Tag: Royalty

0430. அறிவுடையார் எல்லா முடையார்

0430. அறிவுடையார் எல்லா முடையார்

0430. Arivudaiyaar Ellaa Mudaiyaar

  • குறள் #
    0430
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர்.
  • விளக்கம்
    அறிவுள்ளவர் வேறொன்றும் இல்லாவிட்டாலும் எல்லாச் செல்வங்களும் உடையவராவர்; அறிவு இல்லாதவர் வேறு எதை உடையவராயினும் ஒன்றும் இல்லாதவராவர்.
  • Translation
    in English
    The wise is rich, with ev’ry blessing blest;
    The fool is poor, of everything possessed.
  • Meaning
    Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing.
0429. எதிரதாக் காக்கும் அறிவினார்க்

0429. எதிரதாக் காக்கும் அறிவினார்க்

0429. Ethirathaak Kaakkum Arivinaark

  • குறள் #
    0429
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
    அதிர வருவதோர் நோய்.
  • விளக்கம்
    பின் வரக்கூடியதை முன்னதாக அறிந்து, காக்க வல்ல அறிவுடையோர்க்கு, அவர் நடுங்கும்படி வருவதாகிய துன்பம் எதுவும் இல்லை.
  • Translation
    in English
    The wise with watchful soul who coming ills foresee;
    From coming evil’s dreaded shock are free.
  • Meaning
    No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.
0428. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை

0428. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை

0428. Anjuva Thanjaamai Pethaimai

  • குறள் #
    0428
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
    அஞ்சல் அறிவார் தொழில்.
  • விளக்கம்
    அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சாமல் இருப்பது அறிவில்லாமை; அச்சப்பட வேண்டியவற்றிற்கு அச்சப்படுதல் அறிவுடையோர் செயலாகும்.
  • Translation
    in English
    Folly meets fearful ills with fearless heart;
    To fear where cause of fear exists is wisdom’s part.
  • Meaning
    Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.
0427. அறிவுடையார் ஆவ தறிவார்

0427. அறிவுடையார் ஆவ தறிவார்

0427. Arivudaiyaar Aava Tharivaar

  • குறள் #
    0427
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர்.
  • விளக்கம்
    அறிவுடையவர் பின் வரக்கூடியதை முன் அறிய வல்லார்; அதனை முன் அறிய மாட்டாதவர் அறிவில்லாதவர்.
  • Translation
    in English
    The wise discern, the foolish fail to see,
    And minds prepare for things about to be.
  • Meaning
    The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.
0426. எவ்வ துறைவது உலகம்

0426. எவ்வ துறைவது உலகம்

0426. Evva Thuraivathu Ulagam

  • குறள் #
    0426
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
    அவ்வ துறைவ தறிவு.
  • விளக்கம்
    உலகம் எவ்வாறு ஒழுகுகின்றதோ, அவ்வுலகத்தோடு சேர்ந்து தானும் அவ்வாறு நடப்பதே அறிவு.
  • Translation
    in English
    As dwells the world, so with the world to dwell
    In harmony- this is to wisely live and well.
  • Meaning
    To live as the world lives, is wisdom.
0425. உலகம் தழீஇய தொட்பம்

0425. உலகம் தழீஇய தொட்பம்

0425. Ulagam Thazheeeya Thotpam

  • குறள் #
    0425
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
    கூம்பலும் இல்ல தறிவு.
  • விளக்கம்
    ஒருவனுக்கு உயர்ந்தோரை நட்பாக்குவது அறிவாகும்; பின்னர் அந்நட்பு மகிழ்வுடன் விரிதலும் வருந்திச் சுருங்கலுமின்றி ஒரே நிலையாகக் கொண்டிருத்தலும் அறிவாகும்.
  • Translation
    in English
    Wisdom embraces frank the world, to no caprice exposed;
    Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed.
  • Meaning
    To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower).
0424. எண்பொருள வாகச் செலச்சொல்லித்

0424. எண்பொருள வாகச் செலச்சொல்லித்

0424. Enporula Vaagach Chelachchollith

  • குறள் #
    0424
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு.
  • விளக்கம்
    கேட்பவருக்கு எளிதில் விளங்கும் பொருளுடையதாகவும் அவர் மனம் கொள்ளும்படியாகவும் கூறிப் பிறர் கூறும் சொற்களில் மறைந்திருக்கும் நுண்பொருளைக் காண்பது அறிவாகும்.
  • Translation
    in English
    Wisdom hath use of lucid speech, words that acceptance win,
    And subtle sense of other men’s discourse takes in.
  • Meaning
    To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom.
0423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்

