Tag: 1330

0530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை

0530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை

0530. Uzhaippirindhu Kaaranaththin Vandhaanai

  • குறள் #
    0530
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
    Cherishing One’s Kindred
  • குறள்
    உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
    இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
  • விளக்கம்
    தன்னிடத்திலிருந்து பிரிந்து சென்று, மீண்டும் ஒரு காரணத்தால் வந்தவனை அரசன், அவனுக்கு வேண்டியதைச் செய்து, பின்னர் ஆராய்ந்து சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Who causeless went away, then to return, for any cause, ask leave;
    The king should sift their motives well, consider, and receive!
  • Meaning
    When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again.
0529. தமராகிக் தற்றுறந்தார் சுற்றம்

0529. தமராகிக் தற்றுறந்தார் சுற்றம்

0529. Thamaraagik Thatrurandhaar Sutram

  • குறள் #
    0529
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
    Cherishing One’s Kindred
  • குறள்
    தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
    காரணம் இன்றி வரும்.
  • விளக்கம்
    முதலில் தன் உறவினராக இருந்து, பின்னர் ஒரு காரணத்தால் பிரிந்து சென்றவர், அக்காரணம் நீங்கியபின் மீண்டும் அவரே வந்து உறவினராவர்.
  • Translation
    in English
    Who once were his, and then forsook him, as before
    Will come around, when cause of disagreement is no more.
  • Meaning
    Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to
    him), when the cause of disagreement is not to be found in him.
0528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா

0528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா

0528. Pothunokkaan Vendhan Varisaiyaa

  • குறள் #
    0528
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
    Cherishing One’s Kindred
  • குறள்
    பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
    அதுநோக்கி வாழ்வார் பலர்.
  • விளக்கம்
    அரசன் எல்லோரையும் ஒரே தன்மையாக நோக்காது, அவரவர் தகுதிக்கேற்ப நோக்குவானாயின், அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலராவர்.
  • Translation
    in English
    Where king regards not all alike, but each in his degree,
    ‘Neath such discerning rule many dwell happily.
  • Meaning
    Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit.
0527. காக்கை கரவா கரைந்துண்ணும்

0527. காக்கை கரவா கரைந்துண்ணும்

0527. Kaakkai Karavaa Karaindhunnum

  • குறள் #
    0527
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
    Cherishing One’s Kindred
  • குறள்
    காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள.
  • விளக்கம்
    காக்கை இரையைக் கண்டால் அதை மறைக்காது தன் இனத்தை அழைத்து உண்ணும். அத்தகைய குணம் உடையவர்க்கே சுற்றத்தால் அடையக் கூடிய பல செல்வங்களும் உளவாம்.
  • Translation
    in English
    The crows conceal not, call their friends to come, then eat;
    Increase of good such worthy ones shall meet.
  • Meaning
    The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives).
0526. பெருங்கொடையான் பேணான் வெகுளி

0526. பெருங்கொடையான் பேணான் வெகுளி

0526. Perungkodaiyaan Penaan Veguli

  • குறள் #
    0526
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
    Cherishing One’s Kindred
  • குறள்
    பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
    மருங்குடையார் மாநிலத்து இல்.
  • விளக்கம்
    ஒருவன் மிகுந்த கொடையுடையவனுமாய், சினத்தை விரும்பாதவனுமாய் இருப்பானாயின் அவனைப் போலச் சுற்றமுடையவர் இவ்வுலகத்தில் இல்லை.
  • Translation
    in English
    Than one who gifts bestows and wrath restrains,
    Through the wide world none larger following gains.
  • Meaning
    No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger.
0525. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின்

0525. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின்

0525. Koduththalum Insolum Aatrin

  • குறள் #
    0525
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
    Cherishing One’s Kindred
  • குறள்
    கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
    சுற்றத்தால் சுற்றப் படும்.
  • விளக்கம்
    ஒருவன் சுற்றத்தாருக்கு வேண்டுவன கொடுத்தலையும், இன்சொல் பேசுதலையும் செய்ய வல்லவனாயின், தொடர்ச்சியாகச் சுற்றத்தார் பலரால் சூழப்படுவான்.
  • Translation
    in English
    Who knows the use of pleasant words, and liberal gifts can give,
    Connections, heaps of them, surrounding him shall live.
  • Meaning
    He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.
0524. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்

0524. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்

0524. Sutraththaal Sutrap Padaozhugal

  • குறள் #
    0524
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
    Cherishing One’s Kindred
  • குறள்
    சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
    பெற்றத்தால் பெற்ற பயன்.
  • விளக்கம்
    ஒருவன் செல்வம் பெற்றதனால் அடையும் பயனாவது உறவினர் தன்னைச் சூழ்ந்திருக்குமாறு, தழுவி நடந்து கொள்வதாம்.
  • Translation
    in English
    The profit gained by wealth’s increase,
    Is living compassed round by relatives in peace.
  • Meaning
    To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth.
0523. அளவளா வில்லாதான் வாழ்க்கை

0523. அளவளா வில்லாதான் வாழ்க்கை

0523. Alavalaa Villaathaan Vaazhkkai

  • குறள் #
    0523
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
    Cherishing One’s Kindred
  • குறள்
    அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
    கோடின்றி நீர்நிறைந் தற்று.
  • விளக்கம்
    சுற்றத்தாரோடு மனங்கலந்து வாழாதவனுடைய வாழ்க்கை, ஒரு குளமானது கரையில்லாமலே நீர் நிறைந்தது போன்றதாகும்.
  • Translation
    in English
    His joy of life who mingles not with kinsmen gathered round,
    Is lake where streams pour in, with no encircling bound.
  • Meaning
    The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.
0522. விருப்பறாச் சுற்றம் இயையின்

0522. விருப்பறாச் சுற்றம் இயையின்

0522. Virupparaach Chutram Iyaiyin

  • குறள் #
    0522
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
    Cherishing One’s Kindred
  • குறள்
    விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவும் தரும்.
  • விளக்கம்
    அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்கு வாய்க்குமாயின், அஃது அவனுக்கு மேன்மேலும் வளரும் செல்வங்கள் பலவற்றைக் கொடுக்கும்.
  • Translation
    in English
    The gift of kin’s unfailing love bestows
    Much gain of good, like flower that fadeless blows.
  • Meaning
    If (a man’s) relatives remain attached to him with unchanging love, it will be a source of ever increasing wealth.
0521. பற்றற்ற கண்ணும் பழைமைபா

0521. பற்றற்ற கண்ணும் பழைமைபா

0521. Patratra Kannum Pazhaimaipaa

  • குறள் #
    0521
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
    Cherishing One’s Kindred
  • குறள்
    பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
    சுற்றத்தார் கண்ணே உள.
  • விளக்கம்
    ஒருவன் தன் செல்வமெலாம் அழிந்து வறியனானபோழுதும், பழைய தொடர்பைப் பாராட்டும் தன்மை, சுற்றத்தாரிடம் உண்டு.
  • Translation
    in English
    wealth is fled, old kindness still to show,
    Is kindly grace that only kinsmen know.
  • Meaning
    Even when (a man’s) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).
0520. நாடோறும் நாடுக மன்னன்

0520. நாடோறும் நாடுக மன்னன்

0520. Naadorum Naaduga Mannan

  • குறள் #
    0520
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
    கோடாமை கோடா துலகு.
  • விளக்கம்
    செயலைச் செய்பவன் நேர்மையிலிருந்து மாறுபடாதிருப்பின், இவ்வுலகமும் மாறுபடாது. ஆகையால் அரசன் அச்செயல் செய்வோரை நாள்தொறும் ஆராய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Let king search out his servants’ deeds each day;
    When these do right, the world goes rightly on its way.
  • Meaning
    Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.
0519. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே

0519. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே

0519. Vinaikkan Vinaiyudaiyon Kenmaive

  • குறள் #
    0519
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
    நினைப்பானை நீங்கும் திரு.
  • விளக்கம்
    மேற்கொண்ட செயலில் இடைவிடா முயற்சியுடையவனது நட்பைத் தவறாக, ஐயப்படும் அரசனை விட்டுத் திருமகள் நீங்குவாள்.
  • Translation
    in English
    Fortune deserts the king who ill can bear,
    Informal friendly ways of men his tolls who share.
  • Meaning
    Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.
0518. வினைக்குரிமை நாடிய பின்றை

0518. வினைக்குரிமை நாடிய பின்றை

0518. Vinaikkurimai Naadiya Pindrai

  • குறள் #
    0518
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
    அதற்குரிய னாகச் செயல்.
  • விளக்கம்
    ஒருவன் ஒரு செயலுக்குத் தகுதியுடையவனாதலை ஆராய்ந்து துணிந்து பின்னர், அவனை அச்செயல் செய்தற்கு உரியவனாக அச்செயலில் அமர்த்துதல் வேண்டும்.
  • Translation
    in English
    As each man’s special aptitude is known,
    Bid each man make that special work his own.
  • Meaning
    Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.
0517. இதனை இதனால் இவன்முடிக்கும்

