Tag: Miscellaneous

0980. அற்றம் மறைக்கும் பெருமை

0980. அற்றம் மறைக்கும் பெருமை

0980. Atram Maraikkum Perumai

  • குறள் #
    0980
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்.
  • விளக்கம்
    பெருமைக் குணமுடையவர் பிறர் குற்றங்களை மறைப்பர். சிறுமைக் குணமுடையவர் பிறர் குற்றங்களையே கூறிவிடுவர்.
  • Translation
    in English
    Greatness will hide a neighbour’s shame;
    Meanness his faults to all the world proclaim.
  • Meaning
    The great hide the faults of others; the base only divulge them.
0979. பெருமை பெருமிதம் இன்மை

0979. பெருமை பெருமிதம் இன்மை

0979. Perumai Perumitham Inmai

  • குறள் #
    0979
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல்.
  • விளக்கம்
    பெருமைக் குணமாவது செருக்கிலா திருத்தல்; சிறுமைக் குணமாவது அச்செருக்கினை அளவின்றிக் கொண்டிருத்தல்.
  • Translation
    in English
    Greatness is absence of conceit; meanness, we deem,
    Riding on car of vanity supreme.
  • Meaning
    Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.
0978. பணியுமாம் என்றும் பெருமை

0978. பணியுமாம் என்றும் பெருமை

0978. Paniyumaam Endrum Perumai

  • குறள் #
    0978
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து.
  • விளக்கம்
    பெருமையுடையவர் எப்பொழுதும் தாழ்ந்தொழுகுவர்; சிறுமையுடையவர் தம்மைத் தாமே மதித்துப் பெருமைப்படுத்திப் புகழ்வர்.
  • Translation
    in English
    Greatness humbly bends, but littleness always
    Spreads out its plumes, and loads itself with praise.
  • Meaning
    The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.
0977. இறப்பே புரிந்த தொழிற்றாம்

0977. இறப்பே புரிந்த தொழிற்றாம்

0977. Irappe Purindha Thozhitraam

  • குறள் #
    0977
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
    சீரல் லவர்கண் படின்.
  • விளக்கம்
    செல்வம் முதலிய சிறப்பு சிறியவர்களிடம் உண்டாகுமானால், அவர்கள் வரம்பு கடந்த செயல்களைச் செய்பவராவர்.
  • Translation
    in English
    Whene’er distinction lights on some unworthy head,
    Then deeds of haughty insolence are bred.
  • Meaning
    Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.
0976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை

0976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை

0976. Siriyaar Unarchchiyul Illai

  • குறள் #
    0976
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
    பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.
  • விளக்கம்
    பெரியவரை வழிபட்டு அவரது தன்மையைத் தாமும் அடைய வேண்டும் என்னும் விருப்பம் சிறியவர் உள்ளத்தில் தோன்றாது.
  • Translation
    in English
    ‘As votaries of the truly great we will ourselves enroll,’
    Is thought that enters not the mind of men of little soul.
  • Meaning
    It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.
0975. பெருமை யுடையவர் ஆற்றுவார்

0975. பெருமை யுடையவர் ஆற்றுவார்

0975. Perumai Yudaiyavar Aatruvaar

  • குறள் #
    0975
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை உடைய செயல்.
  • விளக்கம்
    பெருமையுடையவர், தாம் வறியவரான போதும் பிறரால் செய்ய முடியாத செயல்களை முறைப்படி செய்து முடிக்க வல்லவராவர்.
  • Translation
    in English
    The man endowed with greatness true,
    Rare deeds in perfect wise will do.
  • Meaning
    (Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).
0974. ஒருமை மகளிரே போலப்

0974. ஒருமை மகளிரே போலப்

0974. Orumai Magalire Polap

  • குறள் #
    0974
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
  • விளக்கம்
    கற்புடைய பெண்களைப் போல் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடக்க வல்லவனாயின், அவனிடம் பெருமைக் குணம் உண்டாகும்.
  • Translation
    in English
    Like single-hearted women, greatness too,
    Exists while to itself is true.
  • Meaning
    Even greatness, like a woman’s chastity, belongs only to him who guards himself.
0973. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்

0973. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்

0973. Melirundhum Melallaar Melallar

  • குறள் #
    0973
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
    கீழல்லார் கீழல் லவர்.
  • விளக்கம்
    மேன்மைக் குணம் இல்லாதவர் மேலான சபையில் இருந்தாலும் மேன்மக்கள் ஆகமாட்டார்; கீழ்மக்கள் அல்லாதவர் செல்வத்தினால் தாழ்ந்த நிலையில் இருந்தாராயினும் கீழ்மக்கள் ஆகமாட்டார்.
  • Translation
    in English
    The men of lofty line, whose souls are mean, are never great
    The men of lowly birth, when high of soul, are not of low estate.
  • Meaning
    Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.
0972. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