0423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்

0423. Epporul Yaryarvaaik Ketpinum

  • குறள் #
    0423
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.
  • விளக்கம்
    எப்பொருளை எந்தகையோர் சொல்லக் கேட்டாலும், அப்பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதுதான் அறிவாகும்.
  • Translation
    in English
    Though things diverse from divers sages’ lips we learn,
    ‘Tis wisdom’s part in each the true thing to discern.
  • Meaning
    To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.
0422. சென்ற இடத்தால் செலவிடா

0422. சென்ற இடத்தால் செலவிடா

0422. Sendra Idaththaal Selavidaa

  • குறள் #
    0422
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு.
  • விளக்கம்
    மனத்தைச் சென்ற வழியே செல்லவிடாது, நன்மை தீமைகளை ஆராய்ந்து தீமையிலிருந்து நீக்கி, நல்வழியில் செலுத்துவது அறிவு.
  • Translation
    in English
    Wisdom restrains, nor suffers mind to wander where it would;
    From every evil calls it back, and guides in way of good.
  • Meaning
    Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.
0421. அறிவற்றங் காக்குங் கருவி

0421. அறிவற்றங் காக்குங் கருவி

0421. Arivatrang Kaakkung Karuvi

  • குறள் #
    0421
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
    உள்ளழிக்க லாகா அரண்.
  • விளக்கம்
    அறிவானது, ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவரால் உள் புகுந்து அழிக்க முடியாத உள் கொட்டையுமாகும்.
  • Translation
    in English
    True wisdom wards off woes, A circling fortress high;
    Its inner strength man’s eager foes Unshaken will defy.
  • Meaning
    Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.
0420. செவியிற் சுவையுணரா வாயுணர்வின்

0420. செவியிற் சுவையுணரா வாயுணர்வின்

0420. Seviyir Suvaiyunaraa Vaayunarvin

  • குறள் #
    0420
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கேள்வி (Kelvi)
    Hearing
  • குறள்
    செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
    அவியினும் வாழினும் என்.
  • விளக்கம்
    செவியினால் நுகரப்படும் சுவையுணர்வை அறியாது, வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையை மட்டும் அறியும் மக்கள் இறந்தாலும், உயிர் வாழ்ந்தாலும் என்ன பயன்?
  • Translation
    in English
    His mouth can taste, but ear no taste of joy can give!
    What matter if he die, or prosperous live?
  • Meaning
    What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?
0419. நுணங்கிய கேள்விய ரல்லார்

0419. நுணங்கிய கேள்விய ரல்லார்

0419. Nunangiya Kelviya Rallaar

  • குறள் #
    0419
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கேள்வி (Kelvi)
    Hearing
  • குறள்
    நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
    வாயின ராதல் அரிது.
  • விளக்கம்
    நுட்பமாகிய கேள்வியைப் பெறாதவர், வணக்கமான சொல்லைப் பேசும் வாயை உடையவராக முடியாது.
  • Translation
    in English
    ‘Tis hard for mouth to utter gentle, modest word,
    When ears discourse of lore refined have never heard.
  • Meaning
    It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.
0418. கேட்பினுங் கேளாத் தகையவே

0418. கேட்பினுங் கேளாத் தகையவே

0418. Ketpinung Kelaath Thagaiyave

  • குறள் #
    0418
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கேள்வி (Kelvi)
    Hearing
  • குறள்
    கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
    தோட்கப் படாத செவி.
  • விளக்கம்
    அறிவுரைகளைக் கேட்டலாகிய கேள்வியால் துளைக்கப்படாத செவிகள், கேட்குந் தன்மையுடையனவாய் இருப்பினும் செவிட்டுத் தன்மையினவாகும்.
  • Translation
    in English
    Where teaching hath not oped the learner’s ear,
    The man may listen, but he scarce can hear.
  • Meaning
    The ear which has not been bored by instruction, although it hears, is deaf.
0417. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா

0417. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா

0417. Pizhaththunarndhum Pethaimai Sollaa

  • குறள் #
    0417
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கேள்வி (Kelvi)
    Hearing
  • குறள்
    பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
    தீண்டிய கேள்வி யவர்.
  • விளக்கம்
    பொருள்களை நுட்பமாக ஆராய்ந்தறிந்து நிறைந்த கேள்வியையுடையவர், தவறாக ஒன்றை அறிந்தவிடத்தும் அறியாமை பொருந்திய சொல்லைச் சொல்ல மாட்டார்.
  • Translation
    in English
    Not e’en through inadvertence speak they foolish word,
    With clear discerning mind who’ve learning’s ample lessons heard.
  • Meaning
    Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction).
0416. எனைத்தானும் நல்லவை கேட்க

0416. எனைத்தானும் நல்லவை கேட்க

0416. Enaiththaanum Nallavai Ketka

  • குறள் #
    0416
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கேள்வி (Kelvi)
    Hearing
  • குறள்
    எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்.
  • விளக்கம்
    ஒருவன் எத்துணைச் சிறியதாயினும் நல்லவற்றைக் கேட்பானாக; ஏனென்றால், அஃது அத்துணைச் சிறியதாயினும் அவனுக்குச் சிறந்த பெருமையைக் கொடுக்கும்.
  • Translation
    in English
    Let each man good things learn, for e’en as he
    Shall learn, he gains increase of perfect dignity.
  • Meaning
    Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.
0415. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்

0415. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்

0415. Izhukkal Udaiyuzhi Ootrukkol

  • குறள் #
    0415
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கேள்வி (Kelvi)
    Hearing
  • குறள்
    இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
    ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
  • விளக்கம்
    ஒழுக்கமுடையவரின் வாய்ச்சொல், வழுக்கும் தன்மையுடைய நிலத்தில் நடப்பவர்க்கு ஊன்றுகோல் போலத் துணை செய்யும்.
  • Translation
    in English
    Like staff in hand of him in slippery ground who strays
    Are words from mouth of those who walk in righteous ways.
  • Meaning
    The words of the good are like a staff in a slippery place.
0414. கற்றில னாயினுங் கேட்க

0414. கற்றில னாயினுங் கேட்க

0414. Katrila Naayinung Ketka

  • குறள் #
    0414
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கேள்வி (Kelvi)
    Hearing
  • குறள்
    கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
    ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
  • விளக்கம்
    கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்த காலத்தில் ஊன்றுகோல் போல் துணையாகும்; ஆகையால், ஒருவன் நூல்களைக் கற்கவில்லையாயினும் கற்றறிந்தார் சொல்லக் கேட்பானாக.
  • Translation
    in English
    Though learning none hath he, yet let him hear alway:
    In weakness this shall prove a staff and stay.
  • Meaning
    Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.
0413. செவியுணவிற் கேள்வி யுடையார்

0413. செவியுணவிற் கேள்வி யுடையார்

0413. Seviyunavir Kelvi Yudaiyaar

  • குறள் #
    0413
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கேள்வி (Kelvi)
    Hearing
  • குறள்
    செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
    ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
  • விளக்கம்
    செவியுணவாகிய கேள்வியினை உடையவர் இந்நிலத்தில் வாழ்பவராயினும், அவியாகிய உணவையுடைய தேவரோடு ஒப்பர். (அவி – வேள்வித் தீயிலிடும் உணவு).
  • Translation
    in English
    Who feed their ear with learned teachings rare,
    Are like the happy gods oblations rich who share.
  • Meaning
    Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.
0412. செவிக்குண வில்லாத போழ்து

0412. செவிக்குண வில்லாத போழ்து

0412. Sevikkuna Villaatha Pozhthu

  • குறள் #
    0412
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கேள்வி (Kelvi)
    Hearing
  • குறள்
    செவிக்குண வில்லாத போழ்து சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும்.
  • விளக்கம்
    காதுக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது, வயிற்றுக்கும் சிறுது உணவு கொடுக்கலாம்.
  • Translation
    in English
    When ’tis no longer time the listening ear to feed
    With trifling dole of food supply the body’s need.
  • Meaning
    When there is no food for the ear, give a little also to the stomach.
0411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்

0411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்

0411. Selvaththut Selvanj Sevichchelvam

  • குறள் #
    0411
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கேள்வி (Kelvi)
    Hearing
  • குறள்
    செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்து ளெல்லாந் தலை.
  • விளக்கம்
    செல்வங்களுள் சிறப்புடைய செல்வமாவது கேள்விச் செல்வம். அக்கேள்விச் செல்வம் செல்வங்களிலெல்லாம் முதன்மையானது.
  • Translation
    in English
    Wealth of wealth is wealth acquired be ear attent;
    Wealth mid all wealth supremely excellent.
  • Meaning
    Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.
0410. விலங்கொடு மக்கள் அனையர்