0517. இதனை இதனால் இவன்முடிக்கும்

0517. Ithanai Ithanaal Ivanmudikkum

  • குறள் #
    0517
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.
  • விளக்கம்
    ‘இச்செயலை இக்காரணங்களால் இவன் முடிக்க வல்லவன்’ என்று ஆராய்ந்து, அச்செயலை அவனிடத்தே விடுதல் வேண்டும்.
  • Translation
    in English
    ‘This man, this work shall thus work out,’ let thoughtful king command;
    Then leave the matter wholly in his servant’s hand.
  • Meaning
    After having considered, “this man can accomplish this, by these means”, let (the king) leave with him the discharge of that duty.
0516. செய்வானை நாடி வினைநாடிக்

0516. செய்வானை நாடி வினைநாடிக்

0516. Seivaanai Naadi Vinainaadik

  • குறள் #
    0516
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
    எய்த உணர்ந்து செயல்.
  • விளக்கம்
    செயலைச் செய்கின்றவனின் தன்மையையும் செயலின் இயல்பையும் ஆராய்ந்து, காலத்துக்குத் தக்கபடி அறிந்து செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Let king first ask, ‘Who shall the deed perform?’ and ‘What the deed?’
    Of hour befitting both assured, let every work proceed.
  • Meaning
    Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.
0515. அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால்

0515. அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால்

0515. Arindhaatrich Chigirpaarkku Allaal

  • குறள் #
    0515
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
    சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
  • விளக்கம்
    செய்யும் வழியறிந்து, அவ்வழி முயன்று முடிக்க வல்லானையன்றி, வேண்டியவனென்று பிரனொருவனைச் செய்யுமாறு ஏவுதல் கூடாது.
  • Translation
    in English
    No specious fav’rite should the king’s commission bear,
    But he that knows, and work performs with patient care.
  • Meaning
    (A king’s) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a
    nature to be given to one from mere personal attachment.
0514. எனைவகையான் தேறியக் கண்ணும்

0514. எனைவகையான் தேறியக் கண்ணும்

0514. Enaivagaiyaan Theriyak Kannum

  • குறள் #
    0514
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்.
  • விளக்கம்
    எல்லாவகைகளாலும் ஆராய்ந்து தெளிந்த பின்பும் ஒருசெயலை மேற்கொண்டு செய்யும்போது அச்செயல் வேறுபாடு காரணமாக வேறுபடுகின்ற மனிதர் உலகத்தில் பலராவர்.
  • Translation
    in English
    Even when tests of every kind are multiplied,
    Full many a man proves otherwise, by action tried!
  • Meaning
    Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).
0513. அன்பறிவு தேற்றம் அவாவின்மை

0513. அன்பறிவு தேற்றம் அவாவின்மை

0513. Anbarivu Thetram Avaavinmai

  • குறள் #
    0513
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு.
  • விளக்கம்
    அன்பு, அறிவு, ஐயம் இல்லாமல் தெளியும் தெளிவு, ஆசை இன்பம் ஆகிய இந்நான்கு குணங்களையும் நிலையாக உடையவனையே மன்னன் தெளிதல் வேண்டும்.
  • Translation
    in English
    A loyal love with wisdom, clearness, mind from avarice free;
    Who hath these four good gifts should ever trusted be.
  • Meaning
    Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.
0512. வாரி பெருக்கி வளம்படுத்து

0512. வாரி பெருக்கி வளம்படுத்து

0512. Vaari Perukki Valampaduththu

  • குறள் #
    0512
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
    ஆராய்வான் செய்க வினை.
  • விளக்கம்
    பொருள் வருவாயை அதிகப்படுத்தி, அதனால் வளமையைப் பெருக்கி, அவற்றிற்கு நேரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே அரசனுக்குக் குறிப்பிட்ட செயலைச் செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Who swells the revenues, spreads plenty o’er the land,
    Seeks out what hinders progress, his the workman’s hand.
  • Meaning
    Let him do (the king’s) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it).
0511. நன்மையும் தீமையும் நாடி

0511. நன்மையும் தீமையும் நாடி

0511. Nanmaiyum Theemaiyum Naadi

  • குறள் #
    0511
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
    தன்மையான் ஆளப் படும்.
  • விளக்கம்
    நன்மை, தீமைகளை ஆராய்ந்தறிந்து நன்மையையே செய்யும் இயல்புடையவனைச் செயலுக்கு உரியவனாக அமர்த்த வேண்டும்.
  • Translation
    in English
    Who good and evil scanning, ever makes the good his joy;
    Such man of virtuous mood should king employ.
  • Meaning
    He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.
0510. தேரான் தெளிவும் தெளிந்தான்கண்

0510. தேரான் தெளிவும் தெளிந்தான்கண்

0510. Theraan Thelivum Thelindhaankan

  • குறள் #
    0510
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
    Selection and Confidence
  • குறள்
    தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
    தீரா இடும்பை தரும்.
  • விளக்கம்
    ஒருவனை ஆராயாது தெளிதலும் ஆராய்ந்து தெளிந்தவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவ்விரண்டும் அரசனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
  • Translation
    in English
    Trust where you have not tried, doubt of a friend to feel,
    Once trusted, wounds inflict that nought can heal.
  • Meaning
    To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.
0509. தேறற்க யாரையும் தேராது

0509. தேறற்க யாரையும் தேராது

0509. Therarka Yaaraiyum Theraathu

  • குறள் #
    0509
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
    Selection and Confidence
  • குறள்
    தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
    தேறுக தேறும் பொருள்.
  • விளக்கம்
    நன்றாக ஆராயாமல் யாரையும் தெளிதல் கூடாது. ஆராய்ந்து தெளிந்த பின்னர் அவரிடம் எந்தச் செயலைப் பற்றி ஆராய்ந்து தெளியலாமோ அதைப் பற்றி ஆராய்ந்து தெளிய வேண்டும்.
  • Translation
    in English
    Trust no man whom you have not fully tried,
    When tested, in his prudence proved confide.
  • Meaning
    Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.
0508. தேரான் பிறனைத் தெளிந்தான்

0508. தேரான் பிறனைத் தெளிந்தான்

0508. Theraan Piranaith Thelindhaan

  • குறள் #
    0508
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
    Selection and Confidence
  • குறள்
    தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
    தீரா இடும்பை தரும்.
  • விளக்கம்
    அயலான் ஒருவனைச் சிறிதும் ஆராயாமல் அவன் மீது நம்பிக்கை வைக்கும் ஒருவனால் அவன் துன்பப்படுவதல்லாமல் அவன் சந்ததியினரும் துன்பத்தை அனுபவிக்க நேரும்.
  • Translation
    in English
    Who trusts an untried stranger, brings disgrace,
    Remediless, on all his race.
  • Meaning
    Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.
0507. காதன்மை கந்தா அறிவறியார்த்

0507. காதன்மை கந்தா அறிவறியார்த்

0507. Kaathanmai Kandhaa Arivariyaarth

  • குறள் #
    0507
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
    Selection and Confidence
  • குறள்
    காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
    பேதைமை எல்லாந் தரும்.
  • விளக்கம்
    அறிவில்லாதவனை அவனிடத்துள்ள அன்பு காரணமாகத் தேர்ந்தெடுத்தல், அரசனுக்கு எல்லா அறியாமையையும் கொடுக்கும்.
  • Translation
    in English
    By fond affection led who trusts in men of unwise soul,
    Yields all his being up to folly’s blind control.
  • Meaning
    To choose ignorant men, through partiality, is the height of folly.
0506. அற்றாரைத் தேறுதல் ஓம்புக

0506. அற்றாரைத் தேறுதல் ஓம்புக

0506. Atraaraith Theruthal Ombuga

  • குறள் #
    0506
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
    Selection and Confidence
  • குறள்
    அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
    பற்றிலர் நாணார் பழி.
  • விளக்கம்
    சுற்றம் இல்லாதவரை நம்புதல் ஆகாது. ஏனென்றால், அவர் வேறு சம்பந்தமில்லாதவர், ஆதலால் பழிக்கு அஞ்ச மாட்டார்.
  • Translation
    in English
    Beware of trusting men who have no kith of kin;
    No bonds restrain such men, no shame deters from sin.
  • Meaning
    Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crime.
0505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்

0505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்

0505. Perumaikkum Yenaich Chirumaikkum

  • குறள் #
    0505
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
    Selection and Confidence
  • குறள்
    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்.
  • விளக்கம்
    மக்களின் பெருமையை அறிவதற்கும் அவர்தம் சிறுமையை அறிவதற்கும் அவரவர் செய்யும் செயல்களே உரைகல்லாம்.
  • Translation
    in English
    Of greatness and of meanness too,
    The deeds of each are touchstone true.
  • Meaning
    A man’s deeds are the touchstone of his greatness and littleness.
0504. குணம்நாடிக் குற்றமும் நாடி

