Tag: Essentials of a State

0750. எனைமாட்சித் தாகியக் கண்ணும்

0750. எனைமாட்சித் தாகியக் கண்ணும்

0750. Enaimaatchith Thaagiyak Kannum

  • குறள் #
    0750
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
    இல்லார்கண் இல்லது அரண்.
  • விளக்கம்
    அரண் எல்லாச் சிறப்புக்களையும் உடையதாயிருப்பினும், செயல் செய்பவர் சிறப்பிலர் என்றால், அரண் இருந்தும் இல்லாதது போலாகும்.
  • Translation
    in English
    Howe’er majestic castled walls may rise,
    To craven souls no fortress strength supplies.
  • Meaning
    Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.
0749. முனைமுகத்து மாற்றலர் சாய

0749. முனைமுகத்து மாற்றலர் சாய

0749. Munaimugaththu Maatralar Saaya

  • குறள் #
    0749
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
    வீறெய்தி மாண்ட தரண்.
  • விளக்கம்
    போர் நடக்கும் இடத்தில் பகைவர் அழியும்படி, உள்ளே நிற்பவர் செய்யும் போர்ச்செயலால் உயர்வு பெற்றுச் சிறந்ததே அரண்.
  • Translation
    in English
    At outset of the strife a fort should foes dismay;
    And greatness gain by deeds in every glorious day.
  • Meaning
    A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.
0748. முற்றாற்றி முற்றி யவரையும்

0748. முற்றாற்றி முற்றி யவரையும்

0748. Mutritru Mutri Yavaraiyum

  • குறள் #
    0748
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
    பற்றியார் வெல்வது அரண்.
  • விளக்கம்
    முற்றுகையிட வல்லவராகி வந்து முற்றுகையிட்ட பகைவரை, உள்ளே நின்றவர் இடம்விட்டுப் பெயராமல் நின்று போர் புரிந்து வெல்லும்படி அமைந்ததே அரண்.
  • Translation
    in English
    Howe’er the circling foe may strive access to win,
    A fort should give the victory to those who guard within.
  • Meaning
    That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.
0747. முற்றியும் முற்றா தெறிந்தும்

0747. முற்றியும் முற்றா தெறிந்தும்

0747. Mutriyum Mutraa Therindhum

  • குறள் #
    0747
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
    பற்றற் கரியது அரண்.
  • விளக்கம்
    பகைவர் முற்றுகையிட்டுச் சூழ்ந்தும், அவ்வாறு சூழாது ஒருமுகமாகப் போர்செய்தும், கீழ் அறை அறுத்து உள்ளே நுழைந்தும் கைப்பற்றுதற்கரியதே அரண்.
  • Translation
    in English
    A fort should be impregnable to foes who gird it round,
    Or aim there darts from far, or mine beneath the ground.
  • Meaning
    A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.
0746. எல்லாப் பொருளும் உடைத்தாய்

0746. எல்லாப் பொருளும் உடைத்தாய்

0746. Ellap Porulum Udaiththai

  • குறள் #
    0746
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
    நல்லாள் உடையது அரண்.
  • விளக்கம்
    உள்ளே இருப்பவருக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் உடையதாய், பகைவர் தாக்கும்போது போர் செய்ய உதவும் நல்ல வீரரை உடையதாய் உள்ளதே அரண்.
  • Translation
    in English
    A fort, with all munitions amply stored,
    In time of need should good reserves afford.
  • Meaning
    A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).
0745. கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி

0745. கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி

0745. Kolarkarithaaik Kondakoozhth Thaagi

  • குறள் #
    0745
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
    நிலைக்கெளிதாம் நீரது அரண்.
  • விளக்கம்
    பகைவர் கைப்பற்றுதற்கரியதாய், உள்ளே பலவகை உணவுப் பொருட்களை உடையதாய், வீரர் நின்று போர் செய்வதற்கு வாய்ப்புடையதாய் உள்ளதே அரண்.
  • Translation
    in English
    Impregnable, containing ample stores of food,
    A fort for those within, must be a warlike station good.
  • Meaning
    A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.
0744. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி

0744. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி

0744. Sirukaapir Peridaththa Thaagi

  • குறள் #
    0744
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
    ஊக்கம் அழிப்ப தரண்.
  • விளக்கம்
    காக்க வேண்டிய இடம் சிறியதாயும், அகன்ற இடத்தையுடையதாயும், சூழ்ந்த பகைவைன் ஊக்கத்தை அழிப்பதாயும் உள்ளதே அரண்.
  • Translation
    in English
    A fort must need but slight defence, yet ample be,
    Defying all the foeman’s energy.
  • Meaning
    A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.
0743. உயர்வகலம் திண்மை அருமைஇந்

