Tag: Wealth

0980. அற்றம் மறைக்கும் பெருமை

0980. அற்றம் மறைக்கும் பெருமை

0980. Atram Maraikkum Perumai

  • குறள் #
    0980
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்.
  • விளக்கம்
    பெருமைக் குணமுடையவர் பிறர் குற்றங்களை மறைப்பர். சிறுமைக் குணமுடையவர் பிறர் குற்றங்களையே கூறிவிடுவர்.
  • Translation
    in English
    Greatness will hide a neighbour’s shame;
    Meanness his faults to all the world proclaim.
  • Meaning
    The great hide the faults of others; the base only divulge them.
0979. பெருமை பெருமிதம் இன்மை

0979. பெருமை பெருமிதம் இன்மை

0979. Perumai Perumitham Inmai

  • குறள் #
    0979
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல்.
  • விளக்கம்
    பெருமைக் குணமாவது செருக்கிலா திருத்தல்; சிறுமைக் குணமாவது அச்செருக்கினை அளவின்றிக் கொண்டிருத்தல்.
  • Translation
    in English
    Greatness is absence of conceit; meanness, we deem,
    Riding on car of vanity supreme.
  • Meaning
    Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.
0978. பணியுமாம் என்றும் பெருமை

0978. பணியுமாம் என்றும் பெருமை

0978. Paniyumaam Endrum Perumai

  • குறள் #
    0978
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து.
  • விளக்கம்
    பெருமையுடையவர் எப்பொழுதும் தாழ்ந்தொழுகுவர்; சிறுமையுடையவர் தம்மைத் தாமே மதித்துப் பெருமைப்படுத்திப் புகழ்வர்.
  • Translation
    in English
    Greatness humbly bends, but littleness always
    Spreads out its plumes, and loads itself with praise.
  • Meaning
    The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.
0977. இறப்பே புரிந்த தொழிற்றாம்

0977. இறப்பே புரிந்த தொழிற்றாம்

0977. Irappe Purindha Thozhitraam

  • குறள் #
    0977
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
    சீரல் லவர்கண் படின்.
  • விளக்கம்
    செல்வம் முதலிய சிறப்பு சிறியவர்களிடம் உண்டாகுமானால், அவர்கள் வரம்பு கடந்த செயல்களைச் செய்பவராவர்.
  • Translation
    in English
    Whene’er distinction lights on some unworthy head,
    Then deeds of haughty insolence are bred.
  • Meaning
    Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.
0976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை

0976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை

0976. Siriyaar Unarchchiyul Illai

  • குறள் #
    0976
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
    பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.
  • விளக்கம்
    பெரியவரை வழிபட்டு அவரது தன்மையைத் தாமும் அடைய வேண்டும் என்னும் விருப்பம் சிறியவர் உள்ளத்தில் தோன்றாது.
  • Translation
    in English
    ‘As votaries of the truly great we will ourselves enroll,’
    Is thought that enters not the mind of men of little soul.
  • Meaning
    It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.
0975. பெருமை யுடையவர் ஆற்றுவார்

0975. பெருமை யுடையவர் ஆற்றுவார்

0975. Perumai Yudaiyavar Aatruvaar

  • குறள் #
    0975
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை உடைய செயல்.
  • விளக்கம்
    பெருமையுடையவர், தாம் வறியவரான போதும் பிறரால் செய்ய முடியாத செயல்களை முறைப்படி செய்து முடிக்க வல்லவராவர்.
  • Translation
    in English
    The man endowed with greatness true,
    Rare deeds in perfect wise will do.
  • Meaning
    (Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).
0974. ஒருமை மகளிரே போலப்

0974. ஒருமை மகளிரே போலப்

0974. Orumai Magalire Polap

  • குறள் #
    0974
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
  • விளக்கம்
    கற்புடைய பெண்களைப் போல் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடக்க வல்லவனாயின், அவனிடம் பெருமைக் குணம் உண்டாகும்.
  • Translation
    in English
    Like single-hearted women, greatness too,
    Exists while to itself is true.
  • Meaning
    Even greatness, like a woman’s chastity, belongs only to him who guards himself.
0973. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்

0973. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்

0973. Melirundhum Melallaar Melallar

  • குறள் #
    0973
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
    கீழல்லார் கீழல் லவர்.
  • விளக்கம்
    மேன்மைக் குணம் இல்லாதவர் மேலான சபையில் இருந்தாலும் மேன்மக்கள் ஆகமாட்டார்; கீழ்மக்கள் அல்லாதவர் செல்வத்தினால் தாழ்ந்த நிலையில் இருந்தாராயினும் கீழ்மக்கள் ஆகமாட்டார்.
  • Translation
    in English
    The men of lofty line, whose souls are mean, are never great
    The men of lowly birth, when high of soul, are not of low estate.
  • Meaning
    Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.
0972. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

0972. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

0972. Pirappokkum Ellaa Uyirkkum

  • குறள் #
    0972
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.
  • விளக்கம்
    மக்கள் பிறப்பால் ஒத்தவர்களாயினும், பெருமை சிறுமை என்னும் அவர்களது சிறப்பியல்புகள் அவர்கள் செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் ஒத்திருப்பதில்லை.
  • Translation
    in English
    All men that live are one in circumstances of birth;
    Diversities of works give each his special worth.
  • Meaning
    All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.
0971. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை

0971. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை

0971. Olioruvarku Ulla Verukkai

  • குறள் #
    0971
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
    அஃதிறந்து வாழ்தும் எனல்.
  • விளக்கம்
    ஒருவனது பெருமைக்குக் காரணம், மற்றவர் செய்ய முடியாதவற்றைத் தான் செய்யக் கருதும் ஊக்கமிகுதி; ஒருவனுக்குத் தாழ்வாவது, அவ்வாறு செய்யமுயலாது வாழ்வோம் என நினைத்தல்.
  • Translation
    in English
    The light of life is mental energy; disgrace is his
    Who says, ‘I ‘ill lead a happy life devoid of this.’
  • Meaning
    One’s light is the abundance of one’s courage; one’s darkness is the desire to live destitute of such (a state of mind.)
0970. இளிவரின் வாழாத மானம்

0970. இளிவரின் வாழாத மானம்

0970. Ilivarin Vaazhaatha Maanam

  • குறள் #
    0970
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    இளிவரின் வாழாத மானம் உடையார்
    ஒளிதொழுது ஏத்தும் உலகு.
  • விளக்கம்
    மானக்கேடு வந்தால் உயிர்வாழ முடியாத மானமுடையவரது புகழ் வடிவை உலகத்தவர் வணங்கித் துதிப்பர்.
  • Translation
    in English
    Who, when dishonour comes, refuse to live, their honoured memory
    Will live in worship and applause of all the world for aye!
  • Meaning
    The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.
0969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா

0969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா

0969. Mayirneeppin Vaazhaak Kavarimaa

  • குறள் #
    0969
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின்.
  • விளக்கம்
    தன்மயிர்த்திரளில் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர், தம் மானம் அழியின் இறந்து விடுவர்.
  • Translation
    in English
    Like the wild ox that, of its tuft bereft, will pine away,
    Are those who, of their honour shorn, will quit the light of day.
  • Meaning
    Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.
0968. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை

0968. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை

0968. Marundhomatru Oonombum Vaazhkkai

  • குறள் #
    0968
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
    பீடழிய வந்த இடத்து.
  • விளக்கம்
    மானம்கெட வந்தவிடத்து, உயிரை விடாது, உடம்பைக் காக்கும் வாழ்க்கையானது, சாவாமல் காக்கும் மருந்தாகுமோ?
  • Translation
    in English
    When high estate has lost its pride of honour meet,
    Is life, that nurses this poor flesh, as nectar sweet?
  • Meaning
    For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.
0967. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்

0967. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்

0967. Ottaarpin Sendroruvan Vaazhthalin

  • குறள் #
    0967
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
    கெட்டான் எனப்படுதல் நன்று.
  • விளக்கம்
    தன்னை இகழ்பவர்பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட, தனது நிலையிலே நின்று இறந்தான் எனப்படுதல் நன்று.
  • Translation
    in English
    Better ’twere said, ‘He’s perished!’ than to gain
    The means to live, following in foeman’s train.
  • Meaning
    It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.
0966. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால்