0972. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

0972. Pirappokkum Ellaa Uyirkkum

  • குறள் #
    0972
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.
  • விளக்கம்
    மக்கள் பிறப்பால் ஒத்தவர்களாயினும், பெருமை சிறுமை என்னும் அவர்களது சிறப்பியல்புகள் அவர்கள் செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் ஒத்திருப்பதில்லை.
  • Translation
    in English
    All men that live are one in circumstances of birth;
    Diversities of works give each his special worth.
  • Meaning
    All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.
0971. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை

0971. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை

0971. Olioruvarku Ulla Verukkai

  • குறள் #
    0971
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பெருமை (Perumai)
    Greatness
  • குறள்
    ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
    அஃதிறந்து வாழ்தும் எனல்.
  • விளக்கம்
    ஒருவனது பெருமைக்குக் காரணம், மற்றவர் செய்ய முடியாதவற்றைத் தான் செய்யக் கருதும் ஊக்கமிகுதி; ஒருவனுக்குத் தாழ்வாவது, அவ்வாறு செய்யமுயலாது வாழ்வோம் என நினைத்தல்.
  • Translation
    in English
    The light of life is mental energy; disgrace is his
    Who says, ‘I ‘ill lead a happy life devoid of this.’
  • Meaning
    One’s light is the abundance of one’s courage; one’s darkness is the desire to live destitute of such (a state of mind.)
0970. இளிவரின் வாழாத மானம்

0970. இளிவரின் வாழாத மானம்

0970. Ilivarin Vaazhaatha Maanam

  • குறள் #
    0970
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    இளிவரின் வாழாத மானம் உடையார்
    ஒளிதொழுது ஏத்தும் உலகு.
  • விளக்கம்
    மானக்கேடு வந்தால் உயிர்வாழ முடியாத மானமுடையவரது புகழ் வடிவை உலகத்தவர் வணங்கித் துதிப்பர்.
  • Translation
    in English
    Who, when dishonour comes, refuse to live, their honoured memory
    Will live in worship and applause of all the world for aye!
  • Meaning
    The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.
0969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா

0969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா

0969. Mayirneeppin Vaazhaak Kavarimaa

  • குறள் #
    0969
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின்.
  • விளக்கம்
    தன்மயிர்த்திரளில் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர், தம் மானம் அழியின் இறந்து விடுவர்.
  • Translation
    in English
    Like the wild ox that, of its tuft bereft, will pine away,
    Are those who, of their honour shorn, will quit the light of day.
  • Meaning
    Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.
0968. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை

0968. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை

0968. Marundhomatru Oonombum Vaazhkkai

  • குறள் #
    0968
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
    பீடழிய வந்த இடத்து.
  • விளக்கம்
    மானம்கெட வந்தவிடத்து, உயிரை விடாது, உடம்பைக் காக்கும் வாழ்க்கையானது, சாவாமல் காக்கும் மருந்தாகுமோ?
  • Translation
    in English
    When high estate has lost its pride of honour meet,
    Is life, that nurses this poor flesh, as nectar sweet?
  • Meaning
    For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.
0967. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்

0967. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்

0967. Ottaarpin Sendroruvan Vaazhthalin

  • குறள் #
    0967
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
    கெட்டான் எனப்படுதல் நன்று.
  • விளக்கம்
    தன்னை இகழ்பவர்பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட, தனது நிலையிலே நின்று இறந்தான் எனப்படுதல் நன்று.
  • Translation
    in English
    Better ’twere said, ‘He’s perished!’ than to gain
    The means to live, following in foeman’s train.
  • Meaning
    It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.
0966. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால்

0966. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால்

0966. Pugazhindraal Puththelnaattu Uyyaathaal

  • குறள் #
    0966
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
    இகழ்வார்பின் சென்று நிலை.
  • விளக்கம்
    மானத்தை விட்டுத் தன்னை இகழ்கின்றவர்பின் சென்று நிற்பது இவ்வுலகத்தில் புகழ் உண்டாக்காது; தேவர் உலகத்துக்குச் செலுத்தாது; பின்பு ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?
  • Translation
    in English
    It yields no praise, nor to the land of Gods throws wide the gate:
    Why follow men who scorn, and at their bidding wait?
  • Meaning
    Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.
0965. குன்றின் அனையாரும் குன்றுவர்