0743. உயர்வகலம் திண்மை அருமைஇந்

0743. Uyarvagalam Thinmai Arumaiin

  • குறள் #
    0743
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
    அமைவரண் என்றுரைக்கும் நூல்.
  • விளக்கம்
    உயர்ச்சியும் அகலமும் வலிமையும் பகைவரால் கடத்தற் கருமையும் ஆகிய நான்கும் பொருந்தியதே சிறந்த அரண் என நூலுரைக்கும்.
  • Translation
    in English
    Height, breadth, strength, difficult access:
    Science declares a fort must these possess.
  • Meaning
    The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility.
0742. மணிநீரும் மண்ணும் மலையும்

0742. மணிநீரும் மண்ணும் மலையும்

0742. Manineerum Mannum Malaiyum

  • குறள் #
    0742
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடைய தரண்.
  • விளக்கம்
    மணிபோல் தெளிந்த நீர்நிலையுடைய அகழியும், வெளி நிலமும், மலையும் அழகிய நிழல் தரும் காவற்காடும் உடையதே கோட்டை.
  • Translation
    in English
    A fort is that which owns fount of waters crystal clear,
    An open space, a hill, and shade of beauteous forest near.
  • Meaning
    A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.
0741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள்

0741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள்

0741. Aatru Bavarkkum Aranporul

  • குறள் #
    0741
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
    போற்று பவர்க்கும் பொருள்.
  • விளக்கம்
    படையெடுத்துச் சென்று போர் செய்பவர்க்கும் கோட்டை சிறந்த துணையாகும்; பகைவருக்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்பவர்க்கும் சிறந்த துணையாகும்.
  • Translation
    in English
    A fort is wealth to those who act against their foes;
    Is wealth to them who, fearing, guard themselves from woes.
  • Meaning
    A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.
0740. ஆங்கமை வெய்தியக் கண்ணும்

0740. ஆங்கமை வெய்தியக் கண்ணும்

0740. Aangamai Veithiyak Kannum

  • குறள் #
    0740
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    நாடு (Naadu)
    The Land
  • குறள்
    ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
    வேந்தமை வில்லாத நாடு.
  • விளக்கம்
    நல்ல அரசன் பொருந்தாத நாடு மேலே கூறிய வளங்களையெல்லாம் பெற்றிருந்தபோதும் அவற்றால் பயன் பெறாதாம்.
  • Translation
    in English
    Though blest with all these varied gifts’ increase,
    A land gains nought that is not with its king at peace.
  • Meaning
    Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects.
0739. நாடென்ப நாடா வளத்தன

0739. நாடென்ப நாடா வளத்தன

0739. Naadenba Naadaa Valaththana

  • குறள் #
    0739
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    நாடு (Naadu)
    The Land
  • குறள்
    நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
    நாட வளந்தரு நாடு.
  • விளக்கம்
    வாழ்வார் தேடி வருந்தாமல் தானே வரும் செல்வத்தை உடைய நாடே நாடு எனப்படும்; வருந்தித் தேடச் செல்வம் வரும் நாடு நாடு ஆகமாட்டாது.
  • Translation
    in English
    That is a land that yields increase unsought,
    That is no land whose gifts with toil are bought.
  • Meaning
    The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.
0738. பிணியின்மை செல்வம் விளைவின்பம்

0738. பிணியின்மை செல்வம் விளைவின்பம்

0738. Piniyinmai Selvam Vilaivinbam

  • குறள் #
    0738
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    நாடு (Naadu)
    The Land
  • குறள்
    பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிவ் வைந்து.
  • விளக்கம்
    நோயின்மை, செல்வம், விளைவு, மகிழ்ச்சி, காவல் என்னும் ஐந்தினையும் பெற்றிருத்தல் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
  • Translation
    in English
    A country’s jewels are these five: unfailing health,
    Fertility, and joy, a sure defence, and wealth.
  • Meaning
    Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom.
0737. இருபுனலும் வாய்ந்த மலையும்

0737. இருபுனலும் வாய்ந்த மலையும்

0737. Irupunalum Vaaindha Malaiyum

  • குறள் #
    0737
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    நாடு (Naadu)
    The Land
  • குறள்
    இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
    வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
  • விளக்கம்
    கீழ்நீர், மேல்நீர் எனப்பட்ட இரு தண்ணீரும், வாய்ப்புடைய மலையும், அதிலிருந்து வருகின்ற நீரும், அழியாத கோட்டையும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
  • Translation
    in English
    Waters from rains and springs, a mountain near, and waters thence;
    These make a land, with fortress’ sure defence.
  • Meaning
    The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort.
0736. கேடறியாக் கெட்ட இடத்தும்