0966. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால்

0966. Pugazhindraal Puththelnaattu Uyyaathaal

  • குறள் #
    0966
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
    இகழ்வார்பின் சென்று நிலை.
  • விளக்கம்
    மானத்தை விட்டுத் தன்னை இகழ்கின்றவர்பின் சென்று நிற்பது இவ்வுலகத்தில் புகழ் உண்டாக்காது; தேவர் உலகத்துக்குச் செலுத்தாது; பின்பு ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?
  • Translation
    in English
    It yields no praise, nor to the land of Gods throws wide the gate:
    Why follow men who scorn, and at their bidding wait?
  • Meaning
    Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.
0965. குன்றின் அனையாரும் குன்றுவர்

0965. குன்றின் அனையாரும் குன்றுவர்

0965. Kundrin Anaiyaarum Kundruvar

  • குறள் #
    0965
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
    குன்றி அனைய செயின்.
  • விளக்கம்
    குடிப்பிறப்பால் மலைபோல் உயர்ந்தவராயினும், தாழ்வு வருவதற்குக் காரணமான செயல்களை, ஒரு குன்றிமணியின் அளவு செய்வார்களானாலும் தாழ்ந்து விடுவர்.
  • Translation
    in English
    If meanness, slight as ‘abrus’ grain, by men be wrought,
    Though like a hill their high estate, they sink to nought.
  • Meaning
    Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.
0964. தலையின் இழிந்த மயிரனையர்

0964. தலையின் இழிந்த மயிரனையர்

0964. Thalaiyin Izhindha Mayiranaiyar

  • குறள் #
    0964
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
    நிலையின் இழிந்தக் கடை.
  • விளக்கம்
    நல்ல குடியில் பிறந்த மனிதர் தம் நிலையிலிருந்து தாழ்ந்தவிடத்துத் தலையிலிருந்து வீழ்ந்த மயிர் போன்றவராவர்.
  • Translation
    in English
    Like hairs from off the head that fall to earth,
    When fall’n from high estate are men of noble birth.
  • Meaning
    They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.
0963. பெருக்கத்து வேண்டும் பணிதல்

0963. பெருக்கத்து வேண்டும் பணிதல்

0963. Perukkaththu Vendum Panithal

  • குறள் #
    0963
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு.
  • விளக்கம்
    நல்ல குடியில் தோன்றியவர் செல்வம் பெருகிய காலத்தில் யாவருக்கும் வணங்கி நடத்தல் வேண்டும். செல்வம் குறைந்து வறுமை உண்டான காலத்தில் தாழ்வு வராதபடி உயர்ந்த ஒழுக்கமுடையவராதல் வேண்டும்.
  • Translation
    in English
    Bow down thy soul, with increase blest, in happy hour;
    Lift up thy heart, when stript of all by fortune’s power.
  • Meaning
    In great prosperity humility is becoming; dignity, in great adversity.
0962. சீரினும் சீரல்ல செய்யாரே

0962. சீரினும் சீரல்ல செய்யாரே

0962. Seerinum Seeralla Seiyaare

  • குறள் #
    0962
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
    பேராண்மை வேண்டு பவர்.
  • விளக்கம்
    புகழையும் மானத்தையும் விரும்புகின்றவர், புகழ் தேடும்போதும் இழிவு தரும் செயலைச் செய்ய மாட்டார்.
  • Translation
    in English
    Who seek with glory to combine honour’s untarnished fame,
    Do no inglorious deeds, though men accord them glory’s name.
  • Meaning
    Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.
0961. இன்றி அமையாச் சிறப்பின

0961. இன்றி அமையாச் சிறப்பின

0961. Indri Amaiyaach Chirappina

  • குறள் #
    0961
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
    குன்ற வருப விடல்.
  • விளக்கம்
    இன்றியமையாத செயல்களே ஆயினும் அவற்றால் குடிப் பிறப்புக்குத் தாழ்வு வருமானால் ஒருவன் அச்செயல்களைச் செய்யாது விடுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Though linked to splendours man no otherwise may gain,
    Reject each act that may thine honour’s clearness stain.
  • Meaning
    Actions that would degrade (one’s) family should not be done; though they may be so important that not doing them would end in death.
0960. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்

0960. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்

0960. Nalamvendin Naanudaimai Vendum

  • குறள் #
    0960
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
    வேண்டுக யார்க்கும் பணிவு
  • விளக்கம்
    ஒருவன் நன்மையை விரும்பினால், அவனிடத்தில் நாணம் இருக்க வேண்டும். அவ்வாறே குடியின் உயர்வை விரும்பினால், அவன் எல்லோரிடத்திலும் பணிந்து நடத்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Who seek for good the grace of virtuous shame must know;
    Who seek for noble name to all must reverence show.
  • Meaning
    He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.
0959. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்

0959. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்

0959. Nilaththil Kidanthamai Kaalkaattum

  • குறள் #
    0959
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
  • விளக்கம்
    நிலத்தின் இயல்பை அதனிடத்தே முளைத்த முளையானது காட்டிவிடும். அதுபோல, ஒருவன் வாயிலுண்டாகும் சொற்கள் அவன் பிறந்த குலத்தின் இயல்பைக் காட்டும்.
  • Translation
    in English
    Of soil the plants that spring thereout will show the worth:
    The words they speak declare the men of noble birth.
  • Meaning
    As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one’s birth).
0958. நலத்தின்கண் நாரின்மை தோன்றின்

0958. நலத்தின்கண் நாரின்மை தோன்றின்

0958. Nalaththinkan Naarinmai Thondrin

  • குறள் #
    0958
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின்கண் ஐயப் படும்.
  • விளக்கம்
    ஒருவனுக்கு நல்ல குணத்தில் விருப்பமின்மை உண்டானால், அவனது குலப்பிறப்பில் உலகத்தவர் ஐயங்கொள்வர்.
  • Translation
    in English
    If lack of love appear in those who bear some goodly name,
    ‘Twill make men doubt the ancestry they claim.
  • Meaning
    If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.
0957. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம்

0957. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம்

0957. Kudippirandhaar Kanvilangum Kutram

  • குறள் #
    0957
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
    மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
  • விளக்கம்
    உயிர்ந்த குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், வானத்திலுள்ள சந்திரனிடத்தில் உள்ள களங்கம் போல் பலர் அறிய விளங்கித் தோன்றும்.
  • Translation
    in English
    The faults of men of noble race are seen by every eye,
    As spots on her bright orb that walks sublime the evening sky.
  • Meaning
    The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.
0956. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா

0956. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா

0956. Salampatrich Chaalpila Seiyaarmaa

  • குறள் #
    0956
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
    குலம்பற்றி வாழ்தும்என் பார்.
  • விளக்கம்
    குற்றமற்ற தம் குடிப்பண்புடன் வாழ்வோர் என்போர், வஞ்சனையாகக் குலத்திற்குப் பொருந்தாத தொழில்களைச் செய்ய மாட்டார்.
  • Translation
    in English
    Whose minds are set to live as fits their sire’s unspotted fame,
    Stooping to low deceit, commit no deeds that gender shame.
  • Meaning
    Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.
0955. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும்

0955. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும்

0955. Vazhanguva Thulveezhndhak Kannum

  • குறள் #
    0955
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
    பண்பில் தலைப்பிரிதல் இன்று.
  • விளக்கம்
    பழமைதொட்டு வருகின்ற உயர்ந்த குடியிலே பிறந்தவர் கொடுக்கும் பொருள் சுருங்கியபோதும் தமது உயர் குணங்களிலிருந்து நீங்க மாட்டார்.
  • Translation
    in English
    Though stores for charity should fail within, the ancient race
    Will never lose its old ancestral grace.
  • Meaning
    Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).
0954. அடுக்கிய கோடி பெறினும்

0954. அடுக்கிய கோடி பெறினும்

0954. Adukkiya Kodi Perinum

  • குறள் #
    0954
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
    குன்றுவ செய்தல் இலர்.
  • விளக்கம்
    அடுக்கிய பலகோடி அளவினதாகிய பொருளைப் பெற்றாலும், உயர்ந்த குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குறைவதற்குக் காரணமான செயல்களைச் செய்ய மாட்டார்.
  • Translation
    in English
    Millions on millions piled would never win
    The men of noble race to soul-degrading sin.
  • Meaning
    Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.
0953. நகைஈகை இன்சொல் இகழாமை

0953. நகைஈகை இன்சொல் இகழாமை

0953. Nagaieegai Insol Igazhaamai

  • குறள் #
    0953
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
    வகையென்ப வாய்மைக் குடிக்கு.
  • விளக்கம்
    உயர்ந்த குடியில் பிறந்தவர்க்கு, வறியவர் வருங்கால் முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொல் பேசுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கும் உரிய குணங்களாகும்.
  • Translation
    in English
    The smile, the gift, the pleasant word, unfailing courtesy
    These are the signs, they say, of true nobility.
  • Meaning
    A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.
0952. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம்

