Tag: Virtue

0180. இறலீனும் எண்ணாது வெஃகின்

0180. இறலீனும் எண்ணாது வெஃகின்

0180. Iraleenum Ennaathu Vekkin

  • குறள் #
    0180
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    வெஃகாமை (Vekkaamai)
    Not Coveting
  • குறள்
    இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
    வேண்டாமை என்னுஞ் செருக்கு.
  • விளக்கம்
    பின் நிகழ்வதை நினைக்காமல் ஒருவன் பிறனுடைய பொருளை விரும்புவானானால், அதனால் அழிவு உண்டாகும்; பிறன் பொருள் வேண்டா என்று இருக்கும் வீரம் வெற்றியைக் கொடுக்கும்.
  • Translation
    in English
    From thoughtless lust of other’s goods springs fatal ill,
    Greatness of soul that covets not shall triumph still.
  • Meaning
    To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.
0179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச்

0179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச்

0179. Aranarindhu Vekkaa Arivudaiyaarch

  • குறள் #
    0179
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    வெஃகாமை (Vekkaamai)
    Not Coveting
  • குறள்
    அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
    திறன்அறிந் தாங்கே திரு.
  • விளக்கம்
    பிறர் பொருளை விரும்பாததே அறமென அறிந்து அதன்படி நடக்கும் அறிவுடையாரைத் திருமகள் தானே சென்றடைவாள்.
  • Translation
    in English
    Good fortune draws anigh in helpful time of need,
    To him who, schooled in virtue, guards his soul from greed.
  • Meaning
    Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.
0178. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்

0178. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்

0178. Akkaamai Selvaththirku Yaathenin

  • குறள் #
    0178
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    வெஃகாமை (Vekkaamai)
    Not Coveting
  • குறள்
    அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
    வேண்டும் பிறன்கைப் பொருள்.
  • விளக்கம்
    ஒருவனது செல்வம் குறையாமல் இருப்பதற்கு வழி என்ன வென்றால், அவன் பிறன் விரும்பி வைத்திருக்கின்ற கைப்பொருளைக் கவர ஆசைப்படாமையேயாகும்.
  • Translation
    in English
    What saves prosperity from swift decline?
    Absence of lust to make another’s cherished riches thine!
  • Meaning
    If it is weighed, “what is the indestructibility of wealth,” it is freedom from covetousness.
0177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம்

0177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம்

0177. Vendarka Vekkiyaam Aakkam

  • குறள் #
    0177
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    வெஃகாமை (Vekkaamai)
    Not Coveting
  • குறள்
    வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
    மாண்டற் கரிதாம் பயன்.
  • விளக்கம்
    பிறர் பொருளை விரும்புவதால் வரும் செல்வத்தை விரும்பக் கூடாது. அவ்வாறு விரும்பிப் பெறப்படும் செல்வத்தால் உண்டாகும் பயன் சிறப்பில்லாததாகும்.
  • Translation
    in English
    Seek not increase by greed of gain acquired;
    That fruit matured yields never good desired.
  • Meaning
    Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.
0176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்

0176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்

0176. Arulvekki Aatrinkan Nindraan

  • குறள் #
    0176
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    வெஃகாமை (Vekkaamai)
    Not Coveting
  • குறள்
    அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
    பொல்லாத சூழக் கெடும்.
  • விளக்கம்
    அருள் ஒழுக்கத்தில் நிற்பவன் பிறர் பொருள் மீது ஆசை கொண்டு அதனைக் கவரத் தீயவழிகளை நினைத்தால் கெட்டு விடுவான்.
  • Translation
    in English
    Though, grace desiring, he in virtue’s way stand strong,
    He’s lost who wealth desires, and ponders deeds of wrong.
  • Meaning
    If he, who through desire of the virtue of kindness abides in the domestic state i.e., the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish.
0175. அஃகி அகன்ற அறிவென்னாம்

0175. அஃகி அகன்ற அறிவென்னாம்

0175. Akki Agandra Arivennaam

  • குறள் #
    0175
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    வெஃகாமை (Vekkaamai)
    Not Coveting
  • குறள்
    அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
    வெஃகி வெறிய செயின்.
  • விளக்கம்
    கற்றவனொருவன் பொருளை விரும்பி, எவரிடத்தும் அறிவில்லாத செயல்களைச் செய்வானானால் அவன் நூல்களை நுணுகி ஆராய்ந்து பெற்ற அறிவினால் யாது பயன்?
  • Translation
    in English
    What gain, though lore refined of amplest reach he learn,
    His acts towards all mankind if covetous desire to folly turn?
  • Meaning
    What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?
0174. இலமென்று வெஃகுதல் செய்யார்

0174. இலமென்று வெஃகுதல் செய்யார்

0174. Ilamendru Vekkuthal Seiyaar

  • குறள் #
    0174
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    வெஃகாமை (Vekkaamai)
    Not Coveting
  • குறள்
    இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
    புன்மையில் காட்சி யவர்.
  • விளக்கம்
    ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவுடையோர், தாம் வறியவர் என நினைத்து, அதைத் தீர்க்கப் பிறர் பொருளை விரும்பார்.
  • Translation
    in English
    Men who have conquered sense, with sight from sordid vision freed,
    Desire not other’s goods, e’en in the hour of sorest need.
  • Meaning
    The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought “we are destitute.”
0173. சிற்றின்பம் வெஃகி அறனல்ல

0173. சிற்றின்பம் வெஃகி அறனல்ல

0173. Sitrinbam Vekki Aranalla

  • குறள் #
    0173
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    வெஃகாமை (Vekkaamai)
    Not Coveting
  • குறள்
    சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
    மற்றின்பம் வேண்டு பவர்.
  • விளக்கம்
    நிலையான இன்பத்தை விரும்புகின்றவர்கள், நிலையில்லாத இன்பத்தை விரும்பி அறமல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
  • Translation
    in English
    No deeds of ill, misled by base desire,
    Do they, whose souls to other joys aspire.
  • Meaning
    Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy (in this life.)
0172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ

0172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ

0172. Padupayan Vekkip Pazhippaduva

  • குறள் #
    0172
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    வெஃகாமை (Vekkaamai)
    Not Coveting
  • குறள்
    படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
    நடுவன்மை நாணு பவர்.
  • விளக்கம்
    நடுவுநிலைமை அல்லாமைக்கு அஞ்சுகின்றவர்கள், தமக்கு உண்டாகும் பயனை விரும்பி அறம் அல்லாத செயல்களைச் செய்யார்.
  • Translation
    in English
    Through lust of gain, no deeds that retribution bring,
    Do they, who shrink with shame from every unjust thing.
  • Meaning
    Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.
0171. நடுவின்றி நன்பொருள் வெஃகின்

0171. நடுவின்றி நன்பொருள் வெஃகின்

0171. Naduvindri Nanporul Vekkin

  • குறள் #
    0171
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    வெஃகாமை (Vekkaamai)
    Not Coveting
  • குறள்
    நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
    குற்றமும் ஆங்கே தரும்.
  • விளக்கம்
    ஒருவன் நடுவுநிலைமை இல்லாமல் பிறருடைய பொருளைக் கவர ஆசை கொண்டால், அந்த ஆசை அவனது குடியைக் கெடுத்துப் பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும்.
  • Translation
    in English
    With soul unjust to covet others’ well-earned store,
    Brings ruin to the home, to evil opes the door.
  • Meaning
    If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.
0170. அழுக்கற்று அகன்றாரும் இல்லை

0170. அழுக்கற்று அகன்றாரும் இல்லை

0170. Azhukkatru Agandraarum Illai

  • குறள் #
    0170
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
    பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
  • விளக்கம்
    பொறாமை கொண்டு பெருமை அடைந்தாருமிலர்; பொறாமை இல்லாதவர்களில் செல்வ வளர்ச்சியில் குறைபாடு அடைந்தாருமிலர்.
  • Translation
    in English
    No envious men to large and full felicity attain;
    No men from envy free have failed a sure increase to gain.
  • Meaning
    Never have the envious become great; never have those who are free from envy been without greatness.
0169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்

0169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்

0169. Avviya Nenjaththaan Aakkamum

  • குறள் #
    0169
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்.
  • விளக்கம்
    பொறாமையுடையவனிடத்தில் செல்வமும், நல்ல உள்ளமுடையவனிடத்தில் வறுமையும் வந்தால், அவை ஆராயத் தக்கவையாகும்.
  • Translation
    in English
    To men of envious heart, when comes increase of joy,
    Or loss to blameless men, the ‘why’ will thoughtful hearts employ.
  • Meaning
    The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.
0168. அழுக்காறு எனஒரு பாவி