0965. குன்றின் அனையாரும் குன்றுவர்

0965. Kundrin Anaiyaarum Kundruvar

  • குறள் #
    0965
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
    குன்றி அனைய செயின்.
  • விளக்கம்
    குடிப்பிறப்பால் மலைபோல் உயர்ந்தவராயினும், தாழ்வு வருவதற்குக் காரணமான செயல்களை, ஒரு குன்றிமணியின் அளவு செய்வார்களானாலும் தாழ்ந்து விடுவர்.
  • Translation
    in English
    If meanness, slight as ‘abrus’ grain, by men be wrought,
    Though like a hill their high estate, they sink to nought.
  • Meaning
    Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.
0964. தலையின் இழிந்த மயிரனையர்

0964. தலையின் இழிந்த மயிரனையர்

0964. Thalaiyin Izhindha Mayiranaiyar

  • குறள் #
    0964
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
    நிலையின் இழிந்தக் கடை.
  • விளக்கம்
    நல்ல குடியில் பிறந்த மனிதர் தம் நிலையிலிருந்து தாழ்ந்தவிடத்துத் தலையிலிருந்து வீழ்ந்த மயிர் போன்றவராவர்.
  • Translation
    in English
    Like hairs from off the head that fall to earth,
    When fall’n from high estate are men of noble birth.
  • Meaning
    They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.
0963. பெருக்கத்து வேண்டும் பணிதல்

0963. பெருக்கத்து வேண்டும் பணிதல்

0963. Perukkaththu Vendum Panithal

  • குறள் #
    0963
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு.
  • விளக்கம்
    நல்ல குடியில் தோன்றியவர் செல்வம் பெருகிய காலத்தில் யாவருக்கும் வணங்கி நடத்தல் வேண்டும். செல்வம் குறைந்து வறுமை உண்டான காலத்தில் தாழ்வு வராதபடி உயர்ந்த ஒழுக்கமுடையவராதல் வேண்டும்.
  • Translation
    in English
    Bow down thy soul, with increase blest, in happy hour;
    Lift up thy heart, when stript of all by fortune’s power.
  • Meaning
    In great prosperity humility is becoming; dignity, in great adversity.
0962. சீரினும் சீரல்ல செய்யாரே

0962. சீரினும் சீரல்ல செய்யாரே

0962. Seerinum Seeralla Seiyaare

  • குறள் #
    0962
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
    பேராண்மை வேண்டு பவர்.
  • விளக்கம்
    புகழையும் மானத்தையும் விரும்புகின்றவர், புகழ் தேடும்போதும் இழிவு தரும் செயலைச் செய்ய மாட்டார்.
  • Translation
    in English
    Who seek with glory to combine honour’s untarnished fame,
    Do no inglorious deeds, though men accord them glory’s name.
  • Meaning
    Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.
0961. இன்றி அமையாச் சிறப்பின

0961. இன்றி அமையாச் சிறப்பின

0961. Indri Amaiyaach Chirappina

  • குறள் #
    0961
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    மானம் (Maanam)
    Honour
  • குறள்
    இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
    குன்ற வருப விடல்.
  • விளக்கம்
    இன்றியமையாத செயல்களே ஆயினும் அவற்றால் குடிப் பிறப்புக்குத் தாழ்வு வருமானால் ஒருவன் அச்செயல்களைச் செய்யாது விடுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Though linked to splendours man no otherwise may gain,
    Reject each act that may thine honour’s clearness stain.
  • Meaning
    Actions that would degrade (one’s) family should not be done; though they may be so important that not doing them would end in death.
0960. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்

0960. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்

0960. Nalamvendin Naanudaimai Vendum

  • குறள் #
    0960
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
    வேண்டுக யார்க்கும் பணிவு
  • விளக்கம்
    ஒருவன் நன்மையை விரும்பினால், அவனிடத்தில் நாணம் இருக்க வேண்டும். அவ்வாறே குடியின் உயர்வை விரும்பினால், அவன் எல்லோரிடத்திலும் பணிந்து நடத்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Who seek for good the grace of virtuous shame must know;
    Who seek for noble name to all must reverence show.
  • Meaning
    He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.
0959. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்

0959. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்

0959. Nilaththil Kidanthamai Kaalkaattum

  • குறள் #
    0959
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
  • விளக்கம்
    நிலத்தின் இயல்பை அதனிடத்தே முளைத்த முளையானது காட்டிவிடும். அதுபோல, ஒருவன் வாயிலுண்டாகும் சொற்கள் அவன் பிறந்த குலத்தின் இயல்பைக் காட்டும்.
  • Translation
    in English
    Of soil the plants that spring thereout will show the worth:
    The words they speak declare the men of noble birth.
  • Meaning
    As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one’s birth).
0958. நலத்தின்கண் நாரின்மை தோன்றின்