0952. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம்

0952. Ozhukkamum Vaaimaiyum Naanumim

  • குறள் #
    0952
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
    இழுக்கார் குடிப்பிறந் தார்.
  • விளக்கம்
    உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் நல்லொழுக்கம், உண்மை, நாணம் ஆகிய மூன்று குணங்களிலிருந்தும் தவறி நடக்கமாட்டார்கள்.
  • Translation
    in English
    In these three things the men of noble birth fail not:
    In virtuous deed and truthful word, and chastened thought.
  • Meaning
    The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty.
0951. இற்பிறந்தார் கண்அல்லது இல்லை

0951. இற்பிறந்தார் கண்அல்லது இல்லை

0951. Irpirandhaar Kanallathu Illai

  • குறள் #
    0951
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
    செப்பமும் நாணும் ஒருங்கு.
  • விளக்கம்
    உயர்ந்த குடியில் பிறந்தவரிடத்தல்லாமல் மற்றவரிடம் நடுவு நிலைமையும் நாணமும் இயல்பாக ஒரு சேர அமைவதில்லை.
  • Translation
    in English
    Save in the scions of a noble house, you never find
    Instinctive sense of right and virtuous shame combined.
  • Meaning
    Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the highborn.
0950. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச்

0950. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச்

0950. Utravan Theerppaan Marundhuzhaich

  • குறள் #
    0950
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    மருந்து (Marundhu)
    Medicine
  • குறள்
    உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
    அப்பால் நாற்கூற்றே மருந்து.
  • விளக்கம்
    நோயாளி, நோயைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவியாகிய மருந்து, அம்மருந்தை அருகில் இருந்து தருபவன் என்று அந்த நான்கு பகுதியை உடையது மருத்துவ முறையாகும்.
  • Translation
    in English
    For patient, leech, and remedies, and him who waits by patient’s side,
    The art of medicine must fourfold code of laws provide.
  • Meaning
    Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.
0949. உற்றான் அளவும் பிணியளவும்

0949. உற்றான் அளவும் பிணியளவும்

0949. Utraan Alavum Piniyalavum

  • குறள் #
    0949
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    மருந்து (Marundhu)
    Medicine
  • குறள்
    உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
    கற்றான் கருதிச் செயல்.
  • விளக்கம்
    மருத்துவம் கற்றவன் நோயாளியின் நிலை, நோயின் அளவு, மருந்து கொடுக்கும் காலம் அறிந்து மருத்துவம் செய்யவேண்டும்.
  • Translation
    in English
    The habitudes of patient and disease, the crises of the ill
    These must the learned leech think over well, then use his skill.
  • Meaning
    The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).
0948. நோய்நாடி நோய்முதல் நாடி

0948. நோய்நாடி நோய்முதல் நாடி

0948. Noinaadi Noimuthal Naadi

  • குறள் #
    0948
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    மருந்து (Marundhu)
    Medicine
  • குறள்
    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்.
  • விளக்கம்
    நோய் தணிக்கும் மருத்துவன் நோயை இன்னதென்று அறிந்து, நோயின் காரணத்தை ஆராய்ந்து, அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து, பிழைபடாமல் செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Disease, its cause, what may abate the ill:
    Let leech examine these, then use his skill.
  • Meaning
    Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).
0947. தீயள வன்றித் தெரியான்

0947. தீயள வன்றித் தெரியான்

0947. Theeyala Vandrith Theriyaan

  • குறள் #
    0947
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    மருந்து (Marundhu)
    Medicine
  • குறள்
    தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
    நோயள வின்றிப் படும்.
  • விளக்கம்
    ஒருவன் தன் வயிற்றுச் சூட்டின் அளவினை அறியாமல் அதிக உணவை உட்கொண்டால், நோய்கள் அளவில்லாமல் உண்டாகும்.
  • Translation
    in English
    Who largely feeds, nor measure of the fire within maintains,
    That thoughtless man shall feel unmeasured pains.
  • Meaning
    He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).
0946. இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல்

0946. இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல்

0946. Izhivarindhu Unbaankan Inbampol

  • குறள் #
    0946
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    மருந்து (Marundhu)
    Medicine
  • குறள்
    இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய்.
  • விளக்கம்
    குறைவாக உண்பவனிடத்தில் இன்பம் நிலைத்து நிற்றல்போல, மிகுதியாக உண்பவனிடத்தில் நோய் நீங்காமல் நிற்கும்.
  • Translation
    in English
    On modest temperance as pleasures pure,
    So pain attends the greedy epicure.
  • Meaning
    As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.
0945. மாறுபாடு இல்லாத உண்டி

0945. மாறுபாடு இல்லாத உண்டி

0945. Maarupaadu Illaatha Undi

  • குறள் #
    0945
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    மருந்து (Marundhu)
    Medicine
  • குறள்
    மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
  • விளக்கம்
    உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை அளவோடு உண்பாராயின், அவரது உயிர்க்கு நோயினால் துன்பம் உண்டாகாது.
  • Translation
    in English
    With self-denial take the well-selected meal;
    So shall thy frame no sudden sickness feel.
  • Meaning
    There will be no disaster to one’s life if one eats with moderation, food that is not disagreeable.
0944. அற்றது அறிந்து கடைப்பிடித்து

0944. அற்றது அறிந்து கடைப்பிடித்து

0944. Atrathu Arindhu Kadaippidiththu

  • குறள் #
    0944
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    மருந்து (Marundhu)
    Medicine
  • குறள்
    அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து.
  • விளக்கம்
    முன் உண்ணப்பட்ட உணவு செரித்ததனை அறிந்து, தன் உடம்போடு மாறுபடாத உணவுகளைத் தெளிவாக அறிந்து நன்றாகப் பசித்தபின் உண்ணுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Knowing the food digested well, when hunger prompteth thee,
    With constant care, the viands choose that well agree.
  • Meaning
    (First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you).
0943. அற்றால் அறவறிந்து உண்க

0943. அற்றால் அறவறிந்து உண்க

0943. Atraal Aravarindhu Unga

  • குறள் #
    0943
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    மருந்து (Marundhu)
    Medicine
  • குறள்
    அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
    பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
  • விளக்கம்
    முன் உணவு செரித்ததை அறிந்து, பின் உணவை அது செரிக்கும் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு செய்தால், உடம்பை நெடுங்காலம் போற்றி வாழலாம்.
  • Translation
    in English
    Who has a body gained may long the gift retain,
    If, food digested well, in measure due he eat again.
  • Meaning
    If (one’s food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.
0942. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு

0942. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு

0942. Marundhena Vendaavaam Yaakkaikku

  • குறள் #
    0942
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    மருந்து (Marundhu)
    Medicine
  • குறள்
    மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின்.
  • விளக்கம்
    ஒருவன் முன்வேளை உண்ணப்பட்டது சீரனித்த அளவை அறிந்து, பின் உண்பானாயின், அவனது உடம்புக்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
  • Translation
    in English
    No need of medicine to heal your body’s pain,
    If, what you ate before digested well, you eat again.
  • Meaning
    No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.
0941. மிகினும் குறையினும் நோய்செய்யும்

0941. மிகினும் குறையினும் நோய்செய்யும்

0941. Miginum Kuraiyinum Noiseiyum

  • குறள் #
    0941
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    மருந்து (Marundhu)
    Medicine
  • குறள்
    மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
    வளிமுதலா எண்ணிய மூன்று.
  • விளக்கம்
    மருத்துவ நூல் வல்லார் வாதம் முதலாக (வாதம், பித்தம், கபம்) வகுத்துச் சொல்லும் மூன்றும் உடம்புக்கு ஏற்ற அளவில் இல்லாமல் மிகுமானாலும் குறையுமானாலும் நோயை உண்டாக்கும்.
  • Translation
    in English
    The learned books count three, with wind as first; of these,
    As any one prevail, or fail; ’twill cause disease.
  • Meaning
    If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.
0940. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல்

0940. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல்

0940. Izhaththorooum Kaathalikkum Soothepol

  • குறள் #
    0940
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    சூது (Soothu)
    Gaming (Gambling)
  • குறள்
    இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
    உழத்தொறூஉம் காதற்று உயிர்.
  • விளக்கம்
    பொருளை இழக்குந்தோறும் மேன்மேலும் விருப்பந்தரும் சூதைப்போல், உயிர், உடம்பால் துன்பங்களை அனுபவிக்குந் தோறும் உடம்பின் மீது ஆசையை உடையதாகும்.
  • Translation
    in English
    Howe’er he lose, the gambler’s heart is ever in the play;
    E’en so the soul, despite its griefs, would live on earth alway.
  • Meaning
    As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.
0939. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று

