those men who make a grievous toil of what they do
    On your behalf, their friendship silently eschew.
  • Meaning
    Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.
0817. நகைவகைய ராகிய நட்பின்

0817. நகைவகைய ராகிய நட்பின்

0817. Nagaivagaiya Raagiya Natpin

  • குறள் #
    0817
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    தீ நட்பு (Thee Natpu)
    Evil Friendship
  • குறள்
    நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
    பத்தடுத்த கோடி உறும்.
  • விளக்கம்
    சிரித்து விளையாடுதல் மட்டும் செய்பவருடைய நட்பை விட, பகைவரால் வரும் துன்பங்கள் பத்துக் கோடி பங்கு நல்லவையாகும்.
  • Translation
    in English
    From foes ten million fold a greater good you gain,
    Than friendship yields that’s formed with laughers vain.
  • Meaning
    What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.
0816. பேதை பெருங்கெழீஇ நட்பின்

0816. பேதை பெருங்கெழீஇ நட்பின்

0816. Pethai Perunkezheee Natpin

  • குறள் #
    0816
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    தீ நட்பு (Thee Natpu)
    Evil Friendship
  • குறள்
    பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
    ஏதின்மை கோடி உறும்.
  • விளக்கம்
    அறிவில்லாதவனுடைய நட்பைவிட, அறிவுடையவரது நட்பில்லாத தன்மை கோடி பங்கு நல்லது.
  • Translation
    in English
    Better ten million times incur the wise man’s hate,
    Than form with foolish men a friendship intimate.
  • Meaning
    The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.
0815. செய்தேமஞ் சாராச் சிறியவர்

0815. செய்தேமஞ் சாராச் சிறியவர்

0815. Seithemanj Chaaraach Chiriyavar

  • குறள் #
    0815
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    தீ நட்பு (Thee Natpu)
    Evil Friendship
  • குறள்
    செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
    எய்தலின் எய்தாமை நன்று.
  • விளக்கம்
    நட்புச் செய்தபோது பாதுகாவலாகப் பயன்படாத நண்பரின் தொடர்பு இருத்தலைவிட இல்லாதிருத்தல் நல்லது.
  • Translation
    in English
    ‘Tis better not to gain than gain the friendship profitless
    Of men of little minds, who succour fails when dangers press.
  • Meaning
    It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so.
0814. அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா

0814. அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா

0814. Amaragaththu Aatrarukkum Kallaamaa

  • குறள் #
    0814
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    தீ நட்பு (Thee Natpu)
    Evil Friendship
  • குறள்
    அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
    தமரின் தனிமை தலை.
  • விளக்கம்
    தன்மீது ஏறியவனைப் போர்க்களத்தில் தள்ளிவிட்டு ஓடும் குதிரையைப் போன்றவரின் நட்பைவிடத் தனிமை நல்லது.
  • Translation
    in English
    A steed untrained will leave you in the tug of war;
    Than friends like that to dwell alone is better far.
  • Meaning
    Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle.
0813. உறுவது சீர்தூக்கும் நட்பும்

0813. உறுவது சீர்தூக்கும் நட்பும்

0813. Uruvathu Seerthookkum Natpum

  • குறள் #
    0813
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    தீ நட்பு (Thee Natpu)
    Evil Friendship
  • குறள்
    உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
    கொள்வாரும் கள்வரும் நேர்.
  • விளக்கம்
    தமக்கு வரும் பயன் ஒன்றையே ஆராயும் நண்பரும், கிடைப்பதைப் பெற்றுக் கொள்ளும் பொதுமகளிரும், கள்வரும் ஒருதன்மையராவர்.
  • Translation
    in English
    These are alike: the friends who ponder friendship’s gain
    Those who accept whate’er you give, and all the plundering train.
  • Meaning
    Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character.
0812. உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார்

