Tag: The Not Being Angry

0310. இறந்தார் இறந்தார் அனையர்

0310. இறந்தார் இறந்தார் அனையர்

0310. Irandhaar Irandhaar Anaiyar

  • குறள் #
    0310
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    வெகுளாமை(Vegulaamai)
    The Not Being Angry
  • குறள்
    இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
    துறந்தார் துறந்தார் துணை.
  • விளக்கம்
    சினம்மிக்கவர், உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பாவர்; சினத்தை ஒழித்தவர் சாதலை ஒழித்தவரோடு ஒப்பாவார்.
  • Translation
    in English
    Men of surpassing wrath are like the men who’ve passed away;
    Who wrath renounce, equals of all-renouncing sages they.
  • Meaning
    Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).
0309. உள்ளிய தெல்லாம் உடனெய்தும்

0309. உள்ளிய தெல்லாம் உடனெய்தும்

0309. Ulliya Thellaam Udaneithum

  • குறள் #
    0309
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    வெகுளாமை(Vegulaamai)
    The Not Being Angry
  • குறள்
    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி எனின்.
  • விளக்கம்
    ஒருவன் தன் மனத்தினால் ஒருபோதும் சினத்தை நினைக்காமல் இருப்பானானால், அவனுக்கு நினைத்தவை எல்லாம் கைகூடும்.
  • Translation
    in English
    If man his soul preserve from wrathful fires,
    He gains with that whate’er his soul desires.
  • Meaning
    If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.
0308. இணர்எரி தோய்வன்ன இன்னா

0308. இணர்எரி தோய்வன்ன இன்னா

0308. Inareri Thoivanna Innaa

  • குறள் #
    0308
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    வெகுளாமை(Vegulaamai)
    The Not Being Angry
  • குறள்
    இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
    புணரின் வெகுளாமை நன்று.
  • விளக்கம்
    பல சுடர்களை உடைய பேரு நெருப்பில் தோய்ந்தாற் போன்ற துன்பங்களை ஒருவன் செய்தானாயினும் அவனிடத்தில் சினம் கொள்ளாதிருந்தால் நல்லது.
  • Translation
    in English
    Though men should work thee woe, like touch of tongues of fire.
    ‘Tis well if thou canst save thy soul from burning ire.
  • Meaning
    Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.
0307. சினத்தைப் பொருளென்று கொண்டவன்

0307. சினத்தைப் பொருளென்று கொண்டவன்

0307. Sinaththaip Porulendru Kondavan

  • குறள் #
    0307
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    வெகுளாமை(Vegulaamai)
    The Not Being Angry
  • குறள்
    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
  • விளக்கம்
    தனது வலிமையைக் காட்டுவதற்குச் சினத்தைக் கருவியாகக் கொண்டவன் அவ்வலிமையை இழத்தல், கையை நிலத்தில் அறைந்தவன் துன்பம் அடைதல் தவறாதது போன்றதாகும்.
  • Translation
    in English
    The hand that smites the earth unfailing feels the sting;
    So perish they who nurse their wrath as noble thing.
  • Meaning
    Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.
0306. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

0306. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

0306. Sinamennum Serndhaaraik Kolli

  • குறள் #
    0306
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    வெகுளாமை(Vegulaamai)
    The Not Being Angry
  • குறள்
    சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்.
  • விளக்கம்
    சினம் என்னும் சேர்ந்தவரைக் கொல்லும் நெருப்பு, சினம் கொண்டவனை மட்டுமல்லாமல் அவனுக்கு இனம் என்ற தெப்பத்தையும் சுடும்.
  • Translation
    in English
    Wrath, the fire that slayeth whose draweth near,
    Will burn the helpful ‘raft’ of kindred dear.
  • Meaning
    The fire of anger will burn up even the pleasant raft of friendship.
0305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க

0305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க

0305. Thannaiththaan Kaakkin Sinankaakka

  • குறள் #
    0305
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    வெகுளாமை(Vegulaamai)
    The Not Being Angry
  • குறள்
    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லுஞ் சினம்.
  • விளக்கம்
    ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், தன்மனத்தில் சினம் வராமல் காத்தல் வேண்டும்; அவ்வாறு காக்கவில்லை என்றால் அச்சினம் அவனைக் கெடுக்கும்.
  • Translation
    in English
    If thou would’st guard thyself, guard against wrath alway;
    ‘Gainst wrath who guards not, him his wrath shall slay.
  • Meaning
    If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.
0304. நகையும் உவகையும் கொல்லும்

0304. நகையும் உவகையும் கொல்லும்

0304. Nagaiyum Uvagaiyum Kollum

  • குறள் #
    0304
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    வெகுளாமை(Vegulaamai)
    The Not Being Angry
  • குறள்
    நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
    பகையும் உளவோ பிற.
  • விளக்கம்
    முகமலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கெடுத்து எழுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு வேறு பகை உண்டோ?
  • Translation
    in English
    Wrath robs the face of smiles, the heart of joy,
    What other foe to man works such annoy?
  • Meaning
    Is there a greater enemy than anger, which kills both laughter and joy?
0303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும்

0303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும்

0303. Maraththal Veguliyai Yaarmaattum

  • குறள் #
    0303
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    வெகுளாமை(Vegulaamai)
    The Not Being Angry
  • குறள்
    மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
    பிறத்தல் அதனான் வரும்.
  • விளக்கம்
    எவரிடத்தும் சினம் கொள்ளுதலை மறந்து விடுதல் வேண்டும். அச்சினத்தால் தீங்கு பயக்கும் செயல் உண்டாகும்.
  • Translation
    in English
    If any rouse thy wrath, the trespass straight forget;
    For wrath an endless train of evils will beget.
  • Meaning
    Forget anger towards every one, as fountains of evil spring from it.
0302. செல்லா இடத்துச் சினந்தீது

0302. செல்லா இடத்துச் சினந்தீது

0302. Sellaa Idaththuch Chinantheethu

  • குறள் #
    0302
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    வெகுளாமை(Vegulaamai)
    The Not Being Angry
  • குறள்
    செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
    இல்அதனின் தீய பிற.
  • விளக்கம்
    சினம் தன்னைவிட வலியவர் மீது சென்றால், அது தனக்கே தீமை ஆகும்; தன்னைவிட மெலியவர் மீது சென்றால் அச்சினத்தைவிடத் தீமை உடையது வேறு இல்லை.
  • Translation
    in English
    Where power is none to wreak thy wrath, wrath importent is ill;
    Where thou hast power thy will to work, ’tis greater, evil still.
  • Meaning
    Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.
0301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்

0301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்

0301. Sellidaththuk Kaappaan Sinangaappaan

  • குறள் #
    0301
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    வெகுளாமை(Vegulaamai)
    The Not Being Angry
  • குறள்
    செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
    காக்கின்என் காவாக்கா
  • விளக்கம்
    கோபம் பலிக்கக் கூடிய இடத்தில் சினம் உண்டாகாமல் தடுப்பவனே அதை அடக்கியவனாவான். பலிக்க முடியாத இடத்தில் சினத்தை அடக்கினால் என்ன? அடக்காவிட்டால் என்ன?
  • Translation
    in English
    Where thou hast power thy angry will to work, thy wrath restrain;
    Where power is none, what matter if thou check or give it rein?
  • Meaning
    He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it
    matter whether he restrain it, or not ?