0939. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று

0939. Udaiselvam Oonoli Kalviendru

  • குறள் #
    0939
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    சூது (Soothu)
    Gaming (Gambling)
  • குறள்
    உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
    அடையாவாம் ஆயங் கொளின்.
  • விளக்கம்
    ஒருவன் சூதினைக் கொண்டால் புகழ், கல்வி, பொருள், உணவு, உடை என்னும் ஐந்தும் அவனைச் சேராதனவாகும்.
  • Translation
    in English
    Clothes, wealth, food, praise, and learning, all depart
    From him on gambler’s gain who sets his heart.
  • Meaning
    The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning.
0938. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ

0938. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ

0938. Porulkeduththup Poimer Koliee

  • குறள் #
    0938
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    சூது (Soothu)
    Gaming (Gambling)
  • குறள்
    பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
    அல்லல் உழப்பிக்கும் சூது.
  • விளக்கம்
    சூதானது பொருளை அழித்து, பொய்யை மேற்கொள்ளச் செய்து, இறக்கக் குணத்தைக் கெடுத்துத் துன்பத்தை அடைவிக்கும்.
  • Translation
    in English
    Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away
    All grace, and leaves the man to utter misery a prey.
  • Meaning
    Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).
0937. பழகிய செல்வமும் பண்பும்

0937. பழகிய செல்வமும் பண்பும்

0937. Pazhagiya Selvamum Panbum

  • குறள் #
    0937
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    சூது (Soothu)
    Gaming (Gambling)
  • குறள்
    பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
    கழகத்துக் காலை புகின்.
  • விளக்கம்
    இளமையில் சூதாடும் இடத்தில் காலம் கழியுமானால், அது பழமையால் வந்த செல்வத்தையும் நற்குணங்களையும் கெடுக்கும்.
  • Translation
    in English
    Ancestral wealth and noble fame to ruin haste,
    If men in gambler’s halls their precious moments waste.
  • Meaning
    To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character.
0936. அகடாரார் அல்லல் உழப்பர்சூ

0936. அகடாரார் அல்லல் உழப்பர்சூ

0936. Agadaaraar Allal Uzhapparsoo

  • குறள் #
    0936
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    சூது (Soothu)
    Gaming (Gambling)
  • குறள்
    அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
    முகடியான் மூடப்பட் டார்.
  • விளக்கம்
    சூது என்று சொல்லப்படும் மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர், வயிறு நிறைய உண்ணப் பெற மாட்டார்; துன்பத்தை அனுபவிப்பர்.
  • Translation
    in English
    Gambling’s Misfortune’s other name: o’er whom she casts her veil,
    They suffer grievous want, and sorrows sore bewail.
  • Meaning
    Those who are swallowed by the goddess called “gambling” will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world.
0935. கவறும் கழகமும் கையும்

0935. கவறும் கழகமும் கையும்

0935. Kavarum Kazhakamum Kaiyum

  • குறள் #
    0935
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    சூது (Soothu)
    Gaming (Gambling)
  • குறள்
    கவறும் கழகமும் கையும் தருக்கி
    இவறியார் இல்லாகி யார்.
  • விளக்கம்
    சூதாடும் காய்களையும் அது நடைபெறும் இடத்தையும், ஆடும் கைத்திறமையையும் மேற்கொண்டு அதனைக் கைவிடாதவர் திண்ணமாக வறியவராவார்.
  • Translation
    in English
    The dice, and gaming-hall, and gamester’s art, they eager sought,
    Thirsting for gain- the men in other days who came to nought.
  • Meaning
    Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling place and the handling (of dice).
0934. சிறுமை பலசெய்து சீரழிக்கும்

0934. சிறுமை பலசெய்து சீரழிக்கும்

0934. Sirumai Palaseithu Seerazhikkum

  • குறள் #
    0934
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    சூது (Soothu)
    Gaming (Gambling)
  • குறள்
    சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
    வறுமை தருவதொன்று இல்.
  • விளக்கம்
    தன்னை விரும்பியவனுக்குத் துன்பங்கள் பலவற்றையும் உண்டாக்கிப் புகழையும் கெடுக்கும் சூதுபோல் வறுமையைக் கொடுப்பது வேறொன்றில்லை.
  • Translation
    in English
    Gaming brings many woes, and ruins fair renown;
    Nothing to want brings men so surely down.
  • Meaning
    There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one’s) reputation.
0933. உருளாயம் ஓவாது கூறின்

0933. உருளாயம் ஓவாது கூறின்

0933. Urulaayam Ovaathu Koorin

  • குறள் #
    0933
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    சூது (Soothu)
    Gaming (Gambling)
  • குறள்
    உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
    போஒய்ப் புறமே படும்.
  • விளக்கம்
    இலாபத்தை இடைவிடாது சொல்லிச் சூதடுவானாயின், அவனது பொருளும் வருவாயும் அவனை விட்டுச் சென்று, பகைவரிடம் தங்கும்.
  • Translation
    in English
    If prince unceasing speak of nought but play,
    Treasure and revenue will pass from him away.
  • Meaning
    If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other’s hands.
0932. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும்

0932. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும்

0932. Ondreithi Noorizhakkum Sootharkkum

  • குறள் #
    0932
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    சூது (Soothu)
    Gaming (Gambling)
  • குறள்
    ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
    நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
  • விளக்கம்
    ஒன்றைப் பெற்று, நூற்றை இழக்கச் செய்யும் சூதாடுவோருக்கு, நன்மையைப் பெற்று வாழ்வதற்கு ஒரு வழி உண்டாகுமோ?
  • Translation
    in English
    Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way
    That they may good obtain, and see a prosperous day?
  • Meaning
    Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ?
0931. வேண்டற்க வென்றிடினும் சூதினை

0931. வேண்டற்க வென்றிடினும் சூதினை

0931. Vendarka Vendridinum Soothinai

  • குறள் #
    0931
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    சூது (Soothu)
    Gaming (Gambling)
  • குறள்
    வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
    தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
  • விளக்கம்
    ஒருவன் வெற்றி தருமாயினும் சூதை விரும்புதல் கூடாது. சூதில் வெற்றியாகக் கிடைத்த பொருளும், தூண்டிலிரும்பை இரையெனக் கருதி மீன் விழுங்குவது போலாகும்.
  • Translation
    in English
    Seek not the gamester’s play; though you should win,
    Your gain is as the baited hook the fish takes in.
  • Meaning
    Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook.
0930. கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக்

0930. கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக்

0930. Kallunnaap Pozhthir Kaliththaanaik

  • குறள் #
    0930
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கள்ளுண்ணாமை (Kallunnaamai)
    Not Drinking Palm-Wine
  • குறள்
    கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
    உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
  • விளக்கம்
    ஒருவன் கள்ளுண்ணாத காலத்தில், கள் உண்டவனது சோர்வைக் காணும்போது, தனக்கும் இத்தகைய சோர்வுதானே உண்டாகும் என்று அவன் நினைக்க மாட்டானோ?
  • Translation
    in English
    When one, in sober interval, a drunken man espies,
    Does he not think, ‘Such is my folly in my revelries’?
  • Meaning
    When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.
0929. களித்தானைக் காரணம் காட்டுதல்

0929. களித்தானைக் காரணம் காட்டுதல்

0929. Kaliththaanaik Kaaranam Kaattuthal

  • குறள் #
    0929
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கள்ளுண்ணாமை (Kallunnaamai)
    Not Drinking Palm-Wine
  • குறள்
    களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
    குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
  • விளக்கம்
    கள் குடித்துக் களித்த ஒருவனைக் காரணம் காட்டித் தெளிவித்தல் நீருக்குள்ளே மூழ்கிய ஒருவனை விளக்கினால் தேடுதலை ஒக்கும்.
  • Translation
    in English
    Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave.
    Is he who strives to sober drunken man with reasonings grave.
  • Meaning
    Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.
0928. களித்தறியேன் என்பது கைவிடுக

0928. களித்தறியேன் என்பது கைவிடுக

0928. Kaliththariyen Enbathu Kaividuga

  • குறள் #
    0928
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கள்ளுண்ணாமை (Kallunnaamai)
    Not Drinking Palm-Wine
  • குறள்
    களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
    ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
  • விளக்கம்
    மறைவில் கள்ளுண்டு ‘கள்ளுண்டறியேன்’ என்று சொல்வதைக் கைவிடுதல் வேண்டும். குடித்ததும் மனத்தில் ஒளித்து வைத்திருக்கும் குற்றம் வெளிப்பட்டு விடும்.
  • Translation
    in English
    No more in secret drink, and then deny thy hidden fraud;
    What in thy mind lies hid shall soon be known abroad.
  • Meaning
    Let (the drunkard) give up saying “I have never drunk”; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.
0927. உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர்