0958. நலத்தின்கண் நாரின்மை தோன்றின்

0958. Nalaththinkan Naarinmai Thondrin

  • குறள் #
    0958
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின்கண் ஐயப் படும்.
  • விளக்கம்
    ஒருவனுக்கு நல்ல குணத்தில் விருப்பமின்மை உண்டானால், அவனது குலப்பிறப்பில் உலகத்தவர் ஐயங்கொள்வர்.
  • Translation
    in English
    If lack of love appear in those who bear some goodly name,
    ‘Twill make men doubt the ancestry they claim.
  • Meaning
    If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.
0957. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம்

0957. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம்

0957. Kudippirandhaar Kanvilangum Kutram

  • குறள் #
    0957
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
    மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
  • விளக்கம்
    உயிர்ந்த குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், வானத்திலுள்ள சந்திரனிடத்தில் உள்ள களங்கம் போல் பலர் அறிய விளங்கித் தோன்றும்.
  • Translation
    in English
    The faults of men of noble race are seen by every eye,
    As spots on her bright orb that walks sublime the evening sky.
  • Meaning
    The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.
0956. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா

0956. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா

0956. Salampatrich Chaalpila Seiyaarmaa

  • குறள் #
    0956
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
    குலம்பற்றி வாழ்தும்என் பார்.
  • விளக்கம்
    குற்றமற்ற தம் குடிப்பண்புடன் வாழ்வோர் என்போர், வஞ்சனையாகக் குலத்திற்குப் பொருந்தாத தொழில்களைச் செய்ய மாட்டார்.
  • Translation
    in English
    Whose minds are set to live as fits their sire’s unspotted fame,
    Stooping to low deceit, commit no deeds that gender shame.
  • Meaning
    Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.
0955. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும்

0955. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும்

0955. Vazhanguva Thulveezhndhak Kannum

  • குறள் #
    0955
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
    பண்பில் தலைப்பிரிதல் இன்று.
  • விளக்கம்
    பழமைதொட்டு வருகின்ற உயர்ந்த குடியிலே பிறந்தவர் கொடுக்கும் பொருள் சுருங்கியபோதும் தமது உயர் குணங்களிலிருந்து நீங்க மாட்டார்.
  • Translation
    in English
    Though stores for charity should fail within, the ancient race
    Will never lose its old ancestral grace.
  • Meaning
    Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).
0954. அடுக்கிய கோடி பெறினும்

0954. அடுக்கிய கோடி பெறினும்

0954. Adukkiya Kodi Perinum

  • குறள் #
    0954
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
    குன்றுவ செய்தல் இலர்.
  • விளக்கம்
    அடுக்கிய பலகோடி அளவினதாகிய பொருளைப் பெற்றாலும், உயர்ந்த குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குறைவதற்குக் காரணமான செயல்களைச் செய்ய மாட்டார்.
  • Translation
    in English
    Millions on millions piled would never win
    The men of noble race to soul-degrading sin.
  • Meaning
    Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.
0953. நகைஈகை இன்சொல் இகழாமை

0953. நகைஈகை இன்சொல் இகழாமை

0953. Nagaieegai Insol Igazhaamai

  • குறள் #
    0953
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
    வகையென்ப வாய்மைக் குடிக்கு.
  • விளக்கம்
    உயர்ந்த குடியில் பிறந்தவர்க்கு, வறியவர் வருங்கால் முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொல் பேசுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கும் உரிய குணங்களாகும்.
  • Translation
    in English
    The smile, the gift, the pleasant word, unfailing courtesy
    These are the signs, they say, of true nobility.
  • Meaning
    A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.
0952. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம்

0952. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம்

0952. Ozhukkamum Vaaimaiyum Naanumim

  • குறள் #
    0952
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
    இழுக்கார் குடிப்பிறந் தார்.
  • விளக்கம்
    உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் நல்லொழுக்கம், உண்மை, நாணம் ஆகிய மூன்று குணங்களிலிருந்தும் தவறி நடக்கமாட்டார்கள்.
  • Translation
    in English
    In these three things the men of noble birth fail not:
    In virtuous deed and truthful word, and chastened thought.
  • Meaning
    The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty.
0951. இற்பிறந்தார் கண்அல்லது இல்லை

0951. இற்பிறந்தார் கண்அல்லது இல்லை

0951. Irpirandhaar Kanallathu Illai

  • குறள் #
    0951
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிமை (Kudimai)
    Nobility
  • குறள்
    இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
    செப்பமும் நாணும் ஒருங்கு.
  • விளக்கம்
    உயர்ந்த குடியில் பிறந்தவரிடத்தல்லாமல் மற்றவரிடம் நடுவு நிலைமையும் நாணமும் இயல்பாக ஒரு சேர அமைவதில்லை.
  • Translation
    in English
    Save in the scions of a noble house, you never find
    Instinctive sense of right and virtuous shame combined.
  • Meaning
    Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the highborn.