0410. விலங்கொடு மக்கள் அனையர்

0410. Vilangodu Makkal Anaiyar

  • குறள் #
    0410
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்லாமை (Kallaamai)
    Ignorance
  • குறள்
    விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
    கற்றாரோடு ஏனை யவர்.
  • விளக்கம்
    விலங்கொடு நோக்க மக்கள் எவ்வளவு மேன்மையுடையவரோ, அவ்வளவு தாழ்ந்தவர் நூலைக் கற்றவரோடு நோக்கக் கல்லாதவர்.
  • Translation
    in English
    Learning’s irradiating grace who gain,
    Others excel, as men the bestial train.
  • Meaning
    As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.
0409. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார்

0409. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார்

0409. Merpirandhaa Raayinum Kallaathaar

  • குறள் #
    0409
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்லாமை (Kallaamai)
    Ignorance
  • குறள்
    மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
    கற்றார் அனைத்திலர் பாடு.
  • விளக்கம்
    கல்லாதவர் உயர் குலத்தில் பிறந்தவராயினும், கீழ்க்குலத்தில் பிறந்த கற்றவரை ஒத்த பெருமையை உடையவராகார்.
  • Translation
    in English
    Lower are men unlearned, though noble be their race,
    Than low-born men adorned with learning’s grace.
  • Meaning
    The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.
0408. நல்லார்கண் பட்ட வறுமையின்

0408. நல்லார்கண் பட்ட வறுமையின்

0408. Nallaarkan Patta Varumaiyin

  • குறள் #
    0408
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்லாமை (Kallaamai)
    Ignorance
  • குறள்
    நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
    கல்லார்கண் பட்ட திரு.
  • விளக்கம்
    கற்றவரிடத்தில் உண்டான வருமையைவிடக் கல்லாதவனிடத்தில் உண்டான செல்வம் மிக்க துன்பத்தைக் கொடுக்கும்.
  • Translation
    in English
    To men unlearned, from fortune’s favour greater-evil springs
    Than poverty to men of goodly wisdom brings.
  • Meaning
    Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.
0407. நுண்மாண் நுழைபுலம் இல்லான்

0407. நுண்மாண் நுழைபுலம் இல்லான்

0407. Nunmaan Nuzhaipulam Illaan

  • குறள் #
    0407
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்லாமை (Kallaamai)
    Ignorance
  • குறள்
    நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
    மண்மாண் புனைபாவை யற்று.
  • விளக்கம்
    நுண்ணியதாய் மாட்சிமைப்பட்டு ஆராயும் அறிவில்லாதவனது அழகின் சிறப்பு, மண்ணால் மாண்புறச் செய்யப்பட்ட பாவையின் அழகு போன்றதாகும்.
  • Translation
    in English
    Who lack the power of subtle, large, and penetrating sense,
    Like puppet, decked with ornaments of clay, their beauty’s vain pretence.
  • Meaning
    The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite
    works, is like (the beauty and goodness) of a painted earthen doll.
0406. உளரென்னும் மாத்திரையர் அல்லால்

0406. உளரென்னும் மாத்திரையர் அல்லால்

0406. Ularennum Maaththiraiyar Allaal

  • குறள் #
    0406
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்லாமை (Kallaamai)
    Ignorance
  • குறள்
    உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
    களரனையர் கல்லா தவர்.
  • விளக்கம்
    கல்லாதவர் உயிரோடிருக்கின்றார் என்று சொல்லப்படும் அளவினரேயன்றிப் பயனில்லாமையால் அவர் விளையாத உவர் நிலத்தைப் போன்றவராவர்.
  • Translation
    in English
    ‘They are’: so much is true of men untaught;
    But, like a barren field, they yield us nought!
  • Meaning
    The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.
0405. கல்லா ஒருவன் தகைமை

0405. கல்லா ஒருவன் தகைமை

0405. Kallaa Oruvan Thagaimai

  • குறள் #
    0405
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்லாமை (Kallaamai)
    Ignorance
  • குறள்
    கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
    சொல்லாடச் சோர்வு படும்.
  • விளக்கம்
    கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு கற்றவன் அவனைக் கண்டு உரையாட, அப்பேச்சினால் கெடும்.
  • Translation
    in English
    As worthless shows the worth of man unlearned,
    When council meets, by words he speaks discerned.
  • Meaning
    The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of thelearned).
0404. கல்லாதான் ஒட்பம் கழியநன்