0812. உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார்

0812. Urinnattu Arinorooum Oppilaar

  • குறள் #
    0812
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    தீ நட்பு (Thee Natpu)
    Evil Friendship
  • குறள்
    உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
    பெறினும் இழப்பினும் என்.
  • விளக்கம்
    தமக்குப் பயனுள்ள பொது நட்புக் கொண்டு, பயனில்லாத போது பிரிந்து செல்கின்றவரின் நட்பினைப் பெற்றாலும் என்ன பயன்? இழந்தாலும் என்ன?
  • Translation
    in English
    What though you gain or lose friendship of men of alien heart,
    Who when you thrive are friends, and when you fail depart?
  • Meaning
    Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ?
0811. பருகுவார் போலினும் பண்பிலார்

0811. பருகுவார் போலினும் பண்பிலார்

0811. Paruguvaar Polinum Panbilaar

  • குறள் #
    0811
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    தீ நட்பு (Thee Natpu)
    Evil Friendship
  • குறள்
    பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
    பெருகலிற் குன்றல் இனிது.
  • விளக்கம்
    தீய குணமுடையவர் அன்பின் மிகுதிய்நால் விழுங்குபவர் போல் காணப்பட்டாலும், அவருடைய நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.
  • Translation
    in English
    Though evil men should all-absorbing friendship show,
    Their love had better die away than grow.
  • Meaning
    The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase.
0810. விழையார் விழையப் படுப

0810. விழையார் விழையப் படுப

0810. Vizhaiyaar Vizhaiyap Paduba

  • குறள் #
    0810
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பழைமை (Pazhaimai)
    Familiarity
  • குறள்
    விழையார் விழையப் படுப பழையார்கண்
    பண்பின் தலைப்பிரியா தார்.
  • விளக்கம்
    பழைய நண்பர் பிழை செய்தாராயினும், அவரிடத்தும் அன்பு குறையாதவரைப் பகைவரும் விரும்புவர்.
  • Translation
    in English
    Ill-wishers even wish them well, who guard.
    For ancient friends, their wonted kind regard.
  • Meaning
    Even enemies will love those who have never changed in their affection to their long-standing friends.
0809. கெடாஅ வழிவந்த கேண்மையார்

0809. கெடாஅ வழிவந்த கேண்மையார்

0809. Kedaaa Vazhivandha Kenmaiyaar

  • குறள் #
    0809
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பழைமை (Pazhaimai)
    Familiarity
  • குறள்
    கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
    விடாஅர் விழையும் உலகு.
  • விளக்கம்
    பிரியாது பழைமையாக வந்த நட்பை உடையவரது நட்பை, அவர் பிழை நோக்கி விடாதவரை உலகம் விரும்பும்.
  • Translation
    in English
    Friendship of old and faithful friends,
    Who ne’er forsake, the world commends.
  • Meaning
    They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.
0808. கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை

0808. கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை

0808. Kelizhukkam Kelaak Kezhuthakaimai

  • குறள் #
    0808
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பழைமை (Pazhaimai)
    Familiarity
  • குறள்
    கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
    நாளிழுக்கம் நட்டார் செயின்.
  • விளக்கம்
    தமது நண்பர் செய்த பிழையைப் பிறர் சொன்னாலும் கேளாது பழைமை பாராட்டுவோருக்கு, அவர் பிழை செய்வாராயின் அந்நாள் நல்ல நாளாகும்.
  • Translation
    in English
    In strength of friendship rare of friend’s disgrace who will not hear,
    The day his friend offends will day of grace to him appear.
  • Meaning
    To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault.
0807. அழிவந்த செய்யினும் அன்பறார்

0807. அழிவந்த செய்யினும் அன்பறார்

0807. Azhivandha Seiyinum Anbaraar

  • குறள் #
    0807
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பழைமை (Pazhaimai)
    Familiarity
  • குறள்
    அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
    வழிவந்த கேண்மை யவர்.
  • விளக்கம்
    அன்புடன் பழைமையாக வந்த நட்பினையுடையவர், தமக்கு நண்பர் அழிவு தருவனவற்றைச் செய்தாராயினும், அவரிடம் அன்பு குறையமாட்டார்.
  • Translation
    in English
    True friends, well versed in loving ways,
    Cease not to love, when friend their love betrays.
  • Meaning
    Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin.
0806. எல்லைக்கண் நின்றார் துறவார்