0168. அழுக்காறு எனஒரு பாவி

0168. Azhukkaaru Enaoru Paavi

  • குறள் #
    0168
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்.
  • விளக்கம்
    பொறாமை என்று சொல்லப்பட்ட ஒப்பற்ற பாவி, தன்னை உடையவனை இம்மையில் வறியனாக்கிக் கெடுத்து, மறுமையில் நரகத்தில் செலுத்தி விடும்.
  • Translation
    in English
    Envy, embodied ill, incomparable bane,
    Good fortune slays, and soul consigns to fiery pain.
  • Meaning
    Envy will destroy (a man’s) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)
0167. அவ்வித்து அழுக்காறு உடையானைச்

0167. அவ்வித்து அழுக்காறு உடையானைச்

0167. Avviththu Azhukkaaru Udaiyaanaich

  • குறள் #
    0167
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்.
  • விளக்கம்
    அழுக்காறு உடையவனைத் திருமகள் பொறுக்காதவளாகி, தன் தமக்கையாகிய மூத்தவளுக்குக் காட்டிவிட்டுத் தான் நீங்கி விடுவாள்.
  • Translation
    in English
    From envious man good fortune’s goddess turns away,
    Grudging him good, and points him out misfortune’s prey.
  • Meaning
    Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.
0166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்

0166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்

0166. Koduppathu Azhukkaruppaan Sutram

  • குறள் #
    0166
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்.
  • விளக்கம்
    ஒருவன் பிறனுக்குக் கொடுக்க, அவ்வாறு கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகின்றவனுடைய சுற்றம், உடையும், உணவுமின்றித் துன்பப்படும்.
  • Translation
    in English
    Who scans good gifts to others given with envious eye,
    His kin, with none to clothe or feed them, surely die.
  • Meaning
    He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.
0165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும்

0165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும்

0165. Azhukkaaru Udaiyaarkku Adhusaalum

  • குறள் #
    0165
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
    வழுக்காயும் கேடீன் பது.
  • விளக்கம்
    பொறாமை உடையவரைத் துன்புறுத்த அவரிடம் உள்ள பொறாமைக் குணம் ஒன்றே போதும். பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் அப்பொறாமை அவர்க்குத் தவறாது தீமை செய்து விடும்.
  • Translation
    in English
    Envy they have within! Enough to seat their fate!
    Though foemen fail, envy can ruin consummate.
  • Meaning
    To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.
0164. அழுக்காற்றின் அல்லவை செய்யார்

0164. அழுக்காற்றின் அல்லவை செய்யார்

0164. Azhukkaatrin Allavai Seiyaar

  • குறள் #
    0164
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
    ஏதம் படுபாக்கு அறிந்து.
  • விளக்கம்
    தீய செயலால் துன்பம் வருதலை அறிந்த அறிவுடையார், பொறாமையினால் அறமல்லாதவற்றைச் செய்ய மாட்டார்.
  • Translation
    in English
    The wise through envy break not virtue’s laws,
    Knowing ill-deeds of foul disgrace the cause.
  • Meaning
    (The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.
0163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான்

0163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான்

0163. Aranaakkam Vendaathaan Enbaan

  • குறள் #
    0163
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
    பேணாது அழுக்கறுப் பான்.
  • விளக்கம்
    பிறனுடைய செல்வத்தைக் கண்டு மகிழாது பொறாமைப் படுகின்றவன், தனக்கு அறத்தையும் செல்வத்தையும் விரும்பாதவன் என்று சொல்லப்படுவான்.
  • Translation
    in English
    Nor wealth nor virtue does that man desire ’tis plain,
    Whom others’ wealth delights not, feeling envious pain.
  • Meaning
    Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said “he neither desires virtue not wealth.”
0162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார்

0162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார்

0162. Vizhuppetrin Akthoppathu Illaiyaar

  • குறள் #
    0162
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின்.
  • விளக்கம்
    எவரிடத்திலும் பொறாமை கொள்ளாதிருக்கும் குணத்தை ஒருவன் பெற்றிருந்தால், அவன் பெறுதற்குரிய செல்வங்களுள் அதனை ஒப்பது வேறு இல்லை.
  • Translation
    in English
    If man can learn to envy none on earth,
    ‘Tis richest gift, -beyond compare its worth.
  • Meaning
    Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towards others.
0161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன்

0161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன்

0161. Ozhukkaaraak Kolga Oruvanthan

  • குறள் #
    0161
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
    அழுக்காறு இலாத இயல்பு.
  • விளக்கம்
    ஒருவன் தன் மனதில் பொறாமை இல்லாதிருக்கும் நல் இயல்பினைத் தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    As ‘strict decorum’s’ laws, that all men bind,
    Let each regard unenvying grace of mind.
  • Meaning
    Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.
0160. உண்ணாது நோற்பார் பெரியர்

0160. உண்ணாது நோற்பார் பெரியர்

0160. Unnaathu Norpaar Periyar

  • குறள் #
    0160
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பொறையுடைமை (Poraiyudaimai)
    The Possession of Patience: Forbearance
  • குறள்
    உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
  • விளக்கம்
    உண்ணத்தக்கவற்றை உண்ணாமல் தவம் செய்பவர் பெரியர்; பிறர் தம்மை நோக்கிச் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் அத்தவம் செய்பவரைவிடப் பெரியர்.
  • Translation
    in English
    Though ‘great’ we deem the men that fast and suffer pain,
    Who others’ bitter words endure, the foremost place obtain.
  • Meaning
    Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech
    of others.
0159. துறந்தாரின் தூய்மை உடையர்

0159. துறந்தாரின் தூய்மை உடையர்

0159. Thuranthaarin Thooimai Udaiyar

  • குறள் #
    0159
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பொறையுடைமை (Poraiyudaimai)
    The Possession of Patience: Forbearance
  • குறள்
    துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
  • விளக்கம்
    தீயவர்கள் சொல்லும் வெறுக்கத்தக்க சொற்களைப் பொறுத்துக் கொண்டிருப்பவர், துறவிகளைவிடத் தூய்மையுடையவராவர்.
  • Translation
    in English
    They who transgressors’ evil words endure
    With patience, are as stern ascetics pure.
  • Meaning
    Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.
0158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத்

0158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத்

0158. Miguthiyaan Mikkavai Seithaaraith

  • குறள் #
    0158
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பொறையுடைமை (Poraiyudaimai)
    The Possession of Patience: Forbearance
  • குறள்
    மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
    தகுதியான் வென்று விடல்.
  • விளக்கம்
    மனச் செருக்கினாலே தீமை செய்தவரை, தாம் தம்முடைய பொறுமையினாலே வென்றுவிடுதல் வேண்டும்.
  • Translation
    in English
    With overweening pride when men with injuries assail,
    By thine own righteous dealing shalt thou mightily prevail.
  • Meaning
    Let a man by patience overcome those who through pride commit excesses.
0157. திறனல்ல தற்பிறர் செய்யினும்

0157. திறனல்ல தற்பிறர் செய்யினும்

0157. Thiranalla Tharpirar Seiyinum

  • குறள் #
    0157
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பொறையுடைமை (Poraiyudaimai)
    The Possession of Patience: Forbearance
  • குறள்
    திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
    அறனல்ல செய்யாமை நன்று.
  • விளக்கம்
    தனக்குப் பிறர் தீய செயல்களைச் செய்தாலும், அவற்றுக்கு வருந்தி அறமற்ற செயல்களைச் செய்யாமல் இருத்தல் நல்லது.
  • Translation
    in English
    Though others work thee ill, thus shalt thou blessing reap;
    Grieve for their sin, thyself from vicious action keep!
  • Meaning
    Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.
0156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்

0156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்

0156. Oruththaarkku Orunaalai Inbam

  • குறள் #
    0156
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பொறையுடைமை (Poraiyudaimai)
    The Possession of Patience: Forbearance
  • குறள்
    ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றுந் துணையும் புகழ்.
  • விளக்கம்
    தீமை செய்தவரைத் தண்டித்தவருக்கு உண்டாவது ஒரு நாளைய இன்பமேயாகும். அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியும் வரையில் புகழ் உண்டு.
  • Translation
    in English
    Who wreak their wrath have pleasure for a day;
    Who bear have praise till earth shall pass away.
  • Meaning
    The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.
0155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே

0155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே

0155. Oruththaarai Ondraaga Vaiyaare

  • குறள் #
    0155
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பொறையுடைமை (Poraiyudaimai)
    The Possession of Patience: Forbearance
  • குறள்
    ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
    பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
  • விளக்கம்
    பிறர் தீமை செய்த போது அதைப் பொறுத்துக் கொள்ளாமல் அவரைத் தண்டித்தவரை அறிவுடையோர் மதியார்; அதனைப் பொறுத்துக் கொண்டவரைப் பொன் போன்று உயர்வாக மதிப்பர்.
  • Translation
    in English
    Who wreak their wrath as worthless are despised;
    Who patiently forbear as gold are prized.
  • Meaning
    (The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.
0154. நிறையுடைமை நீங்காமை வேண்டின்

0154. நிறையுடைமை நீங்காமை வேண்டின்

0154. Niraiyudaimai Neengaamai Vendin

  • குறள் #
    0154
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பொறையுடைமை (Poraiyudaimai)
    The Possession of Patience: Forbearance
  • குறள்
    நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
    போற்றி யொழுகப் படும்.
  • விளக்கம்
    ஒருவன் நற்குணங்கள் தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டும் என விரும்பினால் பொறுமையைப் பாதுகாத்து நடக்க வேண்டும்.
  • Translation
    in English
    Seek’st thou honour never tarnished to retain;
    So must thou patience, guarding evermore, maintain.
  • Meaning
    If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.
0153. இன்நம்யுள் இன்மை விருந்தொரால்

0153. இன்நம்யுள் இன்மை விருந்தொரால்

0153. Innamyul Inmai Virundhoraal

  • குறள் #
    0153
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பொறையுடைமை (Poraiyudaimai)
    The Possession of Patience: Forbearance
  • குறள்
    இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை.
  • விளக்கம்
    வறுமைகளில் மிக்க வறுமை விருந்தினரை வரவேற்காது விடுதல்; வலிமைகளுள் சிறந்த வலிமை அறிவின்மையால் தீமை செய்பவரைப் பொறுத்துக் கொள்ளுதல்.
  • Translation
    in English
    The sorest poverty is bidding guest unfed depart;
    The mightiest might to bear with men of foolish heart.
  • Meaning
    To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.
0152. பொறுத்தல் இறப்பினை என்றும்

0152. பொறுத்தல் இறப்பினை என்றும்

0152. Poruththal Irappinai Endrum

  • குறள் #
    0152
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பொறையுடைமை (Poraiyudaimai)
    The Possession of Patience: Forbearance
  • குறள்
    பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
    மறத்தல் அதனினும் நன்று.
  • விளக்கம்
    பிறர் செய்யும் அளவற்ற தீமையை எப்பொழுதும் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும்; அதனை உடனே மறந்துவிடுதல் அப்பொறுமையை விட நல்லது.
  • Translation
    in English
    Forgiving trespasses is good always;
    Forgetting them hath even higher praise;
  • Meaning
    Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.
0151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்

0151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்

0151. Agazhvaaraith Thaangum Nilampolath

  • குறள் #
    0151
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பொறையுடைமை (Poraiyudaimai)
    The Possession of Patience: Forbearance
  • குறள்
    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
  • விளக்கம்
    தன் மேல் நின்று தன்னைத் தோண்டுகின்றவரையும் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளுதல் சிறந்த அறமாகும்.
  • Translation
    in English
    As earth bears up the men who delve into her breast,
    To bear with scornful men of virtues is the best.
  • Meaning
    To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.
0150. அறன்வரையான் அல்ல செயினும்

0150. அறன்வரையான் அல்ல செயினும்

0150. Aranvaraiyaan Alla Seyinum

  • குறள் #
    0150
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
    Not Coveting Another’s Wife
  • குறள்
    அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
    பெண்மை நயவாமை நன்று.
  • விளக்கம்
    ஒருவன் அறநெறியில் நில்லாமல் தீமைகளைச் செய்பவனானாலும், பிறன் மனைவியை விரும்பவில்லையென்றால், அஃது அவனுக்கு மிகவும் நன்மையுடையதாகும்.
  • Translation
    in English
    Though virtue’s bounds he pass, and evil deeds hath wrought;
    At least, ’tis good if neighbour’s wife he covet not.
  • Meaning
    Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the
    womanhood of her who is within the limit (of the house) of another.
0149. நலக்குரியார் யாரெனின் நாமநீர்

0149. நலக்குரியார் யாரெனின் நாமநீர்

0149. Nalakkuriyaar Yaarenin Naamaneer

  • குறள் #
    0149
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
    Not Coveting Another’s Wife
  • குறள்
    நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
    பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
  • விளக்கம்
    கடலால் சூழப்பட்ட உலகில் எல்லா நன்மைகளுக்கும் உரியவர் யார் எனில், பிறன் மனைவியின் தோளைச் சேராதவரேயாவார்.
  • Translation
    in English
    Who ‘re good indeed, on earth begirt by ocean’s gruesome tide?
    The men who touch not her that is another’s bride.
  • Meaning
    Is it asked, “who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea?” Those who touch not the shoulder of her who belongs to another.
0148. பிறன்மனை நோக்காத பேராண்மை

0148. பிறன்மனை நோக்காத பேராண்மை

0148. Piranmanai Nokkaatha Peraanmai

  • குறள் #
    0148
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
    Not Coveting Another’s Wife
  • குறள்
    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
    அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
  • விளக்கம்
    பிறன் மனைவியை ஆசையோடு பார்க்காத பெருங்குணம், அறிவுடையோர்க்கு நிரம்பிய ஒழுக்கமுமாகும்.
  • Translation
    in English
    Manly excellence, that looks not on another’s wife,
    Is not virtue merely, ’tis full ‘propriety’ of life.
  • Meaning
    That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.
0147. அறனியலான் இல்வாழ்வான் என்பான்

0147. அறனியலான் இல்வாழ்வான் என்பான்

0147. Araniyalaan Ilvaazhvaan Enbaan

  • குறள் #
    0147
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
    Not Coveting Another’s Wife
  • குறள்
    அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
    பெண்மை நயவா தவன்.
  • விளக்கம்
    அறத்தின் இயல்போடு கூடி இல்வாழ்க்கை வாழ்கின்றவன் என்பான், பிறனொருவனின் மனைவியை விரும்பாதவனாவான்.
  • Translation
    in English
    Who sees the wife, another’s own, with no desiring eye
    In sure domestic bliss he dwelleth ever virtuously.
  • Meaning
    He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.
0146. பகைபாவம் அச்சம் பழியென

0146. பகைபாவம் அச்சம் பழியென

0146. Pagaipaavam Achcham Pazhiyena

  • குறள் #
    0146
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
    Not Coveting Another’s Wife
  • குறள்
    பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
    இகவாவாம் இல்லிறப்பான் கண்.
  • விளக்கம்
    பிறனுடைய மனைவியை விரும்பி அவன் வீட்டில் செல்பவனிடத்தில் பகை, பாவம், பழி, பயம் என்னும் நான்கும் நீங்காமல் இருக்கும்.
  • Translation
    in English
    Who home ivades, from him pass nevermore,
    Hatred and sin, fear, foul disgrace; these four.
  • Meaning
    Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour’s wife.
0145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ்

0145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ்

0145. Elithena Illirappaan Eithumenj

  • குறள் #
    0145
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
    Not Coveting Another’s Wife
  • குறள்
    எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி.
  • விளக்கம்
    ‘இவளை அடைதல் எளிது’ என்று நினைத்துப் பிறன் வீட்டில் நுழைகின்றவன், எப்பொழுதும் நீங்காத குடிப்பழியை அடைவான்.
  • Translation
    in English
    ‘Mere triflel’ saying thus, invades the home, so he ensures.
    A gain of guilt that deathless aye endures.
  • Meaning
    He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.
0144. எனைத்துணையர் ஆயினும் என்னாம்

0144. எனைத்துணையர் ஆயினும் என்னாம்

0144. Enaiththunaiyar Aayinum Ennaam

  • குறள் #
    0144
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
    Not Coveting Another’s Wife
  • குறள்
    எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
    தேரான் பிறனில் புகல்.
  • விளக்கம்
    சிறிதளவும் தமது குற்றத்தை ஆராயாமல் பிறனுடைய வீட்டில் நுழைதல், எவ்வளவு பெருமை உடையவருக்கும் இழிவைத் தருவதன்றி வேறு எவ்வாறு முடியும்?
  • Translation
    in English
    How great soe’er they be, what gain have they of life,
    Who, not a whit reflecting, seek a neighbour’s wife.
  • Meaning
    However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?
0143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற

0143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற

0143. Vilindhaarin Verallar Mandra

  • குறள் #
    0143
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
    Not Coveting Another’s Wife
  • குறள்
    விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
    தீமை புரிந்துதொழுகு வார்.
  • விளக்கம்
    பாவத்தின் வழி நின்றவர்கள் எல்லாருள்ளும் பிறனுடைய மனைவியை விரும்பி அவன் தலை வாயிலில் நிற்பவரைப் போல அறியாமையுள்ளவர் இல்லை.
  • Translation
    in English
    They’re numbered with the dead, e’en while they live, -how otherwise?
    With wife of sure confiding friend who evil things devise.
  • Meaning
    Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.
0142. அறன்கடை நின்றாருள் எல்லாம்

0142. அறன்கடை நின்றாருள் எல்லாம்

0142. Arankadai Nindraarul Ellaam

  • குறள் #
    0142
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
    Not Coveting Another’s Wife
  • குறள்
    அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
    நின்றாரின் பேதையார் இல்.
  • விளக்கம்
    பிறனுடைய பொருளாயுள்ள மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறம், பொருள் ஆகியவற்றின் இயல்புகள் அறிந்தவர்களிடத்தில் இல்லை.
  • Translation
    in English
    No fools, of all that stand from virtue’s pale shut out,
    Like those who longing lurk their neighbour’s gate without.
  • Meaning
    Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour’s door.
0141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை

0141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை

0141. Piranporulaal Pattozhugum Pethaimai

  • குறள் #
    0141
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
    Not Coveting Another’s Wife
  • குறள்
    பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
    அறம்பொருள் கண்டார்கண் இல்.
  • விளக்கம்
    பிறனுடைய பொருளாயுள்ள மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறம், பொருள் ஆகியவற்றின் இயல்புகள் அறிந்தவர்களிடத்தில் இல்லை.
  • Translation
    in English
    Who laws of virtue and possession’s rights have known,
    Indulge no foolish love of her by right another’s own.
  • Meaning
    The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.
0140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

0140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

0140. Ulagaththodu Otta Ozhugal

  • குறள் #
    0140
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்.
  • விளக்கம்
    அறிவு ஒழுக்கங்களால் சிறந்தவர்களோடு ஒத்து நடத்தல் வேண்டும்; அவ்வாறு நடக்காதவர் பல நூல்களைக் கற்றாராயினும் அறிவில்லாதவர்களேயாவர்.
  • Translation
    in English
    Who know not with the world in harmony to dwell,
    May many things have learned, but nothing well.
  • Meaning
    Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.
0139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே

0139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே

0139. Ozhukka Mudaiyavarkku Ollaave

  • குறள் #
    0139
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்.
  • விளக்கம்
    மறந்தும் தீயசொற்களை வாயினால் சொல்லும் செயல் நல்லொழுக்கம் உடையவர்க்கு ஆகாது.
  • Translation
    in English
    It cannot be that they who ‘strict decorum’s’ law fulfil,
    E’en in forgetful mood, should utter words of ill.
  • Meaning
    Those who study propriety of conduct will not speak evil, even forgetfully.
0138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்

0138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்

0138. Nandrikku Viththaagum Nallozhukkam

  • குறள் #
    0138
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும்.
  • விளக்கம்
    நல்லோழுக்கமானது நன்மைக்குக் காரணமாகும்; தீயொழுக்கம் எப்பொழுதும் துன்பத்தைக் கொடுக்கும்.
  • Translation
    in English
    ‘Decorum true’ observed a seed of good will be;
    ‘Decorum’s breach’ will sorrow yield eternally.
  • Meaning
    Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.
0137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

0137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

0137. Ozhukkaththin Eithuvar Menmai

  • குறள் #
    0137
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி.
  • விளக்கம்
    ஒழுக்கத்தினால் எல்லாரும் மேன்மையை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுபவர் அடையக் கூடாத பழியை அடைவர்.
  • Translation
    in English
    ‘Tis source of dignity when ‘true decorum’ is preserved;
    Who break ‘decorum’s’ rules endure e’en censures undeserved.
  • Meaning
    From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.
0136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்

0136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்

0136. Ozhukkaththin Olkaar Uravor

  • குறள் #
    0136
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து.
  • விளக்கம்
    ஒழுக்கம் தவறுவதால் தமக்குக் குற்றம் உண்டாவதை உணர்ந்து, அறிவுடையோர் அவ்வோழுக்கத்திலிருந்து தவற மாட்டார்.
  • Translation
    in English
    The strong of soul no jot abate of ‘strict decorum’s’ laws,
    Knowing that ‘due decorum’s’ breach foulest disgrace will cause.
  • Meaning
    Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.
0135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று

0135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று

0135. Azhukkaa Rudaiyaankan Aakkampondru

  • குறள் #
    0135
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு.
  • விளக்கம்
    பொறாமையுடையவனிடம் செல்வம் நிற்காது போல், ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்ச்சி இல்லையாகும்.
  • Translation
    in English
    The envious soul in life no rich increase of blessing gains,
    So man of ‘due decorum’ void no dignity obtains.
  • Meaning
    Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.
0134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும்

0134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும்

0134. Marappinum Othuk Kolalaagum

  • குறள் #
    0134
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
  • விளக்கம்
    மறை நூல்களைக் கற்பவன் கற்றதை மறக்க நேர்ந்தாலும் அதனை மீண்டும் கற்றுக்கொள்ளலாம். அவனது ஒழுக்கத்தில் குறைவுபட்டால் அவனுடைய குடியின் சிறப்புக் கெடும்.
  • Translation
    in English
    Though he forget, the Brahman may regain his Vedic lore;
    Failing in ‘decorum due,’ birthright’s gone for evermore.
  • Meaning
    A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.
0133. ஒழுக்கம் உடைமை குடிமை

0133. ஒழுக்கம் உடைமை குடிமை

0133. Ozhukkam Udaimai Kudimai

  • குறள் #
    0133
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்.
  • விளக்கம்
    ஒருவன் உயர்ந்த குளத்தில் பிறந்தவனாதலை நல்லொழுக்கம் காட்டும்; ஒழுக்கத்தினின்று தவறுதல் அவனைத் தாழ்ந்த குலத்தினனாக்கி விடும்.
  • Translation
    in English
    ‘Decorum’s’ true nobility on earth;
    ‘Indecorum’s’ issue is ignoble birth.
  • Meaning
    Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.
0132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்

0132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்

0132. Parindhombik Kaakka Ozhukkam

  • குறள் #
    0132
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை.
  • விளக்கம்
    ஒழுக்கத்தை வருந்தியும் பாதுகாத்தல் வேண்டும். ஏனென்றால், அரண்கள் எல்லாவற்றுள்ளும் ஆராய்ந்து பார்த்தால் அவ்வோழுக்கமே சிறந்த துணையாக உள்ளது.
  • Translation
    in English
    Searching, duly watching, learning, ‘decorum’ still we find;
    Man’s only aid; toiling, guard thou this with watchful mind.
  • Meaning
    Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.
0131. ஒழுக்கம் விழுப்பந் தரலான்

0131. ஒழுக்கம் விழுப்பந் தரலான்

0131. Ozhukkam Vizhuppand Tharalaan

  • குறள் #
    0131
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்.
  • விளக்கம்
    ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைக் கொடுப்பதால், அதனை உயிரைவிட மேலானதாகக் கருதிக் காத்தல் வேண்டும்.
  • Translation
    in English
    ‘Decorum’ gives especial excellence; with greater care
    ‘Decorum’ should men guard than life, which all men share.
  • Meaning
    Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.
0130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான்

0130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான்

0130. Kadangaaththuk Katradangal Aatruvaan

  • குறள் #
    0130
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அடக்கமுடைமை (Adakkamudaimai)
    The Possession of Self-Restraint
  • குறள்
    கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
  • விளக்கம்
    மனத்தில் சினம் உண்டாகாமல் தடுத்துக் கற்க வேண்டியவற்றைக் கற்று அடக்கம் உடையவனாக இருப்பவனிடம், அறக்கடவுள் சென்றடையும் சமயத்தை எதிர் பார்த்திருக்கும்.
  • Translation
    in English
    Who learns restraint, and guards his soul from wrath,
    Virtue, a timely aid, attends his path.
  • Meaning
    Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger.
0129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்