0504. குணம்நாடிக் குற்றமும் நாடி

0504. Gunamnaadik Kutramum Naadi

  • குறள் #
    0504
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
    Selection and Confidence
  • குறள்
    குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.
  • விளக்கம்
    ஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, குணம் அதிகம் இருந்தால் குணமுடையவன் என்றும், குற்றம் அதிகம் இருந்தால் குற்றமுடையவன் என்றும் கொள்ள வேண்டும்.
  • Translation
    in English
    Weigh well the good of each, his failings closely scan,
    As these or those prevail, so estimate the man.
  • Meaning
    Let (a king) consider (a man’s) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.
0503. அரியகற்று ஆசற்றார் கண்ணும்

0503. அரியகற்று ஆசற்றார் கண்ணும்

0503. Ariyagatru Aasatraar Kannum

  • குறள் #
    0503
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
    Selection and Confidence
  • குறள்
    அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு.
  • விளக்கம்
    கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்று விளங்குபவரிடத்தும், ஆராய்ந்து பார்த்தால் அறியாமை இல்லாதிருத்தல் அரிதாகும்.
  • Translation
    in English
    Though deeply learned, unflecked by fault, ’tis rare to see,
    When closely scanned, a man from all unwisdom free.
  • Meaning
    When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.
0502. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி

0502. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி

0502. Kudippirandhu Kutraththin Neengi

  • குறள் #
    0502
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
    Selection and Confidence
  • குறள்
    குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
    நாணுடையான் சுட்டே தெளிவு.
  • விளக்கம்
    உயர்ந்த குடியில் பிறந்து, குற்றங்களிலிருந்து நீங்கித் தனக்குப் பழி என்று அஞ்சி நிற்கும் நாணமுடையவனிடத்தில் அரசனது நம்பிக்கை இருக்க வேண்டும்.
  • Translation
    in English
    Of noble race, of faultless worth, of generous pride
    That shrinks from shame or stain; in him may king confide.
  • Meaning
    (The king’s) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).
0501. அறம்பொருள் இன்பம் உயிரச்சம்

0501. அறம்பொருள் இன்பம் உயிரச்சம்

0501. Aramporul Inbam Uyirachcham

  • குறள் #
    0501
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
    Selection and Confidence
  • குறள்
    அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
    திறந்தெரிந்து தேறப் படும்.
  • விளக்கம்
    அறம், பொருள் ஆசை, காம இச்சை, தன் உயிருக்காக அஞ்சும் அச்சம் என்னும் நான்கினாலும் ஒருவனது மனநிலையை நன்கு சோதித்து, அவனிடத்தில் அரசன் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
  • Translation
    in English
    How treats he virtue, wealth and pleasure? How, when life’s at stake,
    Comports himself? This four-fold test of man will full assurance make.
  • Meaning
    Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life.
0500. காலாழ் களரில் நரியடும்

0500. காலாழ் களரில் நரியடும்

0500. Kaalaazh Kalaril Nariyadum

  • குறள் #
    0500
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடன் அறிதல் (Idan Arithal)
    Knowing the Place
  • குறள்
    காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு.
  • விளக்கம்
    பாகனுக்கு அடங்காதனவும், வேல் வீரர்களைக் குத்தி எடுத்த கொம்புடையனவுமாகிய யானைகள், கால் புதையும் சேற்றில் அகப்பட்டுக் கொண்டால் அவற்றை நரியும் கொன்று விடும்.
  • Translation
    in English
    The jackal slays, in miry paths of foot-betraying fen,
    The elephant of fearless eye and tusks transfixing armed men.
  • Meaning
    A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.
0499. சிறைநலனும் சீரும் இலரெனினும்

0499. சிறைநலனும் சீரும் இலரெனினும்

0499. Sirainalanum Seerum Ilareninum

  • குறள் #
    0499
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடன் அறிதல் (Idan Arithal)
    Knowing the Place
  • குறள்
    சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
    உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
  • விளக்கம்
    பகைவர் அழித்தற்கரிய கோட்டையும், ஆற்றலும் இலராயினும், அவரை அவர் இருக்கும் இடம் சென்று வெல்லுதல் அரிது.
  • Translation
    in English
    Though fort be none, and store of wealth they lack,
    ‘Tis hard a people’s homesteads to attack!
  • Meaning
    It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.
0498. சிறுபடையான் செல்லிடம் சேரின்

0498. சிறுபடையான் செல்லிடம் சேரின்

0498. Sirupadaiyaan Sellidam Serin

  • குறள் #
    0498
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடன் அறிதல் (Idan Arithal)
    Knowing the Place
  • குறள்
    சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
    ஊக்கம் அழிந்து விடும்.
  • விளக்கம்
    சிறிய படையை உடையவனாயினும் அவனுக்கு வாய்ப்பான இடத்தில், பெரும்படையுடையவன் சென்றால் தன் ஊக்கம் இழந்து கெடுவான்.
  • Translation
    in English
    If lord of army vast the safe retreat assail
    Of him whose host is small, his mightiest efforts fail.
  • Meaning
    The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.
0497. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா

0497. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா

0497. Anjaamai Allaal Thunaivendaa

  • குறள் #
    0497
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடன் அறிதல் (Idan Arithal)
    Knowing the Place
  • குறள்
    அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
    எண்ணி இடத்தால் செயின்.
  • விளக்கம்
    நன்கு ஆராய்ந்து, ஏற்ற இடத்தில் நின்று போர் செய்தால், அவ்வரசர்க்கு அஞ்சாமையைத் தவிர வேறு துணை வேண்டியதில்லை.
  • Translation
    in English
    Save their own fearless might they need no other aid,
    If in right place they fight, all due provision made.
  • Meaning
    You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations.
0496. கடலோடா கால்வல் நெடுந்தேர்

0496. கடலோடா கால்வல் நெடுந்தேர்

0496. Kadalodaa Kaalval Nedunther

  • குறள் #
    0496
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடன் அறிதல் (Idan Arithal)
    Knowing the Place
  • குறள்
    கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயும் ஓடா நிலத்து.
  • விளக்கம்
    வலிய சக்கரங்களை உடைய தேர் கடலில் ஓட இயலாது; கடலில் ஓடுகின்ற மரக்கலமும் நிலத்தில் ஓட இயலாது.
  • Translation
    in English
    The lofty car, with mighty wheel, sails not o’er watery main,
    The boat that skims the sea, runs not on earth’s hard plain.
  • Meaning
    Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth.
0495. நெடும்புனலுள் வெல்லும் முதலை

0495. நெடும்புனலுள் வெல்லும் முதலை

0495. Nedumpunalul Vellum Muthalai

  • குறள் #
    0495
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடன் அறிதல் (Idan Arithal)
    Knowing the Place
  • குறள்
    நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற.
  • விளக்கம்
    ஆழமான நீரில் முதலை பிற உயிர்களை வெல்லும்; அந்நீரிலிருந்து அது நீங்குமானால் அதனைப் பிற உயிர்கள் வெல்லும்.
  • Translation
    in English
    The crocodile prevails in its own flow of water wide,
    If this it leaves, ’tis slain by anything beside.
  • Meaning
    In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it.
0494. எண்ணியார் எண்ணம் இழப்பர்

0494. எண்ணியார் எண்ணம் இழப்பர்

0494. Enniyaar Ennam Izhappar

  • குறள் #
    0494
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடன் அறிதல் (Idan Arithal)
    Knowing the Place
  • குறள்
    எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
    துன்னியார் துன்னிச் செயின்.
  • விளக்கம்
    போர் செய்தற்கேற்ற இடமறிந்து சென்று போர் செய்வாராயின், அவரை வெல்லக் கருதிய பகைவர் அவ்வெண்ணத்தை இழப்பர்.
  • Translation
    in English
    The foes who thought to triumph, find their thoughts were vain,
    If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.
  • Meaning
    If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them.
0493. ஆற்றாரும் ஆற்றி அடுப

0493. ஆற்றாரும் ஆற்றி அடுப

0493. Aatraarum Aatri Aduba

  • குறள் #
    0493
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடன் அறிதல் (Idan Arithal)
    Knowing the Place
  • குறள்
    ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
    போற்றார்கண் போற்றிச் செயின்.
  • விளக்கம்
    வெல்லுதற்கேற்ற இடத்தை அறிந்து, தம்மைக் காத்து, பகைவரோடு போர் செய்வாரானால் வலிமை இல்லாதவரும் வலிமையுடையவராகி வெல்வர்.
  • Translation
    in English
    E’en weak ones mightily prevail, if place of strong defence,
    They find, protect themselves, and work their foes offence.
  • Meaning
    Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.
0492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்