0806. எல்லைக்கண் நின்றார் துறவார்

0806. Ellaikkan Nindraar Thuravaar

  • குறள் #
    0806
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பழைமை (Pazhaimai)
    Familiarity
  • குறள்
    எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
    தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
  • விளக்கம்
    நட்பின் எல்லையை மீறாது நிற்பவர், தம்மோடு பழைமையாக வந்த நண்பரது நட்பை, அவரால் கேடு வந்தபோதும் விடமாட்டார்.
  • Translation
    in English
    Who stand within the bounds quit not, though loss impends,
    Association with the old familiar friends.
  • Meaning
    Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.
0805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை

0805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை

0805. Pethaimai Ondro Perunkizhaimai

  • குறள் #
    0805
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பழைமை (Pazhaimai)
    Familiarity
  • குறள்
    பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
    நோதக்க நட்டார் செயின்.
  • விளக்கம்
    நண்பர் வருந்தத்தக்க செயல்களைச் செய்வாரானால், அதற்குக் காரணம் அவருடைய அறியாமை மட்டுமின்றி, மிக்க உரிமையுமாகும் என்று அறிதல் வேண்டும்.
  • Translation
    in English
    Not folly merely, but familiar carelessness,
    Esteem it, when your friends cause you distress.
  • Meaning
    If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.
0804. விழைதகையான் வேண்டி இருப்பர்

0804. விழைதகையான் வேண்டி இருப்பர்

0804. Vizhaithagaiyaan Vendi Iruppar

  • குறள் #
    0804
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பழைமை (Pazhaimai)
    Familiarity
  • குறள்
    விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
    கேளாது நட்டார் செயின்.
  • விளக்கம்
    நண்பர் உரிமையால் ஒன்றைக் கேளாமலே செய்தாலும், அவ்வுரிமையை விரும்பும் காரணத்தால் அவர் செய்யும் செயலையும் விரும்பியிருப்பார்.
  • Translation
    in English
    When friends unbidden do familiar acts with loving heart,
    Friends take the kindly deed in friendly part.
  • Meaning
    If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.
0803. பழகிய நட்பெவன் செய்யுங்

0803. பழகிய நட்பெவன் செய்யுங்

0803. Pazhagiya Natpeven Seiyung

  • குறள் #
    0803
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பழைமை (Pazhaimai)
    Familiarity
  • குறள்
    பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
    செய்தாங்கு அமையாக் கடை.
  • விளக்கம்
    நண்பர் நட்பின் உரிமையால் செய்தவற்றைத் தாம் செய்தாற் போல் ஏற்கவில்லையென்றால், அவரோடு பழகிய நட்புப் பயனற்றதாகும்.
  • Translation
    in English
    When to familiar acts men kind response refuse,
    What fruit from ancient friendship’s use?
  • Meaning
    Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?
0802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை

0802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை

0802. Natpir Kuruppuk Kezhuthakaimai

  • குறள் #
    0802
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பழைமை (Pazhaimai)
    Familiarity
  • குறள்
    நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
    உப்பாதல் சான்றோர் கடன்.
  • விளக்கம்
    நட்பிற்கு உறுப்பாவது, நண்பர் உரிமையால் செய்யும் செயலாகும்; அதை மகிழ்வோடு ஏற்பது அறிவுடையோர் கடமையாகும்.
  • Translation
    in English
    Familiar freedom friendship’s very frame supplies;
    To be its savour sweet is duty of the wise.
  • Meaning
    The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise.
0801. பழைமை எனப்படுவது யாதெனின்

0801. பழைமை எனப்படுவது யாதெனின்

0801. Pazhaimai Enappaduvathu Yaathenin

  • குறள் #
    0801
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பழைமை (Pazhaimai)
    Familiarity
  • குறள்
    பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
    கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
  • விளக்கம்
    பழைமை என்று சொல்லப்படுவது எதுவென்றால், அது, நண்பர் செய்தன சிறியனவாயிருப்பினும் பழிக்காமல் அவற்றிற்கு உடன்படுவதாகிய நட்பாகும்.
  • Translation
    in English
    Familiarity is friendship’s silent pact,
    That puts restraint on no familiar act.
  • Meaning
    Intimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).
0800. மருவுக மாசற்றார் கேண்மைஒன்