0129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்

0129. Theeyinaar Chuttapun Ullaarum

  • குறள் #
    0129
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அடக்கமுடைமை (Adakkamudaimai)
    The Possession of Self-Restraint
  • குறள்
    தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு.
  • விளக்கம்
    நெருப்பினால் சுட்டபுன்னால் உடம்பில் தழும்பு ஏற்பட்டாலும், மனத்தில் ஆறும். நாவினால் தீய சொல் சொல்லிச் சுட்ட தழும்பு மனத்திலே ஒருபோதும் ஆறாது.
  • Translation
    in English
    In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;
    In soul by tongue inflamed, the ulcer healeth never more.
  • Meaning
    The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.
0128. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன்

0128. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன்

0128. Ondraanun Theechchol Porutpayan

  • குறள் #
    0128
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அடக்கமுடைமை (Adakkamudaimai)
    The Possession of Self-Restraint
  • குறள்
    ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
    நன்றாகா தாகி விடும்.
  • விளக்கம்
    தீய சொற்களின் பொருளால் விளையும் தீமையானது ஒருவனிடம் உண்டானால் அதனால் மற்ற அறங்களாலும் பயன் இல்லாது போகும்.
  • Translation
    in English
    Though some small gain of good it seem to bring,
    The evil word is parent still of evil thing.
  • Meaning
    If a man’s speech be productive of a single evil, all the good by him will be turned into evil.
0127. யாகாவா ராயினும் நாகாக்க

0127. யாகாவா ராயினும் நாகாக்க

0127. Yaagaavaa Raayinum Naakaakka

  • குறள் #
    0127
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அடக்கமுடைமை (Adakkamudaimai)
    The Possession of Self-Restraint
  • குறள்
    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
  • விளக்கம்
    ஒருவர் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவைக் காத்தல் வேண்டும்; அவ்வாறு காக்கவில்லைஎன்றால் குற்றமான சொற்களைச் சொல்லி தாமே துன்பம் அடைவர்.
  • Translation
    in English
    Whate’er they fail to guard, o’er lips men guard should keep;
    If not, through fault of tongue, they bitter tears shall weep.
  • Meaning
    Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.
0126. ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல்

0126. ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல்

0126. Orunamyul Aamaipol Aindhadakkal

  • குறள் #
    0126
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அடக்கமுடைமை (Adakkamudaimai)
    The Possession of Self-Restraint
  • குறள்
    ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுநம்யும் ஏமாப் புடைத்து.
  • விளக்கம்
    ஆமை தன் உறுப்புகளை உள்ளே இழுப்பதுபோல ஒருவன் ஒரு பிறப்பில் ஐம்பொறிகளையும் அடக்குவானெனில் அஃது அவனை அடுத்த ஏழு பிறப்புகளிலும் தீமையிலிருந்து பாதுகாக்கும்.
  • Translation
    in English
    Like tortoise, who the five restrains
    In one, through seven world bliss obtains.
  • Meaning
    Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.
0125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல்

0125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல்

0125. Ellaarkkum Nandraam Panithal

  • குறள் #
    0125
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அடக்கமுடைமை (Adakkamudaimai)
    The Possession of Self-Restraint
  • குறள்
    எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து.
  • விளக்கம்
    அடங்கி நடத்தல் எல்லோருக்கும் நல்லதாகும்; அவ்வெல்லாருள்ளும் செல்வர்க்கே அது மற்றொரு செல்வமாகும் சிறப்பினையுடையது.
  • Translation
    in English
    To all humility is goodly grace; but chief to them
    With fortune blessed, -’tis fortune’s diadem.
  • Meaning
    Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches.
0124. நிலையின் திரியாது அடங்கியான்

0124. நிலையின் திரியாது அடங்கியான்

0124. Nilaiyin Thiriyaathu Adangiyaan

  • குறள் #
    0124
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அடக்கமுடைமை (Adakkamudaimai)
    The Possession of Self-Restraint
  • குறள்
    நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
    மலையினும் மாணப் பெரிது.
  • விளக்கம்
    இல்லற ஒழுக்கத்தில் மாறுபடாமல் நின்று அடங்கியிருப்பவனின் பெருமை, மலையை விட மிகப் பெரியதாகும்.
  • Translation
    in English
    In his station, all unswerving, if man self subdue,
    Greater he than mountain proudly rising to the view.
  • Meaning
    More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.
0123. செறிவறிந்து சீர்மை பயக்கும்

0123. செறிவறிந்து சீர்மை பயக்கும்

0123. Serivarindhu Seermai Payakkum

  • குறள் #
    0123
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அடக்கமுடைமை (Adakkamudaimai)
    The Possession of Self-Restraint
  • குறள்
    செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
    ஆற்றின் அடங்கப் பெறின்.
  • விளக்கம்
    அறிய வேண்டியவற்றை அறிந்து ஒருவன் அடங்கி நடந்தால், அவ்வடக்கம் பிறரால் மதிக்கப்பட்டு, அவனுக்குச் சிறப்பைத் தரும்.
  • Translation
    in English
    If versed in wisdom’s lore by virtue’s law you self restrain.
    Your self-repression known will yield you glory’s gain.
  • Meaning
    Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.
0122. காக்க பொருளா அடக்கத்தை

0122. காக்க பொருளா அடக்கத்தை

0122. Kaakka Porulaa Adakkaththai

  • குறள் #
    0122
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அடக்கமுடைமை (Adakkamudaimai)
    The Possession of Self-Restraint
  • குறள்
    காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
    அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
  • விளக்கம்
    அடக்கம் என்ற குணத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் அந்த அடக்கத்தை விடச் சிறந்த செல்வம் உயிர்க்கு இல்லை.
  • Translation
    in English
    Guard thou as wealth the power of self-control;
    Than this no greater gain to living soul!
  • Meaning
    Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.
0121. அடக்கம் அமரருள் உய்க்கும்

0121. அடக்கம் அமரருள் உய்க்கும்

0121. Adakkam Amararul Uikkum

  • குறள் #
    0121
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    அடக்கமுடைமை (Adakkamudaimai)
    The Possession of Self-Restraint
  • குறள்
    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.
  • விளக்கம்
    அடக்கம் என்னும் பண்பு ஒருவனைத் தேவர் நடுவே கொண்டு சேர்க்கும்; அடங்காமை என்னும் குணம் நரகத்தில் தள்ளி விடும்.
  • Translation
    in English
    Control of self does man conduct to bliss th’ immortals share;
    Indulgence leads to deepest night, and leaves him there.
  • Meaning
    Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).
0120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம்

0120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம்

0120. Vaanigam Seivaarkku Vaanigam

  • குறள் #
    0120
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
    பிறவும் தமபோல் செயின்.
  • விளக்கம்
    பிறர் பொருளையும் தம் பொருள் போலப் பாதுகாத்து வாணிகம் செய்பவர்க்கு வாணிகம் வளரும்.
  • Translation
    in English
    As thriving trader is the trader known,
    Who guards another’s interests as his own.
  • Meaning
    The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.
0119. சொற்கோட்டம் இல்லது செப்பம்

0119. சொற்கோட்டம் இல்லது செப்பம்

0119. Sorkottam Illathu Seppam

  • குறள் #
    0119
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
    உட்கோட்டம் இன்மை பெறின்.
  • விளக்கம்
    நடுவுநிலையாவது ஒருவனது சொல்லில் குற்றம் இல்லாதிருத்தல். அவனது உள்ளம் நடுவு நிலைமையில் இருக்குமானால், சொல்லில் குற்றம் இல்லாத நிலைமை உண்டாகும்.
  • Translation
    in English
    Inflexibility in word is righteousness,
    If men inflexibility of soul possess.
  • Meaning
    Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.
0118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல்

0118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல்

0118. Samanseithu Seerthookkung Kolpol

  • குறள் #
    0118
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி.
  • விளக்கம்
    முன் சமமாக நின்று, பின் தன்னிடத்தில் வைக்கப்பட்ட பொருளின் அளவை காட்டும் துலாக்கோல் போல, நடுவு நிலைமையிலிருந்து தவறாதிருத்தல் அறிவுடையோர்க்கு அழகாகும்.
  • Translation
    in English
    To stand, like balance-rod that level hangs and rightly weighs,
    With calm unbiassed equity of soul, is sages’ praise.
  • Meaning
    To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.
0117. கெடுவாக வையாது உலகம்

0117. கெடுவாக வையாது உலகம்

0117. Keduvaaga Vaiyaathu Ulagam

  • குறள் #
    0117
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    கெடுவாக வையாது உலகம் நடுவாக
    நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
  • விளக்கம்
    நடவுநிலைமை தவறாத அறநெறியை மேற்கொண்டொழுகும் ஒருவன் அடையும் வறுமையை, அறிவுடையோர் தாழ்வாகக் கருதமாட்டார்.
  • Translation
    in English
    The man who justly lives, tenacious of the right,
    In low estate is never low to wise man’s sight.
  • Meaning
    The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.
0116. கெடுவல்யான் என்பது அறிகதன்