0492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்

0492. Muranserndha Moimbi Navarkkum

  • குறள் #
    0492
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடன் அறிதல் (Idan Arithal)
    Knowing the Place
  • குறள்
    முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
    ஆக்கம் பலவுந் தரும்.
  • விளக்கம்
    அரசரோடு பகைகொள்ளத் தக்க வலிமையுடையவர்க்கும் அரணைச் சேர்ந்து நின்று செய்யும் போரானது, நன்மைகள் பலவற்றையும் கொடுக்கும்.
  • Translation
    in English
    Though skill in war combine with courage tried on battle-field,
    The added gain of fort doth great advantage yield.
  • Meaning
    Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.
0491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க

0491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க

0491. Thodangarkka Evvinaiyum Ellarka

  • குறள் #
    0491
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    இடன் அறிதல் (Idan Arithal)
    Knowing the Place
  • குறள்
    தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
    இடங்கண்ட பின்அல் லது.
  • விளக்கம்
    பகைவரை வளைத்தற்கேற்ற இடம் வாய்ப்பதற்கு முன் அவரிடம் எந்த ஒரு செயலையும் தொடங்காதிருத்தல் வேண்டும்; அவரைச் சிறியர் என்று இகழாதிருத்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Begin no work of war, depise no foe,
    Till place where you can wholly circumvent you know.
  • Meaning
    Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him.
0490. கொக்கொக்க கூம்பும் பருவத்து

0490. கொக்கொக்க கூம்பும் பருவத்து

0490. Kokkokka Koombum Paruvaththu

  • குறள் #
    0490
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    காலம் அறிதல் (Kaalam Arithal)
    Knowing the Fitting Time
  • குறள்
    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த இடத்து.
  • விளக்கம்
    ஒரு செயலைச் செய்யாதிருக்க வேண்டியபோது, கொக்கு போல் அடங்கியிருக்க வேண்டும்; எற்றகாலம் வாய்த்தபோது அதன் குத்துபோல் அச்செயலைத் தவறாது செய்து முடிக்கவேண்டும்.
  • Translation
    in English
    As heron stands with folded wing, so wait in waiting hour;
    As heron snaps its prey, when fortune smiles, put forth your power.
  • Meaning
    At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.
0489. எய்தற் கரியது இயைந்தக்கால்

0489. எய்தற் கரியது இயைந்தக்கால்

0489. Yeithar Kariyathu Iyaindhakkaal

  • குறள் #
    0489
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    காலம் அறிதல் (Kaalam Arithal)
    Knowing the Fitting Time
  • குறள்
    எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
    செய்தற் கரிய செயல்.
  • விளக்கம்
    பகையை வெல்லக் கருதும் அரசன், கிடைத்தற்க்கரிய காலம் வாய்க்குமானால், அப்பொழுதே செய்தற்கரியவற்றைச் செய்து முடித்தல் வேண்டும்.
  • Translation
    in English
    When hardest gain of opportunity at last is won,
    With promptitude let hardest deed be done.
  • Meaning
    If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).
0488. செறுநரைக் காணின் சுமக்க

0488. செறுநரைக் காணின் சுமக்க

0488. Serunaraik Kaanin Sumakka

  • குறள் #
    0488
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    காலம் அறிதல் (Kaalam Arithal)
    Knowing the Fitting Time
  • குறள்
    செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
    காணின் கிழக்காம் தலை.
  • விளக்கம்
    தமக்கு வெல்லுங் காலம் வரும்வரையில், பகைவனைக் கண்டால் பணிக; அது வந்ததும் அப்பகைவர் தலை கீழே விழுமாறு கெடுவர்.
  • Translation
    in English
    If foes’ detested form they see, with patience let them bear;
    When fateful hour at last they spy,- the head lies there.
  • Meaning
    If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.
0487. பொள்ளென ஆங்கே புறம்வேரார்

0487. பொள்ளென ஆங்கே புறம்வேரார்

0487. Pollena Aange Puramveraar

  • குறள் #
    0487
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    காலம் அறிதல் (Kaalam Arithal)
    Knowing the Fitting Time
  • குறள்
    பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
    உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
  • விளக்கம்
    அறிவுடையோர் பகைவர் தீங்கு செய்தவிடத்து, அவர் அறியுமாறு விரைந்து கோபம் கொள்ளமாட்டார்; அவரை வெல்லும் காலத்தை அறிந்து, அதுவரை சினத்தை அடக்கி வைத்திருப்பர்.
  • Translation
    in English
    The glorious once of wrath enkindled make no outward show,
    At once; they bide their time, while hidden fires within them glow.
  • Meaning
    The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within.
0486. ஊக்க முடையான் ஒடுக்கம்

0486. ஊக்க முடையான் ஒடுக்கம்

0486. Ookka Mudaiyaan Odukkam

  • குறள் #
    0486
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    காலம் அறிதல் (Kaalam Arithal)
    Knowing the Fitting Time
  • குறள்
    ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
    தாக்கற்குப் பேருந் தகைத்து.
  • விளக்கம்
    ஊக்கம் உடையவன், தன் பகைமேற் செல்லாது காலம் நோக்கி அடங்கியிருப்பது, போர் செய்கின்ற ஆடு தன் பகையைத் தீர்த்துக் கொள்ளப் பாயுமுன் பின்னே கால் வாங்குந்தன்மையை உடையது.
  • Translation
    in English
    The men of mighty power their hidden energies repress,
    As fighting ram recoils to rush on foe with heavier stress.
  • Meaning
    The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt.
0485. காலம் கருதி இருப்பர்

0485. காலம் கருதி இருப்பர்

0485. Kaalam Karuthi Iruppar

  • குறள் #
    0485
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    காலம் அறிதல் (Kaalam Arithal)
    Knowing the Fitting Time
  • குறள்
    காலம் கருதி இருப்பர் கலங்காது
    ஞாலம் கருது பவர்.
  • விளக்கம்
    நிலம் முழுவதையும் கைக் கொள்ள நினைக்கும் மன்னர், தம் வலிமை மிகுதியாக இருந்தாலும் அதைக் கருதாது, செயற்கேற்ற காலத்தை நினைத்துக் காத்திருப்பார்.
  • Translation
    in English
    Who think the pendant world itself to subjugate,
    With mind unruffled for the fitting time must wait.
  • Meaning
    They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.
0484. ஞாலம் கருதினுங் கைகூடுங்

0484. ஞாலம் கருதினுங் கைகூடுங்

0484. Gnaalam Karuthinung Kaikoodung

  • குறள் #
    0484
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    காலம் அறிதல் (Kaalam Arithal)
    Knowing the Fitting Time
  • குறள்
    ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
    கருதி இடத்தாற் செயின்.
  • விளக்கம்
    ஏற்ற காலத்தை அறிந்து, இடத்தோடு பொருந்தச் செய்வானாயின், அவன் உலகம் முழுதையும் தானே ஆளக்கருதினும் அது முடியும்.
  • Translation
    in English
    The pendant world’s dominion may be won,
    In fitting time and place by action done.
  • Meaning
    Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.
0483. அருவினை யென்ப உளவோ

0483. அருவினை யென்ப உளவோ

0483. Aruvinai Yenba Ulavo

  • குறள் #
    0483
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    காலம் அறிதல் (Kaalam Arithal)
    Knowing the Fitting Time
  • குறள்
    அருவினை யென்ப உளவோ கருவியான்
    காலம் அறிந்து செயின்.
  • விளக்கம்
    தக்க கருவிகளோடு ஏற்ற காலத்தையும் அறிந்து செய்வாராயின், அவரால் முடிக்க முடியாத செயல்கள் எவையும் உண்டோ?
  • Translation
    in English
    Can any work be hard in very fact,
    If men use fitting means in timely act?
  • Meaning
    Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?
0482. பருவத்தோடு ஒட்ட ஒழுகல்

0482. பருவத்தோடு ஒட்ட ஒழுகல்

0482. Paruvaththodu Otta Ozhugal

  • குறள் #
    0482
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    காலம் அறிதல் (Kaalam Arithal)
    Knowing the Fitting Time
  • குறள்
    பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
    தீராமை ஆர்க்குங் கயிறு.
  • விளக்கம்
    காலத்துக்கேற்ற முயற்சியைச் செய்தல், தன்னை விட்டுச் செல்வம் நீங்காமல் கட்டும் கயிறாகும்.
  • Translation
    in English
    The bond binds fortune fast is ordered effort made,
    Strictly observant still of favouring season’s aid.
  • Meaning
    Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).
0481. பகல்வெல்லும் கூகையைக் காக்கை