0927. உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர்

0927. Ullotri Ulloor Nagappaduvar

  • குறள் #
    0927
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கள்ளுண்ணாமை (Kallunnaamai)
    Not Drinking Palm-Wine
  • குறள்
    உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
    கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
  • விளக்கம்
    கள்ளை மறைவாகக் குடித்து அறிவு மயங்குபவர் உள்ளூரில் உள்ளவரால் அறிந்து எந்நாளும் சிரிக்கப் படுவர்.
  • Translation
    in English
    Who turn aside to drink, and droop their heavy eye,
    Shall be their townsmen’s jest, when they the fault espy.
  • Meaning
    Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.
0926. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்

0926. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்

0926. Thunchinaar Seththaarin Verallar

  • குறள் #
    0926
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கள்ளுண்ணாமை (Kallunnaamai)
    Not Drinking Palm-Wine
  • குறள்
    துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
    நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
  • விளக்கம்
    உறங்குகின்றவர் செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர். அங்ஙனமே கள்ளுண்பவர் அறிவு மயங்கியிருத்தலால் நஞ்சுண்பவரேயாவர்.
  • Translation
    in English
    Sleepers are as the dead, no otherwise they seem;
    Who drink intoxicating draughts, they poison quaff, we deem.
  • Meaning
    They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.
0925. கையறி யாமை உடைத்தே

0925. கையறி யாமை உடைத்தே

0925. Kaiyari Yaamai Udaiththe

  • குறள் #
    0925
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கள்ளுண்ணாமை (Kallunnaamai)
    Not Drinking Palm-Wine
  • குறள்
    கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
    மெய்யறி யாமை கொளல்.
  • விளக்கம்
    ஒருவன் விலைப் பொருளைக் கொடுத்து, தன் உடலைத் தான் அறியாத நிலையை மேற்கொள்வது, செய்வது இன்னது என்று அறியாத அறியாமை உடையதாகும்.
  • Translation
    in English
    With gift of goods who self-oblivion buys,
    Is ignorant of all that man should prize.
  • Meaning
    To give money and purchase unconsciousness is the result of one’s ignorance of (one’s own actions).
0924. நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்

0924. நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்

0924. Naanennum Nallaal Purankodukkum

  • குறள் #
    0924
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கள்ளுண்ணாமை (Kallunnaamai)
    Not Drinking Palm-Wine
  • குறள்
    நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
    பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
  • விளக்கம்
    யாவரும் இகழும்படியான கட்குடி என்னும் குற்றமுடையவரை, நாண் என்னும் உயர்ந்தவள் பார்ப்பதற்கு அஞ்சி, அவருக்கு எதிரே நிற்க மாட்டாள்.
  • Translation
    in English
    Shame, goodly maid, will turn her back for aye on them
    Who sin the drunkard’s grievous sin, that all condemn.
  • Meaning
    The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.
0923. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்

0923. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்

0923. Eendraal Mugaththeyum Innaathaal

  • குறள் #
    0923
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கள்ளுண்ணாமை (Kallunnaamai)
    Not Drinking Palm-Wine
  • குறள்
    ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
    சான்றோர் முகத்துக் களி.
  • விளக்கம்
    யாது செய்தாலும் மகிழும் தாய் முன்பானாலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பந்தருவதாகும்; குற்றம் எதையும் பொறுக்காத அறிவுடையோர் முன்பு மயங்குதல் மிக்க வெறுப்பைத் தரும்.
  • Translation
    in English
    The drunkard’s joy is sorrow to his mother’s eyes;
    What must it be in presence of the truly wise?
  • Meaning
    Intoxication is painful even in the presence of (one’s) mother; what will it not then be in that of the wise ?
0922. உண்ணற்க கள்ளை உணில்உண்க

0922. உண்ணற்க கள்ளை உணில்உண்க

0922. Unnarka Kallai Unilunga

  • குறள் #
    0922
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கள்ளுண்ணாமை (Kallunnaamai)
    Not Drinking Palm-Wine
  • குறள்
    உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
    எண்ணப் படவேண்டா தார்.
  • விளக்கம்
    கள்ளை உண்ணுதல் கூடாது; உண்ண வேண்டுமாயின் நல்லவரால் மதிக்கப்படுதலை விரும்பாதார் உண்ணுக.
  • Translation
    in English
    Drink not inebriating draught. Let him count well the cost.
    Who drinks, by drinking, all good men’s esteem is lost.
  • Meaning
    Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.
0921. உட்கப் படாஅர் ஒளியிழப்பர்

0921. உட்கப் படாஅர் ஒளியிழப்பர்

0921. Utkap Padaaar Oliyizhappar

  • குறள் #
    0921
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    கள்ளுண்ணாமை (Kallunnaamai)
    Not Drinking Palm-Wine
  • குறள்
    உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
    கட்காதல் கொண்டொழுகு வார்.
  • விளக்கம்
    கள்ளின் மீது ஆசை கொண்டு நடப்பவர், எப்பொழுதும் அச்சப்பட மாட்டார். அதோடன்றி, முன் பெற்றுள்ள புகழையும் இழப்பார்.
  • Translation
    in English
    Who love the palm’s intoxicating juice, each day,
    No rev’rence they command, their glory fades away.
  • Meaning
    Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).
0920. இருமனப் பெண்டிரும் கள்ளும்

0920. இருமனப் பெண்டிரும் கள்ளும்

0920. Irumanap Pendirum Kallum

  • குறள் #
    0920
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    வரைவின் மகளிர் (Varaivin Magalir)
    Wanton Women
  • குறள்
    இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
    திருநீக்கப் பட்டார் தொடர்பு.
  • விளக்கம்
    இருமனமுடைய விலைமாதரும், கள்ளும், சூதும் ஆகிய மூன்றும், திருமகளால் விலக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளுதற்கு உரியவையாகும்.
  • Translation
    in English
    Women of double minds, strong drink, and dice; to these giv’n o’er,
    Are those on whom the light of Fortune shines no more.
  • Meaning
    Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.
0919. வரைவிலா மாணிழையார் மென்தோள்

0919. வரைவிலா மாணிழையார் மென்தோள்

0919. Varaivilaa Maanizhaiyaar Menkol

  • குறள் #
    0919
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    வரைவின் மகளிர் (Varaivin Magalir)
    Wanton Women
  • குறள்
    வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
    பூரியர்கள் ஆழும் அளறு.
  • விளக்கம்
    கட்டுப்பாடில்லாத, அழகிய அணிகள் அணிந்த பொது மகளிரின் மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் அழுந்தும் நரகமாகும்.
  • Translation
    in English
    The wanton’s tender arm, with gleaming jewels decked,
    Is hell, where sink degraded souls of men abject.
  • Meaning
    The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base.
0918. ஆயும் அறிவினர் அல்லார்க்கு

0918. ஆயும் அறிவினர் அல்லார்க்கு

0918. Aayam Arivinar Allaarkku

  • குறள் #
    0918
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    வரைவின் மகளிர் (Varaivin Magalir)
    Wanton Women
  • குறள்
    ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
    மாய மகளிர் முயக்கு.
  • விளக்கம்
    வஞ்சகமகளிரது சேர்க்கை, ஆராய்ந்து அறிந்து விலகும் அறிவில்லாதவர்களுக்குப் பேய் பிடித்தது போலாகும் என்று கூறுவர்.
  • Translation
    in English
    As demoness who lures to ruin woman’s treacherous love
    To men devoid of wisdom’s searching power will prove.
  • Meaning
    The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female.
0917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார்

0917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார்

0917. Nirainenjam Illavar Thoivaar

  • குறள் #
    0917
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    வரைவின் மகளிர் (Varaivin Magalir)
    Wanton Women
  • குறள்
    நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
    பேணிப் புணர்பவர் தோள்.
  • விளக்கம்
    மனத்திலே பிறவற்றை விரும்பி, உடம்பினால் சேர்கின்ற மகளிரது தோள்களைச் செம்மையான மனம் இல்லாதவர்களே சேர்வர்.
  • Translation
    in English
    Who cherish alien thoughts while folding in their feigned embrace,
    These none approach save those devoid of virtue’s grace.
  • Meaning
    Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.
0916. தந்நலம் பாரிப்பார் தோயார்