0116. கெடுவல்யான் என்பது அறிகதன்

0116. Keduvalyaan Enbathu Arigathan

  • குறள் #
    0116
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
    நடுவொரீஇ அல்ல செயின்.
  • விளக்கம்
    ஒருவன் மனம் நடுவுநிலையிலிருந்து நீங்கி, முறையல்லாதவற்றைச் செய்ய நினைத்தால், ‘நான்கெட்டு விடுவேன்’ என்பதை அறிவானாக.
  • Translation
    in English
    If, right deserting, heart to evil turn,
    Let man impending ruin’s sign discern!
  • Meaning
    Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, “I shall perish.”
0115. கேடும் பெருக்கமும் இல்லல்ல

0115. கேடும் பெருக்கமும் இல்லல்ல

0115. Kedum Perukkamum Illalla

  • குறள் #
    0115
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி.
  • விளக்கம்
    தாழ்வும், உயர்வும் ஒருவர் வாழ்வில் இல்லாதவை அல்ல. அவரவர் வினைகளால் வரும் என்பதை அறிந்து, நடுவுநிலை தவறாதிருத்தல் அறிவால் நிறைந்தவர்க்கு அழகாகும்.
  • Translation
    in English
    The gain and loss in life are not mere accident;
    Just mind inflexible is sages’ ornament.
  • Meaning
    Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).
0114. தக்கார் தகவிலர் என்பது

0114. தக்கார் தகவிலர் என்பது

0114. Thakkaar Thagavilar Enbathu

  • குறள் #
    0114
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப்ப படும்.
  • விளக்கம்
    ஒருவர் நடுவுநிலையுல்லவர் அல்லது இல்லாதவர் என்பதை, அவருக்குப்பின் நிற்கும் புகழாலும் பழியாலும் அறியலாம்.
  • Translation
    in English
    Who just or unjust lived shall soon appear:
    By each one’s offspring shall the truth be clear.
  • Meaning
    The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.
0113. நன்றே தரினும் நடுவிகந்தாம்

0113. நன்றே தரினும் நடுவிகந்தாம்

0113. Nandre Tharinum Naduvigandhaam

  • குறள் #
    0113
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே யொழிய விடல்.
  • விளக்கம்
    தீமையைத்தராது நன்மையே தருவதானாலும் நடு நிலை தவறுவதால் உண்டாகின்ற செல்வத்தை அப்பொழுதே கைவிட வேண்டும்.
  • Translation
    in English
    Though only good it seem to give, yet gain
    By wrong acquired, not e’en one day retain!
  • Meaning
    Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.
0112. செப்பம் உடையவன் ஆக்கஞ்

0112. செப்பம் உடையவன் ஆக்கஞ்

0112. Seppam Udaiyavan Aakkanj

  • குறள் #
    0112
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
    எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
  • விளக்கம்
    நடுவுநிலை உடையவனுடைய செல்வம் மற்றவர் செல்வம் போல் அழிந்து போகாமல், அவனது சந்ததிக்கும் உதவக் கூடியதாகும்.
  • Translation
    in English
    The just man’s wealth unwasting shall endure,
    And to his race a lasting joy ensure.
  • Meaning
    The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.
0111. தகுதி எனவொன்று நன்றே

0111. தகுதி எனவொன்று நன்றே

0111. Thaguthi Enavondru Nandre

  • குறள் #
    0111
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
    பாற்பட்டு ஒழுகப் பெறின்.
  • விளக்கம்
    பகைவர், நண்பர், அயலார் என்னும் வேறுபாடின்றி எல்லோரிடத்தும் முறைமை தவறாது நடந்தால் அந்நடுவுநிலைமை என்னும் ஓர் அறமே நன்மையைத் தரும்.
  • Translation
    in English
    If justice, failing not, its quality maintain,
    Giving to each his due, -’tis man’s one highest gain.
  • Meaning
    That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.
0110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்

0110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்

0110. Ennandri Kondraarkkum Uivundaam

  • குறள் #
    0110
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)
    The Knowledge of Benefits Conferred: Gratitude
  • குறள்
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
  • விளக்கம்
    எத்தகைய அறத்தை அழித்தவர்க்கும் பாவத்திலிருந்து நீங்கும் வழி உண்டு; ஆனால் ஒருவன் செய்த உதவியை மறந்தவர்க்கு அதிலிருந்து உய்யும் வழி இல்லை.
  • Translation
    in English
    Who every good have killed, may yet destruction flee;
    Who ‘benefit’ has killed, that man shall ne’er ‘scape free!
  • Meaning
    He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.
0109. கொன்றன்ன இன்னா செயினும்

0109. கொன்றன்ன இன்னா செயினும்

0109. Kondranna Innaa Seyinum

  • குறள் #
    0109
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)
    The Knowledge of Benefits Conferred: Gratitude
  • குறள்
    கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
    ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
  • விளக்கம்
    நன்மை செய்த ஒருவர், கொலை செய்வது போன்ற கொடுமையைச் செய்தாரானாலும், அவர் செய்த ஓர் உதவியை நினைத்தால் அத்தீமை மறைந்து போகும்.
  • Translation
    in English
    Effaced straightway is deadliest injury,
    By thought of one kind act in days gone by.
  • Meaning
    Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.
0108. நன்றி மறப்பது நன்றன்று

0108. நன்றி மறப்பது நன்றன்று

0108. Nandri Marappathu Mandrandru

  • குறள் #
    0108
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)
    The Knowledge of Benefits Conferred: Gratitude
  • குறள்
    நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று.
  • விளக்கம்
    ஒருவன் செய்த நன்மையை ஒருபோதும் மறத்தலாகாது; அவன் செய்த தீமையை உடனே மறப்பது நல்லது.
  • Translation
    in English
    ‘Tis never good to let the thought of good things done thee pass away;
    Of things not good, ’tis good to rid thy memory that very day.
  • Meaning
    It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).
0107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்

0107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்

0107. Ezhumai Ezhupirappum Ulluvar

  • குறள் #
    0107
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)
    The Knowledge of Benefits Conferred: Gratitude
  • குறள்
    எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
    விழுமந் துடைத்தவர் நட்பு.
  • விளக்கம்
    நல்லவர், தம் துன்பத்தை நீக்கியவரின் நட்பை, தொடர்ந்து வருகின்ற ஏழுவகைப் பிறப்புகளிலும் மறவாது நினைப்பர்.
  • Translation
    in English
    Through all seven worlds, in seven-fold birth, Remains in mem’ry of the wise.
    Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.
  • Meaning
    (The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.
0106. மறவற்க மாசற்றார் கேண்மை

0106. மறவற்க மாசற்றார் கேண்மை

0106. Maravarka Maasatraar Kenmai

  • குறள் #
    0106
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)
    The Knowledge of Benefits Conferred: Gratitude
  • குறள்
    மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
    துன்பத்துள் துப்பாயார் நட்பு.
  • விளக்கம்
    துன்பத்தில் உதவி செய்தவரின் நட்பை விட்டுவிடக் கூடாது; அப்படியே அறிவு ஒழுக்கங்களில் குற்றமற்றவரின் உறவை மறக்க கூடாது.
  • Translation
    in English
    Kindness of men of stainless soul remember evermore!
    Forsake thou never friends who were thy stay in sorrow sore!
  • Meaning
    Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.
0105. உதவி வரைத்தன்று உதவி

0105. உதவி வரைத்தன்று உதவி

0105. Udhavi Varaiththandru Udhavi

  • குறள் #
    0105
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)
    The Knowledge of Benefits Conferred: Gratitude
  • குறள்
    உதவி வரைத்தன்று உதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து.
  • விளக்கம்
    ஒருவர் செய்யும் உதவியின் அளவு, அதன் மதிப்பைப் பொருத்ததன்று; செய்யப்பட்டவரின் பண்பினைப் பொருத்ததாகும்.
  • Translation
    in English
    The kindly aid’s extent is of its worth no measure true;
    Its worth is as the worth of him to whom the act you do.
  • Meaning
    The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.
0104. தினைத்துணை நன்றி செயினும்

