Tag: Instability

0340. புக்கில் அமைந்தின்று கொல்லோ

0340. புக்கில் அமைந்தின்று கொல்லோ

0340. Pukkil Amaindhindru Kollo

  • குறள் #
    0340
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    நிலையாமை(Nilaiyaamai)
    Instability
  • குறள்
    புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
    துச்சில் இருந்த உயிர்க்கு.
  • விளக்கம்
    உடம்பினுள்ளே குடியிருந்து வருகின்ற உயிருக்குப் புகுந்து புகுந்து செல்கின்ற உடம்பு நிலைபெறாது.
  • Translation
    in English
    The soul in fragile shed as lodger courts repose:-
    Is it because no home’s conclusive rest it knows?
  • Meaning
    It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.
0339. உறங்கு வதுபோலுஞ் சாக்காடு

0339. உறங்கு வதுபோலுஞ் சாக்காடு

0339. Urangu Vathupolunj Chaakkaadu

  • குறள் #
    0339
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    நிலையாமை(Nilaiyaamai)
    Instability
  • குறள்
    உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு.
  • விளக்கம்
    சாவு என்பது உறக்கம் வருதல் போன்றது; பிறத்தல் என்பது உறங்கி விழித்தல் போன்றது.
  • Translation
    in English
    Death is sinking into slumbers deep;
    Birth again is waking out of sleep.
  • Meaning
    Death is like sleep; birth is like awaking from it.
0338. குடம்பை தனித்துஒழியப் புள்பறந்

0338. குடம்பை தனித்துஒழியப் புள்பறந்

0338. Kudambai Thaniththuozhiyap Pulparandh

  • குறள் #
    0338
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    நிலையாமை(Nilaiyaamai)
    Instability
  • குறள்
    குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
    உடம்பொடு உயிரிடை நட்பு.
  • விளக்கம்
    உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு, தான் வாழ்ந்த கூடு தனித்துக் கிடக்க அதைவிட்டு வேறிடத்துக்குப் பறவை பறந்து போனாற் போன்றது.
  • Translation
    in English
    Birds fly away, and leave the nest deserted bare;
    Such is the short-lived friendship soul and body share.
  • Meaning
    The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.
0337. ஒருபொழுதும் வாழ்வது அறியார்

0337. ஒருபொழுதும் வாழ்வது அறியார்

0337. Orupozhuthum Vaazhvathu Ariyaar

  • குறள் #
    0337
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    நிலையாமை(Nilaiyaamai)
    Instability
  • குறள்
    ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
    கோடியும் அல்ல பல.
  • விளக்கம்
    ‘அடுத்த நொடியில் நாம் வாழ்வோமா’ என்பதனை அறிய மாட்டாதவர்கள், கோடிக்கு மேற்பட்ட பலவகை நினைவுகளை நினைப்பார்கள்.
  • Translation
    in English
    Who know not if their happy lives shall last the day,
    In fancies infinite beguile the hours away!
  • Meaning
    Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.
0336. நெருநல் உளனொருவன் இன்றில்லை

0336. நெருநல் உளனொருவன் இன்றில்லை

0336. Nerunal Ulanoruvan Indrillai

  • குறள் #
    0336
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    நிலையாமை(Nilaiyaamai)
    Instability
  • குறள்
    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ் வுலகு.
  • விளக்கம்
    ஒருவன் ‘நேற்று உயிரோடு இருந்தான்; இன்று மறைந்தான்’ என்று சொல்லும் நிலையற்ற தன்மையையுடையது இவ்வுலகம்.
  • Translation
    in English
    Existing yesterday, today to nothing hurled!-
    Such greatness owns this transitory world.
  • Meaning
    This world possesses the greatness that one who yesterday was is not today.
0335. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன்

0335. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன்

0335. Naachchetru Vikkulmel Vaaraamun

  • குறள் #
    0335
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    நிலையாமை(Nilaiyaamai)
    Instability
  • குறள்
    நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
    மேற்சென்று செய்யப் படும்.
  • விளக்கம்
    பேச முடியாதபடி நாவை அடக்கும் விக்கலானது தோன்றுவதற்கு முன்னே அறத்தை விரைந்து செய்ய வேண்டும்.
  • Translation
    in English
    Before the tongue lie powerless, ‘mid the gasp of gurgling breath,
    Arouse thyself, and do good deeds beyond the power of death.
  • Meaning
    Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.
0334. நாளென ஒன்றுபோற் காட்டி

0334. நாளென ஒன்றுபோற் காட்டி

0334. Naalena Ondrupor Kaatti

  • குறள் #
    0334
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    நிலையாமை(Nilaiyaamai)
    Instability
  • குறள்
    நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
    வாளது உணர்வார்ப் பெறின்.
  • விளக்கம்
    காலத்தின் உண்மைத் தன்மையை அறிந்தவர், அது நாள் என்னும் சிறுகால அளவைப் போல் காட்டி உயிரின் வாழ்நாளைச் சிறிது சிறிதாக அறுத்துச் செல்லும் வாளாகும் என அறிவர்.
  • Translation
    in English
    As ‘day’ it vaunts itself; well understood, ’tis knife’,
    That daily cuts away a portion from thy life.
  • Meaning
    Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.
0333. அற்கா இயல்பிற்றுச் செல்வம்

0333. அற்கா இயல்பிற்றுச் செல்வம்

0333. Arkaa Iyalbitruch Chelvam

  • குறள் #
    0333
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    நிலையாமை(Nilaiyaamai)
    Instability
  • குறள்
    அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
    அற்குப ஆங்கே செயல்.
  • விளக்கம்
    செல்வம் நிலையில்லாத இயல்பினையுடையது. ஆகையால் அச்செல்வத்தைப் பெற்றால் நிலையான அறங்களை அப்பொழுதே செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Unenduring is all wealth; if you wealth enjoy,
    Enduring works in working wealth straightway employ.
  • Meaning
    Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.
0332. கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே

0332. கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே

0332. Kooththaattu Avaikkuzhaath Thatre

  • குறள் #
    0332
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    நிலையாமை(Nilaiyaamai)
    Instability
  • குறள்
    கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
    போக்கும் அதுவிளிந் தற்று.
  • விளக்கம்
    ஒருவனிடத்தில் பெருஞ்செல்வம் உண்டாதல், கூத்தாடுகின்ற சபையில் அதனைப் பார்க்கக் கூட்டம் வந்து கூடினாற் போன்றது; அச்செல்வம் கெட்டுப் போதல், கூத்தாட்டம் முடிந்ததும் அக்கூட்டம் கலைந்து போவதைப் போன்றது.
  • Translation
    in English
    As crowds round dancers fill the hall, is wealth’s increase;
    Its loss, as throngs dispersing, when the dances cease.
  • Meaning
    The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.
0331. நில்லாத வற்றை நிலையின

0331. நில்லாத வற்றை நிலையின

0331. Nillaatha Vatrai Nilaiyina

  • குறள் #
    0331
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    நிலையாமை(Nilaiyaamai)
    Instability
  • குறள்
    நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
    புல்லறி வாண்மை கடை.
  • விளக்கம்
    நிலையிலாதவற்றை நிலைத்தன்மையுடையன என்று நினைக்கின்ற அற்ப அறிவு கீழ்ப்பட்ட தன்மையுடையதாகும்.
  • Translation
    in English
    Lowest and meanest lore, that bids men trust secure,
    In things that pass away, as things that shall endure!
  • Meaning
    That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).