0916. தந்நலம் பாரிப்பார் தோயார்

0916. Thannalam Paarippaar Thoyaar

  • குறள் #
    0916
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    வரைவின் மகளிர் (Varaivin Magalir)
    Wanton Women
  • குறள்
    தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
    புன்னலம் பாரிப்பார் தோள்.
  • விளக்கம்
    ஆடல், பாடல், அழகு என்பவைகளால் களித்துத் தமது இழிவான இன்பத்தைப் பரப்புகின்ற மகளிரின் தோள்களை, தமது புகழைப் பரப்ப நினைப்பவர் சேரமாட்டார்.
  • Translation
    in English
    From touch of those who worthless charms, with wanton arts, display,
    The men who would their own true good maintain will turn away.
  • Meaning
    Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those,who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).
0915. பொதுநலத்தார் புன்னலம் தோயார்

0915. பொதுநலத்தார் புன்னலம் தோயார்

0915. Pothunalaththaar Punnalam Thoyaar

  • குறள் #
    0915
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    வரைவின் மகளிர் (Varaivin Magalir)
    Wanton Women
  • குறள்
    பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
    மாண்ட அறிவி னவர்.
  • விளக்கம்
    அறிவின் சிறப்பினால் பெருமையடைந்த அறிவினையுடையவர், எல்லார் தம் பொதுவாக இன்பம் தருவாரது இழிந்த இன்பத்தைத் தீண்டமாட்டார்.
  • Translation
    in English
    From contact with their worthless charms, whose charms to all are free,
    The men with sense of good and lofty wisdom blest will flee.
  • Meaning
    Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights of those whose favours are common (to all).
0914. பொருட்பொருளார் புன்னலந் தோயார்

0914. பொருட்பொருளார் புன்னலந் தோயார்

0914. Porutporulaar Punnaland Thoyaar

  • குறள் #
    0914
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    வரைவின் மகளிர் (Varaivin Magalir)
    Wanton Women
  • குறள்
    பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
    ஆயும் அறிவி னவர்.
  • விளக்கம்
    அருளாகிய பொருளை ஆராயும் அறிவினையுடையவர், செல்வப்பொருள் ஒன்றையே பொருளாக மதிக்கும் விலை மகளிரின் இழிந்த இன்பத்தில் படிய மாட்டார்.
  • Translation
    in English
    Their worthless charms, whose only weal is wealth of gain,
    From touch of these the wise, who seek the wealth of grace, abstain.
  • Meaning
    The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.
0913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்

0913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்

0913. Porutpendir Poimmai Muyakkam

  • குறள் #
    0913
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    வரைவின் மகளிர் (Varaivin Magalir)
    Wanton Women
  • குறள்
    பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
    ஏத஧ல் பிணந்தழீஇ அற்று.
  • விளக்கம்
    பொருளையே விரும்பும் விலைமகளின் பொய்யான தழுவுதல், பிணம் எடுப்பவர் பொருளுக்காக முன் அறியாத பிணத்தை இருட்டறையில் தழுவி எடுத்தது போலாகும்.
  • Translation
    in English
    As one in darkened room, some stranger corpse inarms,
    Is he who seeks delight in mercenary women’s charms!
  • Meaning
    The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.
0912. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின்

0912. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின்

0912. Payanthookkip Panburaikkum Panbin

  • குறள் #
    0912
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    வரைவின் மகளிர் (Varaivin Magalir)
    Wanton Women
  • குறள்
    பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
    நயன்தூக்கி நள்ளா விடல்.
  • விளக்கம்
    ஒருவனது பொருளை அளந்தறிந்து, அதனைப் பெற இனிய சொற்கள் பேசும் பண்பற்ற பெண்களின் தன்மைகளை ஆராய்ந்தறிந்து, அவர்களைச் சேராதிருக்க வேண்டும்.
  • Translation
    in English
    Who weigh the gain, and utter virtuous words with vicious heart,
    Weighing such women’s worth, from their society depart.
  • Meaning
    One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).
0911. அன்பின் விழையார் பொருள்விழையும்

0911. அன்பின் விழையார் பொருள்விழையும்

0911. Anbin Vizhaiyaar Porulvizhaiyum

  • குறள் #
    0911
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    வரைவின் மகளிர் (Varaivin Magalir)
    Wanton Women
  • குறள்
    அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
    இன்சொல் இழுக்குத் தரும்.
  • விளக்கம்
    ஒருவனை அன்பினால் விரும்பாமல், பொருள் காரணமாக விரும்புகின்ற பெண்களின் இனிய சொற்கள் தீமையைக் கொடுக்கும்.
  • Translation
    in English
    Those that choice armlets wear who seek not thee with love,
    But seek thy wealth, their pleasant words will ruin prove.
  • Meaning
    The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.
0910. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு

0910. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு

0910. Enserndha Nenjath Thidanudaiyaarkku

  • குறள் #
    0910
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
    Being Led by Women
  • குறள்
    எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
    பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
  • விளக்கம்
    ஆலோசனை செய்யும் மனமும், செல்வமும் உடையவர்க்கு, மனைவியின் விருப்பபடியே நடக்கும் அறியாமை எக்காலத்திலும் உண்டாதல் இல்லை.
  • Translation
    in English
    Where pleasures of the mind, that dwell in realms of thought, abound,
    Folly, that springs from overweening woman’s love, is never found.
  • Meaning
    The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.
0909. அறவினையும் ஆன்ற பொருளும்

0909. அறவினையும் ஆன்ற பொருளும்

0909. Aravinaiyum Aandra Porulum

  • குறள் #
    0909
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
    Being Led by Women
  • குறள்
    அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
    பெண்ஏவல் செய்வார்கண் இல்.
  • விளக்கம்
    அறச்செயலும், சிறந்த போருளீட்டலும், இவையிரண்டின் வேறாகிய இன்பச் செயல்களும், மனைவியின் ஏவல்களைச் செய்பவனிடத்தில் உண்டாகா.
  • Translation
    in English
    No virtuous deed, no seemly wealth, no pleasure, rests
    With them who live obedient to their wives’ behests.
  • Meaning
    From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure.
0908. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார்

0908. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார்

0908. Nattaar Kuraimudiyaar Nandraatraar

  • குறள் #
    0908
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
    Being Led by Women
  • குறள்
    நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
    பெட்டாங்கு ஒழுகு பவர்.
  • விளக்கம்
    நல்ல நெற்றியையுடைய மனைவியின் விருப்பப்படி நடப்பவன், நண்பரது குறைகளையும் நீக்கமாட்டான்; நல்ல அறத்தையும் செய்ய மாட்டான்.
  • Translation
    in English
    Who to the will of her with beauteous brow their lives conform,
    Aid not their friends in need, nor acts of charity perform.
  • Meaning
    Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.
0907. பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின்

0907. பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின்

0907. Penneval Seithozhugum Aanmaiyin

  • குறள் #
    0907
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
    Being Led by Women
  • குறள்
    பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
    பெண்ணே பெருமை உடைத்து.
  • விளக்கம்
    மனைவி ஏவியதைச் செய்து திரிகின்றவரின் ஆண்மையைவிட, நாணமுடைய பெண் தன்மையே மேன்மை உடையது.
  • Translation
    in English
    The dignity of modest womanhood excels
    His manliness, obedient to a woman’s law who dwells.
  • Meaning
    Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.
0906. இமையாரின் வாழினும் பாடிலரே

0906. இமையாரின் வாழினும் பாடிலரே

0906. Imaiyaarin Vaazhinum Paadinare

  • குறள் #
    0906
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
    Being Led by Women
  • குறள்
    இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
    அமையார்தோள் அஞ்சு பவர்.
  • விளக்கம்
    மனைவியின் மூங்கில் போன்ற தோள்மீது உள்ள மயக்கத்தால் அவளுக்கு அஞ்சுகின்றவன், தேவரைப் போல் வாழ்பவனாயினும் பெருமை கொள்ள மாட்டான்.
  • Translation
    in English
    Though, like the demi-gods, in bliss they dwell secure from harm,
    Those have no dignity who fear the housewife’s slender arm.
  • Meaning
    They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.
0905. இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்

0905. இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்

0905. Illaalai Anjuvaan Anjumat

  • குறள் #
    0905
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
    Being Led by Women
  • குறள்
    இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
    நல்லார்க்கு நல்ல செயல்.
  • விளக்கம்
    மனைவிக்கு அஞ்சுகின்றவன் நல்லவர்க்கு நல்ல செயல்களைச் செய்ய எப்பொழுதும் அச்ச்சப்படுவான்.
  • Translation
    in English
    Who quakes before his wife will ever tremble too,
    Good deeds to men of good deserts to do.
  • Meaning
    He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.
0904. மனையாளை அஞ்சும் மறுமையி