0404. கல்லாதான் ஒட்பம் கழியநன்

0404. Kallaathaan Otpam Kazhiyanan

  • குறள் #
    0404
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்லாமை (Kallaamai)
    Ignorance
  • குறள்
    கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
    கொள்ளார் அறிவுடை யார்.
  • விளக்கம்
    நூல்களைக் கல்லாதவனது அறிவு மிக நன்றாக இருப்பினும், அதனை அறிவுடைமையாகக் கற்றவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
  • Translation
    in English
    From blockheads’ lips, when words of wisdom glibly flow,
    The wise receive them not, though good they seem to show.
  • Meaning
    Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.
0403. கல்லா தவரும் நனிநல்லர்

0403. கல்லா தவரும் நனிநல்லர்

0403. Kallaa Thavarum Naninallar

  • குறள் #
    0403
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்லாமை (Kallaamai)
    Ignorance
  • குறள்
    கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
    சொல்லா திருக்கப் பெறின்.
  • விளக்கம்
    கற்றவர் உள்ள சபையில் யாதொன்றையும் பேசாதிருப்பின், கால்லாதவரும் மிக நல்லவராகக் கொள்ளப்படுவார்.
  • Translation
    in English
    The blockheads, too, may men of worth appear,
    If they can keep from speaking where the learned hear!
  • Meaning
    The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.
0402. கல்லாதான் சொற்கா முறுதல்

0402. கல்லாதான் சொற்கா முறுதல்

0402. Kallaathaan Sorkaa Muruthal

  • குறள் #
    0402
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்லாமை (Kallaamai)
    Ignorance
  • குறள்
    கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
    இல்லாதாள் பெண்காமுற் றற்று.
  • விளக்கம்
    கல்வி அறிவில்லாதவன் கற்றோர் அவையில் பேச விரும்புதல், இரண்டு தனங்களும் இல்லாத பெண், பெண் தன்மையை விரும்புவது போன்றதாகும்.
  • Translation
    in English
    Like those who doat on hoyden’s undeveloped charms are they,
    Of learning void, who eagerly their power of words display.
  • Meaning
    The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.
0401. அரங்கின்றி வட்டாடி யற்றே

0401. அரங்கின்றி வட்டாடி யற்றே

0401. Arangindri Vattaadi Yatre

  • குறள் #
    0401
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்லாமை (Kallaamai)
    Ignorance
  • குறள்
    அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
    நூலின்றிக் கோட்டி கொளல்.
  • விளக்கம்
    அறிவு நிரம்புதற்குக் காரணமான நூல்களைக் கற்காது ஒருவன், கற்றவர் உள்ள சபையில் பேசுதல், ஆட்டம் ஆட வகுக்கப்பட்ட இடமின்றிச் சூதாடியது போன்றதாகும்.
  • Translation
    in English
    Like those at draughts would play without the chequered square,
    Men void of ample lore would counsels of the learned share.
  • Meaning
    To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.
0400. கேடில் விழுச்செல்வம் கல்வி

0400. கேடில் விழுச்செல்வம் கல்வி

0400. Kedil Vizhuchchelvam Kalvi

  • குறள் #
    0400
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்வி (Kalvi)
    Learning
  • குறள்
    கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை.
  • விளக்கம்
    ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வமாவது கல்வியே. அதைத்தவிர மற்றைய செல்வங்களெல்லாம் செல்வங்களாக மாட்டா.
  • Translation
    in English
    Learning is excellence of wealth that none destroy;
    To man nought else affords reality of joy.
  • Meaning
    Learning is the true imperishable riches; all other things are not riches.
0399. தாமின் புறுவது உலகின்

0399. தாமின் புறுவது உலகின்

0399. Thaamin Puruvathu Ulagin

  • குறள் #
    0399
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்வி (Kalvi)
    Learning
  • குறள்
    தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார்.
  • விளக்கம்
    தமக்கு இன்பம் தருகின்ற கல்வியைத் தம் வாயிலாகப் பிறர் கேட்டு இன்பமடைதலைக் கண்டு, மேலும் அக்கல்வியை விரும்புவர்.
  • Translation
    in English
    Their joy is joy of all the world, they see; thus more
    The learners learn to love their cherished lore.
  • Meaning
    The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it.
0398. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி

0398. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி

0398. Orumaikkan Thaankatra Kalvi

  • குறள் #
    0398
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்வி (Kalvi)
    Learning
  • குறள்
    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து.
  • விளக்கம்
    ஒருவனுக்கு ஒரு பிறப்பில் கற்ற கல்வியறிவு, வரும் பிறப்புகளிலும் சென்று பாதுகாத்தலை உடையதாகும்.
  • Translation
    in English
    The man who store of learning gains,
    In one, through seven worlds, bliss attains.
  • Meaning
    The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.
0397. யாதானும் நாடாமால் ஊராமால்

0397. யாதானும் நாடாமால் ஊராமால்

0397. Yaathaanum Naadaamaal Ooraamaal

  • குறள் #
    0397
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்வி (Kalvi)
    Learning
  • குறள்
    யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
    சாந்துணையுங் கல்லாத வாறு.
  • விளக்கம்
    கற்றவனுக்கு எந்த ஒரு நாடும், எந்த ஓர் ஊரும் தன் நாடும், தன் ஊருமாகும். அவ்வாறிருக்க, ஒருவன் சாகுமளவும் கற்காதிருப்பது ஏன்?
  • Translation
    in English
    The learned make each land their own, in every city find a home;
    Who, till they die; learn nought, along what weary ways they roam!
  • Meaning
    How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?
0396. தொட்டனைத் தூறும் மணற்கேணி

0396. தொட்டனைத் தூறும் மணற்கேணி

0396. Thottanaith Thoorum Manarkeni

  • குறள் #
    0396
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்வி (Kalvi)
    Learning
  • குறள்
    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.
  • விளக்கம்
    மணலிடத்துள்ள கேணி தோண்டிய அளவுக்கேற்ப நீர் ஊரும்; அதுபோல மக்களுக்கு அவர்கள் கற்ற அளவுக்கேற்ப அறிவு பெருகும்.
  • Translation
    in English
    In sandy soil, when deep you delve, you reach the springs below;
    The more you learn, the freer streams of wisdom flow.
  • Meaning
    Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.
0395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங்

0395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங்

0395. Udaiyaarmun Illaarpol Yekkatrung

  • குறள் #
    0395
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்வி (Kalvi)
    Learning
  • குறள்
    உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்.
  • விளக்கம்
    செல்வர் முன் வறியவர் நிற்பதுபோன்று, கற்றவர் முன் வருந்திப் பணிந்து நின்றாயினும் கல்வி கற்றவரே உயர்ந்தோராவர்; கல்லாதவர் தாழ்ந்தோராவர்.
  • Translation
    in English
    With soul submiss they stand, as paupers front a rich man’s face;
    Yet learned men are first; th’unlearned stand in lowest place.
  • Meaning
    The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.
0394. உவப்பத் தலைக்கூடி உள்ளப்

0394. உவப்பத் தலைக்கூடி உள்ளப்

0394. Uvappath Thalaikkoodi Ullap

  • குறள் #
    0394
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்வி (Kalvi)
    Learning
  • குறள்
    உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
    அனைத்தே புலவர் தொழில்.
  • விளக்கம்
    பிறர் மகிழுமாறு அவர்களோடு கூடியிருந்து, பின்னர், ‘இவரை எப்போது காண்போம்’ என்று நினைக்குமாறு பிரிதலே கற்றறிந்தாரது செயலாகும்.
  • Translation
    in English
    You meet with joy, with pleasant thought you part;
    Such is the learned scholar’s wonderous art!
  • Meaning
    It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think
    (Oh! when shall we meet them again.)
0393. கண்ணுடையர் என்பவர் கற்றோர்

0393. கண்ணுடையர் என்பவர் கற்றோர்

0393. Kannudaiyaar Enbavar Katror

  • குறள் #
    0393
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்வி (Kalvi)
    Learning
  • குறள்
    கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்.
  • விளக்கம்
    கண்ணுடையவர் என்று சொல்லுவதற்குரியவர் கற்றவர். கல்லாதவர் தம் முகத்தில் இரண்டு புண்களை உடையவராவர்.
  • Translation
    in English
    Men who learning gain have eyes, men say;
    Blockheads’ faces pairs of sores display.
  • Meaning
    The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.
0392. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப

0392. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப

0392. Ennenba Yenai Ezhththenba

  • குறள் #
    0392
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்வி (Kalvi)
    Learning
  • குறள்
    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
  • விளக்கம்
    எண்ணென்று சொல்லப்படுவனவும், எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டினையும், அறிவுடையோர் மக்களுக்குக் கண் என்று கூறுவர்.
  • Translation
    in English
    The twain that lore of numbers and of letters give
    Are eyes, the wise declare, to all on earth that live.
  • Meaning
    Letters and numbers are the two eyes of man.
0391. கற்க கசடறக் கற்பவை

0391. கற்க கசடறக் கற்பவை

0391. Karka Kasadarak Karpavai

  • குறள் #
    0391
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கல்வி (Kalvi)
    Learning
  • குறள்
    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.
  • விளக்கம்
    ஒருவன் பயில வேண்டிய நூல்களைப் பழுதறப் பயிலுதல் வேண்டும். அவ்வாறு பயின்றதன் பின்னர், அந்நூல்களில் சொல்லப்பட்ட நெறியில் நடத்தல் வேண்டும்.
  • Translation
    in English
    So learn that you may full and faultless learning gain,
    Then in obedience meet to lessons learnt remain.
  • Meaning
    Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.
0390. கொடையளி செங்கோல் குடியோம்பல்

0390. கொடையளி செங்கோல் குடியோம்பல்

0390. Kodaiyali Senkol Kudiyombal

  • குறள் #
    0390
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இறைமாட்சி (Iraimaatchi)
    The Greatness of a King
  • குறள்
    கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
    உடையானாம் வேந்தர்க் கொளி.
  • விளக்கம்
    கொடையும், அன்பும், செங்கோல் முறையும், குடிகளைக் காத்தலும் ஆகிய இந்நான்கு செயல்களையும் உடையவன் அரசர்களுக்கெல்லாம் விளக்குப் போன்றவனாவான்.
  • Translation
    in English
    Gifts, grace, right sceptre, care of people’s weal;
    These four a light of dreaded kings reveal.
  • Meaning
    He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people.
0389. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை

0389. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை

0389. Sevigaippach Chorporukkum Panbudai

  • குறள் #
    0389
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இறைமாட்சி (Iraimaatchi)
    The Greatness of a King
  • குறள்
    செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
    கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
  • விளக்கம்
    குறை கூறுபவரின் சொற்கள், தன் காதுகட்குக் கசப்பாயிருப்பினும், அவற்றின் பயன் கருதி அவற்றைப் பொறுத்துக்கொள்ளும் பண்புடைய அரசனின் குடைக்குக் கீழ் உலகம் முழுதும் தங்கும்.
  • Translation
    in English
    The king of worth, who can words bitter to his ear endure,
    Beneath the shadow of his power the world abides secure.
  • Meaning
    The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.
0388. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்

0388. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்

0388. Muraiseithu Kaappaatrum Mannavan

  • குறள் #
    0388
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இறைமாட்சி (Iraimaatchi)
    The Greatness of a King
  • குறள்
    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறையென்று வைக்கப் படும்.
  • விளக்கம்
    நீதி செலுத்தி மக்களை வருந்தாமல் காக்கின்ற அரசன், பிறப்பால் மனிதனாயினும் செயலினால் கடவுள் என்று மதிக்கப்படுவான்.
  • Translation
    in English
    Who guards the realm and justice strict maintains,
    That king as god o’er subject people reigns.
  • Meaning
    That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).
0387. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத்

0387. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத்

0387. Insolaal Eeththalikka Vallaarkkuth

  • குறள் #
    0387
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இறைமாட்சி (Iraimaatchi)
    The Greatness of a King
  • குறள்
    இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
    தான்கண் டனைத்திவ் வுலகு.
  • விளக்கம்
    இன்சொல்லுடன் பொருள் கொடுத்துப் பாதுகாக்கக் கூடிய அரசனுக்கு, இந்த உலகத்திலேயே அவன் விரும்பிய பொருளெல்லாம் கிடைக்கும்.
  • Translation
    in English
    With pleasant speech, who gives and guards with powerful liberal hand,
    He sees the world obedient all to his command.
  • Meaning
    The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him.
0386. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன்