0800. மருவுக மாசற்றார் கேண்மைஒன்

0800. Maruvuga Maasatraar Kenmaion

  • குறள் #
    0800
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
    ஒருவுக ஒப்பிலார் நட்பு.
  • விளக்கம்
    குற்றமற்றவர் நட்பையே கொள்க; தனக்கு ஒப்பில்லாதவரின் நட்பினை அறியாது கொண்டானாயின், அவர் விரும்பியது ஒன்றைக் கொடுத்தாயினும் அந்நட்பை விட்டுவிடுக.
  • Translation
    in English
    Cling to the friendship of the spotless one’s; whate’er you pay.
    Renounce alliance with the men of evil way.
  • Meaning
    Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world).
0799. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை

0799. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை

0799. Kedunkaalaik Kaividuvaar Kenmai

  • குறள் #
    0799
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
    உள்ளினும் உள்ளஞ் சுடும்.
  • விளக்கம்
    துன்பக் காலத்தில் கைவிடுவார் நட்பினை, இறக்குங் காலத்தில் ஒருவன் நினைப்பானாயினும், அந்த இறப்பைவிட அந்த நினைவுதான் மனதைச் சுடும்.
  • Translation
    in English
    Of friends deserting us on ruin’s brink,
    ‘Tis torture e’en in life’s last hour to think.
  • Meaning
    The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one’s mind at the time of death.
0798. உள்ளற்க உள்ளம் சிறுகுவ

0798. உள்ளற்க உள்ளம் சிறுகுவ

0798. Ullarka Ullam Sirukuva

  • குறள் #
    0798
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
    அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
  • விளக்கம்
    தம் ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களைச் செய்ய நினைக்கக் கூடாது; அதுபோலத் தனக்குத் துன்பம் வந்தவிடத்துக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளக் கூடாது.
  • Translation
    in English
    Think not the thoughts that dwarf the soul; nor take
    For friends the men who friends in time of grief forsake.
  • Meaning
    Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.
0797. ஊதியம் என்பது ஒருவற்குப்

0797. ஊதியம் என்பது ஒருவற்குப்

0797. Oothiyam Enbathu Oruvarkup

  • குறள் #
    0797
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
    கேண்மை ஒரீஇ விடல்.
  • விளக்கம்
    ஒருவனுக்கு இலாபம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவரின் நட்பைவிட்டு நீங்குதலேயாகும்.
  • Translation
    in English
    ‘Tis gain to any man, the sages say,
    Friendship of fools to put away.
  • Meaning
    It is indead a gain for one to renounce the friendship of fools.
0796. கேட்டினும் உண்டோர் உறுதி

0796. கேட்டினும் உண்டோர் உறுதி

0796. Kettinum Undor Uruthi

  • குறள் #
    0796
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பதோர் கோல்.
  • விளக்கம்
    கேடு வந்தவிடத்தும் ஒருவகை நன்மை உண்டு. அந்தக் கேடு நண்பர்களை நன்றாக அளந்து அறியும் ஓர் அளவு கோலாகும்.
  • Translation
    in English
    Ruin itself one blessing lends:
    ‘Tis staff that measures out one’s friends.
  • Meaning
    Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one’s) relations.
0795. அழச்சொல்லி அல்லது இடித்து

0795. அழச்சொல்லி அல்லது இடித்து

0795. Azhachcholli Allathu Idiththu

  • குறள் #
    0795
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
    வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
  • விளக்கம்
    குற்றமுள்ளதைச் செய்ய எண்ணினால் வருந்தும்படியாகச் சொல்லிக் கண்டிக்கும், உலக வழக்கை அறிந்து நடக்கும்படி செய்விக்கும் வல்லமையுடையவரைத் தேடி நட்புக் கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Make them your chosen friend whose words repentance move,
    With power prescription’s path to show, while evil they reprove.
  • Meaning
    You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.
0794. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு

0794. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு

0794. Kudippirandhu Thankan Pazhinaanu

  • குறள் #
    0794
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
  • விளக்கம்
    உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் உண்டாகும் பழிக்கு அஞ்சுகின்றவனை, அவன் விரும்பியது ஒன்றைக் கொடுத்தாயினும் நட்புக் கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Who, born of noble race, from guilt would shrink with shame,
    Pay any price so you as friend that man may claim.
  • Meaning
    The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.
0793. குணமும் குடிமையும் குற்றமும்