0904. மனையாளை அஞ்சும் மறுமையி

0904. Manaiyaalai Anjum Marumaiyi

  • குறள் #
    0904
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
    Being Led by Women
  • குறள்
    மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
    வினையாண்மை வீறெய்த லின்று.
  • விளக்கம்
    மனைவியை அஞ்சி ஒழுகும் மறுமைப்பயன் இல்லாதவனுடைய முயற்சித் திறமையை அறிவுடையோர் பாராட்டுவதில்லை.
  • Translation
    in English
    No glory crowns e’en manly actions wrought
    By him who dreads his wife, nor gives the other world a thought.
  • Meaning
    The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.
0903. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை

0903. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை

0903. Illaalkan Thaazhndha Iyalbinmai

  • குறள் #
    0903
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
    Being Led by Women
  • குறள்
    இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
    நல்லாருள் நாணுத் தரும்.
  • விளக்கம்
    ஒருவன் மனைவியிடத்து வணங்கி நடத்தற்க்குக் காரணமான அச்சமானது, நல்லவர் நடுவே செல்லுவதற்கு நாணத்தைக் கொடுக்கும்.
  • Translation
    in English
    Who to his wife submits, his strange, unmanly mood
    Will daily bring him shame among the good.
  • Meaning
    The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.
0902. பேணாது பெண்விழைவான் ஆக்கம்

0902. பேணாது பெண்விழைவான் ஆக்கம்

0902. Manaivizhaivaar Maanpayan Yeithaar

  • குறள் #
    0902
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
    Being Led by Women
  • குறள்
    பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
    நாணாக நாணுத் தரும்.
  • விளக்கம்
    தன் ஆண்மையைப் பாதுகாவாது பெண்மீது ஆசை வைப்பவனது செல்வம், எல்லார்க்கும் பெரிய வெட்கம் உண்டாக, பின் அவனையே நாணும்படி செய்யும்.
  • Translation
    in English
    Who gives himself to love of wife, careless of noble name
    His wealth will clothe him with o’erwhelming shame.
  • Meaning
    The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife’s feminine nature will cause great shame (to ali men) and to himself;
0901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார்

0901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார்

0901. Manaivizhaivaar Maanpayan Yeithaar

  • குறள் #
    0901
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
    Being Led by Women
  • குறள்
    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
    வேண்டாப் பொருளும் அது.
  • விளக்கம்
    தன் மனைவியை விரும்பி, அவள் சொற்படி நடப்பவன் சிறந்த அறப்பயனை அடையமாட்டான். முயற்சி செய்பவர், அதற்குத் தடை என்று விரும்பாத பொருளும் அதுவே.
  • Translation
    in English
    Who give their soul to love of wife acquire not nobler gain;
    Who give their soul to strenuous deeds such meaner joys disdain.
  • Meaning
    Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.
0900. இறந்தமைந்த சார்புடையர் ஆயினும்

0900. இறந்தமைந்த சார்புடையர் ஆயினும்

0900. Irandhamaindha Saarbudaiyar Aayinum

  • குறள் #
    0900
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
    Not Offending the Great
  • குறள்
    இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
    சிறந்தமைந்த சீரார் செறின்.
  • விளக்கம்
    மிகச்சிறந்த தவமுடைய பெரியோர் சினந்தால் மிகப்பெரிய துணியை உடையவரும் பிழைக்க மாட்டார்.
  • Translation
    in English
    Though all-surpassing wealth of aid the boast,
    If men in glorious virtue great are wrath, they’re lost.
  • Meaning
    Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless.
0899. ஏந்திய கொள்கையார் சீறின்

0899. ஏந்திய கொள்கையார் சீறின்

0899. Yendhiya Kolgaiyaar Seerin

  • குறள் #
    0899
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
    Not Offending the Great
  • குறள்
    ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
    வேந்தனும் வேந்து கெடும்.
  • விளக்கம்
    உயர்ந்த கொள்கையுடையோர் சினந்தால், அரசனும் தனது இடைக்காலத்திலேயே அரசநிலை கெட்டு அழிந்துவிடுவான்.
  • Translation
    in English
    When blazes forth the wrath of men of lofty fame,
    Kings even fall from high estate and perish in the flame.
  • Meaning
    If those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.
0898. குன்றன்னார் குன்ற மதிப்பின்

0898. குன்றன்னார் குன்ற மதிப்பின்

0898. Kundrannaar Kundra Mathippin

  • குறள் #
    0898
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
    Not Offending the Great
  • குறள்
    குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
    நின்றன்னார் மாய்வர் நிலத்து.
  • விளக்கம்
    மலைபோன்ற பெருமையுடையவர், ஒருவனை அழிந்துபோக வேண்டும் என்று எண்ணினால், அவன் இவ்வுலகில் நிலை பெற்ற செல்வமுடையவனாயினும் தன் குடும்பத்தோடு அழிந்து விடுவான்.
  • Translation
    in English
    If they, whose virtues like a mountain rise, are light esteemed;
    They die from earth who, with their households, ever-during seemed.
  • Meaning
    If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.
0897. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும்

0897. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும்

0897. Vagaimaanda Vaazhkkaiyum Vaanporulum

  • குறள் #
    0897
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
    Not Offending the Great
  • குறள்
    வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
    தகைமாண்ட தக்கார் செறின்.
  • விளக்கம்
    தவப்பெருமை மிக்க பெரியோர் கோபித்தால், எல்லா வகையாலும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும், மிக்க பொருளும் என்ன பயனுடையனவாகும்?
  • Translation
    in English
    Though every royal gift, and stores of wealth your life should crown,
    What are they, if the worthy men of mighty virtue frown?
  • Meaning
    If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?
0896. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்

0896. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்

0896. Eriyaal Sudappadinum Uyvundaam

  • குறள் #
    0896
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
    Not Offending the Great
  • குறள்
    எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
    பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
  • விளக்கம்
    ஒருவன் தீயினால் சுடப்பட்டானாயினும் ஒருவாறு பிழைப்பான்; ஆனால், தவத்தால் பெரியவர்க்குப் பிழை செய்பவர் பிழைக்க மாட்டார்.
  • Translation
    in English
    Though in the conflagration caught, he may escape from thence:
    He ‘scapes not who in life to great ones gives offence.
  • Meaning
    Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).
0895. யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்

0895. யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்

0895. Yaanduchchendru Yaandum Ularaagaar

  • குறள் #
    0895
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
    Not Offending the Great
  • குறள்
    யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
    வேந்து செறப்பட் டவர்.
  • விளக்கம்
    கொடிய வலிய அரசனின் பகைக்கு உள்ளானவர், எங்கே சென்றாலும் எவ்விடத்தும் பிழைத்திருக்க முடியாது.
  • Translation
    in English
    Who dare the fiery wrath of monarchs dread,
    Where’er they flee, are numbered with the dead.
  • Meaning
    Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.
0894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்

0894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்

0894. Kootraththaik Kaiyaal Viliththatraal

  • குறள் #
    0894
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
    Not Offending the Great
  • குறள்
    கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
    ஆற்றாதார் இன்னா செயல்.
  • விளக்கம்
    வலிமையுடையவருக்கு வலிமையில்லாதவர் தீங்கு செய்தல், தானே வரும் கூற்றுவனை அவன் வருவதற்கு முன்னே கைகாட்டி அழைப்பது போன்றதாகும்.
  • Translation
    in English
    When powerless man ‘gainst men of power will evil deeds essay,
    Tis beck’ning with the hand for Death to seize them for its prey.
  • Meaning
    The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).
0893. கெடல்வேண்டின் கேளாது செய்க

0893. கெடல்வேண்டின் கேளாது செய்க

0893. Kedalvendin Kelaathu Seiga

  • குறள் #
    0893
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
    Not Offending the Great
  • குறள்
    கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
    ஆற்று பவர்கண் இழுக்கு.
  • விளக்கம்
    ஒருவன், தான் கெட்டுப்போக விரும்பினால் பெரியாரைக் கேளாமலே ஒரு செயலைச் செய்க. தன்னைக் கொன்றுகொள்ள விரும்பினால் வலிமையுடையவருக்குக் குற்றம் செய்ய வேண்டும்.
  • Translation
    in English
    Who ruin covet let them shut their ears, and do despite
    To those who, where they list to ruin have the might.
  • Meaning
    If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns).
0892. பெரியாரைப் பேணாது ஒழுகிற்