0481. பகல்வெல்லும் கூகையைக் காக்கை

0481. Pagalvellum Kookaiyaik Kaakkai

  • குறள் #
    0481
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    காலம் அறிதல் (Kaalam Arithal)
    Knowing the Fitting Time
  • குறள்
    பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
    வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
  • விளக்கம்
    தன்னைவிட வலிமை மிகுந்த கோட்டானைக் காக்கை பகற் பொழுதில் வென்றுவிடும். ஆகையால் பகைவரை வெல்லக் கருதும் மன்னர்க்கு அதற்கேற்ற காலம் வேண்டும்.
  • Translation
    in English
    A crow will conquer owl in broad daylight;
    The king that foes would crush, needs fitting time to fight.
  • Meaning
    A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.
0480. உளவரை தூக்காத ஒப்புர

0480. உளவரை தூக்காத ஒப்புர

0480. Ulavarai Thookkaatha Oppura

  • குறள் #
    0480
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    வலியறிதல் (Valiyaridhal)
    The Knowledge of Power
  • குறள்
    உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
    வளவரை வல்லைக் கெடும்.
  • விளக்கம்
    தன் பொருளின் அளவை அறிந்து வாழத் தெரியாதவனின் வாழ்க்கை, உள்ளது போலத் தோன்றி, பின்னர் இல்லாமல் மறைந்து விடும்.
  • Translation
    in English
    Beneficence that measures not its bound of means,
    Will swiftly bring to nought the wealth on which it leans.
  • Meaning
    The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.
0479. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை

0479. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை

0479. Alavarindhu Vaazhaathaan Vaazhkkai

  • குறள் #
    0479
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    வலியறிதல் (Valiyaridhal)
    The Knowledge of Power
  • குறள்
    அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
    இல்லாகித் தோன்றாக் கெடும்.
  • விளக்கம்
    ஒருவன் தனக்குள்ள பொருளின் அளவுக்கும் அதிகமாகப் பிறர்க்கு உதவி செய்தால், அவனது செல்வம் விரைவில் குறைந்து விடும்.
  • Translation
    in English
    Who prosperous lives and of enjoyment knows no bound,
    His seeming wealth, departing, nowhere shall be found.
  • Meaning
    The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue.
0478. ஆகாறு அளவிட்டி தாயினுங்

0478. ஆகாறு அளவிட்டி தாயினுங்

0478. Aagaaru Alavitti Thaayinung

  • குறள் #
    0478
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    வலியறிதல் (Valiyaridhal)
    The Knowledge of Power
  • குறள்
    ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
    போகாறு அகலாக் கடை.
  • விளக்கம்
    ஒருவர்க்குப் பொருள் வருகின்ற வழி சிறியதாயினும், அப்பொருள் போகின்ற அளவு அதைக்காட்டிலும் பெருகாதிருந்தால், அதனால் கெடுதல் இல்லை.
  • Translation
    in English
    Incomings may be scant; but yet, no failure there,
    If in expenditure you rightly learn to spare.
  • Meaning
    Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.
0477. ஆற்றின் அறவறிந்து ஈக

0477. ஆற்றின் அறவறிந்து ஈக

0477. Aatrin Aravarindhu Eega

  • குறள் #
    0477
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    வலியறிதல் (Valiyaridhal)
    The Knowledge of Power
  • குறள்
    ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கு நெறி.
  • விளக்கம்
    வருவாயின் அளவை அறிந்து, அடற்கேற்பக் கொடுக்க வேண்டும்; அது பொருளைக் காப்பாற்றிக் கொண்டு நடக்கும் வழியாகும்.
  • Translation
    in English
    With knowledge of the measure due, as virtue bids you give!
    That is the way to guard your wealth, and seemly live.
  • Meaning
    Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property.
0476. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்

0476. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்

0476. Nunikkombar Yerinaar Akthirandh

  • குறள் #
    0476
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    வலியறிதல் (Valiyaridhal)
    The Knowledge of Power
  • குறள்
    நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
    உயிர்க்கிறுதி ஆகி விடும்.
  • விளக்கம்
    மரக்கிளையின் நுனியிலே ஏறி நிற்பவர் அதற்கு மேலும் ஏறத் துணிவு கொள்வாரானால், அத்துணிவு உயிருக்கு முடிவு ஆகிவிடும்.
  • Translation
    in English
    Who daring climbs, and would himself upraise
    Beyond the branch’s tip, with life the forfeit pays.
  • Meaning
    There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.
0475. பீலிபெய் சாகாடும் அச்சிறும்

0475. பீலிபெய் சாகாடும் அச்சிறும்

0475. Peelipei Saagaadum Achchirum

  • குறள் #
    0475
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    வலியறிதல் (Valiyaridhal)
    The Knowledge of Power
  • குறள்
    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
    சால மிகுத்துப் பெயின்.
  • விளக்கம்
    மென்மையான மயிலிறகு ஏற்றப்பட்ட வண்டியேயாயினும், இறகினை அளவுக்கு மீறி அதிகமாக ஏற்றினால் அவ்வண்டியின் வலிய அச்சு முறிந்துவிடும்.
  • Translation
    in English
    With peacock feathers light, you load the wain;
    Yet, heaped too high, the axle snaps in twain.
  • Meaning
    The axle tree of a bandy, loaded only with peacocks’ feathers will break, if it be greatly overloaded.
0474. அமைந்தாங் கொழுகான் அளவறியான்

0474. அமைந்தாங் கொழுகான் அளவறியான்

0474. Amaindhaang Kozhukaan Alavariyaan

  • குறள் #
    0474
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    வலியறிதல் (Valiyaridhal)
    The Knowledge of Power
  • குறள்
    அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
    வியந்தான் விரைந்து கெடும்.
  • விளக்கம்
    அயலவரிடத்தில் சமாதானமாக நடவாதும், தன் வலிமையின் அளவை அறியாதும், தன்னை வியந்து பெருமைப்படுபவன் விரைவில் கெடுவான்.
  • Translation
    in English
    Who not agrees with those around, no moderation knows,
    In self-applause indulging, swift to ruin goes.
  • Meaning
    He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.
0473. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின்

0473. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின்

0473. Udaiththam Valiyariyaar Ookkaththin

  • குறள் #
    0473
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    வலியறிதல் (Valiyaridhal)
    The Knowledge of Power
  • குறள்
    உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
    இடைக்கண் முரிந்தார் பலர்.
  • விளக்கம்
    தமது வலிமையின் அளவை அறியாது, மன எழுச்சியால் தம்மை விட வலியாரோடு போர் தொடங்கி, அவரால் முறியடிக்கப்பட்டு இடையே கெட்டவர் பலராவர்.
  • Translation
    in English
    Ill-deeming of their proper powers, have many monarchs striven,
    And midmost of unequal conflict fallen asunder riven.
  • Meaning
    There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.
0472. ஒல்வ தறிவது அறிந்ததன்

0472. ஒல்வ தறிவது அறிந்ததன்

0472. Olva Tharivathu Arindhathan

  • குறள் #
    0472
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    வலியறிதல் (Valiyaridhal)
    The Knowledge of Power
  • குறள்
    ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
    செல்வார்க்குச் செல்லாதது இல்.
  • விளக்கம்
    தம்மால் முடிக்கக் கூடிய செயலையும், அதற்கு அறிய வேண்டியவற்றையும் அறிந்து, அச்செயலின் மீது மனத்தை ஊன்றி, பகைமேற் செல்லும் அரசனுக்கு முடியாத செயல் இல்லை.
  • Translation
    in English
    Who know what can be wrought, with knowledge of the means, on this,
    Their mind firm set, go forth, nought goes with them amiss.
  • Meaning
    There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make
    themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.
0471. வினைவலியும் தன்வலியும் மாற்றான்

0471. வினைவலியும் தன்வலியும் மாற்றான்

0471. Vinaivaliyum Thanvaliyum Maatraan

  • குறள் #
    0471
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    வலியறிதல் (Valiyaridhal)
    The Knowledge of Power
  • குறள்
    வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியும் தூக்கிச் செயல்.
  • விளக்கம்
    தான் செய்யக் கருதிய போரின் வலிமையையும் தன் படையின் வலிமையையும், பகைவர் வலிமையையும் ஆராய்ந்து போரைச் செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    The force the strife demands, the force he owns, the force of foes,
    The force of friends; these should he weigh ere to the war he goes.
  • Meaning
    Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.
0470. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்

0470. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்

0470. Ellaatha Ennich Cheyalvendum

  • குறள் #
    0470
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
    Acting After Due Consideration
  • குறள்
    எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
    கொள்ளாத கொள்ளாது உலகு.
  • விளக்கம்
    தம்முடைய நிலைமைக்குப் பொருந்தாத செயல்களை உலகம் ஏற்காது. ஆகையால் அது இகழாத செயலைச் செய்ய வேண்டும்.
  • Translation
    in English
    Plan and perform no work that others may despise;
    What misbeseems a king the world will not approve as wise.
  • Meaning
    Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of
    things which do not become of his position to adopt.
0469. நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு

0469. நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு

0469. Nandraatra Lullundh Dhavurundu

  • குறள் #
    0469
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
    Acting After Due Consideration
  • குறள்
    நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை.
  • விளக்கம்
    அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து, அவற்றிற்கேற்பச் செய்யாவிட்டால், நல்லதைச் செய்வதிலும் குற்றம் உண்டாகும்.
  • Translation
    in English
    Though well the work be done, yet one mistake is made,
    To habitudes of various men when no regard is paid.
  • Meaning
    There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.
0468. ஆற்றின் வருந்தா வருத்தம்

0468. ஆற்றின் வருந்தா வருத்தம்

0468. Aatrin Varundhaa Varuththam

  • குறள் #
    0468
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
    Acting After Due Consideration
  • குறள்
    ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
    போற்றினும் பொத்துப் படும்.
  • விளக்கம்
    முடிப்பதற்கேற்ற வழியை அறிந்து செயலை முயலாவிட்டால், துணைவர் பலர் கூடி நின்று குற்றம் வராமல் காத்தலும் அச்செயல் நிறைவேறாது கெடும்.
  • Translation
    in English
    On no right system if man toil and strive,
    Though many men assist, no work can thrive.
  • Meaning
    The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.
0467. எண்ணித் துணிக கருமம்

0467. எண்ணித் துணிக கருமம்

0467. Ennith Thuniga Karumam

  • குறள் #
    0467
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
    Acting After Due Consideration
  • குறள்
    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு.
  • விளக்கம்
    ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன், அதனை முடிக்கும் உபாயத்தை நன்றாக எண்ணித் தொடங்குதல் வேண்டும். தொடங்கிய பின் எண்ணிப்பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
  • Translation
    in English
    Think, and then dare the deed! Who cry,
    ‘Deed dared, we’ll think,’ disgraced shall be.
  • Meaning
    Consider, and then undertake a matter; after having undertaken it, to say “We will consider,” is folly.
0466. செய்தக்க அல்ல செயக்கெடும்

0466. செய்தக்க அல்ல செயக்கெடும்

0466. Seithakka Alla Seyakkedum

  • குறள் #
    0466
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
    Acting After Due Consideration
  • குறள்
    செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
    செய்யாமை யானுங் கெடும்.
  • விளக்கம்
    செய்யத் தகாதவற்றைச் செய்வதாலும் கேடு உண்டாகும். செய்யத் தக்கவற்றைச் செய்யாததாலும் கேடு உண்டாகும்.
  • Translation
    in English
    ‘Tis ruin if man do an unbefitting thing;
    Fit things to leave undone will equal ruin bring.
  • Meaning
    He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.
0465. வகையறச் சூழா தெழுதல்

0465. வகையறச் சூழா தெழுதல்

0465. Vagaiyarach Choozhaa Thezhuthal

  • குறள் #
    0465
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
    Acting After Due Consideration
  • குறள்
    வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
    பாத்திப் படுப்பதோ ராறு.
  • விளக்கம்
    பகைவரை வெல்லுவதற்குச் செல்கின்றவன், தனக்கும் பகைவருக்கும் உள்ள நிலைமைகளை முழுதும் ஆராயாமல் சென்றால், பகைவர் என்ற பயிரை நிலத்திலே நடுதற்கு அஃது ஒரு வழியாகும்.
  • Translation
    in English
    With plans not well matured to rise against your foe,
    Is way to plant him out where he is sure to grow!
  • Meaning
    One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances).
0464. தெளிவி லதனைத் தொடங்கார்

0464. தெளிவி லதனைத் தொடங்கார்

0464. Thelivi Lathanaith Thodangaar

  • குறள் #
    0464
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
    Acting After Due Consideration
  • குறள்
    தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
    ஏதப்பாடு அஞ்சு பவர்.
  • விளக்கம்
    தமக்கு இழிவாகிய குற்றம் உண்டாகும் என்று அஞ்சுகின்றவர் நன்மை தரும் என்று தெளிவாக அறியாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.
  • Translation
    in English
    A work of which the issue is not clear,
    Begin not they reproachful scorn who fear.
  • Meaning
    Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them.
0463. ஆக்கம் கருதி முதலிழக்கும்

0463. ஆக்கம் கருதி முதலிழக்கும்

0463. Aakkam Karuthi Muthalizhakkum

  • குறள் #
    0463
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
    Acting After Due Consideration
  • குறள்
    ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
    ஊக்கார் அறிவுடை யார்.
  • விளக்கம்
    இலாபத்தைக் கருதி, முதலையும் இழப்பதற்குக் காரணமான செயலை அறிவுடையோர் மேற்கொள்ள மாட்டார்.
  • Translation
    in English
    To risk one’s all and lose, aiming at added gain,
    Is rash affair, from which the wise abstain.
  • Meaning
    Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.
0462. தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச்

0462. தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச்

0462. Therindha Inaththodu Therndhennich

  • குறள் #
    0462
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
    Acting After Due Consideration
  • குறள்
    தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
    அரும்பொருள் யாதொன்றும் இல்.
  • விளக்கம்
    தாம் தக்கார் எனத்தெரிந்துகொண்ட பெரியோருடன் செய்யவிருக்கும் செயல்பற்றி ஆராய்ந்து, தாமும் அதனைச் சிந்தித்துச் செய்து முடிக்க வல்லவர்க்கு, அடையமுடியாத பொருள் யாதுமில்லை.
  • Translation
    in English
    With chosen friends deliberate; next use the private thought;
    Then act. By those who thus proceed all works with ease are wrought.
  • Meaning
    There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.
0461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி

0461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி

0461. Azhivathooum Aaavathooum Aadhi

  • குறள் #
    0461
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
    Acting After Due Consideration
  • குறள்
    அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
    ஊதியமும் சூழ்ந்து செயல்.
  • விளக்கம்
    ஒரு செயலைச் செய்யுமுன், அதனால் அழிவதையும் ஆவதையும் பின் அது தருகிற ஆதாயத்தையும் ஆய்ந்து செய்ய வேண்டும்.
  • Translation
    in English
    Expenditure, return, and profit of the deed
    In time to come; weigh these- than to the act proceed.
  • Meaning
    Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.
0460. நல்லினத்தி னூங்குந் துணையில்லை

0460. நல்லினத்தி னூங்குந் துணையில்லை

0460. Nallinaththi Noongundh Thunaiyillai

  • குறள் #
    0460
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
    Avoiding Mean Associations
  • குறள்
    நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
    அல்லற் படுப்பதூஉம் இல்.
  • விளக்கம்
    ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் மேலான துணை இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரும் பகையும் இல்லை.
  • Translation
    in English
    Than good companionship no surer help we know;
    Than bad companionship nought causes direr woe.
  • Meaning
    There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.
0459. மனநலத்தின் ஆகும் மறுமைமற்

0459. மனநலத்தின் ஆகும் மறுமைமற்

0459. Mananalaththin Aagum Marumaimat

  • குறள் #
    0459
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
    Avoiding Mean Associations
  • குறள்
    மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
    இனநலத்தின் ஏமாப் புடைத்து.
  • விளக்கம்
    ஒருவனுக்கு மனத்தின் நன்மையினால் மருமையின்பம் உண்டாகும்; அமமனநலமும் இனத்தின் நன்மையினால் வலிமை பெரும்.
  • Translation
    in English
    Although to mental goodness joys of other life belong,
    Yet good companionship is confirmation strong.
  • Meaning
    Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.
0458. மனநலம் நன்குடைய ராயினும்

0458. மனநலம் நன்குடைய ராயினும்

0458. Mananalam Nangudaiya Raayinum

  • குறள் #
    0458
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
    Avoiding Mean Associations
  • குறள்
    மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
    இனநலம் ஏமாப் புடைத்து.
  • விளக்கம்
    சான்றோர் முன்னைய நல்வினையினால் மனநலம் உடையவராயினும், அவர் பழகும் இனத்தின் நன்மையானது அவரது மனநலத்திற்கு வலிமையைக் கொடுக்கும்.
  • Translation
    in English
    To perfect men, though minds right good belong,
    Yet good companionship is confirmation strong.
  • Meaning
    Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.
0457. மனநலம் மன்னுயிர்க் காக்கம்

0457. மனநலம் மன்னுயிர்க் காக்கம்

0457. Mananalam Mannuyirk Kaakkam

  • குறள் #
    0457
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
    Avoiding Mean Associations
  • குறள்
    மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
    எல்லாப் புகழும் தரும்.
  • விளக்கம்
    நிலைபெற்ற உயிர்களுக்கு மனத்தூய்மை செல்வத்தைக் கொடுக்கும்; இனத்தூய்மை அதனோடு எல்லாப் புகழையும் தரும்.
  • Translation
    in English
    Goodness of mind to lives of men increaseth gain;
    And good companionship doth all of praise obtain.
  • Meaning
    Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.
0456. மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும்