0793. குணமும் குடிமையும் குற்றமும்

0793. Kunamum Kudimaiyum Kutramum

  • குறள் #
    0793
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
    இனனும் அறிந்தியாக்க நட்பு.
  • விளக்கம்
    ஒருவனது குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், அவனது சுற்றத்தையும் ஆராய்ந்து அறிந்து அவனோடு நட்புச் செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Temper, descent, defects, associations free
    From blame: know these, then let the man be friend to thee.
  • Meaning
    Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one’s relations.
0792. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை

0792. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை

0792. Aaindhaindhu Kollaathaan Kenmai

  • குறள் #
    0792
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
    தான்சாம் துயரம் தரும்.
  • விளக்கம்
    பலவகையில் ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுக்கு, அதனால் இறுதியில் தான் சாதற்கேதுவாகிய துன்பம் உண்டாகும்.
  • Translation
    in English
    Alliance with the man you have not proved and proved again,
    In length of days will give you mortal pain.
  • Meaning
    The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.
0791. நாடாது நட்டலிற் கேடில்லை

0791. நாடாது நட்டலிற் கேடில்லை

0791. Naadaathu Nattalir Kedillai

  • குறள் #
    0791
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
    வீடில்லை நட்பாள் பவர்க்கு.
  • விளக்கம்
    நட்பை விரும்பி அதனிடம் நிற்பவருக்கு, ஒருவனோடு நட்புச் செய்தபின் அதனைவிட முடியாது; ஆகையால், ஆராயாது நட்புச் செய்தலைப் போலக் கேடு தருவது வேறு இல்லை.
  • Translation
    in English
    To make an untried man your friend is ruin sure;
    For friendship formed unbroken must endure.
  • Meaning
    As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.
0790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம்

0790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம்

0790. Inaiyar Ivaremakku Innamyaam

  • குறள் #
    0790
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
    புனையினும் புல்லென்னும் நட்பு.
  • விளக்கம்
    ‘இவர் நமக்கு இவ்வளவு அன்பினர்; யாம் இவர்க்கு இத்தன்மையேம்’ என்று ஒருவரை ஒருவர் புகழ்ந்து சொன்னாலும் நட்பு சிறுமையாய்த் தோன்றும்.
  • Translation
    in English
    Mean is the friendship that men blazon forth,
    ‘He’s thus to me’ and ‘such to him my worth’.
  • Meaning
    Though friends may praise one another saying, “He is so intimate with us, and we so much (with him)”; (still) such friendship will appear mean.
0789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்

0789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்

0789. Natpirkku Veetrirukkai Yaathenil

  • குறள் #
    0789
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
    ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
  • விளக்கம்
    நட்பிற்கு உயர்ந்த இடம் எது எனில், எக்காலத்தும் மாறுபாடின்றி முடிந்த வரையில் நண்பனைத் தளராமல் தாங்கும் திண்மையாகும்.
  • Translation
    in English
    And where is friendship’s royal seat? In stable mind,
    Where friend in every time of need support may find.
  • Meaning
    Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth).
0788. உடுக்கை இழந்தவன் கைபோல

0788. உடுக்கை இழந்தவன் கைபோல

0788. Udukkai Izhandhavan Kaipola

  • குறள் #
    0788
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.
  • விளக்கம்
    ஆடை அவிழ்ந்தவனுடைய கை அதைப் பிடிப்பதற்கு விரைந்து செல்வதுபோலத் துன்பம் நேர்ந்தபோது விரைந்து சென்று அதனை நீக்குபவனே நண்பன் ஆவான்.
  • Translation
    in English
    As hand of him whose vesture slips away,
    Friendship at once the coming grief will stay.
  • Meaning
    (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).
0787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து

0787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து

0787. Azhivi Navaineekki Aaruyiththu

  • குறள் #
    0787
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
    அல்லல் உழப்பதாம் நட்பு.
  • விளக்கம்
    நட்பாவது, கேட்ட வழியில் நண்பன் செல்வதை நீக்கி, நல்வழியில் செலுத்தி, துன்பம் வந்தவிடத்து உடனிருந்து அனுபவிப்பதே யாகும்.
  • Translation
    in English
    Friendship from ruin saves, in way of virtue keeps;
    In troublous time, it weeps with him who weeps.
  • Meaning
    (True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him).
0786. முகநக நட்பது நட்பன்று