0892. பெரியாரைப் பேணாது ஒழுகிற்

0892. Periyaaraip Penaathu Ozhugir

  • குறள் #
    0892
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
    Not Offending the Great
  • குறள்
    பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
    பேரா இடும்பை தரும்.
  • விளக்கம்
    ஆற்றல் மிக்க பெரியாரை மதியாமல் நடந்தால், அப்பெரியவரால் நீங்காத துன்பம் உண்டாகும்.
  • Translation
    in English
    If men will lead their lives reckless of great men’s will,
    Such life, through great men’s powers, will bring perpetual ill.
  • Meaning
    To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.
0891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை

0891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை

0891. Aatruvaar Aatral Igazhaamai

  • குறள் #
    0891
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
    Not Offending the Great
  • குறள்
    ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
    போற்றலுள் எல்லாம் தலை.
  • விளக்கம்
    எடுத்த செயலை முடிக்கும் வல்லமையுடையவரின் வல்லமையை இகழாதிருத்தல், தம்மைக் காப்பவர் செய்துகொள்ளும் காவல்களுக்கெல்லாம் மேலானது.
  • Translation
    in English
    The chiefest care of those who guard themselves from ill,
    Is not to slight the powers of those who work their mighty will.
  • Meaning
    Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).
0890. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை

0890. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை

0890. Udambaadu Ilaathavar Vaazhkkai

  • குறள் #
    0890
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    உட்பகை (Utpagai)
    Enmity Within
  • குறள்
    உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
    பாம்போடு உடனுறைந் தற்று.
  • விளக்கம்
    மனப்பொருத்தம் இல்லாதவரோடு ஒருவன் கூடி வாழ்வது, ஒரு குடிசையுள் ஒருவன் பாம்போடு வாழ்வது போலாகும்.
  • Translation
    in English
    Domestic life with those who don’t agree,
    Is dwelling in a shed with snake for company.
  • Meaning
    Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.
0889. எட்பக வன்ன சிறுமைத்தே

0889. எட்பக வன்ன சிறுமைத்தே

0889. Etpaga Vanna Sirumaiththe

  • குறள் #
    0889
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    உட்பகை (Utpagai)
    Enmity Within
  • குறள்
    எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
    உட்பகை உள்ளதாங் கேடு.
  • விளக்கம்
    எள்ளின் பிளவைப் போன்ற சிறுமை உடையதாயினும், உட்பகை கேடு உள்ளதாகும்.
  • Translation
    in English
    Though slight as shred of ‘seasame’ seed it be,
    Destruction lurks in hidden enmity.
  • Meaning
    Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.
0888. அரம்பொருத பொன்போலத் தேயும்

0888. அரம்பொருத பொன்போலத் தேயும்

0888. Aramporutha Ponpolath Theyum

  • குறள் #
    0888
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    உட்பகை (Utpagai)
    Enmity Within
  • குறள்
    அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
    உட்பகை உற்ற குடி.
  • விளக்கம்
    அரம் இரும்பினைத் தேய்த்துக் குறைப்பதுபோல, உட்பகை கொண்ட குடியும் அப்பகையால் தேய்வுண்டு வலிமை குறையும்.
  • Translation
    in English
    As gold with which the file contends is worn away,
    So strength of house declines where hate concealed hath sway.
  • Meaning
    A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.
0887. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும்

0887. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும்

0887. Seppin Punarchchipol Koodinum

  • குறள் #
    0887
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    உட்பகை (Utpagai)
    Enmity Within
  • குறள்
    செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
    உட்பகை உற்ற குடி.
  • விளக்கம்
    செப்பும் அதன் மூடியும் காண்பதற்கு ஒன்றுபட்டிருப்பது போல் தோன்றினும் வேறுபட்டிருப்பது போல் உட்பகை கொண்டவர்களும் உள்ளத்தால் கூடியிருக்க மாட்டார்; பிரிந்தே இருப்பார்.
  • Translation
    in English
    As casket with its cover, though in one they live alway,
    No union to the house where hate concealed hath sway.
  • Meaning
    Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.
0886. ஒன்றாமை ஒன்றியார் கட்படின்

0886. ஒன்றாமை ஒன்றியார் கட்படின்

0886. Ondraamai Ondriyaar Katpadin

  • குறள் #
    0886
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    உட்பகை (Utpagai)
    Enmity Within
  • குறள்
    ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
    பொன்றாமை ஒன்றல் அரிது.
  • விளக்கம்
    அரசனைச் சேர்ந்திருப்பவரிடத்தில் உட்பகை தோன்றினால், இறவாது நிலைபெறுதல் எப்பொழுதும் அரிதாகும்.
  • Translation
    in English
    If discord finds a place midst those who dwelt at one before,
    ‘Tis ever hard to keep destruction from the door.
  • Meaning
    If hatred arises among (one’s) own people, it will be hardly possible (for one) to escape death.
0885. உறல்முறையான் உட்பகை தோன்றின்

0885. உறல்முறையான் உட்பகை தோன்றின்

0885. Uralmuraiyaan Utpagai Thondrin

  • குறள் #
    0885
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    உட்பகை (Utpagai)
    Enmity Within
  • குறள்
    உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
    ஏதம் பலவும் தரும்.
  • விளக்கம்
    அரசனுக்கு உறவின் முறையுடன் உட்பகை உண்டானால், அஃது இறந்துபோகுந் தன்மையுடைய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
  • Translation
    in English
    Amid one’s relatives if hidden hath arise,
    ‘Twill hurt inflict in deadly wise.
  • Meaning
    If there appears internal hatred in a (king’s) family; it will lead to many a fatal crime.
0884. மனமாணா உட்பகை தோன்றின்

0884. மனமாணா உட்பகை தோன்றின்

0884. Manamaanaa Utpagai Thondrin

  • குறள் #
    0884
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    உட்பகை (Utpagai)
    Enmity Within
  • குறள்
    மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
    ஏதம் பலவும் தரும்.
  • விளக்கம்
    மனம் திருந்தாத உட்பகைவர் உண்டானால், சுற்றத்தார் கலவாமைக்குக் காரணமான குற்றங்கள் பலவற்றையும் அவர் செய்வர்.
  • Translation
    in English
    If secret enmities arise that minds pervert,
    Then even kin unkind will work thee grievous hurt.
  • Meaning
    The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one’s) relations.
0883. உட்பகை அஞ்சித்தற் காக்க

0883. உட்பகை அஞ்சித்தற் காக்க

0883. Utpagai Anjiththar Kaakka

  • குறள் #
    0883
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    உட்பகை (Utpagai)
    Enmity Within
  • குறள்
    உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
    மட்பகையின் மாணத் தெறும்.
  • விளக்கம்
    உட்பகை கொண்டிருப்பவருக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு காத்துக் கொள்ளவில்லை யென்றால், அந்த உட்பகை மண்பாண்டத்தை அறுக்கும் கருவி போலத் தவறாமல் அழித்து விடும்.
  • Translation
    in English
    Of hidden hate beware, and guard thy life;
    In troublous time ’twill deeper wound than potter’s knife.
  • Meaning
    Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter’s clay.
0882. வாள்போல பகைவரை அஞ்சற்க

0882. வாள்போல பகைவரை அஞ்சற்க

0882. Vaalpola Pagaivarai Anjarka

  • குறள் #
    0882
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    உட்பகை (Utpagai)
    Enmity Within
  • குறள்
    வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
    கேள்போல் பகைவர் தொடர்பு.
  • விளக்கம்
    வாள் போல வெளிப்படையாய்த் துன்பம் செய்யும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; உறவினர் போன்று மறைந்து நிற்கும் பகைவர் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Dread not the foes that as drawn swords appear;
    Friendship of foes, who seem like kinsmen, fear!
  • Meaning
    Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.
0881. நிழல்நீரும் இன்னாத இன்னா

0881. நிழல்நீரும் இன்னாத இன்னா

0881. Nizhalneerum Innaatha Innaa

  • குறள் #
    0881
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    உட்பகை (Utpagai)
    Enmity Within
  • குறள்
    நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
    இன்னாவாம் இன்னா செயின்.
  • விளக்கம்
    இன்பந்தரும் நிழலும் நீரும் துன்பம் தருவனவாயின் தீயனவாகும்; அவை போன்றே சுற்றத்தாரின் இயல்புகளும் துன்பம் செய்யின் தீயவையாகும்.
  • Translation
    in English
    Water and shade, if they unwholesome prove, will bring you pain.
    And qualities of friends who treacherous act, will be your bane.
  • Meaning
    Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one’s) relations not agreeable, (if) they cause pain.