0456. மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும்

0456. Mananthooyaark Kechchamnan Raagum

  • குறள் #
    0456
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
    Avoiding Mean Associations
  • குறள்
    மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
    இல்லைநன் றாகா வினை.
  • விளக்கம்
    மனத்தூய்மை உடையவர்க்கு அவர்க்குப்பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்றாகும்; இனத்தூய்மை உடையவர்க்கு நன்றாகாத செயல் இல்லை.
  • Translation
    in English
    From true pure-minded men a virtuous race proceeds;
    To men of pure companionship belong no evil deeds.
  • Meaning
    To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.
0455. மனந்தூய்மை செய்வினை தூய்மை

0455. மனந்தூய்மை செய்வினை தூய்மை

0455. Mananthooimai Seivinai Thooimai

  • குறள் #
    0455
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
    Avoiding Mean Associations
  • குறள்
    மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
    இனந்தூய்மை தூவா வரும்.
  • விளக்கம்
    ஒருவனுக்கு மனத்தின் தூய்மையும், செயலின் தூய்மையுமாகிய இவ்விரண்டும், அவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மை காரணமாக வருவனவாகும்.
  • Translation
    in English
    Both purity of mind, and purity of action clear,
    Leaning no staff of pure companionship, to man draw near.
  • Meaning
    Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.
0454. மனத்து ளதுபோலக் காட்டி

0454. மனத்து ளதுபோலக் காட்டி

0454. Manaththu Lathupolak Kaatti

  • குறள் #
    0454
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
    Avoiding Mean Associations
  • குறள்
    மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
    இனத்துள தாகும் அறிவு.
  • விளக்கம்
    விசேட அறிவானது ஒருவனுக்கு மனத்தில் இருப்பது போலக் காட்டினும், அவன் சேர்ந்த இனத்தினால் உண்டாவதேயாகும்.
  • Translation
    in English
    Man’s wisdom seems the offspring of his mind;
    ‘Tis outcome of companionship we find.
  • Meaning
    Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.
0453. மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி

0453. மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி

0453. Manaththaanaam Maanthark Kunarchchi

  • குறள் #
    0453
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
    Avoiding Mean Associations
  • குறள்
    மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
    இன்னான் எனப்படுஞ் சொல்.
  • விளக்கம்
    மனிதருக்குப் பொதுவான அறிவு, அவர் மனம் காரணமாக உண்டாகும்; ‘இவன் இத்தகையவன்’ என்று உலகத்தவரால் சொல்லப்படும் சொல், இனம் காரணமாக உண்டாகும்.
  • Translation
    in English
    Perceptions manifold in men are of the mind alone;
    The value of the man by his companionship is known.
  • Meaning
    The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.
0452. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும்

0452. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும்

0452. Nilaththiyalpaal Neerthirindh Thatraagum

  • குறள் #
    0452
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
    Avoiding Mean Associations
  • குறள்
    நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
    இனத்தியல்ப தாகும் அறிவு.
  • விளக்கம்
    தண்ணீர் சேர்ந்த நிலத்தின் இயல்புக்கேற்ப மாறுபட்டு நிற்கும்; அதுபோல மக்களின் அறிவும் தாம் சேர்ந்த இனத்தின் தன்மைக்கேற்ப மாறுபடும்.
  • Translation
    in English
    The waters’ virtues change with soil through which they flow;
    As man’s companionship so will his wisdom show.
  • Meaning
    As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.
0451. சிற்றினம் அஞ்சும் பெருமை

0451. சிற்றினம் அஞ்சும் பெருமை

0451. Chitrinam Anjum Perumai

  • குறள் #
    0451
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
    Avoiding Mean Associations
  • குறள்
    சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
    சுற்றமாச் சூழ்ந்து விடும்.
  • விளக்கம்
    பெரியோர் இயல்பு சிற்றினத்தைக் கண்டு அஞ்சி ஒதுக்கும். சிறியோர் இயல்பு சிற்றினத்தை உறவாக எண்ணிச் சேர்ந்து கொள்ளும்.
  • Translation
    in English
    The great of soul will mean association fear;
    The mean of soul regard mean men as kinsmen dear.
  • Meaning
    (True) greatness fears the society of the base; it is only the low – minded who will regard them as friends.
0450. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த

0450. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த

0450. Pallaar Pagaikolalir Paththaduththa

  • குறள் #
    0450
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)
    Seeking the Aid of Great Men
  • குறள்
    பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
    நல்லார் தொடர்கை விடல்.
  • விளக்கம்
    நல்லவரது தொடர்பைக் கைவிடுவது, பலருடன் பகை கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமையுடையதாகும்.
  • Translation
    in English
    Than hate of many foes incurred, works greater woe
    Ten-fold, of worthy men the friendship to forego.
  • Meaning
    It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.
0449. முதலிலார்க ஊதிய மில்லை

0449. முதலிலார்க ஊதிய மில்லை

0449. Mudhalilaarka Oothiya Millai

  • குறள் #
    0449
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)
    Seeking the Aid of Great Men
  • குறள்
    முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
    சார்பிலார்க் கில்லை நிலை.
  • விளக்கம்
    முதல் பொருளில்லாத வணிகர்க்கு அதனால் வரும் இலாபம் இல்லை. அதுபோலத் தம்மைத் தாங்கும் துணையில்லாத மன்னர்க்கு அதனால் வரும் நன்மை இல்லை.
  • Translation
    in English
    Who owns no principal, can have no gain of usury;
    Who lacks support of friends, knows no stability.
  • Meaning
    There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.
0448. இடிப்பாரை இல்லாத ஏமரா

0448. இடிப்பாரை இல்லாத ஏமரா

0448. Idippaarai Illaatha Yemaraa

  • குறள் #
    0448
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)
    Seeking the Aid of Great Men
  • குறள்
    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்.
  • விளக்கம்
    இடிந்து அறிவுரை கூறும் பெரியோரைத் துணையாகக் கொள்ளாத மன்னன், தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் கெடுவான்.
  • Translation
    in English
    The king with none to censure him, bereft of safeguards all,
    Though none his ruin work, shall surely ruined fall.
  • Meaning
    The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.
0447. இடிக்குந் துணையாரை யாள்வரை

0447. இடிக்குந் துணையாரை யாள்வரை

0447. Idikkundh Thunaiyaarai Yaalvarai

  • குறள் #
    0447
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)
    Seeking the Aid of Great Men
  • குறள்
    இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
    கெடுக்குந் தகைமை யவர்.
  • விளக்கம்
    தவறு கண்டவிடத்துக் கடிந்து கூறும் தகுதியுடையவரைத் தமக்குத் துணையாகக் கொண்டு வாழ்பவரைக் கெடுக்கும் தன்மையுடையவர் யாவர்?
  • Translation
    in English
    What power can work his fall, who faithful ministers
    Employs, that thunder out reproaches when he errs.
  • Meaning
    Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?
0446. தக்கா ரினத்தனாய்த் தானொழுக

0446. தக்கா ரினத்தனாய்த் தானொழுக

0446. Thakkaa Rinaththanaaith Thaanozhuga

  • குறள் #
    0446
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)
    Seeking the Aid of Great Men
  • குறள்
    தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
    செற்றார் செயக்கிடந்த தில்.
  • விளக்கம்
    தகுதியுடைய பெரியோர் இனத்தைச் சேர்ந்து நடக்க வல்லவனாயின், அம்மன்னனுக்குப் பகைவர் செய்யக் கூடிய துன்பம் இல்லை.
  • Translation
    in English
    The king, who knows to live with worthy men allied,
    Has nought to fear from any foeman’s pride.
  • Meaning
    There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.
0445. சூழ்வார்கண் ணாக ஒழுகலான்

0445. சூழ்வார்கண் ணாக ஒழுகலான்

0445. Soozhvaarkan Naaga Ozhugalaan

  • குறள் #
    0445
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)
    Seeking the Aid of Great Men
  • குறள்
    சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
    சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
  • விளக்கம்
    அரசன் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு ஆட்சி நடத்தலால், அத்தகைய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    The king, since counsellors are monarch’s eyes,
    Should counsellors select with counsel wise.
  • Meaning
    As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.
0444. தம்மிற் பெரியார் தமரா

0444. தம்மிற் பெரியார் தமரா

0444. Thammir Periyaar Thamaraa

  • குறள் #
    0444
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)
    Seeking the Aid of Great Men
  • குறள்
    தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
    வன்மையு ளெல்லாந் தலை.
  • விளக்கம்
    அறிவு முதலியவற்றால் தம்மை விடப் பெரியோரைத் தமக்கு உறவாகக் கொண்டு நடத்தல், மன்னர்க்கு வல்லமை எல்லாவற்றையும் விட மேம்பட்டதாகும்.
  • Translation
    in English
    To live with men of greatness that their own excels,
    As cherished friends, is greatest power that with a monarch dwells.
  • Meaning
    So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.
0443. அரியவற்று ளெல்லாம் அரிதே