0786. முகநக நட்பது நட்பன்று

0786. Muganaga Natpathu Natpandru

  • குறள் #
    0786
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு.
  • விளக்கம்
    ஒருவருடன் முகம் மட்டும் மலரும் வகையில் நட்புக் கொள்வது நட்பன்று; அன்பால் மனமும் மலர நட்புக் கொள்வதே நட்பாகும்.
  • Translation
    in English
    Not the face’s smile of welcome shows the friend sincere,
    But the heart’s rejoicing gladness when the friend is near.
  • Meaning
    The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.
0785. புணர்ச்சி பழகுதல் வேண்டா

0785. புணர்ச்சி பழகுதல் வேண்டா

0785. Punarchchi Pazhaguthal Vendaa

  • குறள் #
    0785
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்.
  • விளக்கம்
    நட்புக்குச் சேர்ந்திருத்தலும், பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டாம். ஒத்த உணர்ச்சியே நட்பு எற்படுதற்குரிய உரிமையைத் தரும்.
  • Translation
    in English
    Not association constant, not affection’s token bind;
    ‘Tis the unison of feeling friends unites of kindred mind.
  • Meaning
    Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.
0784. நகுதற் பொருட்டன்று நட்டல்

0784. நகுதற் பொருட்டன்று நட்டல்

0784. Naguthar Poruttandru Nattal

  • குறள் #
    0784
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
    மேற்செனறு இடித்தற் பொருட்டு.
  • விளக்கம்
    நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்கன்று; அவரிடத்தில் தீய செய்கை கண்டபோது, முற்பட்டுச் சென்று கண்டித்து அறிவுரை சொல்லுதற்கே யாகும்.
  • Translation
    in English
    Nor for laughter only friendship all the pleasant day,
    But for strokes of sharp reproving, when from right you stray.
  • Meaning
    Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.
0783. நவில்தொறும் நூல்நயம் போலும்

0783. நவில்தொறும் நூல்நயம் போலும்

0783. Navilthorum Noolnayam Polum

  • குறள் #
    0783
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு.
  • விளக்கம்
    நற்குணமுடையார் தம்முட் கொண்ட நட்பு, பழகும்போதெல்லாம், அவர்கட்கு இன்பம் அளித்தல், நூற் பொருள் கற்குந்தோறும் கற்பவர்க்கு இன்பம் செய்தல் போன்றதாகும்.
  • Translation
    in English
    Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;
    So the heart by use grows fonder, Bound in friendship with the good.
  • Meaning
    Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.
0782. நிறைநீர நீரவர் கேண்மை

0782. நிறைநீர நீரவர் கேண்மை

0782. Niraineera Neeravar Kenmai

  • குறள் #
    0782
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
    பின்னீர பேதையார் நட்பு.
  • விளக்கம்
    அறிவுடையவர் நட்பு சந்திரனது பிறை நிறைவது போல நாள்தொறும் வளரும் தன்மையுடையது; அறிவில்லாதவர் நட்பு நிறைமதி பின் குறைவதுபோல நாள்தொறும் குறையுந்தன்மை யுடையது.
  • Translation
    in English
    Friendship with men fulfilled of good Waxes like the crescent moon;
    Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.
  • Meaning
    The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.
0781. செயற்கரிய யாவுள நட்பின்

0781. செயற்கரிய யாவுள நட்பின்

0781. Seyarkariya Yaavula Natpin

  • குறள் #
    0781
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
    வினைக்கரிய யாவுள காப்பு.
  • விளக்கம்
    நட்புப் போலச் செய்து கொள்ளுதற்கு அரிய பொருட்கள் எவை உள்ளன? அதைப்போல் பகைவர் செயலைத் தடுத்துக் காப்பதற்கு எவை உள்ளன?
  • Translation
    in English
    What so hard for men to gain as friendship true?
    What so sure defence ‘gainst all that foe can do?
  • Meaning
    What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one’s foes) ?