0386. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன்

0386. Kaatchik Keliyan Kadunchollan

  • குறள் #
    0386
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இறைமாட்சி (Iraimaatchi)
    The Greatness of a King
  • குறள்
    காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
    மீக்கூறும் மன்னன் நிலம்
  • விளக்கம்
    அரசன், குறைகளைத் தெரிவிக்க வரும் குடிமக்களுக்குக் காண்பதற்கு எளியவனாகவும், கடுஞ்சொல் இல்லாதவனாகவும் இருப்பானானால், அவ்வரசனது நாட்டை உலகத்தவர் உயர்வாகக் கூறுவர்.
  • Translation
    in English
    Where king is easy of access, where no harsh word repels,
    That land’s high praises every subject swells.
  • Meaning
    The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language.
0385. இயற்றலும் ஈட்டலுங் காத்தலும்

0385. இயற்றலும் ஈட்டலுங் காத்தலும்

0385. Iyatralum Eettalung Kaaththalum

  • குறள் #
    0385
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இறைமாட்சி (Iraimaatchi)
    The Greatness of a King
  • குறள்
    இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்ல தரசு.
  • விளக்கம்
    பொருள் வரும் வழிகளை உண்டாக்குவதிலும், பொருளைச் செர்த்தலிலும், பாதுகாத்தலிலும், அதனை நல்வழியில் செலவிடுதலிலும் வல்லவனே அரசனாவன்.
  • Translation
    in English
    A king is he who treasure gains, stores up, defends,
    And duly for his kingdom’s weal expends.
  • Meaning
    He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.
0384. அறனிழுக்கா தல்லவை நீக்கி

0384. அறனிழுக்கா தல்லவை நீக்கி

0384. Aranizhukkaa Thallaavai Neekki

  • குறள் #
    0384
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இறைமாட்சி (Iraimaatchi)
    The Greatness of a King
  • குறள்
    அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
    மானம் உடைய தரசு.
  • விளக்கம்
    நீதி, நெறியில் தவறாது நின்று, குற்றங்களைப் போக்கி, வீரத்தில் குறையாத பெருமையுடையவன் சிறந்த அரசனாவன்.
  • Translation
    in English
    Kingship, in virtue failing not, all vice restrains,
    In courage failing not, it honour’s grace maintains.
  • Meaning
    He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.
0383. தூங்காமை கல்வி துணிவுடைமை

0383. தூங்காமை கல்வி துணிவுடைமை

0383. Thoongaamai Kalvi Thunivudaimai

  • குறள் #
    0383
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இறைமாட்சி (Iraimaatchi)
    The Greatness of a King
  • குறள்
    தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலனான் பவர்க்கு.
  • விளக்கம்
    நாட்டை ஆளுகின்ற அரசனுக்கு விரைந்து செய்தல், கல்வியுடைமை, ஆண்மையுடைமை ஆகிய இம்மூன்று குணங்களும் எப்பொழுதும் நீங்காமல் இருக்க வேண்டும்.
  • Translation
    in English
    A sleepless promptitude, knowledge, decision strong:
    These three for aye to rulers of the land belong.
  • Meaning
    These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.
0382. அஞ்சாமை ஈகை அறிவூக்கம்

0382. அஞ்சாமை ஈகை அறிவூக்கம்

0382. Anjaamai Eegai Arivookkam

  • குறள் #
    0382
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இறைமாட்சி (Iraimaatchi)
    The Greatness of a King
  • குறள்
    அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
  • விளக்கம்
    அரசனுக்கு இயல்பாவது மனஉறுதி, கொடை, அறிவு, ஊக்கம் ஆகிய இந்நான்கும் எப்பொழுதும் குறையாமல் இருத்தல்.
  • Translation
    in English
    Courage, a liberal hand, wisdom, and energy: these four
    Are qualities a king adorn for evermore.
  • Meaning
    Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character.
0381. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண்

0381. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண்

0381. Padaikoodi Koozhamaichchu Natparan

  • குறள் #
    0381
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இறைமாட்சி (Iraimaatchi)
    The Greatness of a King
  • குறள்
    படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு.
  • விளக்கம்
    படை, குடி, பொருள், அமைச்சர், நண்பர், கோட்டை என்னும் உறுப்பு ஆறனையும் உடையவன், அரசருள் சிங்கம் போன்றவனாவான்.
  • Translation
    in English
    An army, people, wealth, a minister, friends, fort: six things-
    Who owns them all, a lion lives amid the kings.
  • Meaning
    He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.