0443. அரியவற்று ளெல்லாம் அரிதே

0443. Ariyavatru Lellaam Aridhe

  • குறள் #
    0443
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)
    Seeking the Aid of Great Men
  • குறள்
    அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
    பேணித் தமராக் கொளல்.
  • விளக்கம்
    பெரியோரைப் போற்றி, அவரைத் தனக்கு உறவாகக் கொள்ளுதல், செய்வதற்கு அரியவற்றுள் எல்லாம் அரிய செயலாகும்.
  • Translation
    in English
    To cherish men of mighty soul, and make them all their own,
    Of kingly treasures rare, as rarest gift is known.
  • Meaning
    To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.
0442. உற்றநோய் நீக்கி உறாஅமை

0442. உற்றநோய் நீக்கி உறாஅமை

0442. Utranoi Neekki Uraaamai

  • குறள் #
    0442
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)
    Seeking the Aid of Great Men
  • குறள்
    உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
    பெற்றியார்ப் பேணிக் கொளல்.
  • விளக்கம்
    ஒருவனுக்கு வந்த துன்பங்களை நீக்கும் வழியறிந்து நீக்குபவராயும் மேலும் அத்தகைய துன்பம் வராதபடி முன் அறிந்து காக்கும் தன்மையுடையவராயும் உள்ளவரைப் பேணித் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Cherish the all-accomplished men as friends,
    Whose skill the present ill removes, from coming ill defends.
  • Meaning
    Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen.
0441. அறனறிந்து மூத்த அறிவுடையார்

0441. அறனறிந்து மூத்த அறிவுடையார்

0441. Aranarindhu Mooththa Arivudaiyaar

  • குறள் #
    0441
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)
    Seeking the Aid of Great Men
  • குறள்
    அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
    திறனறிந்து தேர்ந்து கொளல்.
  • விளக்கம்
    அறத்தின் இயல்பை அறிந்து சிறந்த அறிவுடையவரது உறவை, ஆராய்ந்து, கொள்ளும்வகை தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    As friends the men who virtue know, and riper wisdom share,
    Their worth weighed well, the king should choose with care.
  • Meaning
    Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.
0440. காதல காதல் அறியாமை

0440. காதல காதல் அறியாமை

0440. Kaathala Kaathal Ariyaamai

  • குறள் #
    0440
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
    ஏதில ஏதிலார் நூல்.
  • விளக்கம்
    மன்னன், தான் விரும்பிய போருளிடத்துத் தனக்குள்ள விருப்பத்தைப் பிறர் அறியாவண்ணம் அனுபவிக்க வல்லவனாயின், அவனை வஞ்சிக்க எண்ணும் பகைவரது சூழ்ச்சி பயனற்றதாகும்.
  • Translation
    in English
    If, to your foes unknown, you cherish what you love,
    Counsels of men who wish you harm will harmless prove.
  • Meaning
    If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.
0439. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை

0439. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை

0439. Viyavarka Enjaandrum Thannai

  • குறள் #
    0439
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை.
  • விளக்கம்
    எக்காலத்தும் தன்னை மதித்து வியப்படையக் கூடாது. நன்மை தராத செயலை விரும்பவும் கூடாது.
  • Translation
    in English
    Never indulge in self-complaisant mood,
    Nor deed desire that yields no gain of good.
  • Meaning
    Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.
0438. பற்றுள்ளம் என்னும் இவறன்மை

0438. பற்றுள்ளம் என்னும் இவறன்மை

0438. Patrullam Ennum Ivaranmai

  • குறள் #
    0438
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
    எண்ணப் படுவதொன் றன்று.
  • விளக்கம்
    பொருள் மீது உள்ள பற்றுள்ளம் என்று சொல்லப்படுகின்ற உலோப குணமானது, குற்றங்கள் எல்லாவற்றுள்ளும் ஒன்றாக வைத்து எண்ணத்தக்கதன்று; அவற்றைவிடக் கொடியது.
  • Translation
    in English
    The greed of soul that avarice men call,
    When faults are summed, is worst of all.
  • Meaning
    Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone – greater than all).
0437. செயற்பால செய்யா திவறியான்

0437. செயற்பால செய்யா திவறியான்

0437. Seyarpaala Seiyaa Thivariyaan

  • குறள் #
    0437
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    செயற்பால செய்யா திவறியான் செல்வம்
    உயற்பால தன்றிக் கெடும்.
  • விளக்கம்
    பொருளால் தனக்குச் செய்து கொள்ள வேண்டிய வசதிகளைச் செய்து கொள்ளாது, அதன் மீது பற்று வைத்துச் செலவிடாதவனின் செல்வம், எஞ்சியிருக்கும் தன்மையின்றிக் கெட்டுவிடும்.
  • Translation
    in English
    Who leaves undone what should be done, with niggard mind,
    His wealth shall perish, leaving not a wrack behind.
  • Meaning
    The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.
0436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங்

0436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங்

0436. Thankutram Neekkip Pirarkutrang

  • குறள் #
    0436
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
    என்குற்ற மாகும் இறைக்கு.
  • விளக்கம்
    தன் குற்றத்தை முதலில் போக்கிப் பிறகு பிறரது குற்றத்தைக் கண்டு ஆராய்வானானால், மன்னனுக்கு யாதொரு குற்றமும் உண்டாகாது.
  • Translation
    in English
    Faultless the king who first his own faults cures, and then
    Permits himself to scan faults of other men.
  • Meaning
    What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.
0435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை

0435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை

0435. Varumunnark Kaavaathaan Vaazhkkai

  • குறள் #
    0435
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும்.
  • விளக்கம்
    குற்றம் வருவதற்கு முன்னே, அதுவராமல் காத்துக் கொள்ளாத மன்னனது வாழ்க்கை, குற்றம் வந்தால், நெருப்பின் முன் நின்ற வைக்கோல் குவியல் போல அழிந்துவிடும்.
  • Translation
    in English
    His joy who guards not ‘gainst the coming evil day,
    Like straw before the fire shall swift consume away.
  • Meaning
    The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.
0434. குற்றமே காக்க பொருளாகக்

0434. குற்றமே காக்க பொருளாகக்

0434. Kutrame Kaakka Porulaagak

  • குறள் #
    0434
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
    அற்றந் த்ரூஉம் பகை.
  • விளக்கம்
    தனக்கு அழிவைத் தரும் பகை குற்றமே ஆகும். ஆகையால், தன்னிடத்தில் அக்குற்றம் வராமல் கருத்தில் கொண்டு காக்க வேண்டும்.
  • Translation
    in English
    Freedom from faults is wealth; watch heedfully
    ‘Gainst these, for fault is fatal enmity.
  • Meaning
    Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.
0433. தினைத்துணையாங் குற்றம் வரினும்

0433. தினைத்துணையாங் குற்றம் வரினும்

0433. Thinaiththunaiyaang Kutram Varinum

  • குறள் #
    0433
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
    கொள்வர் பழிநாணு வார்.
  • விளக்கம்
    பழிக்கு அஞ்சுவோர் தினையளவாகிய மிகச் சிறிய குற்றமே தமக்கு வந்தாலும், அதனைப் பனையளவு பெரிதாகக் கருதுவர்.
  • Translation
    in English
    Though small as millet-seed the fault men deem;
    As palm tree vast to those who fear disgrace ’twill seem.
  • Meaning
    Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.
0432. இவறலும் மாண்பிறந்த மானமும்

0432. இவறலும் மாண்பிறந்த மானமும்

0432. Ivaralum Maanpirandha Maanamum

  • குறள் #
    0432
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
    உவகையும் ஏதம் இறைக்கு.
  • விளக்கம்
    உலோப குணமும், நன்மை தருதலில்லாத மானமும், அளவு கடந்த மகிழ்ச்சியும் மன்னனுக்குக் குற்றமாகும்.
  • Translation
    in English
    A niggard hand, o’erweening self-regard, and mirth
    Unseemly, bring disgrace to men of kingly brith.
  • Meaning
    Avarice, undignified pride, and low pleasures are faults in a king.
0431. செருக்குஞ் சினமும் சிறுமையும்

0431. செருக்குஞ் சினமும் சிறுமையும்

0431. Cherukkunj Chinamum Chirumaiyum

  • குறள் #
    0431
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
    பெருக்கம் பெருமித நீர்த்து.
  • விளக்கம்
    அகந்தை, கோபம், காமம் ஆகிய குற்றங்கள் இல்லாத மன்னரது செல்வம், மற்றவர் செல்வத்தைக் காட்டிலும் மேம்பட்டுத் தோன்றும் தன்மையுடையது.
  • Translation
    in English
    Who arrogance, and wrath, and littleness of low desire restrain,
    To sure increase of lofty dignity attain.
  • Meaning
    Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.