0736. கேடறியாக் கெட்ட இடத்தும்

0736. Kedariyaak Ketta Idaththum

  • குறள் #
    0736
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    நாடு (Naadu)
    The Land
  • குறள்
    கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
    நாடென்ப நாட்டின் தலை.
  • விளக்கம்
    பகைவரால் கெடுதல் இல்லாததாகவும், அவ்வாறு ஒருகால் கெட்டாலும் தன் வளம் குறையாததாகவும் உள்ளதே நாடு. இந்நாட்டை, எல்லா நாடுகளையும் விடச் சிறந்தநாடு என்று கூறுவர்.
  • Translation
    in English
    Chief of all lands is that, where nought disturbs its peace;
    Or, if invaders come, still yields its rich increase.
  • Meaning
    The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness.
0735. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்

0735. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்

0735. Palkuzhuvum Paazhseiyum Utpagaiyum

  • குறள் #
    0735
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    நாடு (Naadu)
    The Land
  • குறள்
    பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
    கொல்குறும்பும் இல்லது நாடு.
  • விளக்கம்
    மாறுபட்ட பல கூடங்களும், உடனிருந்தே பாழ் செய்யும் உட்பகையும், அரசனுக்குத் தொல்லை கொடுக்கும் கொலைத் தொழிளரும் இல்லாததே நாடாகும்.
  • Translation
    in English
    From factions free, and desolating civil strife, and band
    Of lurking murderers that king afflict, that is the ‘land’.
  • Meaning
    A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign.
0734. உறுபசியும் ஓவாப் பிணியும்

0734. உறுபசியும் ஓவாப் பிணியும்

0734. Urupasiyum Ovaap Piniyum

  • குறள் #
    0734
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    நாடு (Naadu)
    The Land
  • குறள்
    உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
    சேரா தியல்வது நாடு.
  • விளக்கம்
    மிக்கபசியும், நீங்காத நோயும், அழிவுக்குரிய பகையும் இல்லது நடப்பதே சிறந்த நாடாகும்.
  • Translation
    in English
    That is a ‘land’ whose peaceful annals know,
    Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.
  • Meaning
    A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.
0733. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி

0733. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி

0733. Poraiyorungu Melvarungaal Thaangi

  • குறள் #
    0733
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    நாடு (Naadu)
    The Land
  • குறள்
    பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
    இறையொருங்கு நேர்வது நாடு.
  • விளக்கம்
    பிறநாடுகள் பொறுத்த பாரமெல்லாம் தன்னிடத்தே வரும்போது, அவற்றைத் தாங்கித் தன்னரசனுக்கு வரிப்பொருள் முழுவதையும் கொடுப்பதே நாடு.
  • Translation
    in English
    When burthens press, it bears; Yet, With unfailing hand
    To king due tribute pays: that is the ‘land’.
  • Meaning
    A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.
0732. பெரும்பொருளால் பெட்டக்க தாகி

0732. பெரும்பொருளால் பெட்டக்க தாகி

0732. Perumporulaal Pettakka Thaaki

  • குறள் #
    0732
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    நாடு (Naadu)
    The Land
  • குறள்
    பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
    ஆற்ற விளைவது நாடு.
  • விளக்கம்
    அதிகப் பொருள் இருப்பதால் பிற நாட்டினரால் விரும்பத் தக்கதாய், கேடில்லாததாய், மிகுதியாய் விளைவதுமாய் உள்ளதே சிறந்த நாடு.
  • Translation
    in English
    That is a ‘land’ which men desire for wealth’s abundant share,
    Yielding rich increase, where calamities are rare.
  • Meaning
    A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.
0731. தள்ளா விளையுளும் தக்காரும்

0731. தள்ளா விளையுளும் தக்காரும்

0731. Thallaa Vilaiyulum Thakkaarum

  • குறள் #
    0731
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) – Essentials of a State
  • அதிகாரம்
    நாடு (Naadu)
    The Land
  • குறள்
    தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
    செல்வரும் சேர்வது நாடு.
  • விளக்கம்
    குறைவில்லாத விளைபொருளை விளைவிப்போரும், அறவழியில் ஒழுகுவோரும், குறைவில்லாத செல்வமுடையோரும் சேர்ந்து வாழும் இடமே நாடு ஆகும்.
  • Translation
    in English
    Where spreads fertility unfailing, where resides a band,
    Of virtuous men, and those of ample wealth, call that a ‘land’.
  • Meaning
    A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together.