0104. தினைத்துணை நன்றி செயினும்

0104. Thinaiththunai Nandri Seyinum

  • குறள் #
    0104
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)
    The Knowledge of Benefits Conferred: Gratitude
  • குறள்
    தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார்.
  • விளக்கம்
    தினையளவு உதவியை ஒருவன் செய்தானாயினும், நன்றி யறிவார் அதனைப் பனையளவாக மதித்துப் போற்றுவர்.
  • Translation
    in English
    Each benefit to those of actions’ fruit who rightly deem,
    Though small as millet-seed, as palm-tree vast will seem.
  • Meaning
    Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.
0103. பயன்தூக்கார் செய்த உதவி

0103. பயன்தூக்கார் செய்த உதவி

0103. Payanthookkaar Seitha Udhavi

  • குறள் #
    0103
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)
    The Knowledge of Benefits Conferred: Gratitude
  • குறள்
    பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
    நன்மை கடலின் பெரிது.
  • விளக்கம்
    இன்னபயன் கிடைக்கும் என்று கருதாது ஒருவர் செய்த நன்மையின் பெருமையை ஆராய்ந்தால், அது கடலைவிடப் பெரியதாகும்.
  • Translation
    in English
    Kindness shown by those who weigh not what the return may be:
    When you ponder right its merit, ‘Tis vaster than the sea.
  • Meaning
    If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.
0102. காலத்தி னாற்செய்த நன்றி

0102. காலத்தி னாற்செய்த நன்றி

0102. Kaalaththi Naarseitha Nandri

  • குறள் #
    0102
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)
    The Knowledge of Benefits Conferred: Gratitude
  • குறள்
    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது.
  • விளக்கம்
    ஒருவனுக்குத் துன்பம் வந்த காலத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அக்காலத்தை நோக்க, அஃது இப்பூமியைவிட மிகப் பெரியதாகும்.
  • Translation
    in English
    A timely benefit, -though thing of little worth,
    The gift itself, -in excellence transcends the earth.
  • Meaning
    A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.
0101. செய்யாமல் செய்த உதவிக்கு

0101. செய்யாமல் செய்த உதவிக்கு

0101. Seiyaamal Seitha Udhavikku

  • குறள் #
    0101
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)
    The Knowledge of Benefits Conferred: Gratitude
  • குறள்
    செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது.
  • விளக்கம்
    தான் ஓருதவியும் செய்யாமலிருக்கவும், தனக்குப் பிறர் செய்த உதவிக்கு இவ்வுலகத்தையும் வானுலகத்தையும் கொடுப்பினும் ஈடாகா.
  • Translation
    in English
    Assistance given by those who ne’er received our aid,
    Is debt by gift of heaven and earth but poorly paid.
  • Meaning
    (The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.
0100. இனிய உளவாக இன்னாத

0100. இனிய உளவாக இன்னாத

0100. Iniya Ulavaaga Innaatha

  • குறள் #
    0100
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    இனியவை கூறல் (Iniyavai Kooral)
    The Utterance of Pleasant Words
  • குறள்
    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
  • விளக்கம்
    இனிய சொற்களைக் கூறாமல் இனியவையில்லாத கடுஞ்சொற்களை ஒருவன் கூறுதல், தன்னிடம் உள்ள கனியை உண்ணாது, இனிமையில்லாத காயை உண்பது போன்றதாகும்.
  • Translation
    in English
    When pleasant words are easy, bitter words to use,
    Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.
  • Meaning
    To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.
0099. இன்சொல் இனிதீன்றல் காண்பான்

0099. இன்சொல் இனிதீன்றல் காண்பான்

0099. Insol Initheendral Kaanbaan

  • குறள் #
    0099
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    இனியவை கூறல் (Iniyavai Kooral)
    The Utterance of Pleasant Words
  • குறள்
    இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
    வன்சொல் வழங்கு வது.
  • விளக்கம்
    பிறர் சொல்லும் இனிய சொல் தனக்கு இனிமையாக இருத்தலை உணர்கின்றவன், பிறரிடம் கடுஞ்சொல் பேசுவது ஏன்?
  • Translation
    in English
    Who sees the pleasure kindly speech affords,
    Why makes he use of harsh, repellant words?
  • Meaning
    Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields?
0098. சிறுமையுவு நீங்கிய இன்சொல்

0098. சிறுமையுவு நீங்கிய இன்சொல்

0098. Sirumaiyuvu Neengiya Insol

  • குறள் #
    0098
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    இனியவை கூறல் (Iniyavai Kooral)
    The Utterance of Pleasant Words
  • குறள்
    சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
    இம்மையும் இன்பம் தரும்.
  • விளக்கம்
    பிறருக்குத் துன்பம் கொடுக்காத இனிய சொல், ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
  • Translation
    in English
    Sweet kindly words, from meanness free, delight of heart,
    In world to come and in this world impart.
  • Meaning
    Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.
0097. நயன்ஈன்று நன்றி பயக்கும்

0097. நயன்ஈன்று நன்றி பயக்கும்

0097. Nayaneendru Nandri Payakkum

  • குறள் #
    0097
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    இனியவை கூறல் (Iniyavai Kooral)
    The Utterance of Pleasant Words
  • குறள்
    நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
    பண்பின் தலைப்பிரியாச் சொல்.
  • விளக்கம்
    பிறருக்கு நன்மையைக் கொடுத்து, இனிமைப் பண்பிலிருந்து நீங்காத சொல், நேர்மையான வாழ்க்கையையும், நல்வழியில் நடப்பதால் உண்டாகும் பயனையும் கொடுக்கும்.
  • Translation
    in English
    The words of sterling sense, to rule of right that strict adhere,
    To virtuous action prompting, blessings yield in every sphere.
  • Meaning
    That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).
0096. அல்லவை தேய அறம்பெருகும்

0096. அல்லவை தேய அறம்பெருகும்

0096. Allavai Theya Aramperugum

  • குறள் #
    0096
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    இனியவை கூறல் (Iniyavai Kooral)
    The Utterance of Pleasant Words
  • குறள்
    அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்
  • விளக்கம்
    நன்மையைத்தரும் சொற்களை ஆராய்ந்து ஒருவன் இனிமையாகச் சொல்வானானால், தீமைகள் கெட்டு அறம் வளரும்.
  • Translation
    in English
    Who seeks out good, words from his lips of sweetness flow;
    In him the power of vice declines, and virtues grow.
  • Meaning
    If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.
0095. பணிவுடையன் இன்சொலன் ஆதல்

0095. பணிவுடையன் இன்சொலன் ஆதல்

0095. Panivudaiyan Insolan Aathal

  • குறள் #
    0095
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    இனியவை கூறல் (Iniyavai Kooral)
    The Utterance of Pleasant Words
  • குறள்
    பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
    அணியல்ல மற்றுப் பிற.
  • விளக்கம்
    ஒருவனுக்கு அணியாவது, பெரியோரிடத்தில் வணக்கமும், எல்லோரிடத்தும் இனிய சொல்லும் உடையவனாதலே; இவையல்லாமல் உடம்பில் அணியும் வேறு அணிகள் அணிகளாகா.
  • Translation
    in English
    Humility with pleasant speech to man on earth,
    Is choice adornment; all besides is nothing worth.
  • Meaning
    Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).
0094. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்

0094. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்

0094. Thunburooum Thuvvaamai Illaagum

  • குறள் #
    0094
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    இனியவை கூறல் (Iniyavai Kooral)
    The Utterance of Pleasant Words
  • குறள்
    துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
    இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
  • விளக்கம்
    எவரிடத்தும் இன்பத்தைக் கொடுக்கும் இனிய சொற்களைப் பேசுகின்றவர்களுக்கு, துன்பத்தைக் கொடுக்கும் வறுமை வந்து சேராது.
  • Translation
    in English
    The men of pleasant speech that gladness breathe around,
    Through indigence shall never sorrow’s prey be found.
  • Meaning
    Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.
0093. முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி

0093. முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி

0093. Mugaththaan Amarndhu Inithunokki

  • குறள் #
    0093
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    இனியவை கூறல் (Iniyavai Kooral)
    The Utterance of Pleasant Words
  • குறள்
    முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
    இன்சொ லினதே அறம்.
  • விளக்கம்
    அறம் என்று சொல்லப்படுவது, முகம் மலர்ந்து பார்த்து, உள்ளத்தில் எழும் அன்பு உணர்ச்சியினால் இனிய சொல்லைச் சொல்லுவதேயாகும்.
  • Translation
    in English
    With brightly beaming smile, and kindly light of loving eye,
    And heart sincere, to utter pleasant words is charity.
  • Meaning
    Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.
0092. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே

0092. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே

0092. Aganamarndhu Eethalin Nandre

  • குறள் #
    0092
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    இனியவை கூறல் (Iniyavai Kooral)
    The Utterance of Pleasant Words
  • குறள்
    அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
    இன்சொலன் ஆகப் பெறின்.
  • விளக்கம்
    மனம் மகிழுந்து ஒருவனுக்கு ஒன்றைக் கொடுப்பதை விட, முகம் மலர்ந்து இன்சொல் பேசுதல் சிறந்த தாகும்.
  • Translation
    in English
    A pleasant word with beaming smile’s preferred,
    Even to gifts with liberal heart conferred.
  • Meaning
    Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.
0091. இன்சொலால் ஈரம் அளைஇப்

0091. இன்சொலால் ஈரம் அளைஇப்

0091. Insolaal Eeram Alaiip

  • குறள் #
    0091
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    இனியவை கூறல் (Iniyavai Kooral)
    The Utterance of Pleasant Words
  • குறள்
    இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
  • விளக்கம்
    இன்சொற்களாவன, வஞ்சனையில்லா, அன்போடு கலந்த மெய்ப்பொருள் உணர்ந்தவரின் சொற்களே ஆகும்.
  • Translation
    in English
    Pleasant words are words with all pervading love that burn;
    Words from his guileless mouth who can the very truth discern.
  • Meaning
    Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.
0090. மோப்பக் குழையும் அனிச்சம்

0090. மோப்பக் குழையும் அனிச்சம்

0090. Moppak Kuzhaiyum Anichcham

  • குறள் #
    0090
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    விருந்தோம்பல் (Virundhombal)
    Cherishing Guests
  • குறள்
    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குநழ்யும் விருந்து.
  • விளக்கம்
    அனிச்சப்பூ, மோந்து பார்த்தல் வாடும்; விருந்தினரோ, விருந்தளிப்பவரின் முகம் வேறுபட்டுத் தோன்றினாலே வாடுவர்.
  • Translation
    in English
    The flower of ‘Anicha’ withers away, If you do but its fragrance inhale;
    If the face of the host cold welcome convey, The guest’s heart within him will fail.
  • Meaning
    As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.
0089. உடைமையுள் இன்மை விருந்தோம்பல்

0089. உடைமையுள் இன்மை விருந்தோம்பல்

0089. Udaimaiyul Inmai Virundhombal

  • குறள் #
    0089
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    விருந்தோம்பல் (Virundhombal)
    Cherishing Guests
  • குறள்
    உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு.
  • விளக்கம்
    பொருளுடையவராக இருக்குங்காலத்தில் வறுமையாவது, விருந்தினரை உபசரித்தல் மேற்கொள்ளாத அறியாமையாகும். இஃது அறிவில்லாதவரிடத்தில் காணப்படும்.
  • Translation
    in English
    To turn from guests is penury, though worldly goods abound;
    ‘Tis senseless folly, only with the senseless found.
  • Meaning
    That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.
0088. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்

0088. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்

0088. Parindhombip Patratrem enbar

  • குறள் #
    0088
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    விருந்தோம்பல் (Virundhombal)
    Cherishing Guests
  • குறள்
    பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படா தார்.
  • விளக்கம்
    விருந்தினரை உபசரித்து அதன் பயனை அடையாதவர், “பொருளை வருந்திப் பாதுகாத்து அதன் பயனை அடையாமற் போய்விட்டோமே” எனப் பின்னர் வருந்தும் நிலையை அடைவர்.
  • Translation
    in English
    With pain they guard their stores, yet ‘All forlorn are we,’ they’ll cry,
    Who cherish not their guests, nor kindly help supply.
  • Meaning
    Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, “we have laboured and laid up wealth and are now without support.”
0087. இனைத்துணைத் தென்பதொன் றில்லை

0087. இனைத்துணைத் தென்பதொன் றில்லை

0087. Inaiththunaith Thonbathon Drillai

  • குறள் #
    0087
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    விருந்தோம்பல் (Virundhombal)
    Cherishing Guests
  • குறள்
    இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன்.
  • விளக்கம்
    விருந்து உபசரித்தலாகிய அறத்தின் பயன் இன்ன அளவினது என்று கூற முடியாது; விருந்தினரின் தகுதியளவுக் கேற்றவாறு அஃது அமையும்.
  • Translation
    in English
    To reckon up the fruit of kindly deeds were all in vain;
    Their worth is as the worth of guests you entertain.
  • Meaning
    The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.
0086. செல்விருந்து ஓம்பி வருவிருந்து

0086. செல்விருந்து ஓம்பி வருவிருந்து

0086. Selvirundhu Ombi Varuvirundhu

  • குறள் #
    0086
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    விருந்தோம்பல் (Virundhombal)
    Cherishing Guests
  • குறள்
    செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்வருந்து வானத் தவர்க்கு.
  • விளக்கம்
    வந்த விருந்தினரை உபசரித்துவிட்டு, இனிவரும் விருந்தினரை உபசரிக்கக் காத்திருப்பவன், தேவர்கட்கு நல்ல விருந்தினனாவான்.
  • Translation
    in English
    The guest arrived he tends, the coming guest expects to see;
    To those in heavenly homes that dwell a welcome guest is he.
  • Meaning
    He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.
0085. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ

0085. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ

0085. Viththum Idalvendum Kollo

  • குறள் #
    0085
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    விருந்தோம்பல் (Virundhombal)
    Cherishing Guests
  • குறள்
    வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்.
  • விளக்கம்
    வந்த விருந்தினரை முதலில் உண்ணச் செய்து, மீதி உணவை உண்ணுகின்றவனுடைய விளை நிலத்தில் அவன் விதைக்காமலே பயிர் விளையும்.
  • Translation
    in English
    Who first regales his guest, and then himself supplies,
    O’er all his fields, unsown, shall plenteous harvests rise.
  • Meaning
    Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?
0084. அகனமர்ந்து செய்யாள் உறையும்

0084. அகனமர்ந்து செய்யாள் உறையும்

0084. Aganamarndhu Seiyaal Uraiyum

  • குறள் #
    0084
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    விருந்தோம்பல் (Virundhombal)
    Cherishing Guests
  • குறள்
    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்.
  • விளக்கம்
    முகம் மலர்ந்து விருந்தினரை உபசரிப்பவனது வீட்டில், திருமகள் மனம் மகிழுந்து வாழ்வாள்.
  • Translation
    in English
    With smiling face he entertains each virtuous guest,
    ‘Fortune’ with gladsome mind shall in his dwelling rest.
  • Meaning
    Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.
0083. வருவிருந்து வைகலும் ஓம்புவான்

0083. வருவிருந்து வைகலும் ஓம்புவான்

0083. Varuvirundhu Vaigalum Ombuvaan

  • குறள் #
    0083
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    விருந்தோம்பல் (Virundhombal)
    Cherishing Guests
  • குறள்
    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று.
  • விளக்கம்
    நாள்தொறும் தன்னிடம் வருகின்ற விருந்தினரைப் பேணி உபசரிப்பவனின் வாழ்க்கை, வறுமையால் வருந்திக் கெடுவது இல்லை.
  • Translation
    in English
    Each day he tends the coming guest with kindly care;
    Painless, unfailing plenty shall his household share.
  • Meaning
    The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.
0082. விருந்து புறத்ததாத் தானுண்டல்

0082. விருந்து புறத்ததாத் தானுண்டல்

0082. Virundhu Puraththathaath Thaanundal

  • குறள் #
    0082
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    விருந்தோம்பல் (Virundhombal)
    Cherishing Guests
  • குறள்
    விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
  • விளக்கம்
    விருந்தினர் வீட்டின் வெளியெயிருக்க, தான் மட்டும் தனித்திருந்து உண்பது அமிழ்தமேயானாலும், அது விரும்பத்தக்கதன்று.
  • Translation
    in English
    Though food of immortality should crown the board,
    Feasting alone, the guests without unfed, is thing abhorred.
  • Meaning
    It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.
0081. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்

0081. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்

0081. Irundhombi Ilvaazhva Thellaam

  • குறள் #
    0081
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    விருந்தோம்பல் (Virundhombal)
    Cherishing Guests
  • குறள்
    இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு.
  • விளக்கம்
    மனைவியோடு வீட்டில் இருந்து, பொருளைப் பாதுகாத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம், விருந்தினரை உபசரித்து, அவர்கட்கு உதவி செய்வதற்கே யாகும்.
  • Translation
    in English
    All household cares and course of daily life have this in view.
    Guests to receive with courtesy, and kindly acts to do.
  • Meaning
    The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.