Tag: Selection and Employment

0520. நாடோறும் நாடுக மன்னன்

0520. நாடோறும் நாடுக மன்னன்

0520. Naadorum Naaduga Mannan

  • குறள் #
    0520
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
    கோடாமை கோடா துலகு.
  • விளக்கம்
    செயலைச் செய்பவன் நேர்மையிலிருந்து மாறுபடாதிருப்பின், இவ்வுலகமும் மாறுபடாது. ஆகையால் அரசன் அச்செயல் செய்வோரை நாள்தொறும் ஆராய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Let king search out his servants’ deeds each day;
    When these do right, the world goes rightly on its way.
  • Meaning
    Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.
0519. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே

0519. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே

0519. Vinaikkan Vinaiyudaiyon Kenmaive

  • குறள் #
    0519
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
    நினைப்பானை நீங்கும் திரு.
  • விளக்கம்
    மேற்கொண்ட செயலில் இடைவிடா முயற்சியுடையவனது நட்பைத் தவறாக, ஐயப்படும் அரசனை விட்டுத் திருமகள் நீங்குவாள்.
  • Translation
    in English
    Fortune deserts the king who ill can bear,
    Informal friendly ways of men his tolls who share.
  • Meaning
    Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.
0518. வினைக்குரிமை நாடிய பின்றை

0518. வினைக்குரிமை நாடிய பின்றை

0518. Vinaikkurimai Naadiya Pindrai

  • குறள் #
    0518
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
    அதற்குரிய னாகச் செயல்.
  • விளக்கம்
    ஒருவன் ஒரு செயலுக்குத் தகுதியுடையவனாதலை ஆராய்ந்து துணிந்து பின்னர், அவனை அச்செயல் செய்தற்கு உரியவனாக அச்செயலில் அமர்த்துதல் வேண்டும்.
  • Translation
    in English
    As each man’s special aptitude is known,
    Bid each man make that special work his own.
  • Meaning
    Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.
0517. இதனை இதனால் இவன்முடிக்கும்

0517. இதனை இதனால் இவன்முடிக்கும்

0517. Ithanai Ithanaal Ivanmudikkum

  • குறள் #
    0517
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.
  • விளக்கம்
    ‘இச்செயலை இக்காரணங்களால் இவன் முடிக்க வல்லவன்’ என்று ஆராய்ந்து, அச்செயலை அவனிடத்தே விடுதல் வேண்டும்.
  • Translation
    in English
    ‘This man, this work shall thus work out,’ let thoughtful king command;
    Then leave the matter wholly in his servant’s hand.
  • Meaning
    After having considered, “this man can accomplish this, by these means”, let (the king) leave with him the discharge of that duty.
0516. செய்வானை நாடி வினைநாடிக்

0516. செய்வானை நாடி வினைநாடிக்

0516. Seivaanai Naadi Vinainaadik

  • குறள் #
    0516
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
    எய்த உணர்ந்து செயல்.
  • விளக்கம்
    செயலைச் செய்கின்றவனின் தன்மையையும் செயலின் இயல்பையும் ஆராய்ந்து, காலத்துக்குத் தக்கபடி அறிந்து செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Let king first ask, ‘Who shall the deed perform?’ and ‘What the deed?’
    Of hour befitting both assured, let every work proceed.
  • Meaning
    Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.
0515. அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால்

0515. அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால்

0515. Arindhaatrich Chigirpaarkku Allaal

  • குறள் #
    0515
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
    சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
  • விளக்கம்
    செய்யும் வழியறிந்து, அவ்வழி முயன்று முடிக்க வல்லானையன்றி, வேண்டியவனென்று பிரனொருவனைச் செய்யுமாறு ஏவுதல் கூடாது.
  • Translation
    in English
    No specious fav’rite should the king’s commission bear,
    But he that knows, and work performs with patient care.
  • Meaning
    (A king’s) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a
    nature to be given to one from mere personal attachment.
0514. எனைவகையான் தேறியக் கண்ணும்

0514. எனைவகையான் தேறியக் கண்ணும்

0514. Enaivagaiyaan Theriyak Kannum

  • குறள் #
    0514
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்.
  • விளக்கம்
    எல்லாவகைகளாலும் ஆராய்ந்து தெளிந்த பின்பும் ஒருசெயலை மேற்கொண்டு செய்யும்போது அச்செயல் வேறுபாடு காரணமாக வேறுபடுகின்ற மனிதர் உலகத்தில் பலராவர்.
  • Translation
    in English
    Even when tests of every kind are multiplied,
    Full many a man proves otherwise, by action tried!
  • Meaning
    Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).
0513. அன்பறிவு தேற்றம் அவாவின்மை

0513. அன்பறிவு தேற்றம் அவாவின்மை

0513. Anbarivu Thetram Avaavinmai

  • குறள் #
    0513
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு.
  • விளக்கம்
    அன்பு, அறிவு, ஐயம் இல்லாமல் தெளியும் தெளிவு, ஆசை இன்பம் ஆகிய இந்நான்கு குணங்களையும் நிலையாக உடையவனையே மன்னன் தெளிதல் வேண்டும்.
  • Translation
    in English
    A loyal love with wisdom, clearness, mind from avarice free;
    Who hath these four good gifts should ever trusted be.
  • Meaning
    Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.
0512. வாரி பெருக்கி வளம்படுத்து

0512. வாரி பெருக்கி வளம்படுத்து

0512. Vaari Perukki Valampaduththu

  • குறள் #
    0512
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
    ஆராய்வான் செய்க வினை.
  • விளக்கம்
    பொருள் வருவாயை அதிகப்படுத்தி, அதனால் வளமையைப் பெருக்கி, அவற்றிற்கு நேரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே அரசனுக்குக் குறிப்பிட்ட செயலைச் செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Who swells the revenues, spreads plenty o’er the land,
    Seeks out what hinders progress, his the workman’s hand.
  • Meaning
    Let him do (the king’s) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it).
0511. நன்மையும் தீமையும் நாடி

0511. நன்மையும் தீமையும் நாடி

0511. Nanmaiyum Theemaiyum Naadi

  • குறள் #
    0511
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
    Selection and Employment
  • குறள்
    நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
    தன்மையான் ஆளப் படும்.
  • விளக்கம்
    நன்மை, தீமைகளை ஆராய்ந்தறிந்து நன்மையையே செய்யும் இயல்புடையவனைச் செயலுக்கு உரியவனாக அமர்த்த வேண்டும்.
  • Translation
    in English
    Who good and evil scanning, ever makes the good his joy;
    Such man of virtuous mood should king employ.
  • Meaning
    He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.