Tag: Friendship

0790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம்

0790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம்

0790. Inaiyar Ivaremakku Innamyaam

  • குறள் #
    0790
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
    புனையினும் புல்லென்னும் நட்பு.
  • விளக்கம்
    ‘இவர் நமக்கு இவ்வளவு அன்பினர்; யாம் இவர்க்கு இத்தன்மையேம்’ என்று ஒருவரை ஒருவர் புகழ்ந்து சொன்னாலும் நட்பு சிறுமையாய்த் தோன்றும்.
  • Translation
    in English
    Mean is the friendship that men blazon forth,
    ‘He’s thus to me’ and ‘such to him my worth’.
  • Meaning
    Though friends may praise one another saying, “He is so intimate with us, and we so much (with him)”; (still) such friendship will appear mean.
0789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்

0789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்

0789. Natpirkku Veetrirukkai Yaathenil

  • குறள் #
    0789
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
    ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
  • விளக்கம்
    நட்பிற்கு உயர்ந்த இடம் எது எனில், எக்காலத்தும் மாறுபாடின்றி முடிந்த வரையில் நண்பனைத் தளராமல் தாங்கும் திண்மையாகும்.
  • Translation
    in English
    And where is friendship’s royal seat? In stable mind,
    Where friend in every time of need support may find.
  • Meaning
    Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth).
0788. உடுக்கை இழந்தவன் கைபோல

0788. உடுக்கை இழந்தவன் கைபோல

0788. Udukkai Izhandhavan Kaipola

  • குறள் #
    0788
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.
  • விளக்கம்
    ஆடை அவிழ்ந்தவனுடைய கை அதைப் பிடிப்பதற்கு விரைந்து செல்வதுபோலத் துன்பம் நேர்ந்தபோது விரைந்து சென்று அதனை நீக்குபவனே நண்பன் ஆவான்.
  • Translation
    in English
    As hand of him whose vesture slips away,
    Friendship at once the coming grief will stay.
  • Meaning
    (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).
0787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து

0787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து

0787. Azhivi Navaineekki Aaruyiththu

  • குறள் #
    0787
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
    அல்லல் உழப்பதாம் நட்பு.
  • விளக்கம்
    நட்பாவது, கேட்ட வழியில் நண்பன் செல்வதை நீக்கி, நல்வழியில் செலுத்தி, துன்பம் வந்தவிடத்து உடனிருந்து அனுபவிப்பதே யாகும்.
  • Translation
    in English
    Friendship from ruin saves, in way of virtue keeps;
    In troublous time, it weeps with him who weeps.
  • Meaning
    (True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him).
0786. முகநக நட்பது நட்பன்று

0786. முகநக நட்பது நட்பன்று

0786. Muganaga Natpathu Natpandru

  • குறள் #
    0786
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு.
  • விளக்கம்
    ஒருவருடன் முகம் மட்டும் மலரும் வகையில் நட்புக் கொள்வது நட்பன்று; அன்பால் மனமும் மலர நட்புக் கொள்வதே நட்பாகும்.
  • Translation
    in English
    Not the face’s smile of welcome shows the friend sincere,
    But the heart’s rejoicing gladness when the friend is near.
  • Meaning
    The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.
0785. புணர்ச்சி பழகுதல் வேண்டா

0785. புணர்ச்சி பழகுதல் வேண்டா

0785. Punarchchi Pazhaguthal Vendaa

  • குறள் #
    0785
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்.
  • விளக்கம்
    நட்புக்குச் சேர்ந்திருத்தலும், பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டாம். ஒத்த உணர்ச்சியே நட்பு எற்படுதற்குரிய உரிமையைத் தரும்.
  • Translation
    in English
    Not association constant, not affection’s token bind;
    ‘Tis the unison of feeling friends unites of kindred mind.
  • Meaning
    Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.
0784. நகுதற் பொருட்டன்று நட்டல்

0784. நகுதற் பொருட்டன்று நட்டல்

0784. Naguthar Poruttandru Nattal

  • குறள் #
    0784
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
    மேற்செனறு இடித்தற் பொருட்டு.
  • விளக்கம்
    நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்கன்று; அவரிடத்தில் தீய செய்கை கண்டபோது, முற்பட்டுச் சென்று கண்டித்து அறிவுரை சொல்லுதற்கே யாகும்.
  • Translation
    in English
    Nor for laughter only friendship all the pleasant day,
    But for strokes of sharp reproving, when from right you stray.
  • Meaning
    Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.
0783. நவில்தொறும் நூல்நயம் போலும்

0783. நவில்தொறும் நூல்நயம் போலும்

0783. Navilthorum Noolnayam Polum

  • குறள் #
    0783
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு.
  • விளக்கம்
    நற்குணமுடையார் தம்முட் கொண்ட நட்பு, பழகும்போதெல்லாம், அவர்கட்கு இன்பம் அளித்தல், நூற் பொருள் கற்குந்தோறும் கற்பவர்க்கு இன்பம் செய்தல் போன்றதாகும்.
  • Translation
    in English
    Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;
    So the heart by use grows fonder, Bound in friendship with the good.
  • Meaning
    Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.
0782. நிறைநீர நீரவர் கேண்மை

0782. நிறைநீர நீரவர் கேண்மை

0782. Niraineera Neeravar Kenmai

  • குறள் #
    0782
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
    பின்னீர பேதையார் நட்பு.
  • விளக்கம்
    அறிவுடையவர் நட்பு சந்திரனது பிறை நிறைவது போல நாள்தொறும் வளரும் தன்மையுடையது; அறிவில்லாதவர் நட்பு நிறைமதி பின் குறைவதுபோல நாள்தொறும் குறையுந்தன்மை யுடையது.
  • Translation
    in English
    Friendship with men fulfilled of good Waxes like the crescent moon;
    Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.
  • Meaning
    The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.
0781. செயற்கரிய யாவுள நட்பின்

0781. செயற்கரிய யாவுள நட்பின்

0781. Seyarkariya Yaavula Natpin

  • குறள் #
    0781
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) – Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
    வினைக்கரிய யாவுள காப்பு.
  • விளக்கம்
    நட்புப் போலச் செய்து கொள்ளுதற்கு அரிய பொருட்கள் எவை உள்ளன? அதைப்போல் பகைவர் செயலைத் தடுத்துக் காப்பதற்கு எவை உள்ளன?
  • Translation
    in English
    What so hard for men to gain as friendship true?
    What so sure defence ‘gainst all that foe can do?
  • Meaning
    What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one’s foes) ?